Published:Updated:

பர்ச்சேஸுக்கு வரும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... வாங்குவதற்கு முன் இந்த 8 விஷயங்களை நோட் பண்ணுங்க!

நாளை முதல் மிச்சப் பணத்தை செட்டில் செய்து, ரிஜிஸ்டர் செய்து கொண்டால்… ஓலா ஸ்கூட்டர் உங்கள் வீடு தேடி வரும். அதுக்கு முன்னாடி இந்த 8 விஷயத்தை நோட் பண்ணுங்க!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஒரே நாளில் 1 லட்சம் ஸ்கூட்டர் புக் ஆனது, ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் செய்த சாதனை. இதனாலேயோ என்னவோ, 1 லட்ச ரூபாய் விலைக்குள் ஆகஸ்ட் 15–ம் தேதி தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை லான்ச் செய்தது ஓலா நிறுவனம். இது வெவ்வேறு மாநிலங்களில் உள்ள மானியத்தொகைக்கு ஏற்றவாறு வேறுபடும்.

குஜராத்தான் ஓலா ஸ்கூட்டர் மலிவாகக் கிடைக்கும் மாநிலம். (ரூ.79,999 – 1.10 லட்சம், எக்ஸ் ஷோரூம்.) தமிழ்நாட்டில் ரூ.1 லட்சம் முதல் 1.30 லட்சம் வரை எக்ஸ் ஷோரூம் நிர்ணயித்திருக்கிறார்கள். S1 மற்றும் S1 Pro என இரண்டு வேரியன்ட்களில், தமிழ்நாட்டில் உள்ள கிருஷ்ணகிரி தொழிற்சாலையில் பரபரவென ரெடியாகி வருகிறது ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர். நாளை முதல், அதாவது செப்டம்பர் 8 முதல் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பர்ச்சேஸ் செய்யப்படுகிறது.

அதாவது, நாளை முதல் மிச்சப் பணத்தை செட்டில் செய்து, ரிஜிஸ்டர் செய்து கொண்டால்… ஓலா ஸ்கூட்டர் உங்கள் வீடு தேடி வரும். ‘499 ரூபாய் கட்டிட்டேன்; என் ஸ்கூட்டர் எப்போ வரும்’ என்பதுதான் எல்லோரது எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது. ஆனால், பர்ச்சேஸ் செய்வதும் அவசியம்!

ஓலா ஸ்கூட்டர் பர்ச்சேஸில் இந்த 8 விஷயத்தை நோட் பண்ணிக்கோங்க!
ஓலா ஸ்கூட்டர்
ஓலா ஸ்கூட்டர்

1. ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கென்று தனியாக டீலர்ஷிப்களோ, ஷோரூம்களோ கிடையாது. நேரடியாக உங்கள் வீட்டுக்கே வந்துவிடும் வகையில் இதன் நெட்வொர்க்கை அமைத்திருக்கிறார்கள். ஓலாவின் வலைதளத்தில் சென்று S1 - S1 Pro ஸ்கூட்டர்களையும் தேர்ந்தெடுத்து, உங்கள் முகவரி போன்ற விவரங்களோடு 499 ரூபாய் கட்டினால், வரிசைப்படி உங்களுக்கான ஸ்கூட்டர் உங்கள் வீட்டுக்கே வந்துவிடும். இதுதான் ஓலாவின் இப்போதைய திட்டம். பின்னாட்களில் டீலர்ஷிப்கள் வந்தாலும் வரலாம் என்பது தகவல்.

2. இதுவரை புக் செய்தவர்கள், ஸ்கூட்டருக்கான மிச்சத் தொகையையும் செலுத்தி, உங்கள் ஆர்டிஓ அலுவலக விவரங்களையும் முடித்து, பைக் டெலிவரியின் முழுமையான ப்ராசஸையும் முடித்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஸ்கூட்டர் டெலிவரி செய்யப்படும். அநேகமாக அக்டோபர் 1 முதல் ஓலா உங்கள் வீடுகளுக்கு வர ஆரம்பிக்கலாம்.

3. டீலர்ஷிப் இல்லாமல் வேண்டுமானால் பைக் டெலிவரி செய்யலாம். ஆனால், பார்ட்னர்ஷிப் இல்லாமல் முடியாதே! வாகனம் வாங்குபவர்கள் அனைவரும் மொத்தமாக ரொக்கத் தொகையையும் செலுத்தி வாங்க முடியாது என்பதால், தவணை முறையில் வாகனம் வாங்கும் ஐடியா கொடுப்பதற்காக, பல்வேறு வங்கிகளுடன் பார்ட்னர்ஷிப் வைத்திருக்கிறது ஓலா. HDFC, ICICI, Kotak Mahindra Prime, Tata Capital, பேங்க் ஆஃப் பரோடா, ஆக்ஸிஸ் பேங்க், Yes Bank, IDFC First Bank, IndusInd, AU Small Finance, Jana Small Finance போன்ற வங்கிகள் மற்றும் பல நிதி நிறுவனங்களுடன் கூட்டு வைத்திருக்கிறது ஓலா.

‘‘பல வங்கிகள் மற்றும் நிறுவனங்களுடன் பார்ட்னர்ஷிப் வைத்திருக்கிறோம். செப்டம்பர் 8–ல் இருந்து லைவ்வாக இந்த பர்ச்சேஸ் மற்றும் தவணைத் திட்டம் தொடங்கிவிட வேண்டும். வாடிக்கையாளர்கள் எந்தவிதத்திலும் சிரமப்படக் கூடாது!’’
என்கிறார், ஓலாவின் சீஃப் மார்க்கெட்டிங் அதிகாரி வருண் துபே.
S1 Pro and S1
S1 Pro and S1

4. ஓலாவுக்கான மாதத் தவணை ரூ.3000–த்தில் இருந்து ஆரம்பிக்கிறது. இனிஷியல் தொகை ரூ.25,000–த்தில் இருந்து நிதி நிறுவனங்களுக்கு ஏற்றபடி தொடங்குகிறது. வாடிக்கையாளர்கள் தங்கள் விரும்பிய நிதி நிறுவனங்களிலோ வங்கிகளிலோ தவணை முறையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வாகனங்களுக்கு 5 வருட பம்பர் டு பம்பர் இன்ஷூரன்ஸ்… நல்லதா கெட்டதா?
Range 122 km for 87%
Range 122 km for 87%

5. ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ரேஞ்ச் 180 கிமீ என்று க்ளெய்ம் செய்கிறது ஓலா. இதன் டாப் ஸ்பீடு 115 கிமீ என்கிறார்கள். இது S1 Pro மாடலுக்கான ஸ்பெஸிஃபிக்கேஷன். இதை டெஸ்ட் டிரைவ் செய்யும்போது இதன் ரியல் டைம் ரேஞ்ச் தெரியவரும். ஆனால், நமக்குக் கிடைத்த ஸ்பை ஷாட்டில் 87% சார்ஜுக்கு 122 கிமீ என்று டேஷ்போர்டில் இருந்ததால், நிச்சயம் 180 கிமீ என்பது சாத்தியமாக இருந்தாலும் ஆச்சரியமில்லை.

6. மொத்தம் 10 கலர்களில் கிடைக்கிறது ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர். வாடிக்கையாளர்கள் புக் செய்யும்போதே தங்களுக்கான கலர் ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ‘அவசரப்பட்டு இந்த கலரைத் தேர்ந்தெடுத்துட்டோமே’ என்று கவலைப்பட வேண்டியதில்லை. டெலிவரி தேதிக்குச் சில நாள்கள் முன்பு கலர் ஆப்ஷனை மாற்றிக் கொள்ளும் வசதியும் உண்டாம்.

10 Colors
10 Colors

7. ‘டீலர்ஷிப் இல்லை என்பதால், ஸ்கூட்டர் வாங்கியபிறகு சர்வீஸுக்கு என்ன பண்றது’ என்று பலர் முழிப்பது ஓலாவுக்குக் கேட்காமல் இருந்திருக்காது. அதனால், சர்வீஸும் டோர் ஸ்டெப்பில்தான் இப்போதைக்கு என்கிறார்கள்.

8. ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள், முழுக்க முழுக்க 'Make in Tamilnadu' என்பதுதான் சூப்பர் ஸ்பெஷல். இந்தத் தொழிற்சாலை ஆண்டுக்கு 20 லட்சம் ஸ்கூட்டர்கள் தயாரிக்கும் அளவு திறன் கொண்டது.

(டிவிஎஸ் நிறுவனம், தமிழ்நாட்டில் உள்ள ஓசூரில் உள்ள தொழிற்சாலையில் வாகனங்களைத் தயாரிக்கிறது. இதன் நினைவாக, தனது ஸ்கூட்டியில் தமிழில் ‘முதல் காதல்’ என்றொரு பதிப்பைக் கொண்டு வந்ததே... அதுபோல், ஓலாவில் தமிழ் எடிஷன் வந்தால் எப்படி இருக்கும்?)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு