Published:Updated:

சேட்டக் ஹமாரா பஜாஜ் அடுத்த பிறவி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஃபர்ஸ்ட் லுக் - பஜாஜ் சேட்டக்
ஃபர்ஸ்ட் லுக் - பஜாஜ் சேட்டக்

ஃபர்ஸ்ட் லுக் - பஜாஜ் சேட்டக்

பிரீமியம் ஸ்டோரி

சேட்டக்... ஹமாரா பஜாஜ்.... இதெல்லாம் ஞாபகம் இருக்கிறதுதானே! 14 ஆண்டுகளுக்குப் பிறகு, எலெக்ட்ரிக் வாகன ரூபத்தில் மீண்டும் வந்திருக்கிறது சேட்டக். புத்தாண்டுப் பரிசாக வரப்போகும் சேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் எப்படி இருக்கிறது? என்ன ஸ்பெஷல்?

டிசைன், வசதிகள்

மற்ற ஸ்கூட்டர்களுடன் ஒப்பிடும்போது, இதன் ரெட்ரோ ஸ்டைல் டிசைன் நச்! வளைவு நெளிவுகளுடன் கூடிய பாடி பேனல்கள், Multi Spoke அலாய் வீல்கள், சிங்கிள் பீஸ் சீட், வட்ட வடிவ ஹெட்லைட் என ஏகப்பட்ட வின்டேஜ் அம்சங்கள்!

அப்போ மாடர்ன் அம்சங்கள்... அதுவும் இருக்கு பாஸ்! Feather Touch ஸ்விட்ச்கள், Full LED லைட்டிங், ஆடி கார்களைப்போன்ற Scrolling இண்டிகேட்டர்கள், முன்பக்க க்ளோவ் பாக்ஸ், Negative Display டிஜிட்டல் மீட்டர், கீலெஸ் ஸ்டார்ட், மென்மையாக இயங்கும் சைடு ஸ்டாண்ட் - ஃபுட் பெக்ஸ் - மிரர்கள், ஃபுல் மெட்டல் பாடி எனக் கலக்குகிறது சேட்டக்.

சேட்டக் ஹமாரா பஜாஜ் அடுத்த பிறவி!
சேட்டக் ஹமாரா பஜாஜ் அடுத்த பிறவி!

பாடி பேனல்கள் ஒன்றோடு ஒன்று இணைவதுபோல இல்லாமல், சிங்கிள் பீஸாக இருப்பதில் வெஸ்பாவின் தாக்கம் தெரிகிறது. இன்னும் சொல்லப்போனால், காலம் சென்ற வெஸ்பா Sprint ஸ்கூட்டரைப் பின்பற்றியே, முன்பு வெளியான சேட்டக் ரெடி ஆகியிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பர்ஃபாமன்ஸ், ரேஞ்ச்

இதில் இருப்பது, 4kw எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் IP67 ரேட்டிங் கொண்ட Sealed Li-Ion பேட்டரி. இதில் எக்கோ (95 கி.மீ ரேஞ்ச்) மற்றும் ஸ்போர்ட் (85 கிமீ ரேஞ்ச்) என இரு ரைடிங் மோடுகள் இருப்பதுடன், கூடுதலாக ரிவர்ஸ் அசிஸ்ட் வசதியும் உண்டு!

 சில்வர் நிற மாடலில், சிவப்பு நிற வீல் ஸ்ட்ரீப்...
சில்வர் நிற மாடலில், சிவப்பு நிற வீல் ஸ்ட்ரீப்...

இந்த ரேஞ்ச், அராய் டெஸ்ட்டிங்கின்படி வந்தவை இல்லை. புனே நகரச் சாலைகளில் சேட்டக்கை பஜாஜ் டெஸ்ட் செய்து கிடைத்த ரேஞ்ச். ஸ்விங் ஆர்மில் மோட்டார் வைக்கப்பட்டிருக்கிறது. இதோடு 5 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இருக்கும் எனத் தெரிகிறது. ஏனெனில், டிஜிட்டல் மீட்டரில், நியூட்ரல் லைட் தவிர 5-ஸ்டெப் இண்டிகேட்டர்கள் இருந்தன.

சார்ஜிங் வசதி, மெக்கானிக்கல்ஸ்

வீடுகளில் இருக்கும் 5 Ampere ப்ளக் பாயின்ட்டைக் கொண்டே, இந்த ஸ்கூட்டரை சார்ஜ் செய்து கொள்ளலாம். இதில் DC சார்ஜிங் இல்லை என்பதால், பேட்டரியை ஃபுல் சார்ஜ் செய்வதற்கு 5 மணி நேரம் தேவைப்படும். கூடுதலாகக் குறைந்த விலையில் Home Charger தரும் ஐடியாவில் இருக்கிறது பஜாஜ்.

 வட்ட வடிவ நெகட்டிவ் டிஸ்ப்ளே, செம க்ளாஸிக்!
வட்ட வடிவ நெகட்டிவ் டிஸ்ப்ளே, செம க்ளாஸிக்!

இது சேட்டக்கை சார்ஜ் ஏற்றுவதற்குத் தேவைப்படும் மின்சார அளவைத் தெளிவாகக் காட்டிவிடும்! முன்பக்கத்தில் Single Sided Trailing Arm - டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்கத்தில் மோனோஷாக் - டிரம் பிரேக் உள்ளன. இதனுடன் ரீ-ஜெனரேட்டிவ் பிரேக்ஸ் இருப்பது சூப்பர். 12 இன்ச் வீல்களில், MRF நிறுவனத்தின் Zapper K டயர்கள் வருகின்றன. வாகனத்தின் கண்டிஷன், ஓட்டுதல் தன்மையைக் கண்காணிக்கும் வசதி, ஸ்கூட்டரின் இருப்பிடத்தைக் காட்டும் வசதி போன்றவை பிரத்யேகமான ஆப் வாயிலாக வழங்கப்படும்.

முதல் தீர்ப்பு

பஜாஜின் தற்போதைய டீலர்ஷிப்களில்தான் சேட்டக்கும் விற்பனை செய்யப்படும். முதலில் புனே, பின்னர் பெங்களூரு என்றளவில் சேட்டக்கை அறிமுகப்படுத்தும் முடிவில் பஜாஜ் இருக்கிறது. ‘விரைவில் Husqvarna &

Triumph ஆகிய கூட்டணி நிறுவனங்களின் தயாரிப்புகள் வந்து சேரும்’ என சேட்டக்கின் வெளியீட்டு விழாவில் சூசகமாகக் கூறியிருந்தார், பஜாஜ் ஆட்டோவின் நிர்வாக இயக்குனரான ராஜீவ் பஜாஜ்.

 4kw எலெக்ட்ரிக் மோட்டாரிலும் சேட்டக் லோகோ...
4kw எலெக்ட்ரிக் மோட்டாரிலும் சேட்டக் லோகோ...

ப்ரீமியம் தயாரிப்பாக அறியப்படும் சேட்டக், 1-1.5 லட்சத்துக்குள் வருவதற்கான வாய்ப்பிருக்கிறது. இதற்காக உள்நாட்டு உதிரிபாகங்களை அதிகளவில் பயன்படுத்தியிருக்கும் பஜாஜ், சில விலைக் குறைப்பு நடவடிக்கைகளையும் எடுத்திருக்கிறது. ஏத்தர் S450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் TFT டிஸ்ப்ளே - டெலிஸ்கோபிக் ஃபோர்க் - பின்பக்க டிஸ்க் பிரேக் இருக்கும் நிலையில், சேட்டக்கில் அது இரண்டுமே மிஸ்ஸிங். தவிர இங்கே CBS/ABS ஆகியவற்றில் எது இருக்கும் என்பதில் தெளிவில்லை.

கச்சிதமான விலை - பிராக்டிக்கலான ரேஞ்ச் - போதுமான வசதிகள் - சிறப்பான டிசைன் மற்றும் தரம் என்ற பேக்கேஜிங்கில் ஒரு எலெக்ட்ரிக் டூ-வீலர் வரும்போது, எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கும்.

சேட்டக் ஹமாரா பஜாஜ் அடுத்த பிறவி!

ஏத்தர் விஷயத்தில் இது ஓரளவுக்கு நடந்தது என்றாலும், ஏத்தர் இன்னும் இந்தியா முழுக்க விற்பனை ஆகத் தொடங்கவில்லை. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, சேட்டக் ரேஞ்ச்சில் கொஞ்சம் பின்தங்கினாலும், டிசைன் - தரம் - வசதிகள் ஆகியவற்றில் கவனம் ஈர்க்கிறது.

டீலர் நெட்வொர்க், சர்வீஸ், உதிரி பாகங்கள் குறித்துப் பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டாம் என்றாலும், பர்ஃபாமன்ஸ் குறித்த விவரங்கள் இன்னும் வரவில்லை. மேலும், இது தமிழகத்துக்கு எப்போது வரும் என்ற தகவல் வரவில்லை.

இந்தியாவைச் சேர்ந்த ஒரு டூ-வீலர் தயாரிப்பு நிறுவனம் நேரடியாக EV தயாரிப்பில் இறங்கியிருப்பதால், டிவிஎஸ் - ஹீரோ - மஹிந்திரா - ராயல் என்ஃபீல்டு ஆகியோரும் இந்த கோதாவில் குதிப்பார்கள் என நம்பலாம். இது ஒருவேளை சாத்தியமானால், பாரத பூமியின் மாசு குறையலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு