Published:Updated:

ரேஸிங்கில் டீம் மேனேஜ்மென்ட் என்றால் என்ன? - workshop 3

ரேஸிங் டீம் மேனேஜ்மென்ட்
பிரீமியம் ஸ்டோரி
ரேஸிங் டீம் மேனேஜ்மென்ட்

டீம் மேனேஜ்மென்ட் ரேஸ் பயிலரங்கம்

ரேஸிங்கில் டீம் மேனேஜ்மென்ட் என்றால் என்ன? - workshop 3

டீம் மேனேஜ்மென்ட் ரேஸ் பயிலரங்கம்

Published:Updated:
ரேஸிங் டீம் மேனேஜ்மென்ட்
பிரீமியம் ஸ்டோரி
ரேஸிங் டீம் மேனேஜ்மென்ட்
மோட்டார் ஸ்போர்ட்ஸ் பந்தயத்தில் வெற்றி அடைய ஆற்றல்மிக்க ரைடர்கள் மட்டும் போதாது. சொன்னபடி கேட்கின்ற பைக் தேவை. பைக்கை அப்படி மாற்றும் வல்லமை படைத்த ஆராயாச்சியாளர்கள், பொறியாளர்கள், மெக்கானிக், அனலிஸ்ட், டீம் பிரின்ஸிபல், பிட் க்ரூ (Pit Crew) என ஒரு பட்டாளமே தேவை. இதை எல்லாம் சாத்தியப்படுத்தவும், நிதித் தேவைகளைக் கவனித்துக் கொள்ளவும் பெரிய பட்ஜெட் இருக்கும் கம்பெனி தேவை. இந்த லிஸ்ட்டில் விடுபட்டுப்போன ஒரு விஷயம் - இவர்கள் அத்தனை பேரையும் கட்டுக்கோப்பாக வழிநடத்த, நிர்வாகத் திறன் படைத்த மேலாளர்கள்.

ஒரு ரேஸிங் டீமில் சேர்ந்து பணிபுரிய என்னென்ன திறமைகள் வேண்டும் என்பதைப் புரியும்படி பிராக்டிகலாக, ரேஸ் நடக்கும் மைதானத்தில்... ரேஸ் நடைபெறும்போதே யாராவது கற்றுக் கொடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று கேள்விக்கு விடையாக அமைந்தது - மோட்டார் விகடனும், கோவையைச் சேர்ந்த CRA மோட்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்திய டீம் மேனேஜ்மென்ட் பற்றிய மூன்று நாள் பயிலரங்கம். (இது தவிர, ரேஸ் மார்ஷலிங் மற்றும் ரேஸிங் ஃபோட்டோகிராஃபி பற்றியும் இருவேறு பயிலரங்கங்களை முன்பக்கம் பார்த்திருப்பீர்கள்!)

வகுப்பு 1

மோட்டார் ஸ்போர்ட்ஸில் ரேஸ் ட்ராக்குகளுக்கு எனப் பல விதிமுறைகள் இருக்கின்றன. ஃபார்முலா-1 என்பதில் இருக்கும் ஃபார்முலா என்ற வார்த்தையைக் குறிப்பதே Set of Rules and Instructions என்பதைத்தான். இந்த விதிகளை போட்டியில் பங்கெடுக்கும் எல்லா ரேஸிங் டீம்களும் பின்பற்ற வேண்டும். உதாரணமாக, pit lane-ல் பைக்கின் வேகம் 40 கிமீ தாண்டக் கூடாது. மீறினால் அபராதம் கட்ட வேண்டியிருக்கும். pit lane-ல் இருந்து ரேஸ் டிராக்கில் சென்றபிறகுதான் வேகத்தைக் கூட்ட வேண்டும். இத்தகைய விதிமுறைகளை முதல் வகுப்பில் கற்றுக் கொண்டனர் மாணவர்கள்.

வகுப்பு 2

ரேஸ் ஆரம்பித்து முடியும் வரை ரேஸ் ட்ராக் உள்ளே செல்ல யாருக்கும் அனுமதி கிடையாது. ரேஸ் ட்ராக்கின் இருபுறமும் மார்ஷல் டவர்கள் இருக்கும். டவர்களில் நின்றபடி கொடிகளை அசைத்து சிக்னல் கொடுப்பார்கள் மார்ஷல்கள்.

ரயில்வே ஸ்டேஷனில் பச்சைக்கொடி காண்பித்தால் ரயில் செல்லலாம், சிவப்புக் கொடி காண்பித்தால் ரயில் நிற்க வேண்டும் என்பதுபோலவே, ரேஸ் ட்ராக்கில் பலவகை வண்ணக் கொடிகளுக்குப் பல அர்த்தங்கள் இருக்கின்றன. வெள்ளை, பச்சை, சிவப்பு, மஞ்சள், நீலம், கருப்பு என மொத்தம் 13 வகை கொடிகள் இருக்கின்றன. ஒவ்வொரு கொடிக்கும் ஒவ்வோர் அர்த்தம். பந்தயத்தில் இருக்கும் ரைடர்களுக்கும் சரி, pit-ல் இருக்கும் டீம் மேனேஜ்மென்ட்டுக்கும் சரி - இந்தக் கொடிகளை வைத்துத்தான் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள முடியும். இந்த வகுப்பில், இந்தக் கொடிகளின் அர்த்தங்களை மட்டுமல்ல, இவற்றை எப்போது பயன்படுத்த வேண்டும்; எப்படிப் பயன்படுத்த வேண்டும்; எந்த இடத்தில் இருந்து பயன்படுத்த வேண்டும் ஆகியவற்றையும் மாணவர்கள் கற்றுக்கொண்டனர்.

தட்ப வெட்பத்துக்கு ஏற்றாற்போல் டயர் ப்ரஷர் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்
தட்ப வெட்பத்துக்கு ஏற்றாற்போல் டயர் ப்ரஷர் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்

வகுப்பு 3

ரேஸ் ட்ராக்கில் தட்பவெப்ப நிலையும், ஒரு பைக்கின் டயர் ப்ரஷரும் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டவை. தட்ப வெட்பத்துக்கு ஏற்றாற்போல் டயர் ப்ரஷர் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். பைக்கில் எந்தக் கோளாறும் இருக்கக்கூடாது. ரைடரும் தெளிந்த மனநிலையில் இருக்க வேண்டும். பைக்கில் சரியான அளவில் எரிபொருள் இருக்க வேண்டும். ரேஸ் ஆரம்பிப்பதற்கு முன்பாக, இப்படி பல விஷயங்களைச் சரிபார்க்க வேண்டியது முக்கியம். இதற்கென ஒரு தனி checklist இருக்கிறது. அந்த செக்லிஸ்ட்டைக் கையில் வைத்துக் கொண்டு, ரேஸ் நடக்கும்போதே பிராக்டிக்கலாக இந்தப் பாடங்களைக் கற்றுக்கொண்டார்கள் மாணவர்கள்.

வகுப்பு 4

ரேஸில் வெற்றி அடைவதற்குப் பல யுக்திகளைக் கையாள வேண்டியிருக்கும். பந்தயங்கள் ஒரே ரேஸ் ட்ராக்கில் நடக்காது. வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறுவிதமான ரேஸ் ட்ராக்கில் இருக்கும். அதற்கு ஏற்றாற்போல் நமது யுக்திகளை மாற்றி அமைக்க வேண்டும். அதற்கு நிறைய தகவல்கள் தேவை. பைக்கை ஓட்டும் ரைடரின் பைக் எப்படி இருக்கிறது; பிரேக் எப்படிப் பிடிக்கிறது; கார்னரில் அவர் ஓட்டும்பொழுது எவ்வாறு உணர்கிறார் என்பதை டீம் மேனேஜ்மென்டிடம் கூறவேண்டும். சீஃப் இன்ஜினீயர் பைக்கின் தன்மையைப் புரிந்து, ரைடரின் திறமையை அறிந்து பல யோசனைகளைச் சொல்வார். பைக்கில் ஏதேனும் குறை இருக்கிறதா அல்லது ரைடர் இன்னும் சிறப்பாக ஓட்ட வேண்டுமா என்ற கேள்விகளுக்குப் பதிலைக் கண்டுபிடிக்க இப்படி பலதரப்பட்ட டேட்டாவை அனலைஸ் செய்வார்கள். இந்த ரீதியில் டேட்டா அனலைசிங் பற்றிய வகுப்பு சுவாரஸ்யமாக நடைபெற்றது.

டேட்டா அனலைசிங்
டேட்டா அனலைசிங்

வகுப்பு 5

இந்தியாவிலும் சரி; உலகளவிலும் சரி - எத்தனை வகை ரேஸிங் இருக்கிறது, எந்தெந்த ரேஸ் எங்கெங்கு நடக்கிறது, எப்படி அதற்காக ஒருவர் தன்னைத் தயார்படுத்திக் கொள்வது, எந்த வேலைக்கு எவ்வளவு சம்பளம், எந்தப் படிப்புக்கு என்ன வேலை என ரேஸிங் துறையில் இருக்கும் எல்லா வேலை வாய்ப்புகள் பற்றியும் CRA மோட்டார் ஸ்போர்ட்ஸைச் சேர்ந்த தருண் விளக்கினார்.

மூன்று நாள் பயிலரங்கம் முடிந்தபோது அனைத்து மாணவர்களும் மிக உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் ஒரே குரலில் கேட்ட கேள்வி: `அடுத்த பயிலரங்கம் எப்போது?’

விரைவில் அவர்களுக்கான பதில் காத்திருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism