கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

ஸ்வாப் பேட்டரி வசதியுடன் வரும் இன்ஃபினிட்டி எலெக்ட்ரிக்!

பவுன்ஸ் இன்ஃபினிட்டி
பிரீமியம் ஸ்டோரி
News
பவுன்ஸ் இன்ஃபினிட்டி

அறிமுகம் பவுன்ஸ் இன்ஃபினிட்டி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

பவுன்ஸ், பெங்களூருவைச் சேர்ந்த ஸ்டார்ட்–அப் நிறுவனம். ஓலாவுக்குப் போட்டியாக இது ‘இன்ஃபினிட்டி’ எனும் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை லாஞ்ச் செய்ய இருக்கிறது. இதில் என்ன சிறப்பு என்றால்… எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் செக்மென்ட்டில் எதிலும் இல்லாத Swappable Battery எனும் வசதியோடு வரவிருக்கிறது இன்ஃபினிட்டி!

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் இருக்கும் பெரும்பிரச்னையான சார்ஜிங்குக்கு இந்த ஸ்வாப்பிங் பேட்டரி சிஸ்டம் ஒரு வரம். அதாவது, காலியான உங்கள் பேட்டரியை அப்படியே எக்ஸ்சேஞ்ச் செய்து, ஃபுல் சார்ஜ் கொண்ட பேட்டரியை ஸ்வாப் செய்து மாட்டிக்கொண்டு உடனே பறக்கலாம். சார்ஜிங்குக்குக் காத்திருக்கும் நேரத்தைக் குறைப்பதுதான் இந்த பேட்டரி ஸ்வாப்பிங். இதன்மூலம் வெறும் இரண்டு நிமிடங்களில் ஃபுல் ரேஞ்ச் கிமீ–யுடன் பயணிக்கலாம். இதை அங்கங்கே இருக்கும் பவுன்ஸ் சர்வீஸ் ஸ்டேஷன்களில் பெற்றுக் கொள்ளலாம். இப்போதைக்கு பெங்களூரு போன்ற நகரங்களில் முதன்முறையாக இந்த சிஸ்டத்தை தனது சர்வீஸ் ஸ்டேஷன்களில் அமுல்படுத்த இருக்கிறது பவுன்ஸ்.

ஸ்வாப் பேட்டரி வசதியுடன் வரும் இன்ஃபினிட்டி எலெக்ட்ரிக்!
ஸ்வாப் பேட்டரி
ஸ்வாப் பேட்டரி

இன்ஃபினிட்டி E1 என்கிற வேரியன்ட்டில் வரவிருக்கிறது இந்த ஸ்கூட்டர். இதில் இன்னொரு சிறப்பம்சமும் உண்டு. இதில் உள்ள `Battery as a Service’ என்றொரு ஆப்ஷனைப் பயன்படுத்தி பேட்டரி இல்லாமலும் இந்த ஸ்கூட்டரை வாங்கிக் கொள்ளலாம். இதன் விலை வெறும் 36,500 ரூபாய் எக்ஸ் ஷோரூம் என்பதுதான் இதில் சிறப்பு. ஸ்வாப்பிங் சிஸ்டத்தில் பேட்டரியை வாங்கி வாங்கி மாற்றிக் கொள்ளலாம். இதற்கு மட்டும் பணம் கொடுத்தால் போதும். இதற்கு எவ்வளவு விலை என்று தெரியவில்லை. ஆனால், இதில் 40% பணம் மிச்சப்படுத்தலாம் என்கிறது இன்ஃபினிட்டி!

இந்த ஸ்கூட்டரின் ஃபுல் ரேஞ்ச் 85 கிமீ என்கிறது பவுன்ஸ் நிறுவனம். இதுவே ஓலா ஸ்கூட்டரில் 150 கிமீ என்றாலும், இந்த ஸ்வாப்பிங் பேட்டரி இருப்பதே இதற்குப் பெரிய செல்லிங் பாயின்ட்டாக இருக்கலாம்.