Bird குழுமத்தின் துணை நிறுவனமான Bird எலெக்ட்ரிக் மொபிலிட்டி, எலெக்ட்ரிக் கார்கள் மட்டுமல்லாது, எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையும் காட்சிப்படுத்தியது. ES1+ எனப் பெயரிடப்பட்டுள்ள இது, அசப்பில் Super Soco CUX போலவே தோற்றமளிக்கிறது.

இதன் மற்ற விபரங்களை Bird எலெக்ட்ரிக் அறிவிக்கவில்லை எனினும், அது சிங்கிள் சார்ஜில் 55 கிமீ வரை செல்லும் (35 கிமீ வேகத்தில் ஓட்டும்போது) என அந்த நிறுவனம் கூறியுள்ளது.

CUX-ல் இருப்பது பாஷ் நிறுவனத்தின் 1.3kW எலெக்ட்ரிக் மோட்டார்.கழட்டக்கூடிய லித்தியம் ஐயன் பேட்டரியை, ஃபுல் சார்ஜ் ஏற்றுவதற்கு 7-8 மணி நேரம் தேவைப்படும். 62 கிலோ எடையுள்ள ES1+, நகரப் பயன்பாட்டுக்கேற்ற லைட் வெயிட் வாகனமாக இருக்கும்.

LED லைட்டிங், 12 இன்ச் அலாய் வீல்கள், LCD டிஸ்பிளே, முன்பக்க டிஸ்க் பிரேக், டெலிஸ்கோபிக் ஃபோர்க் - இரட்டை ஷாக் அப்சார்பர் என நவீன அம்சங்கள் இருப்பது ப்ளஸ். 2020-ம் ஆண்டின் இறுதியில் வரப்போகும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், உத்தேசமாக 60,000 ரூபாயில் கிடைக்கலாம். முதற்கட்டமாக டெல்லியிலும், பின்னர் இதர மெட்ரோ சிட்டிகளிலும் ES1+ விற்பனை செய்யப்படும்.