கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

பீஸ்ட் ரைடர்ஸின் ஜாலி ரைடு!

பீஸ்ட் ரைடர்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
பீஸ்ட் ரைடர்ஸ்

பைக் ரைடு: பீஸ்ட் ரைடர்ஸ்

"நம் பள்ளிக் காலங்களில், ஆரஞ்சு மிட்டாய்க்காகவே சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வது ஒரு இனிமையான அனுபவம். அந்த ஆரஞ்சு மிட்டாய் இப்போது பிரேக்ஃபாஸ்ட்க்காக மாறி இருக்கிறது, அவ்வளவுதான்!" என இந்த 75-வது சுதந்திர தின விழாக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட ரைடர் ஒருவர் மகிழ்ச்சியாக சொன்னார். ஏனென்றால், இது `Breakfast Ride'. காலை 6 மணிக்கு வண்டலூர் சிக்னல் அருகில் 200-க்கும் மேற்பட்ட பைக் ரைடர்களும் அசெம்பிளாகி, அங்கிருந்து சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் சரியாக 100 கிமீ ஒன்றாக ரைடு செய்து, ஆரியாஸ் என்ற ஹோட்டலில் கூடியிருந்தனர். இந்தக் கோலாகலமான ஏற்பாட்டைச் சென்னையைச் சேர்ந்த `Beast Riderz' என்ற ரைடர்ஸ் கிளப் ஏற்பாடு செய்திருந்தது.

பீஸ்ட் ரைடர்ஸின் ஜாலி ரைடு!

இந்த ஜாலியான பைக் ரைடில், 150 சிசி பைக் முதல் சூப்பர் பைக் வரை என எல்லா விதமான பைக்குகளும் தேசியக் கோடியை ஏந்தியபடி வரிசை கட்டி வந்திருந்தன. இதில் பல்வேறு கிளப்களைச் சேர்ந்த ஏராளமான பைக் ரைடர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவின் கூடுதல் சிறப்பு என்னவென்றால் 70'ஸ், 80'ஸ் காலங்களில் மோட்டார் சைக்கிள் ரேஸிங் செய்து வெற்றி நாயகனாக வலம் வந்த 'புல்லட் போஸ்' இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார். அப்போது தனது ரேஸிங் அனுபவங்களைப் பற்றிப் பகிர்ந்துகொண்ட அவர், தனது தாத்தா சுதந்திரத்திற்கு முன்பு இராணுவப் படையில் இராணுவ வீரராக இருந்ததாகவும், அவர் வாங்கிய பதக்கங்களையும் தனக்குப் பரிசாக அளித்த இராணுவத் தொப்பியையும் பற்றி நெகிழ்ச்சியாகப் பேசியிருந்தார். மேலும், 50 வருடங்களுக்கு முன் கேஸ்ட்ரால் நிறுவனம் ஸ்பான்சர் செய்த தொப்பியையும் நினைவு கூர்ந்து, இதுபோன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறவேண்டும் என்றும் கூறினார்.

மேலும், இதில் பல பெண் ரைடர்களும், கல்லூரி மாணவர்களும் உண்டு. 20 கிளப் ரைடர்ஸ் அனைவரும், `இது போன்று அடிக்கடி நிகழ்வுகள் நடைபெற்றால் ஊக்கமாக இருக்கும்; இது பல கிளப்பைச் சேர்ந்த ரைடர்களை ஒன்றிணைக்கிறது; பைக் ரைடிங் ஸ்கில்ஸ்க்கும், பாதுகாப்பாக ரைடு செய்வதன் முக்கித்துவம் அறியவைப்பது பெருமையாக இருக்கிறது’ என்று தங்கள் அனுபவங்களையும் கருத்துகளையும் மகிழ்ச்சியாகப் பகிர்ந்து கொண்டனர்.

பீஸ்ட் ரைடர்ஸின் ஜாலி ரைடு!