Published:Updated:

பைக் வாங்கப் போறீங்களா... 250 சிசி-ல புது பல்ஸர் வரப்போகுது ப்ரோ!

Pulsar 250
Pulsar 250 ( Photo: BikeWale )

250சிசியில் புது பல்ஸர் வருது..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பைக் மார்க்கெட்டில் பல்ஸருக்கு என்று ஒரு தனிக் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். மாதா மாதம் விற்பனையாகும் டாப்–10 பைக்குகளில் பல்ஸருக்குத் தனி இடம் உண்டு. 2021 ஜனவரி மாத மொத்த பல்ஸர்களின் விற்பனை 97,580. பஜாஜ் நிறுவனத்தில் RS200, NS200, NS160, 220F, 150, 180, 125 என மொத்தம் 7 பல்ஸர்கள் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. இதில் ஸ்ப்ளிட் சீட், நியான், ஏபிஎஸ், டிஸ்க் என அதிலும் தனித்தனி வேரியன்ட்கள் உண்டு. ஓகே... இப்போது பஜாஜுக்கு என்ன என்கிறீர்களா?
பல்ஸர் BS-6
பல்ஸர் BS-6
Bajaj Auto

நீண்ட நாட்களாக விற்பனையில் இருக்கும் பல்ஸரின் NS200 வேரியன்ட்டின் ஃபேஸ்லிஃப்ட்டை, பஜாஜ் நிறுவனம் களமிறக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள் பல்ஸர் பிரியர்கள். அதுபோலவே புது பல்ஸரின் டெஸ்ட் டிரைவ் ஸ்பை ஷாட் (படம் உதவி: BikeWale) நம் கண்ணில் பட்டது. ஆனால், இதில் ஒரு ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், இது NS200 மாடல் இல்லை. 250சிசி செக்மென்ட்டில் பல்ஸர் இல்லையே என்று பஜாஜ் நினைத்துவிட்டதோ என்னவோ, NS250–யை விற்பனைக்குக் கொண்டுவர இருக்கிறது பஜாஜ். அதாவது, பல்ஸர் குடும்பத்தில் மேலும் ஒரு பைக்.

NS200–ல்தான் மைனரான மாற்றங்களைக் கொண்டு வருவார்கள் என்று நினைத்தால், மொத்தமாக பைக்கையே மாறியிருக்கிறது என்பது தெரிய வருகிறது. ஓவர்ஆல் டிசைனில் NS200–யை விட அளவுகளில் பெரிதாக இருக்கிறது புது பல்ஸர். ஹெட்லைட்டைத் தாழ்வாகவும், டெயில் லைட்டைக் கொஞ்சம் ஸ்போர்ட்டியாகவும் வைத்திருக்கிறார்கள். டிசைனை மாற்றினால் மட்டும் போதாது; LED ஹெட்லைட்டும் வேண்டும் என்பதுதான் பஜாஜ் பிரியர்களின் விருப்பம். அநேகமாக, LED–ல்தான் வரலாம். Belly Pan மற்றும் Tyre Hugger போன்ற டிசைன்களில் லேசாக மாற்றம் இருக்கிறது. ஹேண்ட்பாரையும் கொஞ்சம் கீழே இறக்கி டிசைன் செய்திருக்கிறார்கள். மற்றபடி வீல் டிசைனைப் பொருத்தவரை பல்ஸர் NS மற்றும் RS மாடல்கள்தான்.

Pulsar 250
Pulsar 250
Photo: BikeWale

இன்ஜின்தான் இதில் இருக்கும் பெரிய மாற்றம். டொமினார் 250–ல் இருக்கும் அதே இன்ஜினைப் பொருத்தி, 4 வால்வ், Fi-யாகக் கொண்டு வந்திருக்கலாம் என்றுதான் முதலில் பேச்சு அடிபட்டது. இது 250சிசியாக இருக்கும் பட்சத்தில் இதன் பவர் மற்றும் டார்க் - டொமினாருக்கும் (27bhp/2.35kgm), பல்ஸர் 220F-க்கும் (20.5bhp/1.8kgm) இடையில் இருக்கும் என்கிறார்கள். சிங்கிள் சிலிண்டர் இன்ஜின்தான் என்பதால், 20bhp -22bhp–க்குள்தான் நிச்சயம் இருக்கும் என்பதுதான் நம் கணிப்பு. இருந்தாலும், டொமினாருக்கு இணையாக பவர்ஃபுல்லாக இருக்க வேண்டும் என்பதுதான் பஜாஜின் திட்டமாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஸ்பை படத்தைப் பார்க்கும்போது, இதன் இன்ஜின் - ஏர் மற்றும் ஆயில் கூல்டு இன்ஜினாகத்தான் இருக்கும். நிச்சயம் லிக்விட் கூல்டு கிடையாது. அப்படியென்றால், டொமினாரில் இருக்கும் இன்ஜின் கிடையாது என்பது நிச்சயம். இந்தப் புது ஜெனரேஷன் இன்ஜின், முன்பைவிட அதிக ரிஃபைண்டு ஆகவும், அதிக மைலேஜ் கொண்டதாகவும் இருக்கும் என்கிறது பஜாஜ்.

பஜாஜ் பிளாட்டினா 110 H கியர்... Tamil Review #MotorVikatan

அதேபோல், இதில் இருப்பது மோனோஷாக் சஸ்பென்ஷன். இது NS/RS சீரிஸ் ஆக இல்லாத பட்சத்தில், இதுதான் முதல் முறையாக பல்ஸர் செக்மென்ட்டில் மோனோஷாக் அப்ஸார்பர் கொண்ட முதல் பைக்காக இருக்கும். அதனால், சொல்லத் தேவையில்லை. பைக்கின் ஃப்ரேம் மற்றும் ஸ்விங்ஆர்மை அதற்கு ஏற்றபடி ட்யூன் செய்துதான் ஆக வேண்டும். எனவே, ஓட்டுதல் பழைய பல்ஸர்களைவிட இன்னும் கொஞ்சம் மெருகேறலாம். ஆனால், பஜாஜ் ஒரு விஷயத்தில் காஸ்ட் கட்டிங் செய்துவிட்டது. RS/NS போன்ற பைக்குகளை ஒப்பிடும்போது, இதன் பெட்டல் டிசைன், கொஞ்சம் சுமார்தான். அதேபோல், மற்ற பல்ஸர்களைப்போல் சிங்கிள் சேனல் ஏபிஎஸ்தான் இதிலும். யமஹா போன்றவை டூயல் சேனல் என்பது நினைவிருக்கட்டும். அப்போதுதான் விலைக் குறைப்பு செய்ய முடியும் என்று பஜாஜ் நினைத்து விட்டிருக்கிறதோ என்னவோ?

இதன் விலை 220F பைக்கைவிட நிச்சயம் அதிகமாகத்தான் இருக்கும். பல்ஸர் 220F (ABS) –ன் ஆன்ரோடு விலை 1.49,000 ரூபாய். அதைவிட 10,000 ரூபாய் விலை அதிகமாக வர வாய்ப்புண்டு என்கிறார்கள். எனவே, பல்ஸர் வாங்கப் போகிறவர்கள், 250 சிசி பல்ஸருக்குக் காத்திருக்கலாம்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு