ஆக்ஸஸ் 125 ஸ்கூட்டரைத் தொடர்ந்து, தனது மற்ற டூ-வீலர்களையும் (ஜிக்ஸர் சீரிஸ், பர்க்மேன் ஸ்ட்ரீட், இன்ட்ரூடர்) BS-6 விதிகளுக்கேற்ப சுஸூகி மேம்படுத்தும். அந்த மாடல்களைத் தவிர, குறைவான எண்ணிக்கையில் கிடைக்கக்கூடிய 2020 எடிஷன் ஹயபூஸா பைக்கும் காட்சிப்படுத்தப்படலாம்.

இதில் முன்பக்க பிரேக் கேலிப்பர் மற்றும் 2 புதிய கலர் ஆப்ஷன்களைத் தாண்டி (Metallic Thunder Gray, Candy Daring Red), எந்த மாறுதலும் இல்லை. EICMA 2019-ல் வெளியான V-Strom 1050 & 1050XT ஆகிய அட்வென்ச்சர் பைக்குகள், இங்கேயும் காட்சிக்கு வைக்கப்படலாம். LED லைட்டிங், ஸ்ப்ளிட் சீட் மற்றும் கிராப் ரெயில், முன்பைவிடப் பெரிய பெட்ரோல் டேங்க் - Beak - வைஸர், DID அலுமினிய வயர் ஸ்போக் வீல்கள் எனப் பல மாற்றங்கள் இவற்றில் இருக்கின்றன.

மேலும் பழைய மாடலைவிட 7% அதிக பவர் மற்றும் 15% அதிக கூலிங் கொண்ட புதிய 1,037சிசி இன்ஜின் - 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் (107bhp பவர் &10kgm டார்க்), IMU-வை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் Suzuki Intelligent Ride System, க்ரூஸ் கன்ட்ரோல், Hill-Hold கன்ட்ரோல் என டெக்னிக்கலாகவும் V-Strom 1050 சீரிஸ் முன்னேறியிருக்கிறது.

கடந்த 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் காட்சிப்படுத்தப்பட்ட RS 150 மற்றும் Tuono 150, இன்னும் இந்தியச் சாலைகளில் டயர் பதிக்கவில்லை. எனவே, அந்த பைக்கின் Production வெர்ஷன் இம்முறை காட்சிக்கு வைக்கப்படலாம். இதிலிருக்கும் 150சிசி இன்ஜின், R15 V3.0 பைக்குக்கு இணையாக 18bhp பவர் மற்றும் 1.4kgm டார்க்கைத் தருகிறது.

தவிர யமஹாவில் ஸ்லிப்பர் க்ளட்ச் இருந்தால், ஏப்ரிலியாவில் Quick Shifter உண்டு. மேலும் R15 V3.0 போலவே RS 150 மற்றும் Tuono 150 பைக்குகளில் Perimeter ஃப்ரேம் - அலுமினிய ஸ்விங் ஆர்ம் - டூயல் சேனல் ஏபிஎஸ் உடனான டிஸ்க் பிரேக்ஸ் உண்டு. ஆனால் சஸ்பென்ஷன் விஷயத்தில் ஏப்ரிலியா யமஹாவை வீழ்த்திவிட்டது. (40மிமீ USD - மோனோஷாக்) வெஸ்பாவுக்கு GTS 300 எப்படியோ, ஏப்ரிலியாவுக்கு SR Max 300. இதிலிருக்கும் 278சிசி Fi இன்ஜின், 22bhp பவர் மற்றும் 2.3kgm டார்க்கைத் தருகிறது.

இதனை “Racing Scooter For Grand Touring” என அந்த நிறுவனம் அழைக்கிறது. அதற்கேற்ப மேக்ஸி ஸ்கூட்டர் பாணியில் டிசைன் செய்யப்பட்டிருக்கும் SR Max 300, பெரிய விண்ட் ஸ்க்ரீன் - அகலமான சீட் - Preload Adjustable பின்பக்க சஸ்பென்ஷன் - நீளமான ஃபுட் போர்டு ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து, EICMA 2019-ல் காட்சிப்படுத்தப்பட்ட RS 660 மற்றும் Tuono 660 பைக்குகள், டெல்லியிலும் பைக் ஆர்வலர்களிடம் வெளியிடப்படலாம்.

ஸ்போர்ட்டியான டிசைன் இரண்டிலுமே இருப்பதுடன், அலுமினிய ஃப்ரேம் மற்றும் ஸ்விங் ஆர்மும் பொதுவானது. ஆனால் இரு பைக்கிலுமே 660சிசி பேரலல் ட்வின் இன்ஜினே இருந்தாலும், RS 660 100bhp பவரையும் - Tuono 660 95bhp பவரையும் வெளிப்படுத்துகிறது.

மற்றபடி Six-Axis IMU, 5 மோடுகளைக் கொண்ட ஏப்ரிலியா டிராக்ஷன் கன்ட்ரோல், Aprilia Wheelie Control, QuickShifter, 5 ரைடிங் மோடுகள் (Commute, Individual, Dynamic, Challenge, Time Attack), க்ரூஸ் கன்ட்ரோல் என இவற்றிலுள்ள எலெக்ட்ரானிக்ஸ் பேக்கேஜின் பட்டியல் மிக நீளம்.

அமெரிக்காவைச் சேர்ந்த Segway Inc, இரு சக்கரங்களைக் கொண்ட Self Balanced Personal Transporter வாகனங்களைத் தயாரிப்பதில் பெயர் பெற்றது. தசாவதாரம் படத்தில் விஞ்ஞானி கமல் ஓட்டுவாரே.. அதேதான்! 2015-ம் ஆண்டு இந்த நிறுவனத்தை, பெய்ஜிங்கைச் சேர்ந்த Ninebot Inc நிறுவனம் கையகப்படுத்தியது. இது Transportation Robotics துறையில் இயங்கக்கூடிய ஸ்டார்ட்-அப் என்பதால், தற்போது personal transportation செக்மென்ட்டைத் தவிர மற்ற பிரிவுகளிலும் Segway Inc தடம் பதிக்க முடிவு செய்திருக்கிறது.

அதனை உறுதிபடுத்தும்விதமாக, Apex எனும் எலெக்ட்ரிக் ஸ்ட்ரீட் பைக் கான்செப்ட்டை பெய்ஜிங்கில் அறிமுகப்படுத்தியிருக்கிறது. Segway-Ninebot கூட்டணியின் வேகமான தயாரிப்பாக இருக்கப்போகும் இது, 0 - 100கிமீ வேகத்தை வெறும் 2.9 விநாடிகளில் எட்டும்! அதிகபட்சமாக 201 கி.மீ வேகம் வரை செல்லக்கூடிய Apex, அமெரிக்காவில் இந்திய மதிப்பில் 13.5-15 லட்ச ரூபாய் விலையில் கிடைக்கக்கூடிய Zero SR/F சீரிஸ் எலெக்ட்ரிக் பைக்குக்குப் போட்டியாகப் பொசிஷன் செய்யப்பட்டுள்ளது.

USD ஃபோர்க், முன்பக்கத்தில் இரட்டை டிஸ்க் பிரேக்ஸ், Pirelli டயர்கள், ஃபுல் ஃபேரிங், ஷார்ப்பான பில்லியன் சீட், 2 பீஸ் ஹேண்டில்பார், அலுமினிய ஸ்விங் ஆர்ம் என ரேஸ் டிராக்குக்கு அளவெடுத்துச் செய்ததுபோல இருக்கிறது Apex. ஆட்டோ எக்ஸ்போ 2020-ல் இந்த எலெக்ட்ரிக் கான்செப்ட் பைக் காட்சிப்படுத்தப்படும். இது தவிர Dirt e-Bike X160 & X260, Mountain e-Bike M5.0 என SEMA, EICMA போன்ற சர்வதேச மோட்டார் ஷோக்களில் காட்சிக்கு வைக்கப்பட்ட மாடல்களும் வைக்கப்படலாம். Apex-க்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து, நம் நாட்டுக்குக் கொண்டுவர Segway Inc முடிவு செய்யும்.

இந்தியாவில் தன் ஸ்கூட்டர்களை BS-6 விதிகளுக்கு அப்டேட் செய்துவிட்டது பியாஜியோ. திறன்மிக்க ஸ்கூட்டர்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், 3 வால்வ் - 180சிசி ஸ்கூட்டரை வெஸ்பா அறிமுகப்படுத்தும் எனச் சொல்லப்பட்டது.

இப்போது 160சிசி ஏப்ரிலியா ஸ்கூட்டர் (SR160) வந்திருக்கும் நிலையில், அதே இன்ஜின் வெஸ்பாவுக்கும் இடம்பெயர்வதற்கு அதிக சாத்தியம் இருக்கிறது. கூடவே சர்வதேச சந்தைகளில் இந்த நிறுவனம் விற்பனை செய்யும் GTS 300 சீரிஸ் ஸ்கூட்டரும் எக்ஸ்போவில் வைக்கப்படலாம்.

GTS-ல் இருக்கும் 278.3சிசி Fi இன்ஜின், 23.8bhp பவர் மற்றும் 2.6kgm டார்க்கைத் தருகிறது.இதனாலேயே இதில் டூயல் சேனல் ஏபிஎஸ் மற்றும் டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் உடன், TFT புளூடுத் டிஸ்ப்ளே மற்றும் 8.5 லிட்டர் பெட்ரோல் டேங்க் இடம் பெற்றுள்ளன.

வெஸ்பாவின் Elettrica எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், இம்முறையும் மேடைக்கு வரலாம். இதன் ஸ்டாண்டர்டு வெர்ஷன் சிங்கிள் சார்ஜில் 100 கி.மீயும், X வேரியன்ட் 200 கி.மீயும் செல்லும் திறனைக் கொண்டுள்ளன.

ஸ்டாண்டர்டு மாடலை சார்ஜ் ஏற்ற 4 மணி நேரம் தேவைப்படும் என்றால், X மாடல் பேட்டரியை சார்ஜ் ஏற்றுவதற்குச் சிறிய பெட்ரோல் இன்ஜினே இருக்கிறது! Elettrica -வில் இருக்கும் 4kW எலெக்ட்ரிக் மோட்டார், என்ட்ரி லெவல் ஸ்கூட்டர்களுக்குச் சமமான பர்ஃபாமன்ஸைத் தரும். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் TFT டிஸ்ப்ளேவில், மல்ட்டிமீடியா சிஸ்டம் & ஸ்மார்ட்ஃபோன் கனெக்ட்டிவிட்டி கூட இருக்கிறது.