Published:Updated:

தென்னிந்தியாவின் முதல் ஹார்லி ஓனர்!

Harley-Davidson CVO
பிரீமியம் ஸ்டோரி
Harley-Davidson CVO

பைக் ரைடு - ஹார்லி CVO 2019

தென்னிந்தியாவின் முதல் ஹார்லி ஓனர்!

பைக் ரைடு - ஹார்லி CVO 2019

Published:Updated:
Harley-Davidson CVO
பிரீமியம் ஸ்டோரி
Harley-Davidson CVO

ஹார்லி டேவிட்சனின் CVO, மற்ற ஹார்லி பைக்குகளுக்கெல்லாம் தாதா ரகம். இதனால், ஒவ்வொரு ஆண்டும் ஒரு CVO மாடலைக் (அப்டேட்) களமிறக்கி வருகிறது ஹார்லி. அந்த வகையில் 2019 CVO மாடல்தான் லேட்டஸ்ட். ஸ்மூத்தான V-Twin இன்ஜின், இன்டக்ரேட்டட் செக்யூரிட்டி லாக் சிஸ்டம், LED லைட்கள், இரு வயர்லெஸ் ஹெட்போன்கள், பல மணி நேரம் ஹாயாகப் பயணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சொகுசான இருக்கைகள், டயர் பஞ்சர் அலெர்ட் மற்றும் மேப் போன்றவை தெளிவாகத் தெரியும் டிஜிட்டில் டிஸ்ப்ளே, மிரட்டலான மியூசிக் சிஸ்டம் என்று குட்டி தேர் போலத் தயாரிக்கப் பட்டிருக்கிறது 2019 CVO பைக்.

 விமானத்தின் காக்பிட் போல டிசைன்...,  ஆக்ஸிலரேஷன் கூட்டினால், மியூசிக் வால்யூமும் கூடும்.
விமானத்தின் காக்பிட் போல டிசைன்..., ஆக்ஸிலரேஷன் கூட்டினால், மியூசிக் வால்யூமும் கூடும்.

417 கிலோ எடை கொண்ட இதன் ஆன் ரோடு விலை கிட்டத்தட்ட 60 லட்சத்தைத் தொடுகிறது. தென்னிந்தியாவில் இந்த CVO-ன் முதல் வாடிக்கையாளர், கோவையைச் சேர்ந்த சந்திரசேகர். இருகூர் அருகே இருக்கும் அவரின் வீட்டுக்குச் சென்றோம். எப்படியும் இளைஞர் அல்லது நடுத்தர வயது நபராகத்தான் இருப்பார் என நினைத்தோம். ஆனால், CVO ஓனர் சந்திசேகருக்கு வயது 63.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“எனக்குச் சொந்த ஊர் ராஜபாளையம். தொழிலுக்காகக் கோவைக்கு வந்துவிட்டோம். 30 ஆண்டுகளுக்கு முன்பு பைக் ஓட்டியிருக்கிறேன். தொழிலில் பிஸியான பிறகு கார் பயணம்தான் அதிகம். எனக்கு ஒரே மகள்தான். அவருக்கும் திருமணமாகிவிட்டது. 58 வயதுக்குப் பிறகு சற்று ஓய்வெடுக்கலாம் என முடிவு செய்தேன். பைக் ரைடில் ஆர்வம் காட்டலாம் என்று நினைத்து, பைக் வாங்க பல ஷோரூம்களுக்குச் சென்றேன். எனக்குப் பிடித்த மாதிரியான பைக் எங்குமே கிடைக்கவில்லை.

ஹார்லி CVO
ஹார்லி CVO

வேலூர் அருகே, ஹார்லியின் சூப்பர்லோ பைக்கை செகண்ட் ஹேண்டில் வாங்கினேன். நிறைய ரைடு போனேன். இதனால் குரூப் ரைடு எல்லாம் பழகிவிட்டது. பிறகு, பெரிய பைக் வாங்கலாம் என்று ஹார்லியின் ரோட் கிங் பைக்கை வாங்கினேன். அதிலும் நிறைய நல்ல அனுபவங்கள். அதன்பிறகு தான் இந்த CVO வாங்கினேன். பிசினஸ் தேவைகளுக்காக அடிக்கடி வெளிநாடு செல்வேன். ஒருமுறை அமெரிக்காவில், ஒரு கூட்டமே ஹார்லியில் அதிரிபுதிரியாக வலம் வந்து கொண்டிருந்தனர். அந்த இடத்தில்தான் எனக்கு ஹார்லி மீது ஈர்ப்பு வந்தது” என்று புன்னகைத்தவரிடம் CVO பைக்கின் சிறப்பம்சங்கள் குறித்து கேட்டோம்.“ஹார்லி க்ரூஸர் ஒன்றை வாங்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை. பலரும் இந்தியன், டுகாட்டி, ஹோண்டா ஆகிய பிராண்டுகளை பரிந்துரைத்தனர். அவை எதுவுமே பெரிதாக ஈர்க்கவில்லை. CVO, பார்த்ததும் பிடித்துவிட்டது. சமீபத்தில் ஹைதராபாத்தில் இருந்து கோவை வந்தேன்.

 எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் போகலாம்.,  பைக்கின் எல்லா தகவல்களும் ஸ்க்ரீனில்...
எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் போகலாம்., பைக்கின் எல்லா தகவல்களும் ஸ்க்ரீனில்...

எனக்குக் கொஞ்சம் கூட அலுப்புத் தட்டவில்லை. ஆக்ஸிலரேட்டரில் பலத்தைக் காட்டும்போது, மியூசிக் சிஸ்டத்தின் வால்யூமும் கூடுகிறது. வளைவில் திருப்பி ஓட்ட பைக் அற்புதம். அதிகபட்சமாக 160 கி.மீ வேகம் வரை சென்றிருக்கிறேன். கொஞ்சம்கூட அதிர்வுகளே இல்லை. இதில், 220 கி.மீ வேகத்தில்கூட அசால்ட்டாகச் செல்லலாம்.பெங்களூரு அருகே ஹைவேஸில் ஒருமுறை சடர்ன் பிரேக் போட்டுவிட்டேன். பைக் காற்றில் பறந்துவிட்டது. அவ்வளவுதான்; எல்லாம் முடிந்தது என்றே நினைத்தேன். ஆனால் அதிர்ஷ்டவசமாக எதுவுமே ஆகவில்லை. கன்ட்ரோல் சரியாக இருந்ததால் எதுவுமே தப்பாக நடக்கவில்லை. பிரேக்கிங் சிஸ்டம் அத்தனை சிறப்பு. கீழே விழுந்தாலும், பைக்குக்கு ஏதும் அடிபடாத வகையில்தான் இதைத் தயாரித்துள்ளனர். ஆனால் ஹைவேஸில் பெரிதாக உள்ள ஸ்பீடு பிரேக்கர்களில், சற்று கவனமாகச் செல்ல வேண்டும். எனக்குத் தோராயமாக 13 கி.மீ வரை மைலேஜ் கிடைக்கிறது. இத்தனை பெரிய பைக்கை டிராஃபிக்கில் ஓட்ட எனக்கு எந்தச் சிரமமும் தெரியவில்லை. சற்று திட்டமிட்டு பைக்கை ஓட்டினாலே போதும். பைக்கிலேயே ஏழு நாடுகளுக்குப் பயணம் செய்திருக்கிறேன்.

 டபுள் எக்ஸாஸ்ட் சத்தமே செம கெத்து.,  V-ட்வின், 1,923 சிசி இன்ஜினில் 220 கி.மீ வரை பறக்கலாம்.
டபுள் எக்ஸாஸ்ட் சத்தமே செம கெத்து., V-ட்வின், 1,923 சிசி இன்ஜினில் 220 கி.மீ வரை பறக்கலாம்.

இந்தியாவில் பல மாநிலங்களுக்குச் சென்றுவிட்டேன். வெஸ்பா, ஜாவா என்று பலவிதமான பைக்குகளை ஓட்டிவிட்டேன். ஹார்லியில் கிடைக்கும் ஓட்டுதல் அனுபவம், வேறு எதிலுமே கிடைப்பதில்லை. அடுத்தடுத்து நிறைய பைக் ரைடுகளைத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறேன். வாழும் காலத்தை பைக்குடன், மகிழ்ச்சியாக வாழ்ந்தாலே போதும்” என்று முடித்தார்.

பைக்கில் ரிவர்ஸ் கியர் இருக்கா?

வெளிநாடுகளில் பைக்கில் ரிவர்ஸ் கியர் இருக்கும். ஆனால், இந்தியாவில் டூரிங் பைக்குகளிலேயே இந்த வசதி இருக்காது. அதிக எடையுள்ள டூரிங் பைக்குகளை பின்னால் தள்ளுவதில் சிரமம் இருக்கிறது.

6 ஸ்பீடு கியர்பாக்ஸ்... ரிவர்ஸும் உண்டு.,  கி.கிளியரன்ஸ்தான் குறைவு. ஸ்பீடு பிரேக்கர்கள் கவனம்.
6 ஸ்பீடு கியர்பாக்ஸ்... ரிவர்ஸும் உண்டு., கி.கிளியரன்ஸ்தான் குறைவு. ஸ்பீடு பிரேக்கர்கள் கவனம்.

இதைச் சரிசெய்யும் விதமாக, தனது யூரோடெக் நிறுவனம் மூலம் ரிவர்ஸ் கியரைத் தயாரித்திருக்கிறார் சந்திரசேகர். முதன்முதலாக, அதை அவர் வாங்கியுள்ள CVO பைக்கிலேயே இன்ஸ்டாலும் செய்துள்ளார். `‘இந்தியாவில் தயாரிக்கப்பட்டு, பயன்பாட்டில் உள்ள முதல் ரிவர்ஸ் கியர் வசதி உள்ள பைக் என்னுடையது தான். இது, பைக்கின் இயல்பை எந்த விதத்திலும் பாதிக்காது’’ என்கிறார் சந்திரசேகர்.