BS - 6 இந்திய ஆட்டோமொபைல் துறை எதிர்கொள்ளவிருக்கும் எதிர்கொண்டிருக்கும் மிகப் பெரிய சவால் இதுதான்! ஏப்ரல் 1, 2020 முதலாக அமலுக்கு வரவிருக்கும் இந்தக் காற்று மாசு விதிகள் காரணமாக, வாகனங்கள் வெளியிடும் புகையில் உள்ள மாசின் அளவு குறையும் என்பது வரவேற்கத்தக்க விஷயமே! ஆனால் இதன் தொடர்ச்சியாக எரிபொருள் விலை உயர்வு, புதிய எரிபொருளின் சீரான விநியோகம், வாகனங்களின் விலையேற்றம், பழைய BS-4 வாகனங்களின் கையிருப்பு என இடர்பாடுகள் நீடிப்பது முரண்தான்.

இவை ஒருபுறம் இருக்க, கார்களைப் போலவே டூ-வீலர்களிலும் ஃப்யூல் இன்ஜெக்ஷன் என்பது இதனால் கட்டாயமாக்கப்பட்டுவிட்டது. இப்படி BS-4ல் இருந்து BS-6 செல்கையில், பைக்கில் சேர்க்கப்படும்/நீக்கப்படும் விஷயங்கள் என்ன?

ஃப்யூல் இன்ஜெக்ஷன்

ஆக்டிவா 5G/125, ஸ்ப்ளெண்டர் 110 i-ஸ்மார்ட், ஷைன் SP 125, ஜூபிட்டர், ஆக்ஸஸ் 125 போன்ற கம்யூட்டர் வாகனங்களின் BS-4 மாடல்களில், இந்த நாள் வரை கார்புரேட்டர்தான் இருக்கிறது. ஆனால் இவற்றின் BS-6 வெர்ஷன்களைப் பார்த்தால், அதில் Fi சிஸ்டத்தைப் பார்க்கமுடியும்.

மெக்கானிக்கலாக இயங்கும் கார்புரேட்டருடன் ஒப்பிட்டால், எலெக்ட்ரிக்கலாக இயங்கும் ஃப்யூல் இன்ஜெக்ஷனில் த்ராட்டில் ரெஸ்பான்ஸ் சீராக இருக்கும். இதனால் ஐடிலிங் குறிப்பிட்ட அளவில் கச்சிதமாக நிற்கும்; மேலும் த்ராட்டிலுக்கு ஏற்ற வகையில் பெட்ரோல்-காற்றுக் கலவை துல்லியமாக எறியூட்டப்படும் என்பதுதான், BS-6 பைக்கில் இந்த Fi சிஸ்டம் இடம்பெறுவதற்கு முக்கிய காரணம்.

Cold Start பிரச்னை இருக்காது. வாகனம் கீழே விழுந்துவிட்டால், பெட்ரோல்-காற்று கலவை இன்ஜினுக்குச் செல்வது தானாக நின்றுவிடும் என்பதுடன், இதனால் இன்ஜின் ஆஃப் ஆகிவிடும் என்பதும் கூடுதல் ப்ளஸ். அதேபோல கார்புரேட்டர் வாகனங்களை விட இவை 10-15% அதிக மைலேஜைத் தரும். ஆனால் கார்புரேட்டரை ட்யூன் செய்வதைப் போல, இதைச் சுலபமாக ட்யூன் செய்ய முடியாது. தனி ட்யூனர்கள் தேவை. BS-6 வாகனங்களில் வரப்போகும் பல மாற்றங்களுக்கு இந்த Fiதான் அடிப்படை.

சைடு ஸ்டாண்ட் இன்ஜின்

கட்-ஆஃப் ஸ்விட்ச்

சில ஸ்கூட்டர்களில், சைடு ஸ்டாண்ட் எடுக்காமல் வாகனத்தை ஆன் செய்ய முற்பட்டால், Buzzer சத்தம் போட்டு ரைடரை அலர்ட் செய்யும். இதுவே பைக்குகளில் என்றால், அதன் ஸ்பீடோமீட்டரில் உள்ள சைடு ஸ்டாண்ட் வார்னிங் இண்டிகேட்டர் எரியத் தொடங்கிவிடும்.

ஆனால் Fi கொண்ட டூ-வீலர்களில், இந்த சைடு ஸ்டாண்ட் இன்ஜின் கட்-ஆஃப் ஸ்விட்ச்சைப் பொருத்திக் கொள்ளமுடியும். வாகனம் இயங்கிக் கொண்டிருக்கும்போது சைடு ஸ்டாண்டைப் போட்டால், இன்ஜின் தானாகவே ஆஃப் ஆகிவிடும். ஒருவேளை தவறுதலாக சைடு ஸ்டாண்டை எடுக்காமல் ஆன் செய்ய முயன்றால், இன்ஜின் ஸ்டார்ட் ஆகாது. BS-6 வாகனங்களில் Fi இருப்பதால், இந்த வசதி நமக்கு போனஸ்தான்.

ஸ்டார்ட்-ஸ்டாப் சிஸ்டம்

ஹீரோவின் கம்யூட்டர் டூ-வீலர்களில் i-smart என்ற பெயரில் பிரத்யேகமாகக் காணப்பட்ட இந்தத் தொழில்நுட்பம், ஃப்யூல் இன்ஜெக்ஷன் காரணமாக அனைத்து வாகனங்களிலும் பரவலாக இடம்பெற்று வருகிறது. இதற்கென வழங்கப்பட்டிருக்கும் ஸ்விட்ச்தான், எலெக்ட்ரிக் ஸ்டார்ட்டுக்கான பட்டனாகவும் இருக்கும்.

சிக்னலில் வாகனத்தை நிறுத்தி சுமார் 3-5 விநாடிகள் ஆனபிறகு, இன்ஜின் தானாகவே ஆஃப் ஆகிவிடும். பிறகு வாகனத்தை ஸ்டார்ட் செய்ய, ஆக்ஸிலரேட்டரைத் திருகினாலே போதுமானது! (ஹீரோவின் டூ-வீலர்களில் க்ளட்ச்/பிரேக்கைப் பிடித்தால் இன்ஜின் ஸ்டார்ட் ஆகும்). இந்த வசதி தேவைப்படாது என்றால், அதை முன்புபோலவே ஆஃப் செய்து கொள்ளவும் முடியும். கார்புரேட்டர் கொண்ட மாடல்களில் இந்த வசதி கொஞ்சம் திணறலுடனே செயல்பட்டது என்றாலும், Fi சிஸ்டம் கொண்ட வாகனங்களில் இது சீராக இயங்குவதற்கான சாத்தியங்கள் அதிகம்.

ரியல் டைம் மைலேஜ் &

ஒன் டச் செல்ஃப் ஸ்டார்ட்!

ஃப்யூல் இன்ஜெக்ஷன் அமைப்பு இருப்பதால் சில வாகனங்களின் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் வாயிலாக, இருக்கும் பெட்ரோலை வைத்து எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்பதைக் கூறும் Distance To Empty மற்றும் டூ-வீலரை இயக்கும் முறையைப் பொறுத்து, வரக்கூடிய ரியல் டைம் மைலேஜையும் ஒருசேரத் தெரிந்து கொள்ளமுடியும். இது கார்புரேட்டர் மாடல்களின் பெட்ரோல் டேங்க்கில் உள்ள Float அமைப்பைவிடத் துல்லியமாக இருக்கும். மேலும் எலெக்ட்ரிக் ஸ்டார்ட்டை மீண்டும் மீண்டும் அழுத்துவதற்குத் தேவையில்லாமல், ஒரு டச்சிலேயே எந்த இன்ஜினையும் ஸ்டார்ட் செய்யக்கூடிய வசதியை இங்கே இணைத்துக் கொள்ள முடியும். இதனால் செல்ஃப் மோட்டாரின் ஆயுள் கூடும் என்பதுடன், கியர்கள் இயங்கும் சத்தமின்றி இன்ஜின் ஸ்மூத்தாக ஸ்டார்ட் ஆகிவிடும்.

ஆன் போர்டு டயகனசிஸ்

கார்புரேட்டர் கொண்ட டூ-வீலர்களில் சர்வீஸ் இண்டிகேட்டர் என்பது, இன்ஜினைச் சார்ந்து மட்டுமே இருக்கும். அதன்படி ஆயிலின் அளவு குறைதல் - ஏர் ஃபில்டர் அடைத்திருப்பது - இன்ஜின் வெப்பநிலை அதிகரிப்பதுபோன்ற இடர்பாடுகளைத் தாண்டி, மற்ற பிரச்னைகளைப் பார்க்க முடியாது. ஆனால் ஃப்யூல் இன்ஜெக்ஷன் இருப்பதால், கார்களைப்போலவே டூ-வீலர்களிலும் On Board Diagnostics வசதி இடம்பெறும். இதனால் டூவீலரை ஓட்டிப் பார்க்காமலேயே அதிலிருக்கும் பிரச்னைகளைத் தெரிந்து கொள்வது சில நேரங்களில் ப்ளஸ்தான். ஆனால் இதற்குத் தேவையான OBD Scanner, பெரும்பான்மையான மெக்கானிக்குகளிடம் இருக்காது என்பதால், Fi சிஸ்டத்தைத் தவிர மற்ற வேலைகளை மட்டுமே அவர்களால் பார்க்க முடியும்.

கிக்கர் லீவர்

150சிசிக்கும் மேற்பட்ட பல மாடல்களில், ஏற்கெனவே கிக்கர் லீவர் காணாமல் போய்விட்டது. BS-6 வாகனங்களில் இதைப் பார்ப்பது அரிதினும் அரிது. தற்போது DC வயரிங் எலெக்ட்ரிக்கல்ஸ் - கூடுதல் திறன்மிக்க செல்ஃப் மோட்டார் - ஃப்யூல் இன்ஜெக்ஷன் பயன்பாட்டினால், இந்தப் பாகத்தைப் பயன்படுத்தப் பெரிய அவசியம் இல்லை.

இதை நீக்கிவிட்டால், இன்ஜினில் இருக்கக்கூடிய பாகங்களின் எண்ணிக்கை மற்றும் பராமரிப்பு குறையும். மேலும் இன்ஜினின் எடை மற்றும் உராய்வுத்தன்மையும் சரியும். தவிர சிக்னல்களில் நிற்கும்போது பார்த்தாலே தெரியும்.... நம்மில் எத்தனை பேர் பைக்கை உதைத்து ஸ்டார்ட் செய்கிறோம்? வாகனத் தயாரிப்பாளர்கள் கிக்கர் லீவரை நீக்குவதற்கு, இப்படி பல காரணங்கள் உண்டு.ஆனால் பேட்டரியின் இயங்குதிறனில் சரிவு ஏற்படும்போது, கிக்கர் லீவரை நாம் நிச்சயம் மிஸ் செய்வோம்.

பெட்ரோல் டேப்

கார்புரேட்டர் இருக்கும் பைக்குகளில், பெட்ரோல் டேங்க் இருபகுதியாக (மெயின்/ரிசர்வ்) இருக்கும். கார்புரேட்டர் காய்ந்துவிடாமல் உலர்வுத்தன்மையுடன் இருந்தால்தான், அது சீராக இயங்கும். இதற்காக 1-2 லிட்டர் பெட்ரோல் டேங்க்கில் எப்போதும் இருப்பது அவசியம். இதுவே ஸ்கூட்டர்களில் ரிசர்வ் திறன் கிடையாது என்றாலும், அதில் Unusable பெட்ரோல் இருக்கும். ஆனால் ஃப்யூல் இன்ஜெக்ஷன் சிஸ்டத்தைப் பொறுத்தவரை, இங்கே ரிசர்வ் சிஸ்டமே கிடையாது. இதனால் பெட்ரோல் டேப் என்ற விஷயமும் இங்கு தேவையில்லை.

ரிசர்வ் இல்லை என்பதால், குறைந்தபட்சம் 3 லிட்டர் பெட்ரோல் டேங்கில் இருக்கும்படி வாகனத்தைப் பயன்படுத்த வேண்டும். இந்தக் குறிப்பிட்ட அளவு பெட்ரோல் இல்லாமல் ஃப்யூல் இன்ஜெக்ஷன் காய்ந்துபோய் விட்டால், அதில் இருக்கும் பாகங்கள் செயல்திறனை இழந்துவிடும். கார்புரேட்டர் போல Fi சிஸ்டத்தை ரீ-கண்டிஷன் செய்ய முடியாது என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும் (Fi சிஸ்டத்துக்கு எனப் பிரத்யேகமான க்ளீனிங் மெஷின் இருக்கிறது). ஃப்யூல் இன்ஜெக்ஷன் சிஸ்டத்திலிருந்து, பெட்ரோலைத் திருடுவதற்கான வாய்ப்புகளும் குறைவுதான்.

சோக்

இனி வரப்போகும் பைக், ஸ்கூட்டர்களில் நீங்கள் பார்க்க முடியாத பாகம் `சோக்’. BS-6 வாகனங்களின் ஃப்யூல் இன்ஜெக்ஷன் சிஸ்டத்தில் டூ-வீலரை ஆன் செய்த மாத்திரத்திலேயே பெட்ரோல்-காற்று கலவை இன்ஜினுக்குள் செல்லத் தயாராகிவிடும். எனவே அங்கே ஆட்டோமேட்டிக் சோக்தான் இடம்பெற்றிருக்கும் (சிலவற்றில் ஏற்கெனவே இது உள்ளது). இதனால் தனியாக மேனுவல் சோக் என்பது தேவையில்லாத பாகம்தான்.