கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

பஜாஜின் கரடுமுரடான கம்யூட்டர் பைக்!

பஜாஜ் CT125X
பிரீமியம் ஸ்டோரி
News
பஜாஜ் CT125X

ஃபர்ஸ்ட் டிரைவ்: பஜாஜ் CT125X

பஜாஜ் CT125X
பஜாஜ் CT125X

அலுவலகம் விட்டால் வீடு; வீடு விட்டால் அலுவலகம்; எப்போவாச்சும் மார்க்கெட்… ஷாப்பிங்… என்று ஒழுக்கமான குடும்பஸ்தர்களுக்கு அடக்கமான பைக்தான் பஜாஜ் CT100. மைலேஜுக்குப் பெயர் பெற்ற அந்த பைக்கின் அடுத்த வெர்ஷனாக, CT110 வந்தது. இப்போது அதுக்கும் மேலே கொஞ்சம் பவர்ஃபுல்லாக 125சிசியில் வந்திருக்கிறது இந்த CT பைக். அதன் பெயர் CT125X.

இந்த ஆகஸ்ட் மாதம், பஜாஜ் இந்தியாவில் 125 சிசி கரடுமுரடான கம்யூட்டர் பைக்காக இதை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதை ஓட்ட புனே வரை பஜாஜ் தொழிற்சாலைக்குச் சென்று வந்தேன், என் புகைப்பட நிபுணருடன்.

பஜாஜ் CT 125X, அதன் சிறிய உடன்பிறப்பான CT 110X பைக்கின் வடிவமைப்பைப் பெற்றுள்ளது. ஸ்டைலான ஹெட்லைட் கவுல் புதுசு. இதில் V- வடிவ LED DRL மற்றும் ஒரு சிறிய வைஸர் உள்ளது. இது பட்ஜெட் கம்யூட்டர் பைக்கில் பார்க்க ஒரு தனித்துவமான அம்சமாக இருக்கிறது. அதாவது, பெரிய அட்வென்ச்சர் பைக்குகளில் பார்த்துப் பழகிய இந்த விஷயங்கள், கம்யூட்டிங் பைக்கில் இருப்பது தனித்துவம்தானே!

இந்த 124.4சிசி இன்ஜின் 8000rpm-ல் 10.9bhp பவர் மற்றும் 5500 rpm-ல் 11 Nm டார்க்கையும் உருவாக்குகிறது, அதாவது, இது பஜாஜ் டிஸ்கவர் 125-ல் இருந்த அதே இன்ஜின் செட்அப். அட, காலத்துக்கு ஏற்ப இதில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸுக்கு மாறியிருக்கிறதே பஜாஜ்! எல்லாமே ஆல்டவுன் ஷிஃப்ட்டிங்.

CT 125X-ல் வளவளவென வசதிகளெல்லாம் எதிர்பார்க்கக் கூடாது. தேவையான அம்சங்கள் மற்றும் பாகங்களை மட்டும் பயன்படுத்தி ஒட்டுமொத்தச் செலவுகளைக் கட்டுக்குள் வைத்துள்ளது பஜாஜ். இது ஹாலோஜன் ஹெட்லைட், அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் மற்றும் பல்ப் வகை டெயில்லைட் & டர்ன் இண்டிகேட்டர்களைப் பெறுகிறது.

ஹேண்டில்பாரில் USB சார்ஜர் பொருத்தப்பட்டுள்ளது. டெலஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின் பக்கம் இரட்டை ஸ்ப்ரிங் சஸ்பென்ஷன் கொண்டுள்ளது. முன்பக்கம் 130 மிமீ டிரம் பிரேக்ஸும் உண்டு. டிஸ்க் பிரேக் ஆப்ஷன் வேண்டுமானால் வாங்கிக் கொள்ளலாம். இதன் அளவு 240 மிமீ. பின்புறத்தில் ஸ்டாண்டர்டாக டிரம் பிரேக்ஸ்தான். 17-இன்ச் அலாய் வீல்கள், முன்புறத்தில் 80/100-R17 டயர் மற்றும் பின்புறத்தில் 100/90-R17 செக்ஷன் டயர்கள் பொருத்தியிருக்கிறார்கள்.

பஜாஜின் கரடுமுரடான கம்யூட்டர் பைக்!
டேங்க் பேடுகள் புதுமை.
டேங்க் பேடுகள் புதுமை.
டிஜிட்டல் இல்லை; அனலாக் மீட்டர்தான்!
டிஜிட்டல் இல்லை; அனலாக் மீட்டர்தான்!
பின் பக்கம் டிஸ்க் இல்லை; டிரம் பிரேக்ஸ்தான்!
பின் பக்கம் டிஸ்க் இல்லை; டிரம் பிரேக்ஸ்தான்!
5 ஸ்பீடு கியர்பாக்ஸ்; எல்லாமே Down ஷிஃப்ட்டிங்...
5 ஸ்பீடு கியர்பாக்ஸ்; எல்லாமே Down ஷிஃப்ட்டிங்...

புதிய `எக்ஸ்' ட்ரிம் வழக்கமான பைக்கிலிருந்து தனித்து நிற்கிறது என்பதற்குப் பல உதாரணங்களைச் சொல்லலாம். டிஸ்கன்டினியூ செய்யப்பட்ட டிஸ்கவர் 125 பைக்கின் சிங்கிள் கிரேடில் ஃப்ரேமில் இதை ரெடி செய்திருக்கிறார்கள். அதனாலேயே ஒரு தனி லுக் கிடைத்து விடுகிறது.

வித்தியாசமான டேங்க் பேட்கள், ரிப்பட் சீட் கவர், லக்கேஜ் கேரியர் மற்றும் அண்டர்பெல்லி ப்ரொடெக்டர் ப்ளேட் போன்ற சில கூறுகளின் பயன்பாடுகள்… ஏதோ அட்வென்ச்சர் பைக்குக்குத் தேவையான பாகங்கள்போல் மேலும் முரட்டுத்தனமான தோற்றத்தை அளிக்கிறது. பார்க்கத்தான் முரடன்; ஆனால் பழக இனிமையானவன் என்பதுபோல்… இதை ஓர் அற்புதமான விலையில் பொசிஷன் செய்திருக்கிறது பஜாஜ்.

CT 125X இரண்டு வேரியன்ட்டில் வருகிறது. டிரம் பிரேக் வேரியன்ட்டின் விலை ரூ.71,354 மற்றும் டிஸ்க் பிரேக்கின் விலை ரூ.74,554. இவை இரண்டும் எபோனி பிளாக் (Ebony Black) பெயின்ட்டில் கிடைக்கின்றன. மேலும் நீங்கள் சிவப்பு, பச்சை மற்றும் நீல நிறங்களிலும் ஒன்றைத் தேர்வு செய்யலாம். இது ஹோண்டா ஷைன், டிவிஎஸ் ரேடியான், ஹீரோ சூப்பர் ஸ்ப்ளெண்டர், ஹீரோ கிளாமர் மற்றும் ஹோண்டா எஸ்பி ஷைன் ஆகியவற்றுக்குப் போட்டியாகக் களமிறங்கி உள்ளது.

ஹீரோ பேஸன் Xtec அல்லது ஸ்ப்ளெண்டர் Xtec-ல் காணப்படும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், கனெக்டட் அம்சங்கள் ஆகியவை இதில் இல்லை. இருப்பினும் சில அம்சங்கள் இல்லாதது, அதன் விலையால் ஓரளவு நியாயப்படுத்தப்படுகிறது. ரூ.71,354 (எக்ஸ்-ஷோரூம்) கொடுக்கும் பணத்திற்கு `value for Money' பைக் மற்றும் பரிதாபகரமான நிலையில் இருக்கும் குண்டு-குழி சாலைகளைச் சமாளிக்க `எங்கேயும் செல்லும்' கரடுமுரடான கம்யூட்டர் பைக்கைத் தருகிறது பஜாஜ்.