Published:Updated:

அட்வென்ச்சரில் நீங்க எந்த வகை?

பைக்
பிரீமியம் ஸ்டோரி
News
பைக்

இந்தியாவில் மிகவும் பிரபலமான அட்வென்ச்சர் பைக் ரகம் டூயல் ஸ்போர்ட்.

டூயல் ஸ்போர்ட், டர்ட் பைக், எண்ட்யூரோ பைக், சூப்பர்மோட்டோ, டூரர் என எல்லா விலையிலும், எல்லா வகையிலும் ஆஃப்ரோடு பைக்குகள் இந்தியாவில் வந்துவிட்டன. ADV பைக் வாங்குவது பட்ஜெட்டைப் பொருத்து முடிவெடுக்க வேண்டிய விஷயம் இல்லை.

உங்களுக்கான அட்வென்ச்சர் பைக்கை தேர்ந்தெடுக்கச் சிறப்பான வழி ‘மன் கி பாத்’. அதாவது மனதின் குரல். முதல் முறை ஒரு பைக்கை ஓட்டும்போதே, ‘’எவ்வளவோ பைக் இருந்தும் நான் ஏன் உன் பின்னாடி வந்தேன்’’ என்று சிம்பு வாய்ஸில் மனதின் குரல் கேட்கும். உள்ளுக்குள் ஓசானா ஓடும். அப்படி நடந்தால் அதுதான் உங்கள் பார்ட்னர். இல்லையா? இந்த கட்டுரையப் படிச்சிட்டு லாஜிக்கா ஒரு முடிவெடுத்துட்டுப் போயிடுவோம்.

பைக்
பைக்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஒரு அட்வென்ச்சர் பைக் வாங்கும் முன்பு, ஏன் அதை வாங்க வேண்டும் என்பதில் தெளிவு தேவை. எப்போதும் இல்லாமல் இப்போது ஏன் ஆஃப்ரோடு பைக்குகள் பிரபலமாகின்றன என்ற கேள்வியை இன்டர்நேஷனல் ஆஃப்ரோடு பயிற்சியாளர் ஷானவாஸ் கரிமிடம் கேட்டபோது, “தினசரி கம்யூட்டிங் போரடித்துவிட்டது. ரேஸ் ட்ராக் செல்ல எல்லோருக்கும் பேங்க் பேலன்ஸ் போதுமானதாக இருக்காது.

மோட்டோ க்ராஸ் தவிர்த்து, ட்ரையல் ரைடிங் செல்வது என்பது 80 சதவிகிதம் பைக்கை அடிப்படையாகக் கொண்டது. அதனால், ஒரு ஆஃப்ரோடு பைக் வாங்கினால் அதை ஏதாவது ஒரு ட்ரையலுக்கு எடுத்துச் சென்று ஓட்டலாம். இதனால், புதிய விஷயங்களைச் செய்ய முடியும், புது மனிதர்களைச் சந்திப்போம். புது சூழலில் இணைகிறோம். இது வாழ்க்கைக்கு ஒரு சுவையைத் தருகிறது. அதை எல்லோரும் விரும்புவதால் வாங்குகிறார்கள்” என்கிறார்.

உண்மையில் ஆஃப்ரோடு பைக் வாங்குவதற்கான முதல் காரணம் ட்ரையலில் ஓட்டுவதுதான். அதனால், நீங்கள் எந்த மாதிரியான ட்ரையலில் ஓட்டப் போகிறீர்கள் என்பதை முதலில் முடிவெடுத்துக் கொள்ளுங்கள். ஒரு ஆஃப்ரோடு பைக்கில் முக்கியமான மூன்று விஷயம் சஸ்பென்ஷன், கிரவுண்டு க்ளியரன்ஸ், டயர். மீதம் இருப்பவை அனைத்து பைக்குகளுக்கும் பொதுவானது.

பைக்
பைக்

டூயல் ஸ்போர்ட்

இந்தியாவில் மிகவும் பிரபலமான அட்வென்ச்சர் பைக் ரகம் டூயல் ஸ்போர்ட். ஹீரோ எக்ஸ்பல்ஸ், ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் போன்றவை இந்த டூயல்ஸ்போர்ட் வட்டத்துக்குள் வருபவை. அட்வென்ச்சர் பரம்பரையில் விலை குறைவானவை இவை.

இந்த பைக்குகளை நகரச் சாலைகளிலும் பயன்படுத்தலாம், ஆஃப்ரோடு ட்ராக்கிலும் பயன்படுத்தலாம். எக்ஸ்பல்ஸ், ஹிமாலயன் இரண்டுமே ஒரே வகை பைக் என்றாலும், ஹிமாலயனின் 411cc இன்ஜின் இதை லாங் ரைடுகளுக்குச் சாத்தியப்படுத்துகிறது. எக்ஸ்பல்ஸில் எண்டியூரோ வாடை அதிகம். இரண்டுமே முழுமையான அட்வென்ச்சர் பைக்குகள் கிடையாது. ஆனால், ஆஃப்ரோடில் வாழ்க்கையை ஆரம்பிக்கச் சிறப்பானவை. ஆஃப்ரோடு அதிகம், டூரிங் குறைவு என்றால் எக்ஸ்பல்ஸ். டூரிங்கை விட ஆஃப்ரோடு குறைவு என்றால் ஹிமாலயன். அவ்வளவுதான்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

டர்ட் பைக் மற்றும் எண்டியூரோ

இந்த வகை பைக்ஸ் இதுவரை இந்தியாவில் யாரும் உற்பத்தி செய்யவில்லை. யமஹா, ஹோண்டா, கேடிஎம், கவஸாகி, சுஸூகி என எல்லா பெரிய தயாரிப்பாளர்களிடமும் சிறப்பான டர்ட் பைக்குகள் இருந்தாலும், அவை வெளிநாட்டில் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. இந்தியாவில் சாலை அங்கீகாரம் இல்லாமல் டர்ட் டிராக்கில் மட்டுமே ஓட்டுவதற்கான பைக்குகளே லோக்கல் மெக்கானிக்குகளால் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஹீரோ, டிவிஎஸ் போன்ற தயாரிப்பாளர்கள் ரேஸ்களுக்காக ப்ரோட்டோடைப் பைக்குகளைத் தயாரிக்கிறார்கள். இந்த வகை பைக்குகளில் 300cc-க்குக் குறைவான இன்ஜின் மற்றும் மிகக் குறைவான பாகங்கள் மட்டுமே இருக்கும். ஹெட்லைட் கிடையாது, பாடி பேனல் இருந்தும் இல்லாததுபோலத்தான். அதிகமான சஸ்பென்ஷன் டிராவல்; பெரிய வீல்கள், ஆனால் சிறிய டயர்கள்; சிறிய பெட்ரோல் டேங்க உடன் எடை மிகக் குறைவாக இருக்கும். மோட்டோ க்ராஸ் ட்ராக்கில் இந்த பைக்கைப் பயன்படுத்தலாம். டர்ட் பைக்குகளை சாலையில் ஓட்டுவதற்கான அனுமதி கிடையாது. இந்த ஆஃப்ரோடு மான்ஸ்ட்டர்களை சாலையில் ஓட்ட வேண்டும் என்றால் அதற்குத்தான் இருக்கிறது எண்டியூரோ.

பைக்
பைக்

எண்டியூரோ வகை பைக்குகள் மரபணு ரீதியாக டர்ட் பைக்குகள்தான் என்றாலும், சாலையில் ஓட்டுவதற்கு வசதியாக சில பாதுகாப்பு அம்சங்கள், ஸ்ப்ராக்கெட் பேட்டர்ன், பெரிய ஃப்யூல் டேங்க், ஸ்பீடோமீட்டர், ஹெட்லைட் போன்றவை பொருத்தப்பட்டு வரும். சேஸி, சஸ்பென்ஷன், டயர்களில் எந்த மாற்றமும் இருக்காது.

ஸ்க்ராம்ப்ளர்

இந்தக் கலாசாரம் அமெரிக்காவில் தொடங்கியதாகச் சொல்வார்கள். அமெரிக்கர்களுக்குத் தினமும் பயன்படுத்த பைக் தேவை. ஆனால், வார இறுதி நாட்களில் அதை ஏதாவது ஒரு பாலைவனமோ அல்லது காடுகளுக்கோ கொண்டு சென்று ஓட்டவேண்டும் என்ற ஆசையில் ஸ்க்ராம்ப்ளர் பைக்குகளை வடிவமைத்தார்கள். ஸ்க்ராம்ப்ளர் லைஃப்ஸ்டைல் எல்லோருக்கும் பிடித்துப்போக உலக ஃபேமஸ் ஆகிவிட்டன. ஸ்க்ராம்ப்ளர் என்பது ஆஃப்ரோடு பைக் கிடையாது. ஆனால், சாலை இல்லாத சில இடங்களில் இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் சாஃப்ட்டான சஸ்பென்ஷன் உதவும். டிரையம்ப் ஸ்க்ராம்ப்ளர் மற்றும் டுகாட்டி போன்று ஆஃப்ரோடில் சிறப்பாகச் செயல்படும் ஸ்க்ராம்ப்ளர்கள் இருக்கின்றன. ஆனால், சாலையை விட நீங்கள் ஆஃப்ரோடை அதிகம் அனுபவிக்க வேண்டும் என்றால் அதற்கு இந்த ஆப்ஷன் வேண்டாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அட்வென்ச்சர் டூரர்

டூயல் ஸ்போர்ட் மற்றும் அட்வென்ச்சர் டூரர் பைக்குகளுக்குள் எப்போதுமே ரைடர்களுக்கு ஒரு குழப்பம் இருக்கும். அட்வென்ச்சர் டூரர் பைக்குகளும் கிட்டத்தட்ட டூயல்ஸ்போர்ட் போலத்தான். ஆனால், இதன் வித்தியாசம், ரைடிங் அனுபவம்தான். உதாரணத்துக்கு அட்வென்ச்சர் பைக் என்பது ஸ்ட்ரீட் பைக் சார்ந்ததாக இருக்கும். டால் கியர் ரேஷியோ, டிராக்‌ஷன் கன்ட்ரோல், பெரிய பெட்ரோல் டேங்க், நீளமான விண்ட்ஸ்கிரீன் என லாங் ரைடிங்கில் இதன் மொத்த திறனையும் அனுபவிக்க முடியும். ஆனால், எண்ட்யூரோ பைக்குகளுக்கே உரித்தான நாப் வைத்த டயர், உயரமான ஹேண்டில்பார், பெரிய ஸ்போக் வீல், அதிக டார்க், ஸ்ட்ரெஸ் இல்லாமல் பவர் வெளிப்படுத்தும் இன்ஜின் தன்மை போன்றவையும் இருக்கும். அட்வென்ச்சர் பைக்குகளின் எடை அதிகம். எலெக்ட்ரானிக் அம்சங்களும் இதில் அதிகம் பயன்படுத்தப்பட்டிருக்கும். இந்தியாவைப் பொருத்தவரை பெனெல்லி TRK, ட்ரையம்ப் டைகர், பிஎம்டபிள்யூ GS, ஹோண்டா ஆஃப்ரிக்கா ட்வின் போன்ற அட்வென்ச்சர் பைக்குகள் பிரபலமானவை.

பைக்
பைக்

ட்ரையல்ஸ் அல்லது டார்மாக், எந்த வகை ரைடிங் என்றாலும் பயிற்சி மிகவும் முக்கியம். பாதுகாப்பும் மிகவும் முக்கியம். அட்வென்ச்சர் என்று வந்துவிட்டால் கீழே விழாத ரைடர் என்று யாருமே இல்லை. அதனால், பைக்கை வாங்கும்போதே பைக்கின் பட்ஜெட்டில் 10 சதவிகிதத்தை ஒதுக்கி, அதில் ரைடிங் கியர் வாங்கவேண்டும். அட்வென்ச்சர் ரைடிங் கற்றுக்கொள்ள விரும்பினால் சிறிய பைக்கில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். அப்போதுதான் பைக்கின் 80-90 சதவிகித திறனைப் பயன்படுத்தி ஆஃப்ரோடிங் கற்றுக் கொள்ளமுடியும். பெரிய பைக்கைப் பயன்படுத்த கொஞ்சம் திறமை தேவை.

ஒருவேளை பெரிய பைக்கில் அட்வென்ச்சர் ஆரம்பிக்கிறீர்கள் என்றால், பயிற்சியாளர்களைக் கண்டுபிடித்து முதலில் பயிற்சி எடுத்துக் கொண்டு பிறகு பைக்கைப் பயன்படுத்தலாம். பெரிய பைக்கில் இருக்கும் பிரச்னை, அதன் 60 சதவிகித திறனைப் பயன்படுத்த பல மாதங்கள் பயிற்சி தேவை. இதனால், சிலர் கடைசி வரை பைக்கின் 20-30 சதவிகித திறனைக்கூடப் பயன்படுத்த மாட்டார்கள்.