Published:Updated:

ஸீல்... இது நம்ம ஊரு ஸ்கூட்டர்!

ஆம்பியர் ஸீல் (EV)
பிரீமியம் ஸ்டோரி
ஆம்பியர் ஸீல் (EV)

ஃபர்ஸ்ட் டிரைவ் : ஆம்பியர் ஸீல் (EV)

ஸீல்... இது நம்ம ஊரு ஸ்கூட்டர்!

ஃபர்ஸ்ட் டிரைவ் : ஆம்பியர் ஸீல் (EV)

Published:Updated:
ஆம்பியர் ஸீல் (EV)
பிரீமியம் ஸ்டோரி
ஆம்பியர் ஸீல் (EV)

கோவையில் பெண்கள், சிறு முதலாளிகள், விவசாயிகள் என்று சிலர் 20 – 25 கி.மீ வேகத்தில், எக்ஸாஸ்ட் புகை அடிக்காமல் வலம் வருவதைப் பார்க்கலாம். இதன் டாப் ஸ்பீடு அதிகபட்சமாக 30 கி.மீதான் இருக்கும். ஆம்! எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்தான். உற்றுப் பார்த்தால் அவை, கோவையில் இயங்கும் ஆம்பியர் நிறுவன ஸ்கூட்டர்களாகத்தான் இருக்கும். ஆம்பியர் நிறுவனத்தில் ஏகப்பட்ட மாடல்கள் உண்டு. அதில் 2019 இறுதியின் லேட்டஸ்ட் வரவு – ஸீல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
1. டிஸ்ப்ளே, டிசைனில் ஓகே. ஆனால் டல் அடிக்கிறது., 2. பேட்டரிக்கு மேலே பூட் ஸ்டோரேஜ் ஸ்பேஸ், ஓகே!
1. டிஸ்ப்ளே, டிசைனில் ஓகே. ஆனால் டல் அடிக்கிறது., 2. பேட்டரிக்கு மேலே பூட் ஸ்டோரேஜ் ஸ்பேஸ், ஓகே!

‘வாவ், செம டிசைன்ல?’ என்று நம்மை இம்ப்ரெஸ் செய்யாது இதன் டிசைன். ஆனால், பெண்களுக்குப் பிடிக்கும். சொல்லப்போனால், ஏற்கெனவே ஓடிக் கொண்டிருக்கும் ரியோ ஸ்கூட்டரின் தங்கையைப்போல்தான் இருக்கிறது. இதன் மொத்த எடையே 78 கிலோதான். பயில்வான்கள் தூக்கியே பார்க் பண்ணி விடலாம். உற்றுப் பார்த்தால், இன்னொன்றும் தோன்றியது. Luyuan என்றொரு சீன எலெக்ட்ரிக் நிறுவனத்தின் MN2 ஸ்கூட்டர்போலவும் தெரிந்தது. (ஒக்கினாவா நிறுவனத்தின் ரீ–பேட்ஜ்டு நிறுவனம்தான் Luyuan).

இருக்கை தாழ்வாக இல்லை. சரியான உயரத்தில் இருக்கிறது. பெண்களுக்கு வசதியாக இருக்கும். ஃப்ளோர்போர்டும் உயரமாக இல்லை. அதனால் ஹேண்டில்பாரும் முழங்காலில் இடிக்காது. உயரமானவர்களுக்கும் பிரச்னை இல்லை. அண்டர்சீட் ஸ்டோரேஜ் ஸ்பேஸ், ஓரளவு ஓகே. ஆனால், ஹெல்மெட்டெல்லாம் வைக்க முடியாது. காரணம், பேட்டரி பேக்கேஜ் இங்கேதான் இருக்கிறது. பில்டு குவாலிட்டியையும் ஆஹா ஓஹோவென்று பாராட்ட முடியாது. ஸ்விட்ச் கியர், டல்லான இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் டிஸ்ப்ளே போன்றவற்றைச் சொல்லலாம்.

ஸீல்... இது நம்ம ஊரு ஸ்கூட்டர்!

பர்ஃபாமன்ஸ் ஓகே ரகம். எக்கோ, ஸ்போர்ட் என 2 மோடுகள் இருந்தன. 0–50 கி.மீ–க்கு 6 விநாடிகள் என்று ஆம்பியர் சொன்னாலும், 6 விநாடிகளுக்குள் 50 கி.மீ–யை அடைய சிரமாகத்தான் இருக்கிறது. இதன் டாப் ஸ்பீடு 48 கி.மீ என்றது நமது V–பாக்ஸ். இதற்கே 20 விநாடிகள் ஆனது.

இதுவே எக்கோ மோடில் இதன் டாப் ஸ்பீடு 39 கி.மீ.தான் போகும். ஸ்போர்ட் மோடில் 53 கி.மீ வேகத்தில் பறக்கலாம். பில்லியனில் ஆளை ஏற்றிக்கொண்டு போவது, இன்னும் கொஞ்சம் கஷ்டமான டாஸ்க்காக இருக்கும்.

ஸீல்... இது நம்ம ஊரு ஸ்கூட்டர்!

ஆக்ஸிலரேட்டர் நன்றாகவே சென்ஸிட்டிவ்வாக இருக்கிறது. ஆனால் பிரேக்கைக் கொஞ்சம் அழுத்தமாகப் பிடித்தால், பவர் டெலிவரி உடனடியாக கட்–ஆஃப் ஆகிறது. இதனால், இடைஞ்சலான திருப்பங்களில் இது கொஞ்சம் சிரமம். ஸ்டெபிலிட்டியைக் கூட்டுவதற்காக பிரேக்கை மெதுவாகத்தான் அப்ளை செய்ய வேண்டும். பிரேக்ஸ் – டிரம்தான். 40 கி.மீ வேகத்தில் போய் சடர்ன் பிரேக் அடித்தால், 8.77 மீட்டர் தள்ளி நின்றுவிடுகிறது ஸீல்.

இதில் இருப்பது போர்ட்டபிள் லித்தியம்–ஐயன் பேட்டரி. பேட்டரியை வெளியே எடுப்பது அத்தனை சுலபமில்லை. பிரேஸ்லெட் மாதிரி போட்டு பேட்டரியை ஃபிட் செய்துள்ளார்கள். ஸீல் ஸ்கூட்டருக்கு எக்ஸ்டெர்னல் சார்ஜிங் ஸாக்கெட்டும் கொடுத்துள்ளார்கள். இது சீட்டுக்கு அடியில் ஃபுட்போர்டு ஏரியாவில் இருக்கும். ஸீல் ஸ்கூட்டரை, கிட்டத்தட்ட 4 மணிநேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்துவிடலாம்.

ரேஞ்ச் எவ்வளவு என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஒரு ஃபுல் சார்ஜுக்கு சுமார் 45–55 கி.மீ வரை போகலாம். பேட்டரி கேஜில் 6 பார்கள் உண்டு. ஒரு பாருக்கு 8–9 கி.மீ வரை போகலாம். அப்படியென்றால், நகரத்துக்குள் 45–55 கி.மீ வரை ரேஞ்ச் கிடைக்கும்.

 லித்தியம் ஐயன் பேட்டரி... கழற்றுவது பெரிய டாஸ்க்.
லித்தியம் ஐயன் பேட்டரி... கழற்றுவது பெரிய டாஸ்க்.

இதன் எக்ஸ் ஷோரூம் விலை 69,599 ரூபாய். பெரிய பர்ஃபாமென்ஸெல்லாம் வேண்டாம்; ஃபன் டிரைவெல்லாம் வேண்டாம்; சிட்டிக்குள் மாசில்லாத ஒரு பாதுகாப்பான ரைடு போதும் என்றால், 125 சிசி ஸ்கூட்டர் வாங்குவதற்குப் பதில் நம்ம ஊர் ‘ஸீல்’ ஸ்கூட்டருக்கு டிக் அடிக்கலாம்.