Published:Updated:

ஜீப் முதல் லேம்பி வரை வின்டேஜ் மெமரீஸ்...

 சுரேஷ் பீம்சிங்
பிரீமியம் ஸ்டோரி
சுரேஷ் பீம்சிங்

க்ளாஸிக் கார்னர்: சுரேஷ் பீம்சிங்

ஜீப் முதல் லேம்பி வரை வின்டேஜ் மெமரீஸ்...

க்ளாஸிக் கார்னர்: சுரேஷ் பீம்சிங்

Published:Updated:
 சுரேஷ் பீம்சிங்
பிரீமியம் ஸ்டோரி
சுரேஷ் பீம்சிங்

ரு இனிய விடியற்காலைப் பொழுதில், தி-நகரின் போக் ரோடு வழியாகச் சென்றுகொண்டிருந்த போது, ‘மின்ட்’ நிறத்தில் பளபளத்துக்கொண்டிருந்த ஃபியட் 1100 காரை ஒரு வீட்டுக்குள் பார்த்தேன். டிக்கியுடன் செடான்போல உள்ள 1100, ஸ்டேஷன்வாகன் வடிவில் இருந்ததால், ஆர்வம் தாங்க முடியாமல் காரைப் பற்றி விசாரிக்க, வீட்டின் கேட்டைத் திறந்தேன்.

ஜீப் முதல் லேம்பி வரை வின்டேஜ் மெமரீஸ்...
ஜீப் முதல் லேம்பி வரை வின்டேஜ் மெமரீஸ்...

ஒரு பக்கம் ஜீப், ஒரு பக்கம் லாம்ப்ரெட்டா, வெளியே வித்தியாசமான ஃபியட், உள்ளே 3 ராஜ்தூட் பைக் இருந்தன. திரும்பிப் போக மனசில்லாமல் வீட்டின் உள்ளே கால் வைத்தால் ஒரு நாய்! ஃபியட்டாவது, லாம்ப்ரெட்டாவாவது எனத் தலைதெறிக்க ஓடியபோது... `அது கட்டிப்போட்டுதான் இருக்கு தம்பி... யாரு வேணும்?' என ஒருத்தர் கூப்பிட்டார். அவர்தான் இந்த வாகனங்களின் ஓனரான சுரேஷ் பீம்சிங். கார் மட்டுமல்ல, கார் நின்றிருந்த வீடும் வின்டேஜ் ரகம்தான். ‘ப’ வரிசையில் தொடர்ச்சியாகப் படங்களை எடுத்து, தேசிய விருதுகள் பல வாங்கிய தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர் பீம்சிங்கின் மகன்தான் இவர்! அப்பா மட்டுமல்லாது, அம்மாவும் செம ஃபேமஸ். எம்ஜிஆர் உடன் ஹீரோயினாக நடித்தது முதல், அனுஷ்காவுக்குப் பாட்டியாக நடித்தது வரை தன் அம்மா சுகுமாரியின் ஃபிலிமோகிராஃபி செம பெரிசு என்கிறார் அவர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சிறு வயதில் இருந்தே கார்களைப் பார்த்ததால், தனக்கு கார் ஆர்வம் ஒட்டிக்கொண்டதாகச் சொன்னார் சுரேஷ். எப்படிப்பட்ட கார் ஆர்வம் என்றால், சின்ன வயதில் தியாகராய பாகவதர் தன்னுடைய ‘காடிலாக்கில் (Cadillac)’ கண்ணாடியை இறக்கிவிட்டபடி, அண்ணாசாலையில் செல்வதைப் பார்ப்பதற்காகவே நண்பர்களோடு கூட்டமாகப் போவாராம்.

 க்ளாஸிக் கார்னர்: சுரேஷ் பீம்சிங்
க்ளாஸிக் கார்னர்: சுரேஷ் பீம்சிங்

எம்ஜிஆர் வாங்கியதால் சர்ச்சைக்குள்ளாகிய MGR 4777 அம்பாஸடர் முதல், கண்ணதாசனின் ப்ளைமௌத் செவி வரையிலான பல கதைகளைப் பகிர்ந்துகொண்டார் சுரேஷ். வெளியே நின்றிருந்த ஃபியட்டைப் பற்றி விசாரித்தபோது, “இது ஃபியட் 1100 மாடல் இல்லை. அதே டிரைவ்-அவே (Driveaway) பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட்ட ப்ரீமியர் சஃபாரி (safari). ப்ரீமியர் நிறுவனம் இந்த சேஸியைத் தனியாக விற்பனை செய்தார்கள். இதை வாங்கி ஸ்டேஷன் வாகன்போல பாடி கட்டி, பல பேர் விற்பனை செய்தார்கள். அதில் ஸ்டார்லைன் பாடி ஒர்க்ஸ் செம ஃபேமஸ். நான் வச்சிருக்கிறது ஸ்டார்லைன் பாடி இல்லை. வேறு ஏதோ ஒரு கம்பெனி செஞ்சது” என்றார்.

சுரேஷ் பீம்சிங் கல்லூரி படிக்கும்போதே கார்கள் வாங்க ஆரம்பித்துவிட்டதாகச் சொன்னார். இவரின் முதல் கார் ப்ரீமியர் பத்மினி. அதற்குப் பிறகு ஸ்டாண்டர்ட் நிறுவனத்தின் ‘பெல் ஸ்டாண்டர்ட்’ வைத்திருந்தாராம். இந்த கார் ஸ்டார்ட் ஆகும்போது, ‘டிங்’ என்ற ஒரு பெல் சத்தத்துடன் ஸ்டார்ட் ஆகும். அதனாலேயே இதற்கு பெல் ஸ்டாண்டர்ட் எனப் பெயர் வந்துவிட்டது.

 சுரேஷ் பீம்சிங்
சுரேஷ் பீம்சிங்

ஆஸ்டின், ஃபோர்டு எனப் பல கார்களை வைத்திருந்த இவருக்கு, இன்னும் மறக்க முடியாமல் மனதில் இருக்கும் ஒரு கார் ட்ரையம்ப் TR3. “அது ஒரு ஓப்பன் டாப் ஸ்போர்ட்ஸ் கார். அப்போதே ஜாகுவாருக்கு டிசைனில் செம டஃப் கொடுத்த கார். நான் ஒரு வெள்ளைக் கலர் வைத்திருந்தேன். இப்போது அதேபோல ஒரு ஓப்பன் டாப் ஸ்போர்ட்ஸ் கார் வாங்கவேண்டும் என்று ஆசை இருக்கிறது” என்றார் சுரேஷ். வீட்டில் நிற்கும் மற்ற வாகனங்களைப் பற்றிக் கேட்டபோது, “வெளியே நிற்கும் ஜீப் 1963 CJ3B மாடல். ஒரிஜினல் வில்லிஸ் ஜீப்-பில் பெட்ரோல் இன்ஜின் வரும். உலகப்போர் முடிந்த பிறகு எல்லோரும் மைலேஜுக்காக டீசல் இன்ஜினைப் பொருத்த ஆரம்பிச்சாங்க. என்கிட்ட இருக்கிறது அப்படியான ஒரு டீசல் மாடல்தான். ரெண்டு பேர் மட்டுமே இதில் போக முடியும், பின்னாடி இருப்பது Gun carriage. அதுமட்டுமல்ல, விண்டு ஷீல்டை மடக்கி வச்சுக்கலாம். விண்டு ஷீல்டு கீழே துப்பாக்கி வைக்க ஒரு இடம் கொடுத்திருப்பாங்க! என்னுடைய ஸ்கூட்டர் லேம்ப்ரெட்டா இல்லை. இதை லேம்பி 150-ன்னு சொல்லுவாங்க. அதே லேம்ப்ரெட்டா ஸ்கூட்டர்தான் ஆனால், API ஸ்கூட்டர்ஸ் இதை இந்தியாவிலேயே தயாரிச்சதால் இதுக்குப் பெயர் லேம்பி.”

``மூணு ராஜ்தூட் வச்சிருக்கீங்களே, அப்படி என்ன அந்த பைக் மேல ஒரு மோகம்?’’ எனக் கேட்க, “இப்போ நயன்தாரா மாதிரி, அப்போ எங்க எல்லாருக்கும் கனவுக்கன்னி டிம்பிள் கபாடியா. பாபி படத்தில் அவங்களும், ராஜ்கபூரும் இந்த பைக்கில் ஸ்டைலா, கெத்தா பாட்டு பாடிட்டே ஓட்டிட்டுப் போவாங்க. அந்தப் பாட்டும், சீன்ஸும் ஏற்படுத்திய தாக்கமாகூட இருக்கலாம்” என்று குறும்புத்தனமாகச் சொன்னார். பல வின்டேஜ் கதைகளைப் பேசி முடித்த பிறகு, ஆட்டோ எக்ஸ்போவுக்கு டாட்டா காட்டிய நிறுவனங்களைப் போலவே, நாங்களும் சுரேஷுக்கு டாட்டா காட்டிவிட்டு வீட்டிலிருந்து கிளம்பினோம்.