Published:Updated:

வருது ஹீரோவின் குட்டி எக்ஸ்ட்ரீம்!

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R
பிரீமியம் ஸ்டோரி
News
ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R

ஃபர்ஸ்ட் லுக் ரிப்போர்ட் : ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R

ரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான எக்ஸ்ட்ரீம் 200R, விலை குறைவான & ப்ராக்டிக்கலான 200சிசி பைக். இருப்பினும் வசதிகள் மற்றும் பர்ஃபாமன்ஸில் பின்தங்கியதால், இதுவும் காலப்போக்கில் வந்த சுவடு தெரியாமல் இருக்கிறது. BS-6 விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்ட நிலையில், போட்டி நிறுவனங்கள் பலவும் தமது 150-160 சிசி பைக்குகளில் கணிசமான மாறுதலைச் செய்திருக்கின்றன. எனவே இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, அந்த செக்மென்ட்டில் எக்ஸ்ட்ரீம் 160R வழியே கம்பேக் கொடுத்திருக்கிறது ஹீரோ. இந்த பைக்கினால், தான் ஆரம்பித்த பிரிவில் அந்த நிறுவனம் மீண்டும் வலுவாகக் காலூன்றுவதற்கான சமிக்ஞைகள் தெரிகின்றன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

டிசைன் மற்றும் சிறப்பம்சங்கள்

கடந்தாண்டு மிலனில் நடைபெற்ற EICMA நிகழ்வில், எக்ஸ்ட்ரீம் 1R கான்செப்ட் காட்சிபடுத்தப்பட்டது. இதைப் பின்பற்றியே எக்ஸ்ட்ரீம் 160R வடிவமைக்கப்பட்டிருக்கிறது. வழக்கமான டிசைன்களுக்கு அறியப்பட்ட ஹீரோவிடமிருந்து, நிச்சயமாக இந்தளவுக்கு ஒரு ஷார்ப்பான டிசைனை யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்! எக்ஸ்ட்ரீமின் 200சிசி வெர்ஷனுடைய லுக்கில் ஏகத்துக்கும் அடக்கி வாசித்திருந்த இந்த நிறுவனம், 160சிசி மாடலின் தோற்றத்தில் எகிறி அடித்துவிட்டது.

விலை: சுமார் ரூ:1.25 லட்சம் (சென்னை ஆன்ரோடு)
விலை: சுமார் ரூ:1.25 லட்சம் (சென்னை ஆன்ரோடு)

கான்செப்ட்டில் இருந்து ரோடு பைக்காக மாறியிருப்பதால், பார்வைக்குக் கவர்ச்சியாக இருக்கும்படியாக இருந்த அம்சங்கள் பலவும் இங்கே மிஸ்ஸிங். இன்ஜின் Belly Pan, USD ஃபோர்க், ஸ்பாய்லர் அமைப்பு & கேமராவுடன் கூடிய டெயில் செக்‌ஷன், பைரலியின் Diablo Rosso Slick டயர்கள், ரேஸ் எக்ஸாஸ்ட், ஆயில் கூலர், அட்ஜஸ்டபிள் லீவர்கள் அதற்கான உதாரணம். இருப்பினும் LED ஹெட்லைட் - 12 லிட்டர் பெட்ரோல் டேங்க் - பக்கவாட்டுப் பகுதி அப்படியே கான்செப்ட் பைக் போலவே அமைந்திருக்கின்றன. அங்கிருப்பதைப்போல இங்கும் பெட்டல் டிஸ்க் பிரேக்ஸ் இருப்பது நைஸ். முதல் தலைமுறை ஜிக்ஸர்/FZ போன்ற உணர்வு எழுந்தாலும், கட்டுமஸ்தான ஸ்ட்ரீட் பைக்காக இதன் லுக் பக்கா!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் இதற்கு வழங்கப்பட்டிருக்கும் 3 டூயல் டோன் கலர் ஆப்ஷன்களும், அதன் ஸ்போர்ட்டியான டிசைனுக்கு வலுச்சேர்க்கும்படியே இருக்கின்றன. பைக்கில் மிகக் குறைவான அளவில் இருக்கும் ஸ்டிக்கரிங், அதற்கு ப்ரீமியம் ஃபீலைத் தருகிறது. 150-160சிசி செக்மென்ட்டிலேயே முதன்முறையாக, முழுக்க LED லைட்டிங் & சைடு ஸ்டாண்ட் இன்ஜின் கட் ஆஃப் உடன் கூடிய தயாரிப்பாக எக்ஸ்ட்ரீம் 160R தனித்து நிற்கிறது. எக்ஸாஸ்ட் பைப்பின் டிசைனும் க்யூட் ரகம் என்பதுடன், டெயில் செக்‌ஷனிலேயே கிராப் ரெயில் அழகாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது. ஆனால் இது எல்லாருக்கும் பயன்படுத்த வாட்டமாக இருக்குமா என்பது கேள்விக்குறியே!

1. முதன் முறையாக முழுக்க முழுக்க LED லைட்டிங் யூனிட்...  2. 163சிசி இன்ஜின், 15bhp பவர், 1.4kgm டார்க்கை வெளிப்படுத்தும்.  3.நெகட்டிவ் டிஸ்ப்ளே ஸ்டைலில் LCD இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் செம ஸ்டைல். ஆனால், கியர் இண்டிகேட்டர் இல்லை.
1. முதன் முறையாக முழுக்க முழுக்க LED லைட்டிங் யூனிட்... 2. 163சிசி இன்ஜின், 15bhp பவர், 1.4kgm டார்க்கை வெளிப்படுத்தும். 3.நெகட்டிவ் டிஸ்ப்ளே ஸ்டைலில் LCD இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் செம ஸ்டைல். ஆனால், கியர் இண்டிகேட்டர் இல்லை.

H வடிவ LED டெயில் லைட், Smoked ஃபினிஷில் இருப்பது செம. சிங்கிள் பீஸ் சீட்தான் என்றாலும், அதில் பில்லியன் பகுதி கொஞ்சம் உயரத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. புதிய ஸ்விட்ச் கியரில் இன்ஜின் கில் ஸ்விட்ச் மற்றும் Hazard இண்டிகேட்டர் வசதி இருப்பது வரவேற்கத்தக்கது. நெகட்டிவ் பாணியில் அமைந்திருக்கும் LCD மீட்டரில் பல தகவல்கள் தெரிந்தாலும், கியர் இண்டிகேட்டர் இல்லாதது மைனஸ். மேலும், இது வெயிலில் தெளிவாக இருக்குமா என்ற சந்தேகமும் எழவே செய்கிறது. ரியர் வியூ மிரர்கள் அகலமாக இருப்பதுடன், ஸ்ப்ளிட் ஸ்போக் டிசைனுடன் இருக்கும் 17 இன்ச் அலாய் வீல்களும் சூப்பர்.

இன்ஜின் பெர்ஃபாமன்ஸ் மற்றும் ஓட்டுதல் அனுபவம்

டிசைனில் அதிரடி காட்டிய ஹீரோ, இன்ஜின் விஷயத்தில் வழக்கமான ஃபார்முலாவுக்கே திரும்பிவிட்டது. இதிலிருக்கும் 163சிசி இன்ஜின் - 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணி, 2 வால்வ் - ஏர் கூலிங் - கிக் லீவர் ஆகிய அமைப்புடன் இருப்பதே அதற்கான உதாரணம். 14 சென்சார்களை உள்ளடக்கிய Programmed ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் செட்-அப்பைக் கொண்டிருக்கும் இந்த SOHC இன்ஜின், 15bhp பவர் - 1.4kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது.

பல்ஸர் 160NS மற்றும் அப்பாச்சி RTR 160 4V ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக, இன்ஜின் செயல்திறனில் மூன்றாவது இடத்தை எக்ஸ்ட்ரீம் 160R பிடிக்கிறது. இது உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தாவிட்டாலும், எடை விஷயத்தில் இந்த பைக் வியப்பை ஏற்படுத்திவிட்டது! ஆம், முறையே 138.5 கிலோ (டிரம் பிரேக்) - 139.5 கிலோ (டிஸ்க் பிரேக்) என்றளவில் உள்ள இந்த பைக், FZ-S V3.0 தவிர இதர 150-160சிசி போட்டியாளர்களைவிடக் குறைவான எடையில் இருக்கிறது. இதற்கு எக்ஸ்ட்ரீம் 160R-ன் டியூபுலர் டைமண்ட் ஃபிரேம் மற்றும் எடை குறைவான அலாய் வீல்கள் உறுதுணையாக இருக்கின்றன. இதனால் எதிர்பார்த்தபடியே Power To Weight ரேஷியோவில் அசத்தும் இந்த பைக் (109bhp/Tonne), 0 - 60 கிமீ வேகத்தை வெறும் 4.7 விநாடிகளில் எட்டிப் பிடிக்கும் என ஹீரோ கூறியுள்ளது.

வருது ஹீரோவின் குட்டி எக்ஸ்ட்ரீம்!

மேலும் ஜிக்ஸர் மற்றும் FZ ஆகியவற்றைத் தொடர்ந்து, எக்ஸ்ட்ரீம் 160R பைக்கின் பின்பக்கத்திலும் MRF ரேடியல் டியூப்லெஸ் டயர் இடம்பெற்றிருக்கிறது (இந்த பைக்குகளின் முன்பக்க டயர் ஒரே சைஸ்தான் - 100/80-17).

இருப்பினும் இது அளவில் அவற்றில் இருப்பதைவிட மெலிதானதுதான் (ஜிக்ஸர்/FZ - 140/60-R17, 160R - 130/70-R17). எக்ஸ்ட்ரீம் 200R பைக்கில் இருந்த அதே அளவிலான டயர்கள்தான் இவை என்பதுடன், சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உடனான Nissin டிஸ்க் பிரேக்கின் சைஸும் ஒன்றுதான் (முன்: 276மிமீ, பின்: 220மிமீ). குறைவான ஆரம்ப விலைக்காக, பின்பக்க 130மிமீ டிரம் பிரேக்குடன் கூடிய வெர்ஷனும் கிடைக்கப் பெறுகிறது.

167மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ், நம் ஊரின் கரடுமுரடான சாலைகளில் பைக்கின் அடிப்பகுதி தரைதட்டாமல் இருப்பதற்கு வழிவகை செய்கிறது. குறைந்த சீட் உயரமான 790மிமீ, ரைடர்களுக்கு வசதியான சீட்டிங்கைத் தரலாம். சிறிய 1,327மிமீ வீல்பேஸ், இந்த லைட் வெயிட், பைக்கின் கையாளுமைக்கு உதவக்கூடும். மற்றபடி இந்த எக்ஸ்ட்ரீம் 160R பைக்கில், Showa நிறுவனத்தின் 37மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க் - 7 விதமாக அட்ஜஸ்ட் செய்யக் கூடிய மோனோஷாக் மற்றும் அலாய் புட்ஃபெக்ஸ் - சிங்கிள் பீஸ் ஹேண்டில்பாரின் பொசிஷனிங் ஆகியவை, சொகுசான அதே சமயம் ஸ்போர்ட்டியான ஓட்டுதலைத் தரும்படி ட்யூன் செய்யப்பட்டிருக்கலாம்.

எக்ஸ்ட்ரீம் 160R பெரும்பாலும் நகர்ப்புறங்களில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் என்பதால், ஹீரோவின் புதிய பேஸன் ப்ரோ மற்றும் கிளாமர் ஆகிய பைக்குகளில் இடம்பெற்ற Auto Sail தொழில்நுட்பம் இங்கும் கொடுக்கப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

முதல் தீர்ப்பு

2 வேரியன்ட்கள் (பின்பக்க டிரம் பிரேக் & பின்பக்க டிஸ்க் பிரேக்), 3 டூயல் டோன் கலர் ஆப்ஷன்கள் (வெள்ளை - கிரே, நீலம் - கிரே, சிவப்பு - கிரே) ஆகியவற்றுடன் வந்திருக்கும் எக்ஸ்ட்ரீம் 160R பைக்கின் சென்னை எக்ஸ்-ஷோரூம் விலைகள், முறையே 1.03 லட்சம் மற்றும் 1.06 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

போட்டி 150-160 சிசி பைக்குகளைவிட இதன் விலை சில ஆயிரங்கள் குறைவு என்பது நல்ல விஷயம்தான். இந்த 160சிசி பைக்கின் டிசைனிலேயே மொத்த வித்தையையும் ஹீரோ பயன்படுத்தி விட்டதால், இதன் 200சிசி BS-6 வெர்ஷனில் இந்த நிறுவனம் என்ன சர்ப்ரைஸ் வைத்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள ஆர்வமாகவே இருக்கிறோம்.

வருது ஹீரோவின் குட்டி எக்ஸ்ட்ரீம்!

மேலும் போட்டி பைக்குகளின் BS-6 வெர்ஷன்கள் அனைத்தும் முன்பைவிடக் குறைவான பவர் மற்றும் அதிக எடையுடன் வரும்போது, பைக் ஆர்வலர்களுக்கு ஏற்றபடியான கச்சிதமான பேக்கேஜிங்கில் களமிறங்கியிருக்கிறது எக்ஸ்ட்ரீம் 160R. ஹீரோ வேர்ல்டு 2020 நிகழ்வில் முதன்முறையாகக் காட்சிக்கு வைக்கப்பட்ட இந்த ஸ்ட்ரீட் பைக், தற்போது இந்த நிறுவனத்தின் டீலர்களை வந்தடையத் தொடங்கிவிட்டது. டெக்னிக்கல் விவரங்களைப் பார்க்கும்போதே, பெரிதாகக் குறைகள் தெரியாதபடி பைக்கைத் தயாரித்ததிலேயே, ஹீரோ வெற்றி பெற்றுவிட்டதாகவே தோன்றுகிறது.

எக்ஸ்ட்ரீம் 160R பைக்கை ஓட்டிப் பார்த்து, அதன் ஒட்டுமொத்தத் தரம் - பெர்ஃபாமன்ஸ் - ஓட்டுதல் ஆகியவற்றில் இருக்கும் சாதக பாதகங்களை அறிந்து கொள்ள வி ஆர் வெயிட்டிங்!