Published:Updated:

சென்னைக்குள் எங்க வேணாலும் சுத்திப் பார்க்க நல்ல ஆப்ஷன் ஸ்மார்ட் பைக்! ஆனால்? | Doubt of Common Man

ஸ்மார்ட் பைக்

விகடனின் Doubt of a Common Man பகுதியில், "சென்னையில் ஸ்மார்ட் பைக் திட்டம் ஆரம்பித்திருக்கிறார்களே.. அது ஓகேவா? எப்படிப் பயன்படுத்துவது? எவ்வாறு இயங்குகிறது?" என்று கேட்டிருக்கிறார் வாசகர் ஒருவர்.

சென்னைக்குள் எங்க வேணாலும் சுத்திப் பார்க்க நல்ல ஆப்ஷன் ஸ்மார்ட் பைக்! ஆனால்? | Doubt of Common Man

விகடனின் Doubt of a Common Man பகுதியில், "சென்னையில் ஸ்மார்ட் பைக் திட்டம் ஆரம்பித்திருக்கிறார்களே.. அது ஓகேவா? எப்படிப் பயன்படுத்துவது? எவ்வாறு இயங்குகிறது?" என்று கேட்டிருக்கிறார் வாசகர் ஒருவர்.

Published:Updated:
ஸ்மார்ட் பைக்
விகடனின் 'Doubt of common man' பக்கத்தில் கோபி என்ற வாசகர், "சென்னையில் இயங்கும் ஸ்மார்ட் பைக் திட்டம் எவ்வாறு இயங்குகிறது?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதில் இங்கே.
Doubt of common man
Doubt of common man

70’ஸ் அல்லது 80’ஸ் கிட்ஸ்களிடம் பேச ஆரம்பித்தால், ‘அந்தக் காலத்துல வாடகை சைக்கிள் எடுத்துட்டு சுத்துவோம் பாருங்க’ என்று ஆரம்பிப்பார்கள். இப்போது அப்படிப்பட்ட ஒரு ஆட்டோகிராப் நினைவுகளைக் கிளப்ப வந்திருப்பதுதான் சென்னையின் ஸ்மார்ட் பைக் திட்டம். அதே வாடகை சைக்கிள் திட்டம்தான்; என்ன, ட்ரெண்டுக்கு ஏற்றபடி டிஜிட்டலாகி, எலெக்ட்ரிக்காகி வந்திருக்கிறது இந்த ஸ்மார்ட் பைக் திட்டம். பெங்களூரு, ஹைதராபாத் போன்ற முக்கியமான நகரங்களில் இந்த ஸ்மார்ட் பைக் திட்டம் இருக்கிறது. நம் கிரேட்டர் சென்னையில் இது எப்படி இயங்குகிறது என்று பார்ப்போம்.

நீங்கள் முரட்டு சிங்கிள் என்று வைத்துக் கொள்வோம். உங்களிடம் பைக்/சைக்கிள் எதுவும் இல்லை. ஆனால், சென்னையைச் சுற்றிப் பார்க்க வேண்டும்; அல்லது அவசரமாக ஒரு இன்டர்வியூவுக்குப் போக வேண்டும். அவர்களுக்காகவே பெருநகர சென்னை மாநகராட்சி (Greater Chennai Corporation)உருவாக்கி இருப்பதுதான் ஸ்மார்ட் பைக் திட்டம்.

நீங்கள் எப்போதாவது சென்னைச் சாலைகளில் போகும்போது, சில ப்ளாட்ஃபார்ம்களில் வரிசையாக சைக்கிள்கள்/இ–பைக்குகள் நிற்பதைப் பார்த்திருக்கலாம். சென்னைக்குப் புதுசாக வந்திருப்பவர்கள், ‘என்னடா இது; ஏதும் சைக்கிள் கிளப்பா..’ என்று நிச்சயம் நினைத்திருப்பார்கள். ஒவ்வொரு மெட்ரோக்கள் வாசலிலும் இந்த சைக்கிள்கள் நிற்கும். இவற்றை நீங்கள் யாரிடமும் கேட்காமல் வாடகைக்கு எடுத்து ஓட்டுவதுதான் ஸ்மார்ட் பைக் திட்டம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஸ்மார்ட்பைக்
ஸ்மார்ட்பைக்

எத்தனை வாடகை ஸ்டேஷன்கள், சைக்கிள்கள் இருக்கின்றன?

சுமார் 33 கோடி ரூபாய் பட்ஜெட்டில், சென்னை முழுக்க கிட்டத்தட்ட 102 ஸ்மார்ட் பைக் ஸ்டேஷன்களை உருவாக்கி இருக்கிறது சென்னை மாநகராட்சி. Smart Bike Mobility Pvt Ltd. எனும் தனியார் நிறுவனம்தான் இந்த புராஜெக்ட்டை இயக்கி வருகிறது. பிப்ரவரி 2019–ல் இதை ஆரம்பித்தபோது, முதலில் 76 ஸ்டேஷன்களில் 500 சைக்கிள்களை மட்டும் கொண்டு வந்தார்கள். ஒரு மணி நேரத்துக்கு வாடகைக்கு எடுத்துக் கொள்ளும்படி இதை வடிவமைத்திருந்தார்கள். வரவேற்பைக் கருத்தில் கொண்டு இப்போது சுமார் 1,200–க்கும் மேற்பட்ட இ–பைக்குகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. கோவிட்டுக்கு முன்பு, வார நாட்களில் 400 பேர் வரை பதிவு செய்தார்களாம். இதுவே வாரக் கடைசிகளில், ஒரு நாளைக்கு 30,000–க்கும் மேற்பட்ட ரிஜிஸ்ட்ரேஷன்கள் பதிவாகி வந்ததாம். இப்போது இது கொஞ்சம் குறைந்திருக்கிறது என்கிறார்கள். மிதிவண்டிகள் தாண்டி, இப்போது வெர்ஷன் 2 என்று நெக்ஸ்ட் ஜென் எலெக்ட்ரிக் பைக்குகளையும் கொண்டு வந்திருக்கிறார்கள். இப்போது செயின்/பெல்ட் இல்லாத மஞ்சள் நிற வாகனங்களும் நெக்ஸ்ட் ஜென் வாகனங்களாக வந்திருக்கின்றன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆப் மூலம் எப்படி வாடகைக்கு எடுப்பது?

உங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள மெட்ரோ அல்லது ஸ்மார்ட் பைக் டாக்கிங் ஸ்டேஷன் (Docking Station) -ஐக் கண்டுபிடியுங்கள். சட்டென உங்களுக்குப் பிடித்த ஒரு ஸ்மார்ட் பைக்கைத் தேர்ந்தெடுங்கள். அதற்கு நீங்கள் முதலில் செய்ய வேண்டியது ‘ஸ்மார்ட் பைக் மொபிலிட்டி’ (Smart Bike Mobility) எனும் ஆப்பை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் டவுன்லோடு செய்யுங்கள். இதிலேயே இரண்டு வகை உண்டு. நார்மல் அப்ளிகேஷன் நீல நிறத்தில் இருக்கும். சிவப்புக் கலரில் இருப்பது லேட்டஸ்ட் பைக்குகளுக்கான அப்ளிகேஷன். இதை டவுன்லோடு செய்தபிறகு, KYC (Know Your Customer) விஷயங்களை உங்கள் ஆதார் அல்லது ஏதேனும் அரசாங்க ஐடி–க்களைக் கொண்டு நிரப்பி வெரிஃபை செய்தபிறகு, உங்கள் மொபைலுக்கு வழக்கம்போல் OTP வரும். அதை வைத்து நீங்கள் உள்ளே போகலாம்.

நீங்கள் இருக்கும் ஸ்டேஷன் தானாகவே ஜிபிஎஸ்–ஸில் தெரிவு செய்யப்படும். அதை க்ளிக் செய்தபிறகு, உங்களுக்குப் பிடித்த வாகனத்தின் பின்புறம் உள்ள QR Code –ஐ மொபைலில் ஸ்கேன் செய்யுங்கள். ஆட்டோமேட்டிக்காக வாகனத்தின் பின் பக்கம் உள்ள லாக் லீவர், தானாகவே ரிலீஸ் ஆகும். இதன் ரைடிங் நேரம் காலை – 5 மணி முதல் இரவு 10 மணி வரை.

Lever Unlock
Lever Unlock

கட்டணம் எவ்வளவு?

டிஜிட்டல் என்பதால், இதன் பேமென்ட்டும் டிஜிட்டல்தான். Paytm, Credit Card, Debit Card, போன்ற டிஜிட்டல் பேமென்ட் மூலம் நீங்கள் கட்டணம் செலுத்திக் கொள்ளலாம். ஸ்மார்ட் பைக் வேலட்டும் கொடுத்திருக்கிறார்கள். இதில் ஒரு மணி நேரத்துக்கு 25 ரூபாய் முதல் கட்டணம் ஆரம்பிக்கிறது. ஒரு நாள் முழுதும் சென்னையில் ரைடு இருக்கிறது என்றால், ஒரு நாள் பேக்கேஜும் உண்டு. இதில் இரண்டு ரைடுகள். ஒரு ரைடுக்கு 60 நிமிடம். மெட்ரோ போல் ஒரு மாதத்துக்கும் ஸ்மார்ட் பைக்கை புக் செய்து கொள்ளலாம். இரண்டு வாரங்களுக்கு 599 ரூபாயில் ஆரம்பித்து 999 வரை போகிறது கட்டணம்.

எப்படி அன்லாக் மற்றும் பார்க் செய்வது?

டிஜிட்டலாகப் பணப்பரிவர்த்தனை முடிந்தபிறகு, வாகனத்தின் பின் பக்கம் உள்ள ஒரு லாக், தானாக அன்லாக் ஆகிக் கொள்ளும். பிறகென்ன, உங்களுக்குப் போக வேண்டிய இடத்துக்குப் பறக்க வேண்டியதுதான். ‘வாகனத்துக்குப் பூட்டுக் கிடையாதே’ என்கிற உங்கள் சந்தேகம் புரிகிறது. இதுவும் டிஜிட்டல்தான். உங்கள் மொபைலில் உள்ள ‘பாஸ்’ என்கிற ஆப்ஷனை க்ளிக் செய்துவிட்டு, பின்பக்கம் உள்ள லாக் லீவரைக் கீழே இழுக்க வேண்டும். மறுபடியும் ‘Resume’ ஆப்ஷனை க்ளிக் செய்தால், வாகனம் தானாகவே அன்லாக் ஆகிக் கொள்ளும். ரைடு முடிந்ததும் மேனுவலாகவும் லாக் செய்ய வேண்டும். அதேபோல் ஓரிடத்தில் வாடகைக்கு எடுத்துவிட்டு, இன்னொரு இடத்திலும் இதை பார்க் செய்து கொள்ளலாம்.

வாகனம் திருடு போகுமா?

ஒவ்வொரு வாகனத்துக்கும் ஒரு நம்பர் கொடுத்திருக்கிறார்கள். நீங்கள் எங்கெங்கே இந்த வாகனத்தை எடுத்துக் கொண்டு போகிறீர்கள் என்பது எல்லாமே சர்வரில் பதிவாகும். இதில் ஜியோஃபென்ஸிங் சிஸ்டம் எனும் ஜிபிஎஸ் சிஸ்டம், இன்பில்ட்டாக இருப்பதால்… வாகனம் திருடு போகும் என்கிற அச்சம் இல்லை.

என்ன ப்ளஸ் … என்ன மைனஸ்?

பேண்டமிக் காலத்துக்குப் பிறகு இதன் பதிவுகள் குறைந்து போனதற்கு, பாதுகாப்பும் ஒரு முக்கியக் காரணம் என்கிறார்கள். இங்கே பாதுகாப்பு என்பது வாகனத்துக்கும் நமக்கும் என இரண்டுக்குமே உள்ள பிரச்னை. என்னதான் ஜிபிஎஸ் சிஸ்டம் போட்டு பாதுகாக்கப்பட்டாலும், வாகனத்துக்குச் சேதாரம் ஏற்படுவது அதிகமாகிறது என்பதும் உண்மை. வாகனத்தை மொத்தமாகத் திருட முடியாது; ஆனால், இதன் பாகங்கள் திருடு போவதைத் தடுக்க முடியவில்லை என்கிறார்கள். ‘‘PT ராஜன் சாலை, ராயபுரம், தண்டையார்பேட்டை போன்ற இடங்களில் தினசரி 4 பைக்குகளாவது சேதாரத்துக்கு உள்ளாகிறது. பல்புகள் போன்ற மற்ற பாகங்கள் காணமால் போவதும் நடக்கிறது’’ என்கிறார் ஸ்மார்ட் பைக் மொபிலிட்டியின் மேலாளர்.

SmartBike
SmartBike

அதேபோல், வேகமான சாலைகளில் மெதுவாகப் போகும் இந்த இ–சைக்கிள்களில் போக பயமாக இருப்பதாகவும் சொல்கிறார்கள். ‘அப்போ ப்ளாட்ஃபார்ம்ல போகலாம்’ என்றால், நடைபாதைகளில் நடப்பவர்களுக்கும் இடையூறாக இருப்பதாகச் சொல்கிறார்கள். அப்படியென்றால், சைக்கிள்களுக்கென்று லேன் வந்தால்தான் இது சாத்தியம். அதேபோல், நினைத்த இடத்தில் சைக்கிள்கள் வாடகைக்குக் கிடைப்பதில்லை; மேலும் ஷார்ட் ட்ரிப்புகளுக்கு இந்த சைக்கிள்கள் பயன்படவில்லை என்றும் சொல்கிறார்கள் வாடிக்கையாளர்கள்.

அதேபோல், பார்க்கிங் ஸ்டேஷன்களில் பணியாட்கள் இல்லாதது, டிஜிட்டலாக ஓகே என்றாலும், பலர் இதைப் பயன்படுத்தத் தயங்குவதாகவும் சொல்கிறார்கள். முக்கியமாக, பெண்கள்!

இந்தப் புதுமையான திட்டத்துக்கு நாம் வரவேற்புக் கொடுத்தே ஆக வேண்டும். சென்னைக்குள் சுற்ற இப்படி ஓர் அற்புதமான வாய்ப்பு இருப்பது பலருக்கும் தெரியாமல் இருப்பது இதற்குப் பின்னடைவுதான். அதேபோல், ‘சைக்கிள் பெடல் மிதிப்பதால் கிடைக்கும் பலன், பெட்ரோல்/டீசல் விலை உயர்வுக்கு சைக்கிள்தான் பெஸ்ட், எலெக்ட்ரிக் பயன்படுத்தி சாலையைச் சுத்தமா வெச்சுக்க உதவுங்கள்’ என்று ‘ஸ்மார்ட் பைக் திட்டத்துக்கு’ இன்னும் விளம்பரம் தேவை, கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் அவர்களே!

இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்க!

Doubt of common man
Doubt of common man