கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

ஈசிஆர்… பிசி ஸ்ரீராம்… ஹோண்டா பைக்கில் பாண்டிச்சேரிக்கு பீஸ்ட் ரைடிங்

ஹோண்டா CD 500X
பிரீமியம் ஸ்டோரி
News
ஹோண்டா CD 500X

க்ளப் ட்ரிப்: ஹோண்டா பிக்விங்ஸ்

திடீர்ப் பயணங்கள் பல புதிய அனுபவங்களை அள்ளிக் கொடுக்கும். அப்படித்தான் அமைந்தது இந்தத் திடீர் பாண்டிச்சேரி பயணம். சென்னை வேளச்சேரியில் அமைந்துள்ள ‘பிக் விங்ஸ் ஹோண்டா’ ஷோரூம் ஏற்பாடு செய்திருந்த சென்னை to பாண்டிச்சேரி ரைடுக்குத் திடீர் அழைப்பு வந்திருந்தது. நானும் புகைப்பட நிபுணர் துளசிதரனும் கிளம்பினோம்.

பிக்விங்கில் கிடைக்கும் ஹோண்டாவின் ப்ரீமியம் பைக்குகளாக வரிசை கட்டி நின்றிருந்தன. எங்களுக்குக் கிடைத்த பைக் – ஹோண்டா CB 500X பைக். அதிகாலை 5.30 மணிக்கெல்லாம் CB 500X–ன் பீஸ்ட் மோடு தெறிக்க ஆரம்பித்துவிட்டது. ரைடிங் விதிமுறைகள் பற்றிச் சொன்னார்கள். ரேஷ் ரைடிங் கூடாது; முறையான பாதுகாப்புக் கவசங்கள் அணியாமல் பைக்கில் அமரக் கூடாது; சிக்னல் – ஒன்வேக்களை மீறக்கூடாது போன்றவை. அடுத்த ஒரு மணி நேரத்தில் பீஸ்ட் மோடில் தொடங்கியது கிழக்குக் கடற்கரைச் சாலையில் பாண்டிச்சேரிப் பயணம்!

மொத்தம் 20 பேர். சென்னையின் எல்லையைத் தாண்டும் வரை ஜிவ்வென இருந்தது பைக்கின் சஸ்பென்ஷன் செட்அப். சென்னை - பாண்டிச்சேரி இடையிலான சில மோசமான சில சாலைகளில் இன்னும் ஜாலியானது ரைடிங். காரணம், CB 500X–ன் 19 இன்ச் வீல்களும், அதிகரிக்கப்பட்ட சஸ்பென்ஷன் டிராவலும், ப்ரீலோடு அட்ஜஸ்ட்டபிள் கொண்ட செட்டப்பும் பக்காவாக இருக்கவே, நமக்கு எந்தப் பாதிப்புமில்லாமல் அவற்றை பக்கோடா போன்று கடித்து மென்று கடந்து சென்றது. காலை நேர சூரிய ஒளியில், வழியில் கிடைத்த நல்ல நல்ல லொக்கேஷன்களில் எல்லாம் பைக்கை நிறுத்தி, எங்களுக்குள் உறங்கிக் கொண்டிருந்த பிசி ராமை விழிக்க வைத்தோம்.

ஈசிஆர்… பிசி ஸ்ரீராம்…
ஹோண்டா பைக்கில் பாண்டிச்சேரிக்கு பீஸ்ட் ரைடிங்

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரப் பயணம். பாண்டிச்சேரி நம்மை அன்புடன் வரவேற்றது. பாண்டிச்சேரி ஆர்ச்சைக் கடந்த சில அடி தூரத்திலேயே அமைந்திருக்கும் அசோக் பீச் ரெஸார்ட்டில் நமக்குக் காலை உணவு தயாராக இருந்தது. நம்முடன் பயணம் செய்த ரைடர்களுடன் அலவளாவிக் கொண்டே காலை உணவை ஒரு ஒரு பிடி பிடித்தோம். இந்த இடத்தில் முக்கியமாகச் சொல்ல வேண்டிய விஷயம் என்னவென்றால், ரைடர்கள் யாரும் உணவு மேசைக்கு வந்தவுடன், தங்களது மொபைல் போனை எடுக்கவில்லை. தங்களின் ரைடிங் அனுபவங்களைப் பற்றிக் கலந்துரையாடியது… அவர்களுக்குள் இருந்த ரைடிங் ஆர்வத்தைப் புரிய வைத்தது.

மறுபடியும் ஈசிஆர்…பிசி ராம்.. பீஸ்ட் மோடு என்று சென்னை வந்ததே தெரியவில்லை.

ஷோரூம் வந்ததும், நாம் தனிப்பட்ட முறையில் சிலரை அணுகி, அவரவர் பைக்குகள் குறித்த அனுபவங்களைக் கேட்டறிந்தோம். அவர்களின் ரிவ்யூவைச் சொல்ல பக்கங்கள் போதாது. எங்கள் ரைடிங்கைப் பொருத்தவரை, ஹோண்டா CB 500X நெடுஞ்சாலைகளில் ஜிவ்வென்றும்; கடுஞ்சாலைகளில் ஜம்மென்றும் இருந்தது.

ஈசிஆர்… பிசி ஸ்ரீராம்…
ஹோண்டா பைக்கில் பாண்டிச்சேரிக்கு பீஸ்ட் ரைடிங்