‘புது ஆக்டிவா எப்போ வரும்?’ என்ற கேள்விக்கான பதிலாக, ஆக்டிவா 6G ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது ஹோண்டா. 5G போலவே ஸ்டாண்டர்டு, டீலக்ஸ் என இரண்டு வேரியன்ட்களில் வந்திருக்கும் இந்த 110சிசி BS-6 ஸ்கூட்டர், 5G-யைவிடக் கூடுதலான விலையில் களமிறங்கியிருக்கிறது (சென்னை எக்ஸ்-ஷோரூம்: 7,613 - 7,978 ரூபாய் அதிகம்). நீண்ட நாள் எதிர்பார்ப்பான 12 இன்ச் வீல் மற்றும் டெலிஸ்கோபிக் ஃபோர்க் ஆகியவை, முன்பக்கத்தில் செய்யப்பட்டுள்ள முக்கிய மாற்றம்.

மற்ற BS-6 டூ-வீலர்களைப் போலவே, இதிலும் கார்புரேட்டருக்குப் பதிலாக ஃப்யூல் இன்ஜெக்ஷன் வந்துவிட்டது.

டிசைன் மற்றும் சிறப்பம்சங்கள்

இரு ஸ்கூட்டர்களையும் (5G/6G) அடுத்தடுத்துப் பார்த்தால் சில வித்தியாசங்கள் தென்படுகின்றன. 6G-ன் முன்பக்க Apron-ல் இருக்கக்கூடிய Faux கிரில் பகுதி அளவில் பெரிதாகியிருப்பதுடன், தடிமனான க்ரோம் பட்டையுடன் தகதகக்கிறது. ஆனால் ஆக்டிவா 125 போலவே, இந்த இடத்தில் LED DRL கொடுத்திருக்கலாமே ஹோண்டா? ஹேண்டில்பாரில் Bar End Weight புதிதாக எட்டிப் பார்க்கிறது.

முன்பைப் போலவே LED ஹெட்லைட்தான். ஆனால் DC வகைக்கு மாறிவிட்டதால், எந்த வேகத்தில் சென்றாலும் ஹெட்லைட் வெளிச்சம் ஒரே சீராக இருக்கும். முன்பக்கத்தில் வீல் மற்றும் சஸ்பென்ஷன் மாறியிருப்பதால், மட்கார்டு மாற்றம் கண்டிருக்கிறது (CBS ஸ்டிக்கர் மிஸ்ஸிங்). பக்கவாட்டில் இருந்து பார்த்தால், 6G-யில் eSP ஸ்டிக்கர் புதுசாக உள்ளது.

ஏர் வென்ட்களின் தோற்றத்தில் வேறுபாடு தெரிகிறது. ஃப்யூல் இன்ஜெக்ஷன் என்பதால், 6G-யில் சோக் லீவர் நீக்கப்பட்டுவிட்டது. பின்பக்கத்தில் முன்பைவிட அகலமாகியிருக்கும் டெயில் லைட், அதே H வடிவத்தில் தொடர்கிறது. இதற்கு மேலே, பெட்ரோல் டேங்க் மூடி வைக்கப்பட்டிருப்பது செம! இதனால் Multi Function சாவி துவாரத்தில் இருந்து, தற்போது சீட்டைத் தவிர பெட்ரோல் டேங்க்கின் மூடியையும் திறக்கலாம்.

இன்ஜின் கில் ஸ்விட்ச் இருந்தாலும், ஸ்டார்ட் ஸ்டாப் சிஸ்டம் கிடையாது (ஆக்டிவா 125-ல் உண்டு). 5G-யில் இல்லாத பாஸ் லைட் ஸ்விட்ச் 6G-யில் இருந்தாலும், இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் விஷயத்தில் யூ-டர்ன் அடித்துவிட்டது ஹோண்டா.

அதாவது முன்பிருந்த சிறிய டிஜிட்டல் ஸ்க்ரீன் & Eco மோடு இண்டிகேட்டர் இங்கே இடம்பெறவில்லை. ஆனால் சர்வீஸ் இண்டிகேட்டர் இடம்பெற்றிருப்பது ஆறுதல். தவிர ACG Silent ஸ்டார்ட் இருந்தாலும், Side ஸ்டாண்ட் இன்ஜின் Cut-Off ஸ்விட்ச் இங்கே வழங்கப்படவில்லை. குறைந்தது சைடு ஸ்டாண்டு இண்டிகேட்டராவது கொடுத்திருக்கலாம்.

இன்ஜின் விபரங்கள்

5G போலவே, 6G-யில் இருப்பதும் 110சிசி சிங்கிள் சிலிண்டர் - Long Stroke HET இன்ஜின்தான். ஆனால் BS-4 மாடலின் 109.19சிசி - கார்புரேட்டட் இன்ஜினுடன் ஒப்பிடும்போது, BS-6 மாடலின் 109.51சிசி - ஃப்யூல் இன்ஜெக்டட் இன்ஜின் முற்றிலும் புதிது. 5G-யைவிட 6G அதிக சிசி மற்றும் கம்ப்ரஷன் ரேஷியோவைக் கொண்டிருந்தாலும் (BS-4: 9.5:1. BS-6: 10:1), பவர் மற்றும் டார்க்கில் சரிவைக் கண்டிருக்கிறது. 5G ஆக்டிவா 8bhp@7,500rpm பவர் & 0.9kgm@5,500rpm டார்க்கைத் தந்த நிலையில், 6G ஆக்டிவா 7.7bhp@8,000rpm பவர் & 0.88kgm@5,250rpm டார்க்கை வெளிப்படுத்துகிறது. Fi சிஸ்டம் கொண்ட புதிய ஸ்கூட்டரின் த்ராட்டில் ரெஸ்பான்ஸ் பற்றி, டெஸ்ட் டிரைவில் பார்க்கலாம். 5G-விட 6G 10% அதிக மைலேஜைத் தரும் என்கிறது ஹோண்டா. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், கிக்/செல்ஃப் ஸ்டார்ட் ஆகிய வசதிகள் அப்படியே தொடர்கின்றன.

மெக்கானிக்கல் அம்சங்கள்

1,833மிமீ நீளம் (5G விட 72மிமீ அதிகம்), 697மிமீ அகலம் (5G விட 13மிமீ குறைவு), 1,156மிமீ உயரம் (5G விட 2மிமீ குறைவு), 1,260மிமீ வீல்பேஸ் (5G விட 22மிமீ அதிகம்), 171மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் (5G விட 18மிமீ அதிகம்) என 6G அளவுகளில் குறிப்பிடத்தக்க மாறுதல்களைக் கண்டுள்ளது. பெட்ரோல் டேங்க்கின் அளவு (5.3 லிட்டர்) மற்றும் 3Ah MF பேட்டரியில் மாற்றமில்லாவிட்டாலும், ஸ்கூட்டரின் எடை 2 கிலோ குறைந்திருக்கிறது (107 கிலோ).

Underbone சேஸி, மெட்டல் பாடி, பின்பக்கத்தில் 10 இன்ச் வீல் (90/100 - டியூப்லெஸ் டயர்) ஆகியவை தொடர்ந்தாலும், 12 இன்ச் முன்பக்க வீல் (90/90 - டியூப்லெஸ் டயர்) மற்றும் டெலிஸ்கோபிக் ஃபோர்க் என முன்பக்கத்தில் உள்ள விஷயங்கள் புதுசு. பின்பக்க சஸ்பென்ஷனை 3 விதமாக அட்ஜஸ்ட் செய்யமுடியும் என்பது சூப்பர். அதிக வீல்பேஸ் மற்றும் பெரிய முன்பக்கச் சக்கரம் - டெலிஸ்கோபிக் ஃபோர்க் ஒன்றுசேர்ந்து, ஸ்கூட்டரின் ஓட்டுதலைச் சிறப்பானதாக மாற்றலாம். 18 லிட்டர் ஸ்டோரேஜ் ஸ்பேஸ் இருந்தாலும், அதற்கு லைட் வசதி இல்லை. அதேபோல மொபைல் சார்ஜிங் பாயின்ட் எங்கே ஹோண்டா?

முதல் தீர்ப்பு

5G-யைவிட சுமார் 10,000 ரூபாய் அதிக சென்னை ஆன்-ரோடு விலையில் வந்திருக்கும் BS-6 ஆக்டிவா 110, பிராக்டிக்கலாக இருக்கிறது. ஆனாலும் பழைய அம்சங்களான பாஸ் லைட் ஸ்விட்ச், வெளிப்புற ஃப்யூல் கேப், டெலிஸ்கோபிக் ஃபோர்க், 12 இன்ச் வீல் ஆகியவை ஆக்டிவா 6G-யில் சேர்க்கப்பட்டிருப்பது நல்ல விஷயமே!

ஃப்யூல் இன்ஜெக்ஷன் என்பதால், பராமரிப்பு விஷயத்தில் இது கார்புரேட்டர் அளவுக்கு எளிதாக இருக்காது. எனவே பெட்ரோல் காலியாகும் வரை 6G-யை விரட்டாதீர்கள். மேலும் முன்பைவிட ஸ்கூட்டரில் அதிக எலெக்ட்ரிக் அம்சங்கள் இடம் பெற்றிருக்கின்றன.

எனவே, வெளி மெக்கானிக்குகளிடம் ஆக்டிவா 6G செல்வதற்கான சாத்தியம் குறைவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இருந்தாலும், நல்ல ஃபேமிலி ஸ்கூட்டர் என்கிற அடையாளத்தை என்றைக்குமே விட்டுத் தராது ஆக்டிவா. 6G-யும் அப்படித்தான்!