Published:Updated:

ஜாவா எனும் டைம் மெஷின்!

Jawa
பிரீமியம் ஸ்டோரி
Jawa

க்ளாஸிக் கார்னர் ஜாவா

ஜாவா எனும் டைம் மெஷின்!

க்ளாஸிக் கார்னர் ஜாவா

Published:Updated:
Jawa
பிரீமியம் ஸ்டோரி
Jawa

ஒவ்வொரு மாதமும் செம்மஞ் சேரியில் அமைந்துள்ள ‘தி ஃபார்ம்’ ஓட்டலின் மைதானத்தில் ‘Motus Operandi’ என்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஆட்டோமொபைல் ஆளுமைகள், நேரடியாக ஆர்வலர்களைச் சந்தித்துப் பேசும் ஒரு சின்ன ‘கம்யூனிட்டி மீட்அப்தான்’ இது. ``வின்டேஜ் ஜாவா பற்றிப் பேசுவோம் வாங்க’’ என இன்ஸ்டாகிராமில் அழைத்திருந்தார்கள், ‘ஜாவா த்ரூ தி ஏஜஸ்’ அமைப்பினர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

செம்மஞ்சேரியில் ஜாவா பற்றியும், லாங் ரைடுகள் பற்றியும் கதை சொல்லிக் கொண்டார்கள்.

க்ளாஸிக் கார்னர் ஜாவா
க்ளாஸிக் கார்னர் ஜாவா

புல்லட் போஸ் என்று செல்லமாக அழைக்கப்படும் ஜி.சுபாஷ் சந்திரபோஸ் தன்னுடைய கதையைச் சொன்னார். ‘`1969-ல் முதல் முதலா ரேஸ் ஓட்ட தொடங்கினேன். லாம்ப்ரெட்டா ஸ்கூட்டர்லதான் ரேஸ் ஓட்டினேன். அதுக்குப் பிறகு ஜாவா, புல்லட். சுபாஷ் சந்திர போஸா இருந்த என்னை, புல்லட் போஸா மாத்துனது அந்த பைக்தான். சமீபத்தில் புது ஜாவாவில் ஒரு ரைடு போனேன். என்னுடைய ரெண்டு வருஷ ஜாவா, மெமரீஸைக் கிளப்பி விட்டுடுச்சு. ஜாவாவின் வரலாறு மிகவும் நீளமானது, அது எனக்குக் கொடுத்த அனுபவங்களை வார்த்தைகளில் அடக்க முடியாது.” எனப் பேசி எல்லோருடைய ஜாவா நினைவுகளையும் கிளறிவிட்டார்.

அதன் பிறகு, 50 வருட பைக் ரைடிங் அனுபவம் கொண்ட டி.எஸ்.கண்ணன். சென்னைக்கும், பெங்களூருக்கும் மட்டுமே 200 முறைக்கும் மேல் தனது ஜாவாவில் பயணித்திருக்கிறாராம். 2,50,000 கி.மீ வரை ஓடியிருக்கிறது அவரது ஜாவா. ‘`ரைடிங்தான் என்னை இளமையா வச்சிருக்கு. என் பையனைச் சின்ன வயசுல டேங்க்ல உட்கார வச்சிட்டு அவனுக்கு ஊர் சுற்றிக் காட்டுவேன். இன்னும் இந்த பைக் என் வீட்டில் இருக்கு. இப்போ என் பையனுக்கு 40 வயசாகுது. இப்போகூட அந்த ஜாவாவில் ஒரு ரைடு போவோம் ’’ என்று நினைவலைகளைப் பின்னோக்கி ஓட விட்டார்.

பிரஷாந்த் குமார் பெங்களூரில் இருந்து வந்திருந்தார். “1996-வது வருஷம், மைசூரில் இருந்த ஜாவா ஃபேக்டரி மூடுறப்போ, அங்கிருந்து இந்த 1961 ஜாவா வாங்கினேன். PAV-40 ட்ரெய்லர், 1976 ஜாவா மாடல் 634 - இது ரெண்டுமே ரொம்ப தனித்துவமான பைக். ஒரே ஜாவா பைக்கை சின்னச் சின்ன ட்யூனிங் செஞ்சு பல தலைமுறையாகப் பயன்படுத்திட்டு இருக்காங்க...’’ என ஜாவாவின் பெருமைகளைப் பேசினார்.இதே போல இன்னும் பலர், பல அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்கள். ஜாவா எனும் டைம் மெஷினில் ஏறி, கடந்த காலத்தில் ஓர் உல்லாசப் பயணம் சென்று வந்ததுபோல இருக்கிறது.