Published:Updated:

லேடி பிகிலு!

இலக்கியா
பிரீமியம் ஸ்டோரி
இலக்கியா

பெண் பைக் ரேஸர் - இலக்கியா

லேடி பிகிலு!

பெண் பைக் ரேஸர் - இலக்கியா

Published:Updated:
இலக்கியா
பிரீமியம் ஸ்டோரி
இலக்கியா

‘‘ஆபீஸ் டைம்ல இருக்கேன்; அப்புறமா கால் பண்றீங்களாண்ணா?’’

‘‘ட்ராக்கில் இருக்கேன். பிட் ஸ்டாப்புக்கு வந்துட்டு கால் பண்றேன்.’’

‘‘ஜிம்ல ஹெவி ஒர்க்அவுட்ணா... ஈவ்னிங்தான் முடியும்!’’

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
லேடி பிகிலு!

– இலக்கியாவைத் தொடர்பு கொள்வது கொஞ்சம் கஷ்டமான டாஸ்க்காகவே இருந்தது. 2017–ல் ரேஸ் உலகில் கத்துக்குட்டியாக பைக் ஓட்ட ஆரம்பித்த இலக்கியா, இப்போது 2018, 2019 ஒன்மேக் சாம்பியன்ஷிப்பில் ஓவர்-ஆலாக மூன்றாவது இடம். ‘‘ரேஸில் சாம்பியனாகி, ரேஸ்ல சேர்றதுக்காக அடகு வெச்ச ஜிமிக்கி கம்மலை மீட்கணும்’’ என்று 2017–ல் மோ.விகடனுக்குப் பேட்டி கொடுத்த இலக்கியா, இப்போது மோட்டோ கிராஸ், ஒன் - மேக் என்று பத்து டைட்டில்களுக்கும், இரண்டு பைக்குகளுக்கும் சொந்தக்காரர்.

‘‘சாரி, பில்டப்புனு நினைச்சுடாதீங்க... நிஜமாவே டைம் பத்தலை’’ என்று வெகுளியாகவே பேசும் இலக்கியாவுக்கு, கிட்டத்தட்ட ரெஹானா போலவே ஒரு ஹிஸ்டரி உண்டு.

கலந்து கொண்ட முதல் ரேஸிலேயே முதலாவது இடம் பிடித்து ரெஹானா போடியம் ஏறியதுபோல்... கலந்துகொண்ட இரண்டாவது ரேஸில் மூன்றாவது இடம் பிடித்த பெருமை இலக்கியாவுக்கு உண்டு. ‘‘2017 ஹோண்டா ஒன்மேக்தான் நான் கலந்துக்கிட்ட இரண்டாவது ரேஸ். அதுக்கு முன்னாடி அண்ணாகிட்ட சண்டை போட்டு பைக் ஓட்டக் கத்துக்கிட்டு யாருக்கும் தெரியாம ஒரு ரேஸ்ல கலந்துக்கிட்டேன். பைக் க்ராஷ் ஆகி, செம அடி. ஹோண்டாவின் ஒன்மேக்கில் பொண்ணுங்களுக்காக ரேஸ் நடத்துறாங்கன்னு கேள்விப்பட்டு சும்மாதான் கலந்துக்கிட்டேன்.

லேடி பிகிலு!
லேடி பிகிலு!
ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் செல்லும் இலக்கியா, தனது வருமானத்தில் இருந்தே பைக், ரேஸ் பயிற்சி, ஜிம் என்று ரேஸ் சூட்டோடு வலம் வருகிறார்.

தேர்டு வந்துட்டேன். இப்போ ஓவர்ஆலாக இந்தியா ஒன்மேக் சாம்பியன்ஷிப்பில் நான்தான் மூணாவது! இப்போ ட்ராக்கில் என்னை ‘பிகில் பெண்ணே’னு செல்லமா கூப்பிடுறாங்க!’’ என்று ட்ராஃபிகளுக்கு நடுவில் டாபிக்கலாகப் பேசினார் இலக்கியா.

ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் இலக்கியா, தனது வருமானத்தில் இருந்தே ரேஸ் பயிற்சி, பைக், ஜிம் என்று ட்ராக் சூட்டோடு வலம் வருகிறார். ரேஸர் அவதாரம் எடுத்த இந்த இரண்டு ஆண்டுகளில் 10 தடவை டைட்டில் வின்னராகி இருக்கிறார் இலக்கியா. அதேபோல், ஒன்மேக்கில் (165சிசி கேட்டகிரி) பெஸ்ட் லேப் டைமிங் அடிக்கிறார்.

பெண் பைக் ரேஸர் - இலக்கியா
பெண் பைக் ரேஸர் - இலக்கியா

ரெஹானாவை விட 2 விநாடிகள் மட்டுமே குறைவாக, 2.14 நிமிடங்களில் இருங்காட்டுக்கோட்டை ரேஸ் ட்ராக்கின் ஒரு லேப்பைக் கடக்கிறார். வருத்தமான விஷயம் என்னவென்றால், ஒவ்வொரு ரேஸிலும் முதல் – இரண்டாம் இடத்தைப் பிடித்தாலும், ஓவர்ஆல் சாம்பியன்ஷிப்பில் 3–வது இடம்தான் இலக்கியா.

‘‘என்னாச்சு?’’

‘‘பாயின்ட்ஸ்தான் காரணம். எப்பவுமே குவாலிஃபையிங்கில் நான் ஃபர்ஸ்ட் வந்துடுவேன். அப்போதான் ரேஸை முதல் இடத்தில் இருந்து ஸ்டார்ட் பண்ண முடியும். கோயம்புத்தூரிலும் அப்படித்தான். போல் பொசிஷன்லதான் இருந்தேன். ரேஸ் ஸ்டார்ட் ஆனபோது, என் பைக் ஆஃப் ஆகிடுச்சு. பைக்கை ஓரம் தள்ளி வெளியே வந்துட்டேன். இப்படி ஒவ்வொரு ரேஸிலும் ஏதாச்சும் சொதப்பல் நடந்துக்கிட்டே இருந்துச்சு. 25 பாயின்ட்ஸ் முழுசா போயிடுச்சு. இன்னொரு ரேஸில், பைக் கோளாறு பண்ணி... சொதப்பிடுச்சு. குவாலிஃபையிங்கில் இருக்கும் தைரியம் எனக்கு ரேஸிங்கில் வரமாட்டேங்குது. ப்ரஷர் ஆகிடும். விழாம ஓட்டணும், ரேஸ் ஃபினிஷ் பண்ணணும்ங்கிற பதற்றத்துலேயே நான் சொதப்புறேன்னு சொல்றாங்க.

இப்போதைக்கு எனக்குப் போட்டி ஸென்னாவும் நிவேதாவும்தான். நாங்க மூணு பேருமே ‘டெயில் டு டெயில்’தான் ஓட்டுவோம். அதாவது, எங்க மூணு பேரோட ரியர் வீலும், ஃப்ரன்ட் வீலும் ஒட்டினாப்புலயே இருக்கும். அதனால, மைக்ரோ செகண்ட் வித்தியாசத்துலதான் வெற்றி/தோல்வி நடக்கும்.

மோட்டோக்ராஸ்
மோட்டோக்ராஸ்

நான் ஃபர்ஸ்ட்டே வந்தாலும், பாயின்ட்ஸ் வித்தியாசத்துல பின்னாடி போயிடுவேன்!’’ என்று ‘உச்’ கொட்டினார் இலக்கியா. டிராக் ரேஸ் தவிர்த்து, மோட்டோக்ராஸ் ரேஸிலும் டயர் பதித்திருக்கிறார். இலக்கியாவின் இன்னொரு லேட்டஸ்ட் சாதனை – அண்மையில் டிவிஎஸ் நடத்திய ‘மோட்டோ ஸோல்’ எனும் டர்ட் ட்ராக் ரேஸில், இரண்டாம் இடத்தில் போடியம் ஏறியிருக்கிறார் இலக்கியா. ‘‘வீட்டுக்குப் பக்கத்துல ஒரு டர்ட் ட்ராக் இருக்கு. அங்கே சும்மா ஒரு தடவை ட்ரெயினிங் போனேன். கோவாவில் நடந்த மோட்டோ ேஸால் போட்டிக்கு டிவிஎஸ் இன்வைட் பண்ணியிருந்தாங்க. ஹை ஜம்ப்பில் கீழே விழத் தெரிஞ்சு, ஒரு வகையா பேலன்ஸ் செஞ்சு, க்ராஷ் ஆகாம ரேஸை ஃபினிஷ் பண்ணிட்டேன்’’ என்று சொல்லும் இலக்கியாவின் அடுத்த டார்கெட், நேஷனல் சாம்பியன்ஷிப்.

bike ride
bike ride

‘‘ஏன் இவ்வளவு நாள் நேஷனல் பக்கம்லாம் போகலை?’’ என்றால், அதற்கும் நிதி நிலைமைதான் முட்டுக்கட்டையாக இருந்திருக்கிறது. ‘‘நேஷனல் போகணும்னா சொந்தமா பைக் வாங்கணும். இப்போதான் சொந்தமா பைக் வாங்கிட்டேனே! R15 வெர்ஷன் 3 வாங்கியிருக்கேன். கொஞ்சம் ஆல்ட்டரேஷன் வேலை மட்டும் பாக்கி இருக்கு. இப்பவே நிறைய பிரைவேட் டீம்ஸ்ல இருந்து நேஷனல் ஓட்டக் கூப்பிடுறாங்க. ஜாலியா இருக்கேன். எந்த டீமுக்காக ஓட்டப் போறேன்னு முடிவெடுத்துட்டுச் சொல்றேன். சரியா!’’ என்று இலக்கியமாகப் பேசி வழியனுப்பினார் இலக்கியா.