Published:Updated:

ராயல் என்ஃபீல்டு ஆர்ட்டிஸ்ட் டைடு!

ராயல் என்ஃபீல்டு ஆர்ட்டிஸ்ட் டைடு!
பிரீமியம் ஸ்டோரி
ராயல் என்ஃபீல்டு ஆர்ட்டிஸ்ட் டைடு!

பைக் ரைடு: ECR ஆர்ட்டிஸ்ட் வில்லேஜ்

ராயல் என்ஃபீல்டு ஆர்ட்டிஸ்ட் டைடு!

பைக் ரைடு: ECR ஆர்ட்டிஸ்ட் வில்லேஜ்

Published:Updated:
ராயல் என்ஃபீல்டு ஆர்ட்டிஸ்ட் டைடு!
பிரீமியம் ஸ்டோரி
ராயல் என்ஃபீல்டு ஆர்ட்டிஸ்ட் டைடு!

சாதாரணமாக காபி குடிக்கத் தோன்றினால், அருகில் இருக்கும் டீக்கடைக்குச் சென்று, 15 ரூபாய்க்கு ஒரு காபி குடித்துவிட்டு அடுத்த வேலையைப் பார்ப்போம்.

ராயல் என்ஃபீல்டு ஆர்ட்டிஸ்ட் டைடு!

இதுவே, கையில் ராயல் என்ஃபீல்டு கான்ட்டினென்ட்டல் ஜிடி 650 இருந்தால், ஸ்பென்சர் பிளாஸாவில் இருந்து ECR வரை சென்று, அங்கிருக்கும் ஒரு கஃபேவைத் தேர்ந்தெடுத்து 100 ரூபாய்க்கு காபி வாங்கி ரசித்துக் குடித்துவிட்டு, மீண்டும் அலுவலகம் வரத் தோன்றும். காபி ஒரு போதை என்பார்கள், கஃபே ரேஸர்கள் அதைவிடப் பெரிய போதை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஸ்பிளிட் ஹேண்டில்பார், அக்ரஸ்ஸிவான ரைடிங் பொசிஷன், ஸ்டேபிளான ஃபிரேம், 47bhp பவர் - 5.2kgm டார்க் தரும் 650சிசி பேரலல் ட்வின் இன்ஜின் என ராயல் என்ஃபீல்டின் கான்ட்டினென்ட்டல் ஜிடி 650, உங்களை ராயலாக உணரச் செய்யும் ஒரு பைக். என்ன, எடைதான் கொஞ்சம் அதிகம். ஹாலிவுட் ஃபைட்டர்கள்போல் பல்க்கியாக இருக்கும் (198 கிலோ) கான்ட்டினென்ட்டல் போன்ற பைக்குகளைக் கையாள, ஜிம்முக்குப் போய் உடம்பை வளர்த்தெடுக்க வேண்டும் என்று இந்தப் புத்தாண்டில் ரிசொல்யூஷன் எடுத்துக் கொண்டேன்.

ராயல் என்ஃபீல்டு ஆர்ட்டிஸ்ட் டைடு!

ஃபோட்டோஷாப்பில் UV ஃபில்டர் அப்ளை செய்தாற்போன்றதொரு ஒரு விடியற்காலைப் பொழுதொன்றைத் தேர்ந்தெடுத்து, கான்ட்டினென்ட்டலை ஸ்டார்ட் செய்தேன். ``இன்னிக்குத்தான் சூரிய கிரகணம்’’ என்றார்கள். `வசதியாப் போச்சு’ என்று கான்ட்டினென்ட்டலின் ஆக்ஸிலரேட்டரை முறுக்கினேன். கண்டமே அதிரும்படி பீட் சத்தம்... இருக்காதா பின்னே... டபுள் எக்ஸாஸ்ட் ஆச்சே!

``நானும் வருவேன்’’ என்று புகைப்படக் கலைஞர்கள் பலர் அடம்பிடித்தார்கள். ஆனால் சான்ஸ் கிடைத்தது துளசிதரனுக்கு. அலுவலகத்தில் இருந்த கான்ட்டினென்ட்டல் ஜிடியை எடுத்துக் கொண்டு, ECR சாலையை நோக்கி ஒரே முறுக்கு. ஆர்பிஎம் மீட்டரைத் தாண்டிக் குதித்து முள் விழுந்துவிடும் போல! மீட்டரின் நடுப்பகுதி தள்ளி, துள்ளிக் கொண்டிருந்தது முள். ஈஞ்சம்பாக்கம் தாண்டியதும், பைக்கை ஒரு கஃபேயில் நிறுத்தி காபி ஆர்டர் செய்தோம். காபிச் சூட்டைவிட கான்ட்டினென்ட்டலின் இன்ஜின் சூடு கால்களைப் பதம் பார்த்திருந்தது.

காபியை உறிஞ்சியபடி கவனித்தோம். அடர்த்தியான கட்டடங்களுக்கு நடுவே அமைதியான, அழகான அந்தத் தெரு. அட! சோலமண்டல் ஆர்ட்டிஸ்ட் வில்லேஜின் வாசலா அது! புகைப்படக் கலைஞர் ஓவர்டைம் பார்க்க ஆரம்பித்து விட்டார்.

ராயல் என்ஃபீல்டு ஆர்ட்டிஸ்ட் டைடு!

தமிழ்ப் படங்களில் வரும் ஹீரோயின் அறிமுகம்போல, உள்ளே செல்லும்போதே இலைகளும், பூக்களும் காற்றில் உதிர்ந்து கொண்டிருந்தன. வெள்ளை நிற வீடுகள் அதிகம். ஒவ்வொரு வீட்டிலும் செடிகள் கொடிகள் பூந்தொட்டிகள் எனப் பசுமையின் மனம் ஒருசேர வீசியது.

ஒரே எண்ண ஓட்டத்தில் இருக்கும் கலைஞர்களை ஒன்றிணைத்து, நவீனக் கலை வடிவங்களை உருவாக்கும் நோக்கத்தோடு ஓவியர்களும், சிற்பிகளும் மெட்ராஸுக்கு வெளியே நிலம் வாங்கி, ஒவ்வொருவரும் தங்களுடைய வீடுகளை ரசனையோடு கட்டமைத்து, இங்கே ஒரு சமூகமாக அப்படியே குடிபெயர்ந்தார்கள். இப்போது நாம் காணும் தென் இந்தியாவின் மாடர்ன் கலை வடிவங்களைக் கட்டமைத்ததில், இங்கு வாழ்ந்த & வாழ்ந்து கொண்டிருக்கும் கலைஞர்களுக்கு பெரும்பங்கு இருக்கிறது.

காலணி ஆதிக்கத்தால், ஐரோப்பியாவின் ஆர்ட் இன்ஸ்பிரேஷன் இங்கே அதிகம். அதில் இருந்து வேறுபட்டு மண் சார்ந்த கலை வடிவங்களையும், நிறங்களையும், ஓவியங்களையும், அடையாளங்களையும் உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு ஆரம்பிக்கப்பட்டதுதான் மெட்ராஸ் ஆர்ட் மூவ்மென்ட். அதன் பகுதியாக உருவானதுதான் இந்த இடம்.

ராயல் என்ஃபீல்டு ஆர்ட்டிஸ்ட் டைடு!

ராயல் என்ஃபீல்டின் பல அம்சங்கள், இந்த இடத்தோடு ஒன்றியிருந்தது. இன்டர்செப்டரின் ஆரஞ்சு நிறத்தில் வீடு, கேலரியில் வைக்கப்பட்டிருந்த ஓவியத்தில் விண்ட்ஸ்கிரீனின் வடிவங்கள், 30 ஆண்டுகளுக்கு முன் செதுக்கப்பட்ட ஸ்கூட்டர் ரைடர்ஸ் எனும் ஒரு சிற்பத்தில் இருந்த ஹெட்லைட்டின் ரவுண்டு டிசைன் என நிறைய விஷயங்கள்.

ஆர்ட்டிஸ்ட் வில்லேஜில் ஒரு முட்டுச்சந்தில் நின்றபோது, ஒரு வயதான பெண் `நீங்கள் பைக்கரா' என விசாரித்தார். பைக்கர் என்ற வார்த்தை எத்தனை கெளரவமானது தெரியுமா! ``இந்த ஆர்ட்டிஸ்ட் வில்லேஜில் ஆர்ட்டிஸ்ட்கள் மட்டுமே இருந்தார்கள். ஆனால், இப்போது யார் யாரோ நிலம் வாங்கி, இங்கிருக்கும் அழகான வீடுகளை அழித்துவிட்டு தீப்பெட்டிபோல வீடுகளைக் கட்டுகிறார்கள். இப்போது கலைஞர்களைக் காப்பாற்றுவது இங்கிருக்கும் எக்ஸிபிஷன் சென்டர் மட்டும்தான். இங்கே நிறையக் கண்காட்சிகளும், பயிற்சி வகுப்புகளும் நடத்திக் கொண்டு, நாங்கள் ஒரு அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்” என்றவர், சட்டென முகமலர்ச்சியோடு, “என் மகனும் பைக்கர்தான்” என்று சொல்லி எங்களை வழியனுப்பினார்.

பைக்கை வேகமாகக் கிளப்பிக்கொண்டு, ஈஞ்சம்பாக்கத்தில் இருந்து திருவான்மியூருக்கு 5 நிமிடத்தில் வந்து சேர்ந்தோம். ஆனால் டிராஃபிக் கொடுமையால், அங்கிருந்து அலுவலகம் வர 50 நிமிடம் ஆகியிருந்தது. அதேநேரம், கஃபே ரேஸரின் போதை மட்டும் இன்னும் குறையவே இல்லை.