Published:Updated:

நெக்ஸ்ட் ஜென் : ரெட்ரோ பைக்ஸ் - ஒரு விறு விறு ரைடு

 இம்பீரியல் 400 vs ஜாவா 42 vs க்ளாஸிக் 350
பிரீமியம் ஸ்டோரி
இம்பீரியல் 400 vs ஜாவா 42 vs க்ளாஸிக் 350

போட்டி: இம்பீரியல் 400 vs ஜாவா 42 vs க்ளாஸிக் 350

நெக்ஸ்ட் ஜென் : ரெட்ரோ பைக்ஸ் - ஒரு விறு விறு ரைடு

போட்டி: இம்பீரியல் 400 vs ஜாவா 42 vs க்ளாஸிக் 350

Published:Updated:
 இம்பீரியல் 400 vs ஜாவா 42 vs க்ளாஸிக் 350
பிரீமியம் ஸ்டோரி
இம்பீரியல் 400 vs ஜாவா 42 vs க்ளாஸிக் 350

ரெட்ரோ மாடர்ன் பைக்ஸ்… பல ஆண்டுகளாக வரலாற்றுச் சிறப்புமிக்க ராயல் என்ஃபீல்டு (க்ளாஸிக் 350) தனியாகக் கோலோச்சிக் கொண்டிருந்த இந்த கோதாவில், கடந்த ஆண்டு தடாலடியாகக் குதித்தது ஜாவா.

நெக்ஸ்ட் ஜென் : ரெட்ரோ பைக்ஸ் - ஒரு விறு விறு ரைடு
நெக்ஸ்ட் ஜென் : ரெட்ரோ பைக்ஸ் - ஒரு விறு விறு ரைடு

இதயத்துடிப்பைப் போன்றதொரு 2 ஸ்ட்ரோக் எக்ஸாஸ்ட் சத்தத்தையும், பெட்ரோல் வாசம் கலந்த நீல நிறப் புகையையும் இந்த பைக் கொண்டிருக்காவிட்டாலும், ஸ்மார்ட் டிசைனில் சொல்லியடித்தது. எனவே ஏன் ஜாவா பைக்கை விட, ஜாவா 42 அதிக டிமாண்டில் இருக்கிறது என்பது புரிகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதிகப்படியான வெயிட்டிங் பீரியட்டைக் கொண்டிருந்தாலும், மீண்டு(ம்) வந்திருக்கும் ஜாவா மீதான மக்களின் ஆர்வம் கொஞ்சமும் குறையவில்லை. எனவே இந்த இரு பைக்குகளுக்குக் கிடைத்த வரவேற்பைக் கருத்தில்கொண்டு, இம்பீரியல் 400 பைக்கைக் களமிறக்கியுள்ளது பெனெல்லி. ஜாவா & ராயல் என்ஃபீல்டு பாணியில், இதுவும் ரெட்ரோ மாடர்ன் தோற்றத்தில் கவர்கிறது. முன்னே சொன்ன பிராண்ட்களைப்போல இதற்கு இந்தியாவில் பெரிய வரலாறு இல்லாவிட்டாலும், உலகளவில் உண்டு. இந்த மூன்றில் எதை வாங்குவது என மனதுக்கும் மூளைக்கும் நடக்கும் போரில் வெல்லப் போவது யார்?

 1. பெனெல்லியின் 374சிசி இன்ஜின், செம ஸ்மூத்...
2. இந்த மூன்றில் ஜாவா இன்ஜின்தான் பவர்ஃபுல்...
3. புல்லட்டில்தான் பவர் குறைவு... 19.8bhp...
1. பெனெல்லியின் 374சிசி இன்ஜின், செம ஸ்மூத்... 2. இந்த மூன்றில் ஜாவா இன்ஜின்தான் பவர்ஃபுல்... 3. புல்லட்டில்தான் பவர் குறைவு... 19.8bhp...

டிசைன் மற்றும் எர்கனாமிக்ஸ்

மூன்று பைக்குகளையும் அருகருகே நிற்க வைத்துப் பார்த்தால், பக்காவான டிசைனைக் கொண்டுள்ள ஜாவா 42-தான் முதலில் கவனத்தை ஈர்க்கிறது. பெட்ரோல் டேங்க், ஃபெண்டர்கள், இரட்டை எக்ஸாஸ்ட் பைப், Offset மீட்டர் என பைக்கைப் பார்த்துப் பார்த்து வடிவமைத்திருக்கிறார்கள். அதுவும் அந்த Royal Blue கலருடன், தங்க நிற Hand Painted Stripes சேரும்போது, காம்பேக்ட்டான இந்த பைக் க்ளாஸாகக் காட்சியளிக்கிறது.

10 ஆண்டுகளைக் கடந்திருந்தாலும், க்ளாஸிக் 350 பைக் பார்க்க நன்றாகவே உள்ளது. அடிப்படையில் மிகப் பழைய டிசைனாக இருந்தாலும், அவ்வப்போது புதிய கலர்களை அறிமுகப்படுத்தி, பைக்கை ஃப்ரெஷ்ஷாகத் தெரிய வைத்ததில், ராயல் என்ஃபீல்டின் புத்திசாலித்தனம் தெரிகிறது. இங்கே உள்ள Signals மாடலின் நீல நிற மேட் கலருடன், கறுப்பு நிற இன்ஜின் – எக்ஸாஸ்ட் – வீல்கள் இயைந்து செல்கின்றன.

இம்பீரியல் 400-ல் க்ரோமைக் கச்சிதமாகப் பயன்படுத்தியிருக்கிறது பெனெல்லி. இதனாலேயே பைக்குக்கு ப்ரீமியம் ஃபீல் தானாக வந்துவிடுகிறது. மேலும் இங்கிருக்கும் பைக்கிலே, ஃபிட் அண்டு ஃபினிஷ் மற்றும் கட்டுமானத் தரத்தில் பெனெல்லிதான் அதிக மார்க்குகளை வாங்குகிறது.

2009-ல் வெளிவந்த மாடலுடன் ஒப்பிட்டால், தற்போதைய க்ளாஸிக் 350-ன் கட்டுமானம் ஓகே. என்றாலும், பைக்கின் விலையைக் கருத்தில் கொண்டால், சில இடங்களில் ஃபிட் அண்டு ஃபினிஷ் சுமார் ரகம்தான். தரம் மற்றும் கட்டுமானம் விஷயத்தில் பெனெல்லிக்கு அருகே ஜாவா வந்தாலும், பைக்கில் ஆங்காங்கே துருப் படிந்திருந்தது நெருடல். மேலும் லேசாக மழை பெய்தால்கூட, மீட்டருக்குள்ளே நீர்த்துளிகள் சென்று படருவது மைனஸ்.

 1. பெனெல்லியின் ட்வின்-பாட் க்ளஸ்டர், 
பார்க்க... படிக்க.. ஈஸி!
2. ஜாவாவின் க்ளஸ்டர், அடிப்படை டிசைன். 
மழை பெய்தால் மீட்டருக்குள் பனி படர்கிறதே?
3.  புல்லட்டில்தான் செமயான ரெட்ரோ தீம்... 
ஆனால் ஃப்யூல் கேஜ் இல்லை.
1. பெனெல்லியின் ட்வின்-பாட் க்ளஸ்டர், பார்க்க... படிக்க.. ஈஸி! 2. ஜாவாவின் க்ளஸ்டர், அடிப்படை டிசைன். மழை பெய்தால் மீட்டருக்குள் பனி படர்கிறதே? 3. புல்லட்டில்தான் செமயான ரெட்ரோ தீம்... ஆனால் ஃப்யூல் கேஜ் இல்லை.

தோற்றத்தைத் தாண்டி, ரைடருக்கு பைக் எந்தளவுக்கு சொகுசாக இருக்கிறது என்பதும் முக்கியம். 765 மிமீ சீட் உயரத்தைக் கொண்டிருக்கும் ஜாவா 42, உயரம் குறைவானவர்களுக்கு ஏற்றதாக இருக்கலாம். ஆனால் மற்ற இரு பைக்குகளைவிடச் சிறிய பைக்கான இது, எதிர்பார்த்தபடியே இடவசதியில் பின்தங்கிவிடுகிறது.

மேலும் சீட்டும் மெலிதாக இருப்பதால், நீண்ட நேரப் பயணங்களில் இது அசெளகரியத்தைத் தரலாம். தவிர சீட்டுக்கும் ஃபுட் பெக்ஸுக்கும் இடையே குறைவான இடைவெளியே இருப்பதால், உயரமானவர்களுக்கு ஜாவா 42 பர்ஃபெக்ட்டாக இருக்காது எனத் தோன்றுகிறது. ஆனால் கொஞ்சம் ஸ்போர்ட்டியான அனுபவம் கிடைப்பது என்னவோ உண்மைதான்.

க்ளாஸிக் 350 பைக்கில் பலருக்குப் பிடித்தமானதே, அதன் கெத்தான ரைடிங் பொசிஷன்தான். இது ரிலாக்ஸான ஃபீலைத் தந்தாலும், Spring Loaded சீட் அதற்கு ஒத்துழைக்கவில்லை என்பதே நிதர்சனம். அகலமான ஹேண்டில்பார், முன்னே வைக்கப்பட்டிருக்கும் ஃபுட் பெக்ஸ் – சிறப்பான குஷனிங் கொண்ட இருக்கை என சொகுசான அனுபவத்தைத் தருகிறது இம்பீரியல் 400. எனவே எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பைக்கை ஓட்டக்கூடிய நம்பிக்கை, ரைடருக்குத் தானாகக் கிடைத்துவிடுவது பெரிய ப்ளஸ்.

நெக்ஸ்ட் ஜென் : ரெட்ரோ பைக்ஸ் - ஒரு விறு விறு ரைடு

இன்ஜின் பர்ஃபாமன்ஸ்

க்ளாஸிக் 350 பைக்கில் இருக்கும் 346சிசி - Long Stroke இன்ஜின் (72.7மிமீ Bore X 90மிமீ Stroke), ஏறக்குறைய இம்பீரியல் பைக்குக்கு இணையான பவர் மற்றும் ஜாவா 42-வுக்கு இணையான டார்க்கைத் (2.8kgm) தருகிறது. வேகப்போட்டியில் கடைசியாக வருவது ராயல் என்ஃபீல்டுதான் என்றாலும், குறைவான வேகத்தில் இதன் பர்ஃபாமன்ஸ் சிறப்பாக இருக்கிறது. எனவே சீரான நகரச் சாலைகள் அல்லது உயரமான மலைச் சாலைகள் என எதுவாக இருந்தாலும், இந்த பைக் அசால்ட்டாகச் சமாளிக்கிறது. ஆனால் நெடுஞ்சாலைகளுக்கு க்ளாஸிக் 350-யைக் கொண்டு செல்லும்போது, அதன் பலவீனங்கள் அம்பலமாகி விடுகின்றன; 80 கி.மீ வேகத்துக்குள்ளாகச் செல்லும்போது இன்ஜின் ஜாலியாக இயங்குவதுடன், அதனை அழகான எக்ஸாஸ்ட் சத்தம் மூலமாக ரைடருக்கும் தெரியப்படுத்தி விடுகிறது.

இதை நம்பி ஆக்ஸிலரேட்டரில் பலத்தைக் காட்டும்போது, இன்ஜின் கதறத் தொடங்கி விடுகிறது. வேகத்தில் பெரிய முன்னேற்றம் இல்லை. அதன் பின்னே ஃபுட் பெக்ஸ் மற்றும் ஹேண்டில்பார், அதிர்வுகளால் தாளம் போட ஆரம்பித்து விடுகின்றன.

இதற்கு அப்படியே நேரெதிர் திசையில் இருக்கிறது பெனெல்லியின் 374சிசி – ஏர் கூல்டு இன்ஜின். இதுவும் ராயல் என்ஃபீல்டு போலவே Long Stroke (72.7மிமீ Bore X 90மிமீ Stroke) அமைப்பைக் கொண்டிருந்தாலும், குறைவான வேகங்கள் மற்றும் 100 கி.மீ-யில் க்ரூஸ் செய்யும்போதும், ஸ்மூத்தாகத் தனது பணியைச் செய்கிறது. அதிக வேகங்களில் தான், ஹேண்டில்பார் மற்றும் ஃபுட் பெக்ஸில் அதிர்வுகள் லேசாக எட்டிப் பார்கின்றன.

1. ஓவல் வடிவ டெயில் லைட்... ஓகே. ஆனால், 
கிராப் ரெயில் வசதியாக இல்லை பெனெல்லியில்.
2. ஜாவா டெயில் லைட் சிறுசு. ஆனால், இங்கிருப்பதிலேயே இதில்தான் LED...
3. பெயருக்கு ஏற்றபடியே க்ளாஸிக் டிசைன்... டெயில் லைட்டே இதன் வயதைச் சொல்லிவிடுகிறது.
1. ஓவல் வடிவ டெயில் லைட்... ஓகே. ஆனால், கிராப் ரெயில் வசதியாக இல்லை பெனெல்லியில். 2. ஜாவா டெயில் லைட் சிறுசு. ஆனால், இங்கிருப்பதிலேயே இதில்தான் LED... 3. பெயருக்கு ஏற்றபடியே க்ளாஸிக் டிசைன்... டெயில் லைட்டே இதன் வயதைச் சொல்லிவிடுகிறது.

ரிலாக்ஸ்டான எர்கனாமிக்ஸ் போலவே, இன்ஜினும் ரிலாக்ஸ்டாக இயங்குவது செம. இதனால் க்ளாஸிக் 350 உடன் ஒப்பிட்டால், நெடுந்தூரப் பயணங்களுக்கு அளவெடுத்துச் செய்ததுபோல இருக்கிறது இம்பீரியல் 400. 4 வால்வ் மற்றும் Fi கொண்ட இந்த இன்ஜினின் எக்ஸாஸ்ட் சத்தம், மற்ற பெனெல்லி பைக்குகளைப்போலவே ரசிக்கும்படி அமைந்திருக்கிறது.

முந்தைய பைக்குகளுடன் ஒப்பிடும்போது, Short Stroke அமைப்பு (76மிமீ Bore X 65மிமீ Stroke – DOHC – 4 வால்வ் அமைப்பு, லிக்விட் கூலிங், 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் என லேட்டஸ்ட் அம்சங்களுடன் அசத்துகிறது ஜாவா 42 பைக்கின் 293 சிசி இன்ஜின். ஷார்ட் கியரிங் மற்றும் அதிக ஆர்பிஎம்மை எட்டக்கூடிய திறன் ஒன்றுசேரும்போது, விரட்டி ஓட்டப்படுவதையே பைக் விரும்புகிறது.

இதனால் அளவில் சிறிய இன்ஜினாக இருந்தாலும், வேகப்போட்டியில் முன்னிலை வகிப்பது இதுதான் (130 கி.மீ டாப் ஸ்பீடு). நிலையான வேகத்தில் க்ரூஸ் செய்யும்போது, பைக்கில் பெரிதாக அதிர்வுகள் தெரியவில்லை. ஆனால் அதிக வேகத்தில் இன்ஜின் ரிலாக்ஸ்டாக இல்லாததுடன், குறைவான வேகத்தில் சீராக இயங்குவதற்கு ஏற்றபடி டியூனிங் அமையாததை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

1. பெனெல்லியின் பிரேக் லீவரை விருப்பத்திற்கேற்ப அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம்.
2. புது ஜாவாவில் அதற்குள் ஷாக் அப்ஸார்பர்களில் துருப்பிடித்திருக்கிறது..
3. ராயல் என்ஃபீல்டு பைக்குகளில் துருப்பிடிப்பது சகஜம்தானே! சைலன்ஸரின் ஓரத்தைக் கவனியுங்கள்.
1. பெனெல்லியின் பிரேக் லீவரை விருப்பத்திற்கேற்ப அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம். 2. புது ஜாவாவில் அதற்குள் ஷாக் அப்ஸார்பர்களில் துருப்பிடித்திருக்கிறது.. 3. ராயல் என்ஃபீல்டு பைக்குகளில் துருப்பிடிப்பது சகஜம்தானே! சைலன்ஸரின் ஓரத்தைக் கவனியுங்கள்.

ஓட்டுதல் அனுபவம்

ஜாவா 42 பைக்கின் குறைவான எடை (170 கிலோ) மற்றும் குறைவான வீல்பேஸ் (1,369மிமீ) காரணமாக, கையாளுமையில் அதிரடிப்பது ஜாவா 42தான். நீளமான நெடுஞ்சாலைகளில் ஓட்டுவதற்கு ஏற்றதாக உள்ளதுடன், திருப்பங்களில் செலுத்தப் படுவதையும் பைக் விரும்புகிறது. கூடவே நெரிசல்மிக்க நகரச்சாலைகளில் புகுந்துப் புறப்படவும் முடிகிறது.

நீளமான 1,440 மிமீ வீல்பேஸ் - அதிகமான 205 கிமீ எடை – அகலமான டயர்கள் என்பதால், திருப்பங்களில் இம்பீரியல் 400-ன் கையாளுமை டல்லாக இருக்கும் என்றே தோன்றியது. ஆனால் ஆச்சர்யப்படும் வகையில், பெனெல்லியின் ஓட்டுதல் மற்றும் நிலைத்தன்மையும் நன்றாகவே இருந்தது.

குறுகலான டயர்கள் - பைக்கின் முன்பக்கத்தில் அதிக எடை - பழைய சேஸி இருப்பதால், திருப்பங்களில் க்ளாஸிக் 350 பைக்கை வளைத்து நெளித்து ஓட்டுவது நல்ல அனுபவத்தைத் தராது. ஆனால் கரடுமுரடான சாலைகளில் செல்லும்போது, தான் யார் என்பதை நிரூபிக்கிறது ராயல் என்ஃபீல்டு.

சீரற்ற சாலைகளைச் சமாளிப்பதில் இம்பீரியல் 400, க்ளாஸிக் 350-க்கு அருகே வந்தாலும், மேடு பள்ளங்களில் தொடர்ச்சியாகச் செல்லும்போது பின்பக்க ஷாக் அப்ஸார்பர் கொஞ்சம் ஆட்டம் போடுகிறது. முன்னே சொன்ன பைக்குகளுடன் ஒப்பிடும்போது, ஜாவா 42-வின் சஸ்பென்ஷன் இறுக்கமான செட்-அப்பைக் கொண்டிருந்தாலும், அது குறை சொல்லும் அளவுக்கு இல்லை.

60 கி.மீ வேகத்தில் செல்லும்போது திடீரென பிரேக் பிடித்தால், முதலில் நிற்பது பெனெல்லிதான் (16.82 மீட்டர்). ஜாவா மற்றும் ராயல் என்ஃபீல்டு அதற்குப் பின்னேதான் வருகின்றன.

 மூன்றுமே அருமையான ரெட்ரோ பைக்குகள்.. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விஷயத்தில் தனித்துவம் பெறுகின்றன.
மூன்றுமே அருமையான ரெட்ரோ பைக்குகள்.. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விஷயத்தில் தனித்துவம் பெறுகின்றன.

இம்பீரியல் 400 பைக்கின் பிரேக் லீவர்களை அட்ஜஸ்ட் செய்ய முடிந்தாலும், அது ரைடரின் கையிலிருந்து விலகியே இருக்கிறது. தவிர பிரேக்கின் ஃபீட்பேக்கும், ஜாவாவைப் போலவே ஓகே ரகமே. அதிக பிரேக்கிங் Distance கொண்டிருப்பதுடன் (17.59 மிட்டர்), சுமாரான பிரேக் ரெஸ்பான்ஸும் இருப்பது க்ளாஸிக் 350-தான். எல்லா பைக்கிலும் டூயல் சேனல் ஏபிஎஸ் இருக்கின்றன.

முதல் தீர்ப்பு

பவர்ஃபுல்லான & வசதிகள் நிறைந்த ஸ்போர்ட்ஸ் பைக்குகள் அதிகம் விரும்பப்படும் இந்தக் காலகட்டத்தில், ரெட்ரோ மாடர்ன் பைக்குகள் தனக்கென ஓர் தனித்துவமான இடத்தைப் பிடித்திருப்பதையும் பார்க்க முடிகிறது. சாலைகளில் பைக்கில் ரிலாக்ஸாகப் பயணிக்கும் வித்தையை ராயல் என்ஃபீல்டுதான் முதலில் தொடங்கி வைத்தது என்பதால், 10 ஆண்டுகளைத் தாண்டியும் க்ளாஸிக் 350-க்கு என ஒரு பெரிய ரசிகர் வட்டமே இருக்கிறது. ஆனால் லேட்டாக வந்தாலும், போட்டியாளர்கள் இந்த பைக்கைவிட அட்டகாசமாக இருக்கிறார்கள் என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இந்த நிறுவனத்தின் 650சிசி மாடல்கள் எப்படி இருந்தன என்பதை வைத்துப் பார்த்தால், புதிய க்ளாஸிக் BS-6 மீது அதிக நம்பிக்கை இருக்கிறது.

ராயல் என்ஃபீல்டு போலவே நெடிய வரலாறு மற்றும் நீண்ட ரசிகர் வட்டம் என இருக்கும் ஜாவா, முந்தைய 2 ஸ்ட்ரோக் பைக்கைப்போல இல்லை என்பது நிதர்சனம். ஆனால் அதன் வடிவத்துக்காகவே, கிட்டத்தட்ட ஒரு வருடம் காத்திருந்து பைக்கை வாங்கியவர்கள் எல்லாம் இருக்கிறார்கள்! ஓட்டுதல் அனுபவத்தில் டிஸ்டிங்ஷன் வாங்கினாலும், சொகுசில் பின்தங்கிவிடுகிறது ஜாவா. மேலும் இந்த வகை பைக்குகளில் ஒருவர் எதிர்பார்க்கக் கூடிய ரிலாக்ஸ்டான அனுபவம், இங்கே கிடைக்காதது முரண்தான்.

நெக்ஸ்ட் ஜென் : ரெட்ரோ பைக்ஸ் - ஒரு விறு விறு ரைடு

இங்கேதான் பெனெல்லி முன்னிலை பெறத் தொடங்குகிறது. நல்ல டிசைன், பக்கா எர்கனாமிக்ஸ், ஸ்மூத் இன்ஜின், சொகுசான ஓட்டுதல் என ஒரு ஆல்ரவுண்டர் பேக்கேஜாக உள்ளது இம்பீரியல் 400. ஆனால் முன்னே இருக்கும் மாடல்களைப் போலவே, இதற்கு என இந்தியாவில் பெரிய வரலாறு இல்லாதது குறையாகத் தெரிந்தாலும், ரைடரின் மனதுக்கு நெருக்கத்தில் வரும் வகையில், பெனெல்லி வெற்றி பெற்றுவிடுகிறது.