Published:Updated:

தூம் பைக்... 3- வது ஜென் ஹயபூஸா!

சுஸூகி ஹயபூஸா
பிரீமியம் ஸ்டோரி
சுஸூகி ஹயபூஸா

ஃபர்ஸ்ட் லுக் ரிப்போர்ட்: 2021 சுஸூகி ஹயபூஸா

தூம் பைக்... 3- வது ஜென் ஹயபூஸா!

ஃபர்ஸ்ட் லுக் ரிப்போர்ட்: 2021 சுஸூகி ஹயபூஸா

Published:Updated:
சுஸூகி ஹயபூஸா
பிரீமியம் ஸ்டோரி
சுஸூகி ஹயபூஸா
வேகப் போட்டிக்குப் பெயர்பெற்ற டூ-வீலர் Drag Racing-ல் முடிசூடா மன்னனாக, இந்த ஜப்பானியத் தயாரிப்பு திகழ்ந்திருக்கிறது. எனவே ‘எப்போது வரும்? எப்படி இருக்கும்?’ என, இந்த சூப்பர் பைக்கின் அடுத்த தலைமுறை மாடல் மீதான எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் இருந்தது. அது, ஹயபூஸா. டர்போ/சூப்பர் சார்ஜர் தொழில்நுட்பம் - பெரிய இன்ஜின் - குறைவான எடை - DCT கியர்பாக்ஸ் என நிலவிய கருத்துகளைப் பொய்யாக்கும் அளவுக்கு, மூன்றாம் தலைமுறை ஹயபூஸாவைக் களமிறக்கியுள்ளது சுஸூகி. இந்தியாவில் ‘Dhoom Bike’ என அறியப்படும் இது, சூப்பர் பைக் ஆர்வலர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யுமா? இந்தக் கேள்வி எழுவதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. கடந்த மாடலின் விற்பனை, சர்வதேச சந்தைகளில் நிறுத்தப்பட்ட பிறகும், நம் நாட்டில் தொடர்கிறது. (உபயம்: CKD உற்பத்தி). உலகளவில் கவாஸாகியின் ZX-14R பைக்குடன் போட்டியிடும் சுஸூகியின் ஹயபூஸா எப்படியிருக்கிறது?
தூம் பைக்... 3- வது ஜென் ஹயபூஸா!

டிசைன் மற்றும் சிறப்பம்சங்கள்

சஸூகி வெளியிட்ட டீசர் வீடியோ மற்றும் இணைய உலகில் பரவிய படங்களைப் பார்த்தபோதே, புதிய ஹயபூஸா இப்படித்தான் இருக்கும் என ஓரளவுக்குத் தெரிந்துவிட்டது. முந்தைய தலைமுறை மாடல்களை நினைவுபடுத்தும்படியே, 3 கலர்களில் வரும் இந்த சூப்பர் பைக்கின் தோற்றம் இருக்கிறது. இதன் புகழ்பெற்ற முட்டை வடிவ Silhouette அப்படியே தொடர்ந்தாலும், ஆங்காங்கே காலத்துக்கேற்ற மாற்றமும் எதிரொலிக்கிறது. LED ஹெட்லைட், கட்டுமஸ்தான ஃபேரிங், இரட்டை எக்ஸாஸ்ட், டெயில் செக்ஷன் ஆகியவை அதற்கான உதாரணம். ஹயபூஸாவின் LED டெயில் லைட்டில், லேசாக டுகாட்டியின் தாக்கம் தெரிகிறது. மேலும் பின்பக்க கவுல் மற்றும் ரியர் வியூ மிரர்கள், முன்பைவிட ஏரோடைனமிக்காகக் காட்சியளிக்கின்றன. பாடி பேனல்களில் இருக்கும் கான்ட்ராஸ்ட் ஃபினிஷ் & பிரத்யேகமான கிராஃபிக்ஸ் நைஸ் டச்!

தூம் பைக்... 3- வது ஜென் ஹயபூஸா!
தூம் பைக்... 3- வது ஜென் ஹயபூஸா!

போர்ஷே கார்களின் ஸ்பீடோமீட்டர் செட்-அப் போலவே, இந்த சுஸூகி தயாரிப்பில் இருந்த மீட்டர் பேனல், அதன் அடையாளங்களில் ஒன்று. உலகமே டிஜிட்டல்மயமாகிக் கொண்டிருக்கும் சூழலில், இந்த சூப்பர் பைக்கின் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் இன்றுமே அனலாக்கில் இருப்பது, பார்வைக்கு அழகாகவே உள்ளது. Lean Angle, முன்/பின் பிரேக் ப்ரெஷர், த்ராட்டில் பொசிஷன், Rate of Acceleration போன்ற தகவல்கள், இரட்டை டயல்களுக்கு நடுவே உள்ள TFT டிஸ்ப்ளேவில் தெளிவாகத் தெரிகின்றன. மற்றபடி இது லேட்டஸ்ட் வெர்ஷன் என்பதை, ஹயபூஸாவின் எலெக்ட்ரானிக்ஸ் பேக்கேஜ் உணர்த்திவிடுகிறது. 6 Axis IMU, 10 லெவல்களைக் கொண்ட டிராக்ஷன் கன்ட்ரோல் & Anti Wheelie Control, 3 லெவல்களைக் கொண்ட இன்ஜின் பிரேக் கன்ட்ரோல், 3 பவர் மோடுகள், Launch Control, க்ரூஸ் கன்ட்ரோல், கார்னரிங் ஏபிஎஸ், Hill Hold Control, ரைடு பை வயர் எனப் பட்டியல் நீள்கிறது. ஸ்விட்ச்கள் மற்றும் 2 பீஸ் ஹேண்டில்பார்கள், முன்பைவிட ஃப்ரெஷ்ஷாக உள்ளன.

அனலாக் மீட்டர்கள், போர்ஷேவை நினைவுபடுத்துகின்றன.
அனலாக் மீட்டர்கள், போர்ஷேவை நினைவுபடுத்துகின்றன.
1,340 சிசி, 4 சிலிண்டர் இன்ஜினில் பவர் 190bhp, டார்க் 15kgm.
1,340 சிசி, 4 சிலிண்டர் இன்ஜினில் பவர் 190bhp, டார்க் 15kgm.

இன்ஜின் - கியர்பாக்ஸ்

ஹயபூஸாவின் டிசைனில் செய்த வித்தையையே, பைக்கின் இன்ஜினிலும் நிகழ்த்தியிருக்கிறது சுஸூகி. எனவே அதே 1,340சிசி லிக்விட் கூல்டு, இன்லைன் 4 சிலிண்டர் இன்ஜின் - 6 ஸ்பீடு கியர்பாக்ஸ்தான் இதிலும் உண்டு. ஆனால் இன்ஜின் கேஸைத் தாண்டி, இன்ஜினுக்குள்ளே இருக்கும் பாகங்கள் அனைத்துமே புதிது. எடை குறைவான பிஸ்டன்கள், புதிய கனெக்ட்டிங் ராடுகள், மேம்படுத்தப்பட்ட ஃப்யூல் இன்ஜெக்டர்கள் அதனை உறுதிப்படுத்துகின்றன. Euro-5 விதிகளுக்கேற்ப டியூன் செய்யப்பட்டிருக்கும் இந்த இன்ஜின், முன்பிருந்த வெர்ஷனைவிடக் கொஞ்சம் குறைவான பவர் - டார்க்கைத் தருவது (190bhp & 15kgm), சிலருக்கு ஏமாற்றத்தைத் தரக்கூடும். ஆனால் மிட்ரேஞ்ச் ஆர்பிஎம்மில் பவர் டெலிவரி அதிரடியாக இருக்கும் எனக் கூறியிருக்கும் சுஸூகி, இதுதான் இதுவரை தயாரிக்கப்பட்ட ஹயபூஸாக்களிலேயே வேகமானது எனத் தெரிவித்துள்ளது. டீசர் வீடியோவில் இந்த சூப்பர் பைக் 290கிமீ வேகத்தில் சென்றதைப் பலரும் பார்த்திருப்பீர்கள். அதன் எக்ஸாஸ்ட் சத்தம், நிச்சயம் ரசிக்கும்படியே இருக்கக் கூடும்.

பின் பக்க கவுலில் ஏரோ டைனமிக் இன்னும் ஜாஸ்தி.
பின் பக்க கவுலில் ஏரோ டைனமிக் இன்னும் ஜாஸ்தி.
டெயில் லைட்களில் டுகாட்டியின் தாக்கம் தெரிகிறது.
டெயில் லைட்களில் டுகாட்டியின் தாக்கம் தெரிகிறது.
தூம் பைக்... 3- வது ஜென் ஹயபூஸா!

மெக்கானிக்கல் பாகங்கள்

இரண்டாம் தலைமுறை ஹயபூஸாவில் இருந்த அதே Twin Spar Aluminium Frameதான், மூன்றாம் தலைமுறை மாடலிலும் இடம்பெற்றுள்ளது. எனவே இதன் 1,480மிமீ வீல்பேஸ், ஒரேமாதிரி இருப்பதில் வியப்பேதும் இல்லை. ஆனால் 800மிமீ சீட் உயரம் மற்றும் 120மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ், முன்பைவிடக் குறைவுதான். தவிர மாற்றியமைக்கப்பட்ட எக்ஸாஸ்ட் அமைப்பு காரணமாக, பைக்கின் எடை 2 கிலோ குறைந்திருக்கிறது (264 கிலோ). Showa நிறுவனத்தின் அதே சஸ்பென்ஷன் செட்-அப்தான் என்றாலும், அதன் Internal பாகங்கள் புதிது எனத் தகவல் வந்திருக்கிறது. சமீபத்திய Liter Class பைக்குகளில் காணப்பட்ட Brembo Stylema Radial Calipers, ஹயபூஸாவில் பயன்படுத்தப்பட்டுள்ளது (முன்: 320மிமீ டூயல் டிஸ்க்). பிரிட்ஜ்ஸ்டோன் நிறுவனத்துடன் இணைந்து, இந்த பைக்கிலுள்ள Battlax Hypersport S22 ரேடியல் டயர்களை ஸ்பெஷலாகத் தயாரித்துள்ளது சுஸூகி. எனவே, நிலைத்தன்மை மற்றும் பிரேக்கிங்கில் முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்.

தூம் பைக்... 3- வது ஜென் ஹயபூஸா!
தூம் பைக்... 3- வது ஜென் ஹயபூஸா!
தூம் பைக்... 3- வது ஜென் ஹயபூஸா!

முதல் தீர்ப்பு

உலகின் வேகமான பைக் என்பதைத் தாண்டி, இந்தியாவில் ஹயபூஸா அடைந்த வெற்றிக்குக் காரணம் அதன் விலைதான் (13.75 லட்ச ரூபாய், எக்ஸ்-ஷோரூம்). இது பல Liter Class பைக்குகளைவிடக் குறைவு. தற்போது இந்த சூப்பர்பைக்கில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களை வைத்துப் பார்க்கும்போது, இதன் விலை சுமார் 17-18 லட்ச ரூபாய் ஆக இருக்கலாம். நம் நாட்டுக்கு CKD முறையில் இது இறக்குமதி செய்யப்பட்டு, கூர்கானில் அமைந்திருக்கும் இந்த நிறுவனத்தின் தொழிற்சாலையில் பைக் அசெம்ப்ளி பணிகள் நடைபெறலாம். 2021-ம் ஆண்டின் இரண்டாம் பாதியில், ஹயபூஸா அறிமுகம் ஆவதற்கான சாத்தியங்கள் அதிகம். சுஸூகியின் டீலர்கள் அதற்கு ‘I am Waiting’ பாணியில் உள்ளார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism