Published:Updated:

Made-in கோவை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

பூம் கார்பெட்
பிரீமியம் ஸ்டோரி
News
பூம் கார்பெட்

அறிமுகம்: பூம் கார்பெட் எலெக்ட்ரிக்

எலெக்ட்ரிக் வாகனத் துறைக்குள் கால் பதிக்க இதைவிடச் சிறப்பான சமயம் வேறு எதுவும் இருக்க முடியாது. ஆப்பிள், ஓப்போ என பெரிய டெக் நிறுவனங்களும் பலவுமே அடுத்த சில ஆண்டுகளில் எலெக்ட்ரிக் வாகனங்களை வெளியிடப் போவதாக அறிவித்திருக்கிறன. எலெக்ட்ரிக் வாகனச் சந்தையின் எதிர்காலத்தை உணர்ந்த சில ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இப்போதே தங்களது புதிய தயாரிப்புகள் பலவற்றையும் களமிறக்கி வருகின்றன. அந்தப் பட்டியலில் சமீபத்தில் இணைந்திருக்கும் நிறுவனம் பூம் மோட்டார்ஸ் (Boom Motors).

இந்த பூம் மோட்டார்ஸ் நிறுவனமானது, தமிழகத்தின் கோயம்புத்தூரைத் தலைமையகமாகக் கொண்டு தொடங்கப்பட்ட ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம். கடந்த மாதம் இரண்டு புதிய எலெக்ட்ரிக் பைக்குகளை இந்திய எலெக்ட்ரிக் வாகனச் சந்தையில் அறிமுகப்படுத்தியிருக்கிறது இந்நிறுவனம். கார்பெட் 14 (Corbett 14) மற்றும் கார்பெட் 14-Ex (Corbett 14 Ex) என்ற இரண்டு மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது இது.

டிவிஎஸ் XL மாடலின் எலெக்ட்ரிக் வெர்ஷன் போலவே காட்சி தரும் இந்த மாடல்கள் 100 கிமீ மற்றும் 200 கிமீ ரேஞ்ச் கொண்டவையாக இருக்கும் என்று க்ளெய்ம் செய்கிறது அந்நிறுவனம். 200 கிலோ வரை எடை ஏற்றிக் கொள்ள முடியுமாம். இதன் குறைந்த விலை கொண்ட மாடலாக கார்பெட் 14 இருக்கிறது. இதன் விலை 86,999 ரூபாய். ஹை-எண்டு மாடலாக கார்பெட் 14-Ex இருக்கிறது. இதன் விலை 1,19,999 ரூபாய்.

வரும் ஜனவரியில் இருந்து கார்பெட்டுக்கு டெலிவரி துவங்குகிறது.

பூம் கார்பெட்
பூம் கார்பெட்