Published:Updated:

இந்த பிஎம்டபிள்யூ அப்படியே அப்பாச்சிதான்... ஆனால்?

பிஎம்டபிள்யூ G310RR
பிரீமியம் ஸ்டோரி
பிஎம்டபிள்யூ G310RR

அறிமுகம்: பிஎம்டபிள்யூ G310RR

இந்த பிஎம்டபிள்யூ அப்படியே அப்பாச்சிதான்... ஆனால்?

அறிமுகம்: பிஎம்டபிள்யூ G310RR

Published:Updated:
பிஎம்டபிள்யூ G310RR
பிரீமியம் ஸ்டோரி
பிஎம்டபிள்யூ G310RR
இந்த பிஎம்டபிள்யூ அப்படியே அப்பாச்சிதான்... ஆனால்?

டெல்லியின் 33 டிகிரி வெயிலில் பிஎம்டபிள்யூ ஒரு வழியாக தனது G310RR பைக்கை வெளியிட்டிருக்கிறது. வெயிலுக்கு நிகராக பிஎம்டபிள்யூ லோகோவுடன் ஃபுல் ஃபேரிங் பைக்...செம ஹாட். அடிப்படையில் அப்பாச்சி RR310 பைக்தான் என்றாலும், புதிய பெயின்ட் மற்றும் இரண்டு புதிய நிறங்கள் இதில் கிடைக்கிறது.

அப்பாச்சியின் அதே TFT டிஸ்ப்ளேதான். ஆனால், கிராஃபிக்ஸில் பிஎம்டபிள்யூ. அதே இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்தான். ஆனால், அப்பாச்சியில் புளூடூத் இருக்கும்போது, விலை அதிகமான இந்த பைக்கில் புளூடூத் வசதி இல்லை என்பது ஆச்சர்யம்.

RR310 பைக்கில் மிச்சலின் ரோடு 5 டயர் கொடுத்திருப்பார்கள். பிஎம்டபிள்யூவில் மிச்சலின் பைலட் டயர்கள் வருகின்றன. பெட்டல் டைப் டிஸ்க் பிரேக்கிற்குப் பதிலாக சாதாரண ரோட்டர் டைப் டிஸ்க் கொடுத்திருப்பதும் கொஞ்சம் யோசிக்கத்தான் வைக்கிறது.

இந்த பிஎம்டபிள்யூ அப்படியே அப்பாச்சிதான்... ஆனால்?

அப்பாச்சி RR310 மாடலுக்கும் பிஎம்டபிள்யூ G310RR மாடலுக்கும் வித்தியாசங்களைவிட ஒற்றுமைகள்தான் அதிகம். ஒரே இன்ஜின், ஃப்ரேம், சஸ்பென்ஷன் மற்றும் பிரேக். அப்பாச்சியில் இருக்கும் அதே ரைடிங் மோடு இதிலும். ஆனால், பிரேக் காலிப்ரேஷன் வித்தியாசமாக இருக்கும் என்கிறார்கள் பிஎம்டபிள்யூ பொறியாளர்கள். 34bhp பவர், 27Nm டார்க், 174 கிலோ எடை மூன்றுமே மாறவில்லை. அதே USD ஃபோர்க் மற்றும் மோனோஷாக். ஆனால், அப்பாச்சியில் அட்ஜஸ்டபிள் சஸ்பென்ஷன் இருக்கும். இங்கு அதுவும் மிஸ்ஸிங். ப்ரீலோடு மட்டுமே தேவைக்கு ஏற்ப மாற்ற முடியும்.

அப்பாச்சியில் கருப்பு நிறம் மேட் ஃபினிஷில் என்றால் பிஎம்டபிள்யூ, கிளாஸி ஃபினிஷ் பெயின்ட்டில் வருகிறது. பிஎம்டபிள்யூ பைக்ஸின் பிரத்தியேக, பாரம்பரிய வெள்ளை - சிவப்பும், நீலம் சேர்ந்த ரேஸ் எடிஷன் நிறமும் வந்திருக்கிறது. அப்பாச்சியை விட 20,000 ரூபாய் கூடுதல் விலையோடு 2,85,000 ரூபாய் என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் கருப்பு G310RR பைக்கை வாங்கலாம். ரேஸிங் எடிஷன் வாங்க வேண்டும் என்றால் இன்னும் 14,000 ரூபாய் கூடுதலாக தரவேண்டும். அதாவது, இதன் விலை 2,99,000 ரூபாய்.

மொத்தத்தில் G 310RR-ன் பெரிய சொத்து அதன் ஃபேரிங்கில் இருக்கும் பேட்ஜ். பிராண்ட் வேல்யூ என்பது முக்கியமானது என நீங்கள் கருதினால்... அப்பாச்சியைவிட கூடுதல் விலை கொடுத்து இந்த பிஎம்டபிள்யூ பைக்கை வாங்கலாம்!