கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

யெஸ்டி - ஜாவா பீட்டில் அதிர்ந்த இடுக்கி!

Bike club
பிரீமியம் ஸ்டோரி
News
Bike club

நாகர்கோவில் to இடுக்கி

ஹோண்டா பைக்குகளின் ஈசிஆர் ரைடு… நெடுஞ்சாலை ரைடு என்றால், சத்தமே இல்லாமல்… அதாவது – அற்புதமான 2 ஸ்ட்ரோக் எக்ஸாஸ்ட் சத்தத்தோடு பைக் குரூப் ஒன்று, நாகர்கோவிலில் இருந்து கேரளாவின் இடுக்கி நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

நாகர்கோவிலைச் சேர்ந்த Storm Ryderz மற்றும் JJ Ryderz குழுவினர், கோவிட் ஊரடங்கால் தடைப்பட்டுப் போயிருந்த சந்திப்பு தொடர வேண்டும் என்பதற்காக, இந்தப் பயணத்தை ஏற்பாடு செய்திருந்தனர். அதற்கு அவர்கள் தேர்ந்தெடுத்த இடம் – இடுக்கி பக்கத்தில் உள்ள ராமக்கல்மேடு எனும் இடம்.

மேலும் இதில் பாலக்காடு யெஸ்டி க்ளப், திருச்சூர் யெஸ்டி ஜாவா க்ளப், டீம் ரேர் இன்ஜின்ஸ், ரோரிங் ரைடர்ஸ், மெட்டல் ஸ்டாலியன்ஸ் என்று ஏகப்பட்ட க்ளப்பினர் சந்தித்தனர். எல்லாமே யெஸ்டி மற்றும் ஜாவா போன்ற க்ளாஸிக் பைக்குகள்தான்!

மொத்தம் 70 பைக்குகள். ஒரே நேரத்தில் யெஸ்டி மற்றும் ஜாவா பைக்குகளின் எக்ஸாஸ்ட் சத்தத்தைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். அதுவும் மலைச்சாலைகளில் இதன் சத்தத்தை எங்கிருந்து கேட்டாலும்…சொர்க்கம் பக்கத்தில் விரியும்! ‘‘இந்த வாட்டி பைக்குகள் குறைவு. பொதுவா 100–யைத் தாண்டியிருக்கும்!’’ என்றார்கள் கொச்சினைச் சேர்ந்த JJ Ryderz க்ளப்பின் நிறுவனர்கள் ஜோமி மற்றும் ஜோஃபி. இவர்கள்தான் இந்த ரைடு ஒருங்கிணைப்பாளர்கள்.

ஜோமி
ஜோமி
ஜோஃபி
ஜோஃபி
யெஸ்டி - ஜாவா பீட்டில் அதிர்ந்த இடுக்கி!

நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி, மதுரை, தேனி, கம்பம் மெட்டு, ராமக்கல் மெட்டு வழியாக இடுக்கி போவது என்று இவர்களுக்கு வழிகாட்டியாக உதவியவர் நாகர்கோவில் Storm Ryderz தலைவர் ஜெர்ரி. இரண்டு பைக் பிரியர்கள் ஒன்று சேர்ந்தாலே அவ்வளவு ஆர்வமாகப் பேசுவார்கள்தானே… ஆனால், 70 பைக்கர்கள் ஒன்று சேர்ந்தால்…? ஒரு குட்டி ஆட்டோ எக்ஸ்போவே நடந்து கொண்டிருந்தது.

அப்படித்தான் ராமக்கல்மேடு இருந்தது. பனி படர்ந்த பள்ளத்தாக்கில்… மேற்குத் தொடர்ச்சி மலை படுத்திருக்க அதில் சுமார் 70 பைக்கர்கள் கையில் கட்டஞ் சாயாவுடன், தங்கள் மனம் கவர்ந்த க்ளாஸிக் பைக்குகளைப் பற்றி… தங்கள் பைக்குகள் எப்படி ரெடியானது… பராமரிப்பு… பைக்குகளின் குணநலன்கள் என்று தங்கள் குழந்தைகளைப் பற்றிப் பேசுவதுபோல குதூகலமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். அதிகாலை சுமார் 4.30 மணி வரை விடிய விடிய வரை போனது டிஸ்கஷன்.

இந்த குரூப்பில் சேர ஏஜ் குரூப்பெல்லாம் இங்கு இல்லை என்றார்கள். ஆம், 19 வயது முதல் 65 வயது வரை பைக்கர்கள் அனைவருமே இருந்தார்கள். இத்தனைக்கும் முந்தின நாள் தொடர்ச்சியான மழை. ‘‘எப்படியாச்சும் 70 பைக்குகளோட ரிதமும் ஒண்ணா கேட்டே ஆகணும்!’’ என்று செல்லமாக அடம்பிடித்து, 70 பைக்குகளின் எக்ஸாஸ்ட்டையும் உறுமவிட்டிருந்தார்கள் பைக்கர்கள்.

‘‘டாக்டர்கள், கம்பெனி ஓனர்கள், வேலையாட்கள், இன்ஜினீயர்கள் என்று பலதரப்பட்ட ஆட்கள் இருந்தாலும், எங்களை ஒன்றிணைப்பது பைக் ரைடர்ஸ் என்ற இந்தப் புள்ளிதான். அதற்கு யெஸ்டி, ஜாவா பைக்குகள்தான் ஆரம்பம்!’’ என்றார்கள் ஜோஃபி, ஜோமி மற்றும் ஜெர்ரி.

ஜெர்ரி
ஜெர்ரி
யெஸ்டி - ஜாவா பீட்டில் அதிர்ந்த இடுக்கி!