Published:Updated:

எலெக்ட்ரிக் வாகனங்கள் இனியாவது தீப்பிடிக்காமல் இருக்குமா?

எலெக்ட்ரிக் வாகனங்கள்
பிரீமியம் ஸ்டோரி
எலெக்ட்ரிக் வாகனங்கள்

இனியாவது பாதுகாப்பில் தவறு நடக்காமல் இருக்குமா?

எலெக்ட்ரிக் வாகனங்கள் இனியாவது தீப்பிடிக்காமல் இருக்குமா?

இனியாவது பாதுகாப்பில் தவறு நடக்காமல் இருக்குமா?

Published:Updated:
எலெக்ட்ரிக் வாகனங்கள்
பிரீமியம் ஸ்டோரி
எலெக்ட்ரிக் வாகனங்கள்

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தற்போது வரை கிட்டத்தட்ட டஜனுக்கும் மேற்பட்ட எலெக்ட்ரிக் டூவீலர்கள் தீப்பிடித்து உள்ளன. இது என்ன பிரமாதம்? ஜூன் மாதம் ஒரு எலெக்ட்ரிக் காரே தீப்பிடித்துப் பார்த்தோம்.

‘இவை சம்பந்தமாக அந்தந்த எலெக்ட்ரிக் நிறுவனங்கள் தக்க பதில் தர வேண்டும்’ என்று அரசாங்கம், EV தயாரிப்பாளர்களான ஓலா எலெக்ட்ரிக், ஒகினாவா ஆட்டோ டெக் மற்றும் ப்யூர் EV ஆகிய நிறுவனங்களுக்கு விளக்கம் தரச் சொல்லி நோட்டீஸ் அனுப்பியது. இதைத் தொடர்ந்து, ‘காலநிலை சரியில்லை; சார்ஜிங்தான் பிரச்னை’ என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு விளக்கம் சொன்னார்கள். இன்னும் சில நிறுவனங்கள், தங்கள் வாகனங்களை ரீ–கால் செய்தும் நம்மைச் சமாதானப்படுத்தின. இன்னும் சிலர், ‘‘இந்த வெயிலுக்கு கார் பேட்டரி மட்டுமா தீப்பிடிக்கும்… AC கூடத் தீப்பிடிக்கும்" என்று அட்ராசிட்டி செய்த நிறுவனங்களும் இருக்கின்றன.

பேட்டரி செல்கள் மற்றும் பேட்டரி வடிவமைப்புக் குறைபாடுகளால் மட்டுமே ஏறக்குறைய அனைத்து விபத்துகளும் நிகழ்ந்துள்ளன என்று வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர். அண்மையில் ஒரு எலெக்ட்ரிக் வாகனத் தயாரிப்பு நிறுவனம் முறையான R&D எக்ஸ்பெர்ட்கள் இல்லாமல், சும்மா ‘ஏனோ தானோ’ என வாகனத் தயாரிப்பில் ஈடுபட்டு வந்ததுகூடத் தெரிய வந்துள்ளது வன்மையாகக் கண்டிக்கப்பட்டது.

இப்படி அங்கங்கே எரியும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு ஒருவழியாக ஒரு நல்ல முடிவெடுத்திருக்கிறது அரசு. மின்சார வாகனங்களுக்காகப் பிரத்யேக வழிகாட்டுதல்களை உருவாக்க, குழு ஒன்றை அமைத்துள்ளது. இதற்குப் பெயர், எஸ்ஓபி. ஸ்டாண்டர்ட் ஆப்பரேடிங் ப்ரோட்டாகால் (SOP) எனப்படும் இந்த தரக் கட்டுப்பாட்டு நடைமுறையை, எல்லா எலெக்ட்ரிக் வாகனங்களுக்கும் கொண்டு வர முடிவெடுத்துள்ளது அரசு. சிம்பிளாகச் சொல்ல வேண்டுமென்றால், எலெக்ட்ரிக் வாகன நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், தரம், பாதுகாப்பு, முறையான R&D பரிசோதனைகள், பேட்டரி செல்களின் தரம் போன்றவற்றைச் சோதனையிடுவது தான் இந்த SOP–யின் முக்கியமான அம்சம். பேட்டரி வடிவமைப்பு மற்றும் செல்கள் தயாரிக்கும் முறையான நெறிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள், இந்தப் புதிய SOP–ல் உள்ளடங்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. மேலும் இது, வெளிநாட்டு சப்ளையர்களின் பேட்டரி உதிரி பாகங்கள் மீதும் கவனம் செலுத்துமாம். அதாவது, யாரும் இனி டகால்ட்டி பண்ண முடியாது.

எலெக்ட்ரிக் வாகனங்களின் விலையைக் குறைப்பதற்காக வாடிக்கையாளர்களின் பாதுகாப்பில் தவறு நடக்காது என நம்புவோமாக!

எலெக்ட்ரிக் வாகனங்கள் இனியாவது தீப்பிடிக்காமல் இருக்குமா?