Published:Updated:

முன்பைவிட செமயா... வந்துடுச்சு BS-6 கிராஸியா!

ஹோண்டா கிராஸியா 125
பிரீமியம் ஸ்டோரி
News
ஹோண்டா கிராஸியா 125

ஃபர்ஸ்ட் லுக் ரிப்போர்ட்: ஹோண்டா கிராஸியா 125

110 சிசி ஸ்கூட்டர் செக்மென்ட்டில் ஹோண்டாவுக்கு டியோ எப்படியோ, 125சிசி ஸ்கூட்டர் செக்மென்ட்டில் கிராஸியா அப்படி. கடந்த 2017-ம் ஆண்டு வெளியான இந்த ஸ்கூட்டருக்கு, அந்த நிறுவனம் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவே செய்தது. ஆனால் என்டார்க்கின் அறிமுகத்துக்குப் பிறகு, அந்த நிலைமை கொஞ்சம் மாறிப்போனதைப் பார்க்க முடிந்தது. மேலும் 125சிசி ஃபேமிலி ஸ்கூட்டரான ஆக்ஸஸின் எழுச்சி, கிராஸியாவின் மாதாந்திர விற்பனையில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. எனவே, இந்த மாடலின் BS-6 அப்டேட் வெர்ஷனைக் களமிறக்குவதற்குப் போதுமான நேரத்தை எடுத்துக்கொண்ட ஹோண்டா (உபயம்: கொரோனா), அதில் குறிப்பிடத்தக்க மாறுதல்களைச் செய்திருக்கிறது. எக்ஸ் ஷோரூம் விலை முறையே 77,126 ரூபாய் (டிரம் பிரேக்) & 84,192 ரூபாய் (டிஸ்க் பிரேக்) எனும் இரு வேரியன்ட்கள் - 4 கலர்களில் வந்திருக்கும் BS-6 கிராஸியா (டிரம் - அலாய் வேரியன்ட் கிடையாது), புதிய உத்வேகத்துடன் தனது போட்டியாளர்களை எதிர்கொள்ள வந்திருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

டிசைன் மற்றும் சிறப்பம்சங்கள்

ஏற்கெனவே டூயல் டோன் ஃபினிஷில் ஷார்ப்பான டிசைனுடன் இருந்த கிராஸியா, தற்போது இன்னும் ஸ்போர்ட்டியாக ஆகிவிட்டது. டியோ போலவே, இங்கும் ஹேண்டில்பாரில் ஸ்ப்ளிட் LED DRL இடம்பெற்றுள்ளது. இதற்கு மேலே இருக்கும் வைஸர், முன்பைவிடப் பெரிதாகியிருக்கிறது. இதன் இறுபுறமும் இருக்கக்கூடிய புதிய ரியர் வியூ மிரர்கள், அளவில் கொஞ்சம் வளர்ந்திருக்கின்றன. மற்றபடி Apron & பக்கவாட்டுப் பகுதியின் வடிவமைப்பு இன்னும் Edgy ஆக மாறிவிட்டது. ஒருவழியாக சீட்டுக்கு அடியே இருந்து, பெட்ரோல் டேங்க் மூடி வெளியே வந்துவிட்டது. முற்றிலும் புதிதாகக் காட்சியளிக்கும் டெயில் லைட், லேசாக என்டார்க்கை நினைவுபடுத்துகிறது (மேட் மஞ்சள் நிறமும்தான்). எக்ஸாஸ்ட்டுக்கும் டூயல் டோன் டச் உண்டு.

முன்பைவிட செமயா... வந்துடுச்சு BS-6 கிராஸியா!

Negative LCD பாணியில் அமைந்திருக்கும் ஃபுல் டிஜிட்டல் மீட்டரின் Layout மொத்தமாக மாறியிருக்கிறது. ஆரஞ்ச் பேக்லிட்டுக்குப் பதில் நீலநிற பேக்லிட் இருப்பது அழகு. சிறிதாகியிருக்கும் ஆர்பிஎம் மீட்டர், பார்வைக்குத் தெளிவாக இல்லை. ஏற்கெனவே இருந்த Distance To Empty, ஆவரேஜ் & ரியல் டைம் மைலேஜ், 3 Step - Eco இண்டிகேட்டர், கடிகாரம் ஆகியவற்றுடன் சைடு ஸ்டாண்ட் வார்னிங் & இன்ஜின் கட் ஆஃப் ஸ்விட்ச், இன்ஜின் வார்னிங் லைட் புதிதாகச் சேர்ந்திருக்கின்றன. டிரம் மாடலில் சிவப்புநிற இன்ஜின் கில் ஸ்விட்ச்சும், டிஸ்க் மாடலில் ஸ்டார்ட்-ஸ்டாப் சிஸ்டமும் இருப்பது ப்ளஸ். பாஸ் லைட்டும் உள்ளேன் ஐயா என்கிறது. பல அம்சங்களைக் கொண்ட Key Slot-க்கு இடதுபுறத்தில் உள்ள க்ளோவ் பாக்ஸ், முன்பிருந்ததைவிடத் தரமாக இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இன்ஜின் பர்ஃபாமன்ஸ் மற்றும்

ஓட்டுதல் அனுபவம்

ACG சைலன்ட் ஸ்டார்ட், eSP, HET, PGM-Fi ஆகிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய 124சிசி Long-Stroke இன்ஜின், 8.14bhp பவர் & 1.03kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது. இதே இன்ஜினையும் மெட்டல் பாடியையும் கொண்ட ஆக்டிவா 125-யைவிட இவை குறைவு, என்றாலும், அதைவிட ஃபைபர் ப்ளாஸ்டிக் பாடி கொண்ட கிராஸியாவின் எடை 3 கிலோ குறைவு என்பது கவனிக்கத்தக்கது (108 கிலோ). மேலும் யமஹாவின் 125சிசி தயாரிப்புகளுக்கு இணையான செயல்திறன்தான் இங்கும் என்றாலும், இந்த ஹோண்டா ஸ்கூட்டர் அதைவிட 9 கிலோ அதிக எடை என்பதால், இதன் பெர்ஃபாமன்ஸ் BS-4 மாடலுக்கு இணையாகத்தான் இருக்கக்கூடும்.

 1. பின்பக்கம் ஸ்டைல்தான்; ஆனால், LED லைட்ஸ் கொடுத்திருக்கலாம். 2.  நெகட்டிவ் LCD டிஸ்ப்ளே மீட்டரில் இப்போது நீல நிற பேக்லிட்...  3.  சூப்பர், கிராஸியாவில் சீட்டுக்கு அடியில் இருந்த பெட்ரோல் டேங்க் இப்போது வெளியே வந்துவிட்டது.   4. டிஸ்க் பிரேக் ஆப்ஷனும் உண்டு.   5. க்ளோவ் பாக்ஸ், முன்பை விட தரம் ஓகே!
1. பின்பக்கம் ஸ்டைல்தான்; ஆனால், LED லைட்ஸ் கொடுத்திருக்கலாம். 2. நெகட்டிவ் LCD டிஸ்ப்ளே மீட்டரில் இப்போது நீல நிற பேக்லிட்... 3. சூப்பர், கிராஸியாவில் சீட்டுக்கு அடியில் இருந்த பெட்ரோல் டேங்க் இப்போது வெளியே வந்துவிட்டது. 4. டிஸ்க் பிரேக் ஆப்ஷனும் உண்டு. 5. க்ளோவ் பாக்ஸ், முன்பை விட தரம் ஓகே!

மற்றபடி அண்டர்போன் ஃப்ரேம் - டெலிஸ்கோபிக் ஃபோர்க் - 190மிமீ டிஸ்க்/130மிமீ டிரம் CBS பிரேக் - 12/10 இன்ச் டியூப்லெஸ் வீல்கள் - V-Matic கியர்பாக்ஸ் - 5.3 லிட்டர் பெட்ரோல் டேங்க் - 5Ah பேட்டரி என மெக்கானிக்கல் அம்சங்கள் அதேதான் என்பதால், ஸ்கூட்டரின் ஓட்டுதலில் எந்த ஆச்சர்யத்தையும் எதிர்பார்க்க முடியாது. ஆனால் முன்பைவிட 16 மிமீ அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் (171 மிமீ), 3 Step அட்ஜஸ்டபிள் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர், அதிக ஸ்டோரேஜ் ஸ்பேஸ் என மாறுதல்களும் இருக்கின்றன. ஆனால் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, பின்பக்கத்தில் 12 இன்ச் வீலும் LED டெயில் லைட்டும் கிராஸியாவில் சேர்ந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

முன்பைவிட செமயா... வந்துடுச்சு BS-6 கிராஸியா!

முதல் தீர்ப்பு

கிராஸியாவின் BS-4 வெர்ஷனைவிட, உத்தேசமாக 12-15 ஆயிரம் ரூபாய் அதிக விலையில் அதன் BS-6 வெர்ஷன் களமிறங்கியுள்ளது. அதனை நியாயப்படுத்தும் வகையில் புதிய கலர் ஆப்ஷன்கள், கூடுதல் வசதிகள், அதிக வாரன்ட்டி (3+3 வருடங்கள்) ஆகிய அம்சங்கள் இதில் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் என்டார்க், SR125 ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது, இது இன்ஜினின் பவர்-டார்க்கில் பின்தங்கியிருப்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். மேலும் கிராஸியாவின் டிஸ்க் பிரேக் வேரியன்ட்டின் விலை, கொஞ்சம் காஸ்ட்லி என்பதை நினைவில் கொள்ளவும் (கிட்டத்தட்ட பர்க்மேன் ஸ்ட்ரீட்க்குச் சமம்). ஆனால் ஸ்போர்ட்டியான டிசைனைக் கொண்டிருந்தாலும், பிராக்டிக்காலிட்டி மற்றும் நம்பகத்தன்மை விஷயத்தில் இது ஒரு வீட்டில் இருக்கும் அனைவருக்குமான தயாரிப்பாகவே இருக்கிறது. எனவே இந்த காரணத்தாலேயே, போட்டியாளர்களுக்குச் சமமான வரவேற்பை இந்த ஹோண்டா ஸ்கூட்டர் பெறும் எனத் தோன்றுகிறது.