Published:Updated:

புல்லட் க்ளாஸிக்கில் ட்வின் சிலிண்டர் 650 சிசி!

புல்லட் க்ளாஸிக் 650
பிரீமியம் ஸ்டோரி
புல்லட் க்ளாஸிக் 650

Spy Shot / ரகசிய கேமரா

புல்லட் க்ளாஸிக்கில் ட்வின் சிலிண்டர் 650 சிசி!

Spy Shot / ரகசிய கேமரா

Published:Updated:
புல்லட் க்ளாஸிக் 650
பிரீமியம் ஸ்டோரி
புல்லட் க்ளாஸிக் 650

புல்லட் 650-யைப் படம் எடுத்து அனுப்பிய வாசகர் அர்ஜூனுக்குப் பரிசு காத்திருக்கிறது.

சென்னை - திண்டிவனம் பைபாஸில் 100 கிமீ வேகத்தில் `டுப் டுப்’ என ஒரு பைக் பறந்து கொண்டிருந்தபோது, இந்தப் படத்தை க்ளிக் செய்தேன். எனது ஸ்பை ஷாட்டில் க்ளிக் ஆன அந்த பைக் - ராயல் என்ஃபீல்டு 650 க்ளாஸிக்.

டிசைன் பார்க்க மிரட்டலாகவும் பிரம்மாண்டமாகவும் உள்ளதற்கான முக்கியக் காரணம், இதிலிருக்கும் ட்வின் சிலிண்டர் இன்ஜின் செட்டப் மற்றும் மேட் பினிஷ் டூயல் எக்ஸாஸ்ட் பைப்புகள். இது இன்டர்செப்டர் 650சிசியில் இருக்கும் அதே இன்ஜின்தான். ஆனால் ட்யூனிங் மற்றும் பவர் டெலிவரியில் நிச்சயம் மாற்றமிருக்கும்.

ஹெட்லைட்ஸ், டெயில் லைட்ஸ் மீட்டியாரை நினைவுப்படுத்துகின்றன. இன்ஸ்ட்ரூமென்ட் ஸ்பீடோ கன்சோலில், சின்ன மாற்றங்கள் இருந்தன. இதில் ட்ரிப்பர் நேவிகேஷன் வசதி இடம்பெறும்.

பெரிய சைஸ் டிஸ்க் பிரேக்ஸ் உடன் டூயல் சேனல் ABS சிஸ்டம் இருப்பதால், இந்த பைக் ட்ரிப்பிள் டிஜிட் வேகத்தில்கூட, சொன்ன இடத்தில் ஷார்ப்பாக நிற்கும் என நம்பலாம். மிக விலை உயர்ந்த பைக்குகளில் காணப்படும் அப்சைடு டவுன் ஃப்ரன்ட் ஃபோர்க்ஸ் (upside down front forks) கொடுத்திருப்பது தனித்துவம்.

ராயல் என்ஃபீல்டில் கஸ்டமைசேஷன் இல்லாமலா? ஹைவே ட்ராவல் சீட்கள், முன்பக்க விண்ட்ஸ்க்ரீன் வைஸர், க்ரோம் அலாய் வீல்கள், பில்லியன் பேக்ரெஸ்ட், லக்கேஜ் ஹோல்டர்ஸ், பல கலர் ஸ்கீம்கள் என தங்களின் விருப்பத்துக்கு ஏற்ப இதை வடிவமைத்துக் கொள்ளலாம் என்பது மிகச் சிறப்பு.

இந்த புல்லட்டின் விலை 3 லட்சங்களுக்கு மேல் இருக்கலாம். ஒரு பவர்ஃபுல் ஹைவே க்ரூஸர் வாங்க நினைப்பவர்கள், இன்னும் கொஞ்சம் மாதங்கள் காத்திருங்களேன்!

புல்லட் க்ளாஸிக் 650
புல்லட் க்ளாஸிக் 650
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அடையாளங்களை மறைத்து உங்கள் ஊரில் இப்படி ஏதாவது கார் அல்லது பைக் டெஸ்ட் செய்யப்படுகிறதா? அதை அப்படியே உங்கள் கேமராவில் பதிவுசெய்து எங்களுக்கு அனுப்புங்கள்! அனுப்ப வேண்டிய முகவரி: ரகசிய கேமரா, மோட்டார் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600002. email: motor@vikatan.com