கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

நச்சுனு 4 டெக்னாலஜி! கார்களுக்கு ADAS மாதிரி பைக்குகளுக்கு ARAS வந்தால்!

தொழில்நுட்பம்
பிரீமியம் ஸ்டோரி
News
தொழில்நுட்பம்

பைக் தொழில்நுட்பம்: பாதுகாப்பு

சினிமாவுக்கு நடிகர்கள், இசையமைப்பாளர், இயக்குநர் தவிர– Behind the Scenes –ல் ஏகபபட்ட பேர் வேலை பார்ப்பார்கள். அதேபோல், பைக்குகளுக்கும் Behind the Scenes–ல் ஏகப்பட்ட நிறுவனங்கள் இருக்கும். ‘இந்த பைக் செமையா இருக்குல்ல… அதுல இந்தத் தொழில்நுட்பம் சூப்பர்ல’ என்று நமது பாராட்டுக்கள்… அந்த பைக் நிறுவனங்களைத் தாண்டி உண்மையிலேயே போக வேண்டியது – அந்தத் தொழில்நுட்பங்களின் கண்டுபிடிப்பாளர்களைத்தான். அப்படி ஒரு Behind the Scenes பிதாமகன்தான் ‘Continental Automotive India’ எனும் தொழில்நுட்ப நிறுவனம். இந்த நிறுவனத்தின் தொழில்நுட்பங்கள் இல்லாத பைக்குகளை நான்/நீங்கள் ஓட்டியிருக்க முடியாது. ஏபிஎஸ் பிரேக்கிங்கில் பழம் தின்று கொட்டை போட்ட கான்டினென்ட்டல் ஆட்டோமேட்டிவ், இன்னும் சில புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

பைக்குகளுக்கு என்றே அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் அந்த முக்கியமான 4 விஷயங்களை அனுபவித்து ஓட்டிப் பார்க்க… நம்மை ஓசூருக்கு அடுத்து உள்ள Taneja Aerospace எனும் ரன்வே–க்கு அழைத்திருந்தது கான்டினென்ட்டல் ஆட்டோமோட்டிவ். புத்தம் புது ஹெல்மெட், ரைடிங் கியர் என்று பக்கா ரைடராகக் கிளம்பினேன்.

பைக்குகளுக்கு மொத்தம் 4 கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்துகிறது கான்டினென்ட்டல். அவற்றை என்ஜாய் செய்து ஓட்டிய அனுபவத்தை உங்களுக்குப் பகிர்கிறேன்.

OCB (Optimized Curve Braking)
OCB (Optimized Curve Braking)

OCB (Optimized Curve Braking)

ஆப்டிமைஸ்டு கர்வ் பிரேக்கிங்

ABS பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். பதற்றமான ஹார்டு பிரேக்கிங்குகளில் வீல்கள் லாக் ஆகாமல்… ஸ்பின் ஆகாமல் நம்மைப் பாதுகாப்பது. பொதுவாக, இவை ஸ்ட்ரெய்ட் லைனில்தான் தனது பராக்கிரமத்தைக் காட்டும். அதாவது, நேராகப் போகும் சாலையில் ஏபிஎஸ் பிரேக்குகள் வீல்களை லாக் செய்யாமல், ஸ்பின் ஆகாமல் கிச்சென நிற்க வைத்து, பக்காவாக நம்மைப் பாதுகாக்கும். இவை கார்னரிங்குகளில் பெரிதாக எஃபெக்டிவ்வாக இருக்காது என்பதே உண்மை.

இது ஏபிஎஸ்–க்கு அடுத்த லெவல். அதுதான் இந்த OCB. இவன் முக்கியமாக, கார்னரிங்குகளில்தான் தான் யார் என்று காட்டுவான். இதற்கெனத் தனியாக ஒரு சென்ஸார் உண்டு. அதன் பெயர், Inertial Measurement Unit (IMU). இந்த IMU, நாம் பைக்குகளின் சாய்மானத்தை சென்ஸார் செய்து, அதற்கேற்றபடி இந்த ஏபிஎஸ்–ஸை வேலை பார்க்க வைக்கிறது.

இதற்கெனப் பிரத்யேகமாக, கம்பிகளெல்லாம் கட்டி ரெடியாக இருந்த ஒரு அப்பாச்சி RR310 பைக்கை ஓட்டிப் பார்த்தேன். (இந்தப் பக்கவாட்டுக் கம்பிகள், நாம் கீழே விழாமல் இருப்பதற்காக!) பொதுவாக, பைக்குகளில் 25 – 30 டிகிரி வரை வேண்டுமானால் சாயலாம். 30 டிகிரிக்கு மேலே சாய்ந்து பிரேக் அடித்தால்… நாம் அடுத்த நொடி தரையில்தான் இருப்போம். இதில் அப்படி இல்லை; சுமார் 70 கிமீ வேகத்தில் வந்து அப்படியே அதே வேகத்தில் பைக் ரேஸர் கணக்காக முழங்கால்களைத் தேய்த்தபடி சாய்ந்தபடி (கிட்டத்தட்ட 50 டிகிரி இருக்கும்) சடர்ன் பிரேக் அடித்தேன். என்ன ஆச்சரியம்! பைக் தானாகவே வெர்ட்டிக்கல் நிலைக்கு வந்தது. இந்த வசதி வந்து விட்டால், வளைவுகளில் சடர்ன் பிரேக் அடிப்பவர்கள், இனி கீழே விழமாட்டார்கள்.

TCS (Traction Control System)
TCS (Traction Control System)

TCS (Traction Control System)

ட்ராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம்

முன்னது, பிரேக்குகள் என்றால்… இது ஆக்ஸிலரேஷனுக்கு உரியது. பொதுவாக, இந்த TCS (Traction Control System) கார்களில்தான் இருக்கும். அல்லது 800 சிசிக்கு மேலே உள்ள சூப்பர் பைக்குகளில் உண்டு. நான் பிஎம்டபிள்யூ, ட்ரையம்ப், டுகாட்டி போன்ற சூப்பர் பைக்குகளில் இந்த ட்ராக்ஷன் கன்ட்ரோலை அனுபவித்து ஓட்டியிருக்கிறேன். ஆனால், முதன் முறையாக ஒரு கம்யூட்டர் பைக்கில்… அதுவும் ஸ்கூட்டரில்!

இதற்கெனப் பிரத்யேகமாக… மால்களில் ஃபவுன்டெய்ன்களில் இருந்து தண்ணீர் பீய்ச்சுமே.. அது போல் பீய்ச்சியபடி ஒரு வழுக்கும் செராமிக் சாலையை ரெடி செய்திருந்தார்கள். அந்தச் சாலையில் நடந்தாலே வழுக்கியது. அதில்தான் டெஸ்ட்டிங். நான் ஓட்டியது ஒரு ஸ்கூட்டர். ட்ராக்ஷன் கன்ட்ரோலை ஆஃப் செய்து ஓட்டிப் பார்த்தேன். 30 கிமீ கூட தாண்ட முடியவில்லை. ‘கிங்காங்’ படத்தில் சிம்பன்ஸி ஸ்கேட்டி போவதுபோல்… ஜிவ்வென ஸ்கூட்டர் இடது/வலதாக வழுக்கிக் கொண்டு போனது. (அந்தப் பக்கவாட்டு ராடுகள் இல்லையென்றால்… அவ்வ்வ்!)

இதுவே ட்ராக்ஷன் கன்ட்ரோலை ஆன் செய்துவிட்டு ஓட்டினேன். அட… 60 கிமீ வேகத்தில் பறந்தபோதும்… ஸ்கூட்டர் ஜிவ்வென ஏதோ ஹைவேஸில் பறப்பதுபோல்… வழுக்காமல் பறந்தது. ட்ராக்ஷன் ஆகும் பின் வீல்களை சென்ஸார் செய்து, அந்த வீல்களுக்கு இன்ஜின் டார்க்கைக் குறைத்து, ட்ராக்ஷனையும் குறைக்கிறது இந்த டெக்னாலஜி. அதனால்தான் இந்த ஜிவ் பயணம்! இந்த TCS –யை விரைவில் ஸ்கூட்டர்களுக்குக் கொண்டு வாருங்கள் கான்டினென்ட்டல்.

ஏபிஎஸ் மோடுகள்
ஏபிஎஸ் மோடுகள்

ABS Modes

ஏபிஎஸ் மோடுகள்

இது வேற லெவல். பொதுவாக, டிரைவிங்குக்குத்தான் மோடுகள் கேள்விப்பட்டிருப்போம். இதில் ஏபிஎஸ்–க்கென்று மோடுகள் கொடுத்து அசத்தியிருந்தார்கள். Rain, Road, Sport, Offroad என்று வெரைட்டியான மோடுகளை ஆன் செய்து ஓட்டிப் பார்த்தோம். ரெயின் மோடில் ஏபிஎஸ்–ஸை ஆன் செய்து பறந்தேன். அதே செராமிக் வழுக்கும் சாலையில்… வேகமாகப் போய் பிரேக் அடித்தால்… அட… வழுக்கவும் இல்லை; வீல் லாக் ஆகவும் இல்லை. ரோடு மோடு வழக்கமான கம்யூட்டர்களுக்கானது. ஸ்போர்ட் மோடு.. புள்ளிங்கோக்களுக்குப் பாதுகாப்பான தொழில்நுட்பம். (பாதசாரிகளுக்கும்தான்).

டூயல் சேனல் ஏபிஎஸ் பைக்குகளில் நான் ஆஃப்ரோடு செய்யும்போது, ஒரு விஷயத்தைப் பற்றிக் கவலைப்பட்டிருக்கிறேன். நேரடிச் சாலைகள்போல் ஆஃப்ரோடுக்கு ஏபிஎஸ் எடுபடாது. இதில் ஆஃப்ரோடு மோடை ஆன் செய்து ஓட்டினால்… அட… ரியல் ஆஃப்ரோடிங்கை அனுபவிக்கலாம் போங்கள்!

அராஸ்
அராஸ்
அராஸ்
அராஸ்

அராஸ்

ARAS (Advanced Rider Assistance System)

கார்களுக்கு அடாஸ் தெரியும். ADAS (Advanced Driver Assistance System) கொண்ட கார்கள் வர ஆரம்பித்து விட்டன. பைக்குகளுக்கும் இதேபோல் அட்வான்ஸ்டு தொழில்நுட்பம் வந்தால்… அதுதான் இந்த ARAS (Advanced Rider Assistance System). கார்களைப்போலவே இதிலும் பிளைண்ட் ஸ்பாட் டிடெக்ஷன், ஃப்ரன்ட் கொலிஷன் வார்னிங்… ரியர் கொலிஷன் வார்னிங் என்று கலக்கலாக இருந்தது. ARAS வசதி பொருத்தப்பட்ட ஒரு பைக்கை ஓட்டக் கொடுத்தார்கள். எமர்ஜென்ஸி பிரேக்கிங் சிஸ்டம்… அட தானாகவே பிரேக் பிடித்தது. என் பின்னால் வேண்டுமென்றே ட்ராக்கில் ஒரு இனோவா காரை எனது பிளைண்ட் ஸ்பாட் ஏரியாவில் வர வைத்தார்கள். நிஜமாகவே அந்த இனோவா என் பைக் மிரரில் தெரியவும் இல்லை; நான் கவனிக்கவும் இல்லை. என் பைக்கின் ரியர்வியூ மிரர்கள்… சிவப்பு நிறத்தில் ஒளிர்ந்து நம்மை அலெர்ட் செய்கின்றன. கூடவே ஃப்ரன்ட் கொலிஷன் வார்னிங் மற்றும் ரியர் கொலிஷன் வார்னிங் சிஸ்டமும் பைக்குகளுக்குப் பொருத்தியிருந்தால்… எப்படி இருக்கும் என்று டெமோ காட்டினார்கள்.

கார்களைப் போல் பைக்குகளுக்கும் இந்தப் பாதுகாப்பு வசதிகள் வந்தால்… நிச்சயம் கவனக்குறைவால் ஏற்படும் விபத்துகளைத் தவிர்க்கலாம் – கான்டினென்ட்டல் ஆட்டோமோட்டிவ் புண்ணியத்தில்!

பூபதி
பூபதி

`கான்டினென்ட்டல் ஆட்டோமோட்டிவ் இந்தியா’ நிறுவனத்தின் ஏகப்பட்ட தொழில்நுட்பங்கள் பொருத்திய பைக்கைத்தான் நாம் சாலைகளில் இப்போது ஓட்டிக் கொண்டிருக்கிறோம். இந்தத் தொழில்நுட்பங்களின் கிட்டத்தட்ட மூளையாகச் செயல்படுபவர்கள்… நம் தமிழர்கள். இதன் சீனியர் மேனேஜர் பூபதியும், டெக்னிக்கல் இன்ஜீனியரான ரொனால்டும்தான் நமக்கு இதை ஒவ்வொன்றாக விளக்கி, எக்ஸ்பீரியன்ஸ் செய்து காட்டினார்கள். ‘‘கவனக்குறைவும், தொழில்நுட்பக் குறைபாடுகளும்தான் விபத்துகளுக்குக் காரணம். இந்த OCB, Traction Control, ABS Modes, ARAS Level எல்லோமே பைக்குகளில் வந்துவிட்டால்… கம்யூட்டிங் பைக்கர்கள் மூலம் ஏற்படும் விபத்துகள் நிச்சயம் குறையும்!’’ என்றார்கள்.

ரொனால்டு
ரொனால்டு
நச்சுனு 4 டெக்னாலஜி! கார்களுக்கு ADAS மாதிரி பைக்குகளுக்கு ARAS வந்தால்!