Published:Updated:

பெட்ரோல் வேண்டாம்; கரன்ட் போதும்!

பைக்
பிரீமியம் ஸ்டோரி
பைக்

மந்தமாகச் சென்று கொண்டிருந்த மின்சார வாகனச் சந்தையில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது ஏத்தர்.

பெட்ரோல் வேண்டாம்; கரன்ட் போதும்!

மந்தமாகச் சென்று கொண்டிருந்த மின்சார வாகனச் சந்தையில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது ஏத்தர்.

Published:Updated:
பைக்
பிரீமியம் ஸ்டோரி
பைக்

சென்னையில் கால்பதிக்கப் போகிறோம் என்று சொல்லிய 2 மாதங்களில் 10 சார்ஜிங் ஸ்டேஷனையும், பெரிய ஷோரூம் ஒன்றையும் திறந்து விட்டார்கள். முதல் பேட்ச் ஸ்கூட்டர்களின் டெலிவரி செப்டம்பர் மாதம் தொடங்கவிருக்கும் நிலையில், ஒரு ஏத்தர் 450 பைக்கை ஃபுல் சார்ஜ் ஏற்றிவிட்டு, சென்னையில் சுற்றினோம்.

டிசைன்

ஏத்தர் ஸ்கூட்டர் இப்போதைக்கு வெள்ளை நிறத்தில் மட்டுமே கிடைக்கும். ஹெட்லைட், டெயில் லைட், இண்டிகேட்டர் எல்லாமே LED. ஒல்லியான உடல்வாகுடன் இருக்கிறது ஏத்தர் 450. அலுமினிய ட்ரெல்லிஸ் ஃபிரேம் கொண்ட இந்த ஸ்கூட்டரின் ஃபினிஷிங், தற்போது விற்பனையில் இருக்கும் பல மின்சார ஸ்கூட்டர்களைவிடவும் அருமையாக இருக்கிறது. 7 இன்ச் டச் ஸ்கிரீன் LCD இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் இதில் இருக்கிறது. கன்சோல் என்பதைவிட இதை டேஷ்போர்டு என்றே சொல்லாம். பெல்ட் டிரைவில் ஓடும் ஏத்தர், செம ஸ்மூத். பூட் ஸ்பேஸ் ஏகபோகம். ஒரு ப்ரீமியம் ஃபுல் ஃபேஸ் ஹெல்மெட் அடங்குகிறது. க்ளோவ் பாக்ஸ் வைக்க வேண்டிய இடத்தில், சார்ஜிங் போர்ட் வைத்திருப்பது வசதியாகவே இருக்கிறது. முன்பக்கம் பை மாட்டுவதற்கு ஹூக் கொடுக்கப்பட்டுள்ளது. டிசைனில் ஒரு ப்ரீமியம் ஸ்கூட்டர்தான் ஏத்தர் 450.

பெட்ரோல் வேண்டாம்; 
கரன்ட் போதும்!

டேஷ்போர்டு

கெப்பாசிடிவ் டச் ஸ்கிரீனுடன் வரும் இந்த டேஷ்போர்டில், ஸ்கூட்டரை நிறுத்தினால் மட்டுமே டச் வேலை செய்யும். ஏத்தரின் இந்த டச் ஸ்கிரீனுக்கு IP65 ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்பீடோ மீட்டர், ஓடோ மீட்டர், ட்ரிப் மீட்டர், ஸ்பீடு இண்டிகேட்டர், ரேஞ்ச் இண்டிகேட்டர் என எல்லாமே உள்ளன. கூடுதலாக, கூகுள் மேப், பார்க்கிங் அசிஸ்டன்ட் வைத்திருக்கிறார்கள். பார்க்கிங் அசிஸ்டன்ட் ஆன் செய்தால், 3 கி.மீ வேகத்தில் ரிவர்ஸில் போகும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தொழில்நுட்பத்தில் உச்சம்

இந்த ஸ்கூட்டரில் 6 Axis IMU சென்ஸார் பொருத்தியுள்ளார்கள். டேஷ்போர்டில் ஒரு சிம் கார்டும் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நம் ஸ்கூட்டர் பயன்பாட்டை ஏத்தரால் கண்காணிக்க முடியும். நீங்கள் போகும் இடத்தைக் கண்காணிக்கக்கூடாது என்றால், கூகுள் க்ரோம் போல ஸ்கூட்டரையும் இன்காக்னிட்டோ மோடில் போட்டுவிடலாம்.

பெட்ரோல் வேண்டாம்; 
கரன்ட் போதும்!

ஓட்டுவதற்கு எப்படி?

சீட் (765 மிமீ உயரம்) ஸ்போர்ட்டியாக இருக்கிறது. சாவியைப் போட்டு ஸ்கூட்டரை ஆன் செய்தால் டேஷ்போர்டு மட்டுமே ஆன் ஆகும். ஸ்கூட்டரை நகர்த்துவதற்கு பிரேக்கைப் பிடித்து ஸ்டார்ட்டரை அழுத்தினால் ஸ்டார்ட் ஆகிவிடும். ஆனால், ஸ்கூட்டர் ஆனில் இருப்பதை உங்களால் எந்த வகையிலும் உணர முடியாது. டேஷ்போர்டில் `இன்ஜின் ஆன்' என்பதைக் கவனித்துவிட்டு ஆக்ஸிலரேட்டர் முறுக்குங்கள்.

மூன்று `மோடு'கள் உண்டு. எக்கோ `மோடி'ல் ஆக்ஸிலரேஷன் ரொம்பவே சுமார். 50 கி.மீ வரை வேகம் போகலாம். 75 கி.மீ ரேஞ்ச் கிடைக்கும். ரைடு `மோடி'ல் போட்டால் ஆக்ஸிலரேஷன் சூப்பர். ஆனால் இதில் ரேஞ்ச் 65 கி.மீ மட்டுமே. ஸ்போர்ட் `மோடு' செம ஃபன் ரைடு. ஆக்ஸிலரேட்டரை முறுக்கியதும் பறக்கிறது ஸ்கூட்டர்.80 கி.மீ வரை வேகம் போகலாம். ஆனால், ரேஞ்ச் 55 கி.மீ மட்டுமே கிடைக்கும். இன்ஜின் பிரேக்கிங் இல்லாததால் பிரேக்கை அதிகம் நம்பியிருக்க வேண்டியுள்ளது.

காம்பி பிரேக்கிங் கொண்ட பெட்டல் டிஸ்க் பிரேக்குகள் நச்சென இருந்தாலும், சுலபமாக லாக் ஆவது மழை நேரங்களில் ஆபத்து. இந்த ஸ்கூட்டரின் சத்தம் சயின்ஸ் ஃபிக்‌ஷன் திரைப்படங்களை ஞாபகப்படுத்துகிறது. பேட்டரியை ஃப்ளோர் போர்டில் வைத்திருக்கிறார்களே எனக் கவலைப்பட வேண்டாம். அரைமணி நேரம் தண்ணீரில் மூழ்கினாலும், எதுவும் ஆகாத அளவு பேட்டரியை பேக் செய்துள்ளார்கள். மோட்டாரை ஃபிரேமில் பொருத்தியிருப்பதால், வேகமாக கார்னரிங் செய்ய முடிகிறது.

பெட்ரோல் வேண்டாம்; 
கரன்ட் போதும்!

90 செக்‌ஷன் டயர்களுடன் இருக்கும் 12 இன்ச் வீல்கள் சிட்டி ரைடுக்கு ஏற்றதாக உள்ளன. முன்பக்கம் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்கும், பின்பக்கம் மோனோ ஷாக்கும், ஸ்கூட்டரை டிராஃபிக்கில் நுழைத்து சட்டென்று திருப்புவதற்கு ஏற்ற மாதிரி ஸ்போர்ட்டியாக இருக்கிறது. ஆனால், சஸ்பென்ஷன் ஸ்டிஃப்பாக இருப்பதால் சொகுசான ரைடிங் கிடைக்கவில்லை.

விலை ஏன் அதிகம்?

ஏத்தர் 450 ஸ்கூட்டரின் சென்னை ஆன்ரோடு விலை ரூ.1,31,683. இரண்டு ஹெல்மெட், 27,000 ரூபாய் FAME II மானியம், இன்ஷூரன்ஸ், சாலை வரி, ஜிஎஸ்டி, மூன்று ஆண்டு வாரன்ட்டி, ஓர் ஆண்டுக்கான ஏத்தர் ஒன் சப்ஸ்கிரிப்ஷன்/இலவச சார்ஜிங், இலவசப் பராமரிப்பு, ரோடு சைடு அசிஸ்டன்ஸ், அன்லிமிடெட் இன்டர்நெட் சேவை இதில் அடங்கும். இதில் சார்ஜ் செய்யும்போது 80 நிமிடங்களில் 80 சதவிகிதம் சார்ஜ் ஆகிவிடும்.

ஒரு சார்ஜுக்கு 3 யூனிட் மின்சாரம் மட்டுமே செலவாகும் பட்சத்தில், அந்த 3 யூனிட்டுக்கான தொகையையும் ஏத்தர் நிறுவனமே திரும்பக் கொடுத்துவிடுகிறது. பெட்ரோல் விலை, பராமரிப்புச் செலவுகள், வசதிகள் எல்லாவற்றையும் ஒப்பிட்டு இதன் விலை அதிகம் இல்லை என்று வாத்திடுகிறது ஏத்தர். இதை எத்தனை வாடிக்கையாளர்கள் ஏற்பார்கள் என்பதில் இருக்ககிறது இதன் வெற்றி.