Published:Updated:

“கன்னாபின்னானு ட்ராஃபி அடிக்கணும்!”

ஸென்னா
பிரீமியம் ஸ்டோரி
ஸென்னா

பைக் ரேஸர்: ஸென்னா

“கன்னாபின்னானு ட்ராஃபி அடிக்கணும்!”

பைக் ரேஸர்: ஸென்னா

Published:Updated:
ஸென்னா
பிரீமியம் ஸ்டோரி
ஸென்னா

“ஹாய்ணா... ரொம்பக் கஷ்டப்பட்டு ரேஸ் ஃபீல்டுக்கு வந்திருக்கேன். இந்த ஏரியாவுல நான் புதுசு!’’ என்று ஸென்னா சொன்னாலும், ரேஸ் ட்ராக்கில் 140–ல் பறக்கும் இவரைப் பார்த்தால், புதுசு என்று நம்ப முடியவில்லை. பல வருட ரேஸ் எக்ஸ்பெர்ட்போல பைக்கில் வீலிங் அடிக்கிறார்; சடாரென பிரேக் பிடித்து ஸ்டாப்பி செய்கிறார்; கார்னரிங்கின்போது சாலையில் முழங்கால் உரச பைக்கில் வளைகிறார்.

 பைக் ரேஸர்: ஸென்னா
பைக் ரேஸர்: ஸென்னா

22 வயசு லேனி ஸென்னா ஃபெர்னாண்டஸ், ரேஸிங்கில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் வந்திருக்கிறார். ஆனால், இப்போது நேஷனல் சாம்பியன்ஷிப், ஒன்மேக்குகளில் அனுபவம் வாய்ந்த ரேஸர்களுடன் மோதுகிறார். 2018 ஒன்மேக் போட்டியில் ஒட்டுமொத்தமாக 4–வது இடம், 2019–ல் இரண்டாவது இடம் என டாப் லிஸ்ட்டில் இடம் பிடிக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார் ஸென்னா.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நேஷனல் சாம்பியன்ஷிப்பிலும் கலந்துகொண்டிருக்கிறார். ‘‘ட்ராக் என்றால் க்ராஷ் இருக்குமே... வீட்டில் எப்படிச் சம்மதிச்சாங்க? கீழே விழுந்த அனுபவம் உண்டா?’’ என்று கேட்டால், ‘‘எப்போவாவது விழாம இருந்திருக்கியான்னு கேளுங்கண்ணா! நான் போடியம் ஏறாததுக்குக் காரணமே க்ராஷ் ஆகத்தான் இருக்கும். இங்கே பாருங்க!’’ என்று தனது கட்டுப்போட்ட விரலைக் காண்பிக்கிறார் ஸென்னா. நேஷனலைத் தவறவிட்டதே அந்த க்ராஷால்தான்.

“கன்னாபின்னானு ட்ராஃபி அடிக்கணும்!”
“கன்னாபின்னானு ட்ராஃபி அடிக்கணும்!”

இந்த ஆண்டு ஒன்மேக் ரேஸில், நான்காவது லேப்பில் பைக்கில் பிரச்னை ஏற்பட்டு, க்ராஷ் ஆகி கீழே விழுந்து, மோதிர விரலில் முறிவு ஏற்பட்டு, அடுத்த ரேஸுக்குத் தயாராக இருந்தவரைத்தான் பிடித்தேன். ஸென்னா ரேஸர் ஆனதும் ஒரு சினிமாவுக்கான ஒன்லைன்தான்.

``அட... நம்ம ஊரு பொண்ணா ஸென்னா?’’

‘‘நான் சுத்தமான பாண்டிச்சேரிப் பொண்ணு. இப்போ எம்.எஸ்ஸி சைக்காலஜி ஃபைனல் இயர் படிச்சிட்டிருக்கேன். சின்ன வயசுலேயே எனக்கு பைக் ரேஸ்னா பிடிக்கும். டிவியில் மோட்டோ ஜிபி, ஃபார்முலா ரேஸ்தான் என்னோட ஃபேவரைட். கேம்ஸில்கூட பைக்/கார் ரேஸ் கேம்தான் பிடிக்கும். என்னோட 14–வது வயசில்தான் முதல் முதலா பைக் ஓட்ட ஆரம்பிச்சேன். யெஸ்டி க்ளாஸிக்கில்தான் என்னோட பைக் ரைடிங் பழக்கம் ஆரம்பிச்சது. என் அப்பாவும் ஒரு ராலி ரேஸர்தான். அவர் ஒரு வின்டேஜ் பிரியர். அவர்தான் என்னோட பைக் ரைடிங்கில் குரு. அப்புறம் கோ–கார்ட் கார்கள் ஓட்டிப் பழக ஆரம்பிச்சேன். என் அப்பாவின் நண்பர், ரேஸ் ட்ராக்கில் போட்டோகிராஃபரா இருந்தாங்க. அவங்க மூலமாதான் இப்படி யார் வேணாலும் பைக் ஓட்டலாம்னு தெரிஞ்சுக்கிட்டேன். என் 18 வயசுல லைசென்ஸ் எடுத்த பிறகு, ‘பசங்க மாதிரி எனக்கு ரேஸ் பைக் ஓட்டணும்னு ஆசை. நான் ரேஸராகட்டுமா’ன்னு அப்பாகிட்ட கேட்டேன். செம சண்டை. அம்மாவுக்கு நான் செல்லப் பொண்ணு. அதனால செம டென்ஷன் ஆயிட்டாங்க. அப்புறம் ரோட்லகூட பைக் ஓட்ட விடலை. ஒரு தடவை டிவிஎஸ் ரேஸிங் டீமில் இருந்து ரைடர்ஸ் செலெக்ட் பண்றாங்கன்னு நியூஸ் வந்துச்சு.

வீட்டுக்குத் தெரியாமலேயே அப்ளை பண்ணிட்டேன். எனக்குப் பெரிய ரேஸர் ஆகணும்னு ஆசை இல்லை அப்போ. எப்படியாவது ரேஸ் ட்ராக்கில் பைக் ஓட்டிடணும்ங்கிறதுதான் என்னோட வெறி. Speed Demons Racing Team என்கிற அகாடமியில் ட்ரெயினிங் எடுத்தேன். ரேஸுக்கு முந்தின நாள் ரேஸ் சூட், பைக்கோட கிளம்பும் போதுதான் அப்பாகிட்ட சொன்னேன். பெரிய சண்டை.

இந்த ஒரு தடவை மட்டும்னு சொல்லி எப்படியோ விடாப்பிடியா கலந்துக்கிட்டேன். மொத்தம் 80 ரைடர்ஸ் கலந்துக்கிட்டாங்க. அதில் 8–வது இடம் பிடிச்சு செலெக்ட் ஆயிட்டேன். அப்புறம் வீட்ல சமாதானம் பண்ணி, அவங்களைச் சம்மதிக்க வெச்சுட்டேன். செகண்ட் ரவுண்ட்லயும் செலெக்ட் ஆனேன். இப்போ ஒவ்வொரு ரேஸ் நடக்கிறப்போவும் அப்பாவும் அம்மாவும்தான் எனக்குப் பெரிய சப்போர்ட். ஐ லவ் மம்மி – டாடி!’’ என்று நான்–ஸ்டாப்பாகப் பேசினார் ஸென்னா.

ஸென்னாவின் சின்ன வயதில் `விஜய் பிடிக்குமா... அஜித் பிடிக்குமா’ என்றால், `மைக்கேல் ஷூமேக்கர்’ என்பாராம். 4–வது வயதிலேயே ஸென்னா, மைக்கேல் ஷூமேக்கரின் தீவிர விசிறியாம். ஷூமேக்கருக்கு விபத்து ஏற்பட்டு கோமாவுக்குப் போன செய்தி கேள்விப்பட்ட 8 வயசுக் குட்டிப் பொண்ணான ஸென்னா, வீட்டில் ஒரே அழுகை. இப்போது டீன்–ஏஜ் பொண்ணான ஸென்னாவின் மனம் கவர்ந்த ஹீரோ – மார்க் மார்க்கஸ். மார்க்கஸின் வேகம்தான் ஸென்னாவுக்கு டானிக்.MMRT-ல் ஸென்னாவின் ஃபாஸ்ட்டஸ்ட் லேப் டைமிங் - 2.10 நிமிடம்.

டிவிஎஸ் செலெக்ஷனுக்குப் பிறகு ஸென்னாவின் முதல் ரேஸ் – கோவை கரி மோட்டார்ஸில் நடந்த டிவிஎஸ் ஒன் மேக் சாம்பியன்ஷிப் ரேஸ். டிவிஎஸ் தேர்ந்தெடுத்த டாப் 16 ரேஸர்களில் ஸென்னாவும் ஒருவர். ட்ராக்கில் கன்னாபின்னாவென விழுந்து க்ராஷ் ஆவதுதான் ஸென்னாவின் ஸ்பெஷல். ஆனாலும், 2-வது முதல் 4–வது வரை வந்து லைக்ஸ் வாங்கிவிடுவது எக்ஸ்ட்ரா ஸ்பெஷல். ‘‘விழுந்து வாராம பைக் ஓட்டுடீ!’’ என்று எச்சரிக்கும் அம்மாவுக்கு, ‘‘விழுந்தாதானேம்மா கத்துக்க முடியும்’’ என்பது ஸென்னா அடிக்கடி சொல்லும் விஷயம். இப்போது ரேஸுக்கு அம்மா–அப்பா–அண்ணனைத் தொந்தரவு செய்வதில்லையாம். படித்துக்கொண்டே பகுதி நேரமாக வேலை பார்த்து, அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தில்தான் யமஹா R15 பைக் வாங்கியிருக்கிறார் ஸென்னா. ரேஸ் பயிற்சிக்கான செலவுகளுக்கும் அப்பாவிடம் கையேந்துவதில்லை.

‘‘ஆரம்பத்துல பைக் ரேஸ்தான் என்னோட கரியர்னு நினைச்செல்லாம் பைக்கை எடுக்கலை. எப்படியாவது ட்ராக்கில் ஓட்டிடணும்னுதான் பைக்கை ஸ்டார்ட் பண்ணினேன். இப்போ ட்ராக் எனக்கு அத்துப்படி! சொன்னா சிரிக்கக் கூடாது – நேஷனல், ஒன்மேக், ஆசியான்னு ஏகப்பட்ட கப் அடிச்சிட்டு, அதைத் தாண்டி மோட்டோ ஜிபிதான்! பெண்களுக்கு இந்தியாவில் நிச்சயம் அதுக்கு வாய்ப்பு இருக்கு. என்ன சொல்றீங்க?’’ என்று தம்ஸ்–அப் காட்டியது சைக்காலஜி பொண்ணு.

ஸென்னா சொன்னா சரிதான்!