சும்மாவே `ரே வாங்கலாமா... ஃபஸினோ வாங்கலாமா’ என்று குழம்பும் பார்ட்டிகளை நேரடியாகவே பார்த்திருப்போம். இப்போது டைலமா இன்னும் அதிகரிக்கும். ஆமாம்! ஃபஸினோவிலும் ரேவிலும் 125 சிசி Fi இன்ஜின் வந்ததோடு, செம அப்டேட்டாகி வந்துவிட்டன இரண்டும்.

புது ஃபஸினோ செம மாடர்ன். ரே போலவே இதுவும் புது பிளாட்ஃபார்ம்தான். முக்கோண ஹெட்லைட்டுக்கு மட்டுமில்லை; ஆப்ரானைச் சுற்றிலும் க்ரோம் வேலைப்பாடுகள்... அட! ‘க்ரோம் ஃபினிஷ்லாம் ஒரு டிசைனா’ எனும் பார்ட்டிகளுக்கும் ஃபஸினோவில் ஆப்ஷன் இருக்கிறது. கிளாஸி பிளாக் ஃபினிஷ் வேலைப்பாடுகள் கொண்ட ஸ்டாண்டர்டு வெர்ஷனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

ரேவில் ஹெட்லைட் ஆப்ரானில் என்றால், ஃபஸினோவில் இண்டிகேட்டர் லைட்களை ஆப்ரானில் ஃபிக்ஸ் செய்துள்ளார்கள். ரேவில் முழுதும் டிஜிட்டல் என்றால், ஃபஸினோவில் முழுதும் அனலாக். ‘ஏன் அனலாக்’ என்று யமஹாவைக் கேட்டால், விலை அதிகமாகுமே என்று கையை விரித்துவிட்டதை இங்கே பதிவு செய்கிறோம்.உள்பக்க ஆப்ரானில் டெக்ஷர்டு பிளாஸ்டிக் வித்தியாசம். ஒரு விஷயம் புரியவில்லை – 125 ஸ்கூட்டர் என்பதற்கான பேட்ஜ் எந்த இடத்திலும் இந்த ஃபஸினோவில் இல்லை. 21 லிட்டர் பூட் வசதி – ஃபுல் ஃபேஸ் ஹெல்மெட்கூட வைக்கலாம். ரேவைப்போலவே இதிலும் பூட் லைட்டும், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட்டும் மிஸ்ஸிங்.

சீட் நல்ல அகலமாக இருப்பது, ஃப்ளோர் போர்டு தாராளமாக இருப்பது எல்லாமே ஓகே! ஆனால்... இதைக் கொஞ்சம் உயரமாகச் செய்துவிட்டார்களோ என்னவோ... ஸ்கூட்டரைத் திருப்பும்போது ஹேண்டில்பார் முழங்கால்களில் இடித்தது. யு–டர்ன்களில் இது கொஞ்சம் சிரமத்தை ஏற்படுத்தலாம்.

ஃபஸினோவிலும், ரேவில் இருக்கும் அதே 125 சிசி, 8.2bhp பவர் கொண்ட ஏர்கூல்டு இன்ஜின்தான். ஏற்கெனவே ஃபஸினோ, ஸ்மூத் தான். ஃப்யூல் இன்ஜெக்ஷன் இன்னும் ஸ்மூத்தாக்கிவிட்டது. இதுவும் ரே போலவே எடை குறைவான ஸ்கூட்டர் (99 கிலோ). குறைந்த வேகங்களில் இன்ஜின் நல்ல ரிஃபைண்டு. BS-4 ஃபஸினோவைவிட 8 கி.மீ அதிக மைலேஜ் கிடைக்கும் என்கிறது யமஹா.

இதற்கு இன்னொரு விஷயமும் உண்டு. ஆம்! ஹோண்டா, ஹீரோ போல ஸ்டார்ட் – ஸ்டாப் சிஸ்டத்தை ஃபஸினோவில் கொண்டு வந்துவிட்டது யமஹா. சிக்னலில் 3 விநாடிகளுக்கு மேல் ஐடிலிங்கில் ஸ்கூட்டர் ஆஃப் ஆகிவிடும். த்ராட்டிலைத் திருகினால், இன்ஜின் தானாகவே ஆன் ஆகும்.

113 சிசி ஃபஸினோவைவிட இது 4 கிலோ குறைவுதான். இதிலும் ரே போலவே டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷன்தான். அகலமான டயர்கள், ஓட்டுதலை இன்னும் நம்பிக்கையாக்குகின்றன. டிஸ்க்கும் நம்பிக்கையில் நல்ல பார்ட்னர்ஷிப் வைக்கிறது. ஓட்டுதல் தரம் பழசைவிட ஓரளவு முன்னேற்றம் கண்டிருக்கிறது.

எக்ஸ் ஷோரூம் விலை ஸ்டாண்டர்டு மாடல்/டிரம் பிரேக் - 66,430 ரூபாய்; டிஸ்க் பிரேக் டீலக்ஸ் மாடல் - 69,930 ரூபாய். இது BS-6 ஆக்டிவாவைவிட 4,650 ரூபாய் குறைவு என்பது யமஹா விசிறிகளுக்கு மகிழ்ச்சியான விஷயம். ஃபஸினோ, இன்னொரு ஜப்பான் சொந்தக்காரரான ஹோண்டா ஆக்டிவாவுக்குப் போட்டியா... சொந்த அண்ணனான ரேவுக்குப் போட்டியா என்பது போகப் போகத் தெரிந்துவிடும்.