Published:Updated:

ரெயின்... பைக்குகளுக்கு நோ பெயின்!

ரெயின்... 
பைக்குகளுக்கு நோ பெயின்!
பிரீமியம் ஸ்டோரி
News
ரெயின்... பைக்குகளுக்கு நோ பெயின்!

டிப்ஸ்: பைக் ரைடிங்/பராமரிப்பு

ரெயின்... 
பைக்குகளுக்கு நோ பெயின்!
சுரேஷ் ஆறுமுகம்
சுரேஷ் ஆறுமுகம்
நரேஷ்
நரேஷ்

மழையை ரசித்துக் கொண்டே வீட்டு பால்கனியில் `காபி வித் இளையராஜா’ என்று ஸ்டேட்டஸ் போடுவது அலாதி சுகம்தான். யார் இல்லைனு சொன்னது? ஆனால், இது நமக்குத்தான் பாஸ். வாகனங்களுக்கு இல்லை. அவசரத் தேவைக்காக பைக்கை எடுத்துக் கொண்டு, கொட்டும் மழையில் செல்வது என்பது பெரிய டாஸ்க். ``அப்படிப்பட்ட ரிஸ்க்கான இந்த டாஸ்க்கை ரஸ்க் சாப்பிடுவது போல ஈஸியான டாஸ்க் ஆக்கலாம்’’ என்கிறார்கள், ஹீரோ மோட்டோகார்ப்பைச் சேர்ந்த சுரேஷ் ஆறுமுகம் (ஏரியா சர்வீஸ் மேனேஜர்) மற்றும் நரேஷ் (shriவாரி ஷோரூம் சர்வீஸ் இன்ஜினீயர்). தண்ணீர் தேங்கி நிற்கும் இடத்தில் உங்கள் வாகனம் மாட்டிக் கொண்டால் என்ன செய்ய வேண்டும்? இதனால், பைக்குக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன? என்னென்ன சர்வீஸ் செய்ய வேண்டும்? சர்வீஸ் செய்ய எவ்வளவு செலவாகும்? எப்படி நன்றாகப் பராமரிப்பது? என்று விலாவரியாகச் சொன்னார்கள் இருவரும்.

முதலில் வண்டியை பார்க் செய்வதில் ஆரம்பிப்போம்! முடிந்தவரை பார்க்கிங் கூரைக்குள் இருப்பது சிறப்பு. வெட்டவெளியாக இருந்தால் பைக்கை பிளாஸ்டிக் கவரால் மூடி வைக்கவும். மழைக் காலங்களில் பொதுவாக உயரமான இடங்களில் அதாவது மேடான பகுதியில் பார்க் செய்வது சிறந்தது. மரத்தின் அடியில் அல்லது மின்சாரக் கம்பத்தில் அருகில் நிறுத்துவதைத் தவிர்க்கவும். காற்றின் வேகத்தால் மரங்கள் பைக்கின் மீது விழ வாய்ப்பு உள்ளது. நான்கு அல்லது ஐந்து நாட்கள் ஒரே இடத்தில் நிறுத்தி இருப்பதால், பேட்டரி டிஸ்சார்ஜ் ஆக வாய்ப்புள்ளது. எனவே, மூன்று நாட்களுக்கு ஒருமுறை இன்ஜினை ஸ்டார்ட் செய்து கதகதப்பாக வைத்திருப்பது நல்லது.

ரெயின்... 
பைக்குகளுக்கு நோ பெயின்!

இரண்டாவதாக, சாலையில் மழை நீர் தேங்கி இருந்தால், அதனுள் வாகனத்தைச் செலுத்தாமல் இருப்பது நல்லது. ஒருவேளை அந்தச் சாலையைக் கடந்தே ஆகவேண்டும் என்ற நிலை ஏற்பட்டால், முதலில் மழை நீரின் அளவு எவ்வளவு இருக்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள். முன்னால் செல்லும் வாகனத்தின் டயர் எதுவரை மூழ்கி இருக்கிறது என்பதைப் பார்த்து எளிதில் தெரிந்து கொள்ளலாம். செல்லும் வாகனங்களுக்கு இடையே 10 அடி இடைவெளி இருக்க வேண்டும். திடீரென்று முன் செல்லும் வாகனம் நின்றுவிட்டால் நீங்கள் சமாளித்து ஒதுங்கிச் செல்ல உதவியாக இருக்கும். 10 அல்லது 15 கிமீ வேகத்தில் முதல் அல்லது இரண்டாவது கியரில் மட்டும்தான் செல்ல வேண்டும்.

கணுக்கால் அளவு தண்ணீர் இருந்தால் பிரச்சினை இல்லை. சைலன்ஸருக்குள் தண்ணீர் புகாது. முழங்கால் அளவு தண்ணீர் இருந்தால், கவனத்துடன் நேர்த்தியாகச் செல்வது அவசியம். எதிர்பாராமல் தடுமாறி உங்கள் பைக் முழங்கால் அளவு தண்ணீருக்குள் நின்றுவிட்டாலோ, சைலன்ஸர் தண்ணீருக்குள் மூழ்கிய படி இருந்தாலோ, தயவுசெய்து பைக்கை ஸ்டார்ட் செய்ய வேண்டாம். அப்படிச் செய்தால் இன்ஜினுக்குள் தண்ணீர் புகுந்துவிடும்.

`இன்ஜின் முழுவதும் சீல் செய்து காற்றுகூட உள்ளே செல்லாதபடி தயாரித்து இருப்பார்களே... தண்ணீர் எப்படி இன்ஜினுக்கு உள்ளே போகும்’ என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். இன்ஜினுக்குள் இருக்கும் புகை, சைலன்ஸர் வழியாக வெளியே வரும்பொழுது, சிறிதளவு காற்றுச் சுழற்சி ஏற்படும். அதாவது, வெளியில் இருந்து சிறிதளவு காற்று உள்ளே செல்லும். சைலன்ஸர் தண்ணீருக்குள் மூழ்கி இருக்கும் நிலையில், அந்தச் சிறிதளவு காற்றுக்குப் பதிலாக தண்ணீர் சைலன்ஸர் வழியாக இன்ஜினுக்குள் புகுந்துவிடும். பின்னர் இன்ஜினை சர்வீஸ் செய்த பின்தான் பைக்கை ஓட்ட முடியும் என்பதைக் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

பைக்கைத் தள்ளிக் கொண்டே, நீர் இல்லாத மேடான பகுதிக்குப் போய்விடுங்கள். பின்னர் உங்களுக்குத் தெரிந்த பைக் மெக்கானிக் அல்லது சர்வீஸ் சென்டருக்கு கால் செய்து பைக்கை சர்வீஸ் செய்து கொள்ளுங்கள்.

ரெயின்... 
பைக்குகளுக்கு நோ பெயின்!
ரெயின்... 
பைக்குகளுக்கு நோ பெயின்!

மழைநீர் தேங்கி இருந்த அளவைப் பொருத்து, எந்தெந்த பாகங்களை சர்வீஸ் செய்ய வேண்டும்... அல்லது மாற்ற வேண்டும் என்று மூன்று பிரிவாகப் பார்க்கலாம்.

பிரிவு ஒன்று:

கணுக்கால் அளவு தண்ணீருக்குள் சென்ற பைக்!

கணுக்கால் அளவு தண்ணீருக்குள் சென்று இருந்தால், பைக்கில் ஐந்து பாகங்களை சர்வீஸ் செய்ய வேண்டும். 1.பிரேக் பேடு,

2.டிரம், 3.ஆக்ஸில் கிரீஸிங்,

4.ஸ்பீடோமீட்டர் யூனிட்,

5.டிரைவ் செயின். இந்த ஐந்து பாகங்களை சர்வீஸ் செய்ய, ரூ.1,000 முதல் 1,500 ரூபாய் வரை செலவாகும்.

பிரிவு இரண்டு:

முழங்கால் அளவு தண்ணீருக்குள் சென்ற பைக்!

ஒன்றாம் பிரிவில் சர்வீஸ் செய்யும் பாகங்களுடன் சேர்த்து மொத்தம் 10 பாகங்களை சர்வீஸ் செய்ய வேண்டும். 6.சைலன்சர், 7.இன்ஜின் கேஸ், 8.மஃப்ளர்,

9.ஆயில், 10.கியர் பாக்ஸ். இந்தப் பத்து பாகங்களை சர்வீஸ் செய்ய ரூ.8,000 முதல் 10,000 வரை செலவாகும்.

பிரிவு மூன்று:

இடுப்பு அளவு தண்ணீருக்குள் சென்ற பைக்!

ஒன்றாம் மற்றும் இரண்டாம் பிரிவில் சர்வீஸ் செய்யும் பாகங்களுடன் சேர்த்து, மொத்தம் 15 பாகங்களை சர்வீஸ் செய்ய வேண்டும். 11.பெட்ரோல் டேங்க்கில் இருக்கும் தண்ணீரை அகற்ற வேண்டும். 12.கார்புரேட்டர், 13.ஒயரிங் கிட், 14.ஏர் ஃபில்ட்டர், 15.பேட்டரி என உங்கள் பைக் மாடலைப் பொருத்து பல பாகங்களை சர்வீஸ் செய்ய வேண்டியிருக்கும். இதற்கு ரூ.15,000 முதல் 18,000 வரை செலவாகும்.

ரெயின்... 
பைக்குகளுக்கு நோ பெயின்!