Published:Updated:

இந்தியாவின் விலை குறைந்த கம்யூட்டர் பைக்!

Bajaj CT110X
பிரீமியம் ஸ்டோரி
Bajaj CT110X

அறிமுகம்: பஜாஜ் பைக்குகள்

இந்தியாவின் விலை குறைந்த கம்யூட்டர் பைக்!

அறிமுகம்: பஜாஜ் பைக்குகள்

Published:Updated:
Bajaj CT110X
பிரீமியம் ஸ்டோரி
Bajaj CT110X
கம்யூட்டர் செக்மெமன்ட்டில் வெற்றி நடை போடும் CT110 பைக்கில் வெளிப்புறத் தோற்றத்தை மட்டும் கொஞ்சம் ஸ்டைலாக மாற்றி, புதிய CT110X பைக்காக வெளியிட்டிருக்கிறது பஜாஜ். இந்தப் புதிய வெளியீடு மூலம் இந்தியாவிலேயே விலை குறைவான கம்யூட்டர் பைக்கான CT110-க்குப் புதிய லுக்கைக் கொடுத்திருக்கிறது பஜாஜ்.

இன்ஜினைப் பொருத்தவரை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 8.6hp பவர் மற்றும் 9.81Nm டார்க் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட அதே 115சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின்தான். பெர்ஃபாமன்ஸை மேம்படுத்தும் வகையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால் தோற்றத்தில் ஸ்டாண்டர்டு CT110-ல் இருப்பதைப்போல் இல்லாமல், கொஞ்சம் புதிய முயற்சிகளைக் கையாண்டிருக்கிறது பஜாஜ்.

புதிய CT110X-ல் வட்ட வடிவ ஹெட்லைட்டுக்கு கிரில்லெல்லாம் கொடுத்திருக்கிறார்கள். வைஸர் இருப்பதும் அருமை. கீழே இன்ஜினுக்கு க்ராஷ் கார்டு இருக்கிறது.

பின் பக்கம் எக்ஸ்ட்ராவாக 7 கிலோ அளவில் எடை தாங்கக்கூடிய ரியர் கேரியர் சேர்க்கப்பட்டுள்ளது. டேங்க்கில் தொடைகளுக்கான கிரிப்பில் மாறுபட்ட பேட்டர்ன் வேலைப்பாடு ஸ்டைலாக இருக்கிறது. இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 170 மிமீ என்பது சூப்பர். முந்தைய CT110-யைவிட எக்ஸ் ஷோரூமில் 2,000 ரூபாய் கூடுதல் விலையில் விற்பனைக்கு வரவிருக்கிறது. இதன் ஆன்ரோடு விலை சுமார் 67,500 ரூபாய் வரும்.இந்தியாவின் விலை குறைந்த கம்யூட்டர் பைக்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism