Published:Updated:

பயணத்துக்கு ஏற்ற பங்காளிகள்! ஹிமாலயன் VS எக்ஸ்பல்ஸ் 200 Fi

ஹிமாலயன்
பிரீமியம் ஸ்டோரி
ஹிமாலயன்

போட்டி: ஹிமாலயன் VS எக்ஸ்பல்ஸ் 200 Fi

பயணத்துக்கு ஏற்ற பங்காளிகள்! ஹிமாலயன் VS எக்ஸ்பல்ஸ் 200 Fi

போட்டி: ஹிமாலயன் VS எக்ஸ்பல்ஸ் 200 Fi

Published:Updated:
ஹிமாலயன்
பிரீமியம் ஸ்டோரி
ஹிமாலயன்

ட்வென்ச்சர் என்றால் அரேபியன் நைட்ஸில் தொடங்கி, இண்டியானா ஜோன்ஸ், நேஷனல் டிரஷர் எனப் புதையலைத் தேடிப் பயணிப்பதை பார்த்திருக்கிறோம். இந்தக் கதைகளில் நாம் ரசித்ததெல்லாம் புதையலை இல்லை; அதற்கான அட்வென்ச்சர் பயணத்தைத்தான். இமயமலையில் பனியைத் தேடி, சிக்மகளூரில் காபியைத் தேடி, மங்களூரில் நதிகளைத் தேடி, மேகமலைக்கு மேகங்களைத் தேடி, சைலன்ட் வேலிக்கு அமைதியைத் தேடி, வர்க்காலாவுக்கு செங்குன்றுகளைத் தேடி எனப் பயணிப்பதுதான் நம் நிஜ வாழ்வின் அட்வென்ச்சர்கள்.

பயணத்துக்கு ஏற்ற பங்காளிகள்!
ஹிமாலயன் VS எக்ஸ்பல்ஸ் 200 Fi

1.லாங் ரைடுக்கு ஏற்ற அகலமான, மிருதுவான சீட். 2.ரெட்ரோ ஸ்டைல் அனலாக் மீட்டர்

3. வளைவுகளில் சென்டர் ஸ்டாண்ட் இடிக்கிறது. 4. பில்லியனுக்கும் சொகுசான சீட்

5. ஆஃப்ரோடில் நின்று ஓட்டும்போது, ரைடிங் பொசிஷன் சூப்பர்.

கார்களில் சொகுசாகச் செல்லும் இடங்களுக்கெல்லாம், அட்வென்ச்சர் முகம் கொடுப்பவை பைக் பயணங்கள். மாதச் சம்பளத்துக்கு வேட்டு வைக்காமல், அட்வென்ச்சருக்காகவே ஒரு பைக் வாங்கவேண்டும் என்றால், ஹீரோவின் எக்ஸ்பல்ஸ் 200 மற்றும் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் என இரண்டே தேர்வுகள்தான் உண்டு. இந்த இரண்டு பைக்குகளில் எது சிறந்தது என்பதைத் தெரிந்துகொள்ள, இரண்டையும் அடுத்தடுத்து ஓட்டிப் பார்த்தோம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

முதல் பார்வை

எக்ஸ்பல்ஸைவிட ஹிமாலயன் 93,000 ரூபாய் கூடுதல் விலை என்பதால், இது சரியான ஒப்பீடா எனக்கூட கேள்வி எழலாம். ஆனால் ஹிமாலயனைவிட விலை அதிகமான கவாஸாகி வெர்ஸிஸ் X-300, பிஎம்டபிள்யூ G310GS போன்ற பைக்குகளுடன் ஹிமாலயனை ஒப்பிடும்போது, இந்த ஒப்பீடு தவறில்லை எனத் தோன்றுகிறது.

காலை 4 மணிக்கு, பைக்குகளை ஸ்டார்ட் செய்து கிளம்பினோம். வெறும் ட்ரக்குகள் நடமாடும் அதிகாலை டிராஃபிக்கில் புகுந்து செல்ல, இரண்டு பைக்குமே சூப்பர். இரண்டிலும் 21 இன்ச் வீல்கள்தான் என்றாலும், எக்ஸ்பல்ஸின் ஸ்டீயரிங் வலுவாக இருந்தது. டிராஃபிக்கில் ஹிமாலயன்தான் சுறுசுறுப்பு காட்டியது. இளங்காலை வெளிச்சத்தில், எக்ஸ்பல்ஸின் LED ஹெட்லைட், அதிக தூரத்துக்கு அகலமான வெளிச்சம் அடிக்கிறது. ஹிமாலயனில் ஹாலோஜன் செட்-அப்தான். ஆனாலும் எக்ஸ்பல்ஸ்-க்கு ஈடுகொடுக்கிறது.

பயணத்துக்கு ஏற்ற பங்காளிகள்!
ஹிமாலயன் VS எக்ஸ்பல்ஸ் 200 Fi

ஹிமாலயனின் எக்ஸாஸ்ட் சத்தம், தூரத்தில் பைக் வரும்போதே காட்டிக் கொடுத்துவிடும். எக்ஸ்பல்ஸின் எக்ஸாஸ்ட் சத்தம், கம்யூட்டர் பைக் போலத்தான் இருக்கிறது. இரண்டையும் அருகருகே நிறுத்தினால், கிட்டத்தட்ட ஒரே உயரத்தில்தான் இருக்கின்றன. இரண்டுமே சிம்பிளான டிசைன்தான்... ஆனால், எக்ஸ்பல்ஸ் மினிமலிசம்போல இருக்கிறது. ‘எது தேவையோ அதுவே தர்மம்’ என டிசைனை மறந்து, அட்வென்ச்சருக்காகவே வடிவமைக்கப் பட்டுள்ளது ஹிமாலயன். ஹீரோவின் பெரிய MX ஸ்டைல் ஃபெண்டர்கள், டர்ட் பைக் ரசிகர்களுக்குப் பிடித்துவிடும்.

ஹிமாலயனின் கம்பீரமான முன்பக்க டிசைன், சாகச விரும்பிகளுக்கு மிகவும் பிடிக்கும். ரெட்ரோ தீம் என்ற பெயரில், சிறிய டிஜிட்டல் டிஸ்ப்ளேவுடன் கூடிய வித்தியாசமான அனலாக் இன்ஸட்ரூமென்ட் கன்சோலைக் கொடுத்துள்ளார்கள். ஹீரோவில் டிஜிட்டல் LCD டிஸ்ப்ளே உண்டு. ரைடருக்கு வழிகாட்ட ராயல் என்ஃபீல்டிடம் காம்பஸ் இருக்கிறது என்றால்... ``ஓரமா போங்க தம்பி, எங்ககிட்ட புளூடூத் நேவிகேஷனே இருக்கு'' என எக்ஸ்பல்ஸ் ஓனர்கள் காலரைத் தூக்கிவிடலாம்.

சாலையில் எப்படி?

நெடுஞ்சாலையில் எக்ஸ்பல்ஸ் சூப்பர். ஆனால் ஹிமாலயன்தான் டாப்பர். ஹிமாலயனின் 411சிசி இன்ஜின், எக்ஸ்பல்ஸின் 199.6 சிசி இன்ஜினை விட 6.1bhp பவர் மற்றும் 1.49kgm டார்க்கை அதிகமாகக் கொடுக்கிறது. முக்கியமாக எக்ஸ்பல்ஸ் இன்ஜினைவிட ஸ்மூத்தாகவும் இருக்கிறது. எக்ஸ்பல்ஸில் 80-85 கி.மீ தாண்டும்போது வைப்ரேஷன் ஹலோ சொல்கிறது. ஹிமாலயனில் 90-95 கி.மீ வேகத்தைத் தாண்டும்போதுதான், ஹேண்டில்பாரில் அதிர்வுகள் தெரியும். ஆனால் கடுப்பேற்றவில்லை.

பயணத்துக்கு ஏற்ற பங்காளிகள்!
ஹிமாலயன் VS எக்ஸ்பல்ஸ் 200 Fi

3.2kgm டார்க்குக்கு இங்கே நன்றி சொல்ல வேண்டும். ஓவர்டேக் செய்ய கியரைக் குறைக்க அவசியமில்லை. எதிர்காற்றைத் தடுப்பதில் ஹிமாலயனின் பெரிய விண்ட் ஸ்கிரீன் அருமை. ஆனால், விலை அதிகமான அட்வென்ச்சர் பைக்குகளைப்போல, முழுமையான ப்ரொடெக்‌ஷன் கிடைக்கவில்லை. சீட்டிலும் ஹிமாலயன்தான் வின்னர். எக்ஸ்பல்ஸுடன் ஒப்பிடும்போது, சீட் அகலமாகவும் சாஃப்ட்டாகவும் இருக்கிறது.

ஆஃப்ரோடு

ஹைவே முடிந்து, கரடுமுரடான சாலைகளும் திடீர் வளைவுகளும் வரவர, சியட் டயர்கள் ஆச்சரியத்தைக் கொடுத்தன. வேகமான திருப்பத்தில், சென்டர் ஸ்டாண்ட் சாலையில் இடிக்கிறது. இந்த விஷயத்தில் எக்ஸ்பல்ஸ் ஒரு படி மேலே!எக்ஸ்பல்ஸின் சேஸி, வளைவுகளில் அசரடித்தது. ஹிமாலயனைவிட 40 கிலோ எடை குறைவாக இருப்பது பெரிய அட்வான்டேஜ்! இந்த எடை வித்தியாசம் சஸ்பென்ஷனில் மட்டுமல்லாது, பிரேக்கிங்கிலும் உதவுகிறது. எக்ஸ்பல்ஸ் 60-0 கி.மீ வேகம் வருவதற்கு 18.63 மீட்டர் எடுத்துக் கொண்டது; ஹிமாலயனுக்கு 19.80 மீட்டர்.

பயணத்துக்கு ஏற்ற பங்காளிகள்!
ஹிமாலயன் VS எக்ஸ்பல்ஸ் 200 Fi

முதல் 100 மீட்டர்கள் ஃபுட்பெக்ஸில் ஏறி நின்று, பொத்தல் சாலைகளில் பைக்கை ஓட்டினோம். உயரமாக மேலே ஏறிக் கொண்டிருந்த அந்தச் சாலையில், எக்ஸ்பல்ஸில் அவ்வப்போது கியரைக் குறைத்து ஓட்டினோம். ஹிமாலயனில் ஒரு சில அதிக செங்குத்தான இடங்களில் மட்டும் டவுன்ஷிஃப்ட்டிங் தேவைப்பட்டது. உயரமான சாலைகள் முடிந்ததும், பெரிய பாறைகள். இரண்டு பைக்கிலும் 220 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் மெட்டல் பாஷ் பிளேட், இன்ஜினைப் பத்திரமாகப் பாதுகாத்தன. ஏறுவது டாஸ்க் என்றால் இறங்குவது மெகா டாஸ்க்.

பயணத்துக்கு ஏற்ற பங்காளிகள்!
ஹிமாலயன் VS எக்ஸ்பல்ஸ் 200 Fi

இறங்கும்போதும் எக்ஸ்பல்ஸின் எடை உதவியது. ஆனால் இதில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் மட்டுமே இருந்ததால், ரியர் பிரேக் சீக்கிரமே லாக் ஆகி தொல்லை தந்தது. ஹிமாலயனில் டூயல் சேனல் ஏபிஎஸ் உண்டு. வீல் லாக் ஆகவில்லை என்றாலும், ஹிமாலயனின் ABS ஆஃப் செய்ய முடியாது.

பயணத்துக்கு ஏற்ற பங்காளிகள்!
ஹிமாலயன் VS எக்ஸ்பல்ஸ் 200 Fi

1. புளூடூத் நேவிகேஷன் கொண்ட டிஜிட்டல் மீட்டர் 2. எடை குறைவானதால், திருப்பங்களில் செம!

3. ஆஃப்ரோடு-ஆன்ரோடு... எந்த வளைவாக இருந்தாலும், இதில் அடி தூள். 4. Knuckle கார்டுக்குத் தனி விலை 5. பாஷ் பிளேட், இன்ஜினுக்குப் பாதுகாப்பு 6. LED ஹெட்லைட் உண்டு.

7. சீட் உயரம் ஹிமாலயனை விட 23 மிமீ அதிகம்.

எதைத் தேர்ந்தெடுக்கலாம்?

இந்த இரு பைக்குகளில் எதை வாங்கலாம் என்பது மிகப் பெரிய கேள்வி. 2.15 லட்சம் ரூபாய் பட்ஜெட் வைத்திருப்பவர்களுக்கு ஹிமாலயன் ஒரு சரியான கூட்டாளி. தொலைதூரப் பயணங்களையும், கடினமான ஆஃப்ரோடுகளையும் சுலபமாகச் சமாளிக்கலாம்.

சிட்டியில் ஓட்டுவதற்கும், சிறிய பயணங்களுக்கும், டெக்னிக்கலான ஆஃப்ரோடு ட்ரையல்களில் ஓட்டுவதற்கும் ஹிமாலயனைவிட எக்ஸ்பல்ஸ் நல்ல தேர்வு. ரூ.1.22 லட்சம் (Fi) எனும் விலையில் இந்த பைக்், கொடுக்கும் காசுக்கு மிகவும் மதிப்பானது. சின்னச் சின்னக் குறைகள் இருந்தாலும், குறைவான விலையில் ஒரு திறமையான ADV என்ற பெயரை இந்த முறையும் ஹிமாலயனே தட்டிச்செல்கிறது. உடனடியாக ஒரு ADV வேண்டும் என்றால் ஹிமாலயனை எடுக்கலாம். நேரம் இருந்தால் KTM 390 அட்வெனச்்சர் வரும்வரையும் காத்திருக்கலாம்.