கார்ஸ்
ஆசிரியர் பக்கம்
பைக்ஸ்
Published:Updated:

ஹார்னெட்... அங்கிள்ஸ் பைக் இல்லை!

ஹோண்டா ஹார்னெட் 2.0
பிரீமியம் ஸ்டோரி
News
ஹோண்டா ஹார்னெட் 2.0

ஃபர்ஸ்ட் லுக் ரிப்போர்ட்: ஹோண்டா ஹார்னெட் 2.0

ஹார்னெட்... யூனிகார்ன், டேஸ்லர், ட்ரிகர் என 150சிசி செக்மென்ட்டில் அங்கிள்ஸ் பைக்குகளால் அறியப்பட்ட ஹோண்டாவுக்கு, அந்தப் பிரிவில் ஸ்போர்ட்டியான அடையாளத்தைத் தந்த பைக் இதுதான்.

கடந்த 2015-ம் ஆண்டின் இறுதியில் அறிமுகமான இந்த 162.7சிசி பைக், ஏப்ரல் 2017-ம் ஆண்டு அமலுக்கு வந்த BS-4 விதிகளுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டிருந்தது. அதேபோல 150சிசிக்கு மேற்பட்ட பைக்குகளில் ஏபிஎஸ் நடைமுறைக்கு வருவதற்கு முன்பாகவே, தனது ஸ்கூட்டர்களில் இருந்த CBS அமைப்பை ஹார்னெட்டில் வழங்கியிருந்தது ஹோண்டா. இப்படி காலத்தைத் தாண்டிய தயாரிப்பாக இருந்ததால், இடையே அறிமுகமான ஸ்பெஷல் எடிஷன் மற்றும் ஏபிஎஸ் அப்டேட் ஆகியவற்றின்போது, பைக்கின் கலர் & கிராஃபிக்ஸில் மட்டும் சில மாற்றங்களை இந்த நிறுவனம் செய்திருந்தது. தற்போது இதன் பிரதான போட்டியாளர்களான FZ மற்றும் ஜிக்ஸர் ஆகியவற்றில் அடுத்த தலைமுறை மாடல்கள் களமிறங்கிவிட்டன என்பதுடன், பல்ஸர் மற்றும் அப்பாச்சி ஆகியவையும் அடுத்தகட்ட பாய்ச்சலுக்குத் தகுந்தபடியே வெளியாயின (4 வால்வ் & ஆயில் கூல்டு இன்ஜின்). எனவே இப்படியே இருந்தால் விற்பனையில் ஜொலிக்க முடியாது என்பதை உணர்ந்த ஹோண்டா, தடாலடியாக ஹார்னெட்டின் வெர்ஷன் 2.0 பைக்கைக் கொண்டு வந்திருக்கிறது. எப்போதுமே பரபரப்பாக இருக்கும் 160-200சிசி செக்மென்ட்டில் வந்திருக்கும் இந்த நேக்கட் ஸ்ட்ரீட் பைக், புதிய ப்ளாட்ஃபார்மில் தயாராகிறது. எனவே எதிர்பார்த்தபடியே பல ஏரியாக்களில் முன்னேறிய மாடலாக ஈர்க்கும் ஹார்னெட் 2.0 எப்படி இருக்கிறது?

ஹோண்டா ஹார்னெட் 2.0
ஹோண்டா ஹார்னெட் 2.0

டிசைன் மற்றும் வசதிகள்

ஆசிய சந்தைகளில் விற்பனையாகும் CB190R பைக்கை அடிப்படையாகக் கொண்டு, ஹார்னெட் 2.0 பைக்கைத் தயாரித்துள்ளது ஹோண்டா. என்றாலும், இதன் தோற்றத்தில் கணிசமான மாறுதல்களை இந்த நிறுவனம் செய்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. ஷார்ப்பான ஸ்ப்ளிட் LED ஹெட்லைட், கட்டுமஸ்தான 12 லிட்டர் பெட்ரோல் டேங்க், மெலிதான டெயில் பகுதி ஆகியவை அதற்கான சிறந்த உதாரணம். மேலும் CB190R பைக்கில் இல்லாத ஸ்ப்ளிட் சீட், இன்ஜின் கவுல், ஸ்ப்ளிட் கிராப் ரெயில், ரிம் ஸ்ட்ரிப் ஆகியவை, இந்த ஹார்னெட்டில் சேர்க்கப்பட்டுள்ளன. முந்தைய ஹார்னெட் போலவே, இங்கும் X வடிவ LED டெயில் லைட் தொடர்வது அழகு. பின்சீட்டுக்குக் கீழே, பெட்ரோல் டேங்குக்கு மேட்ச்சிங்காக இங்கும் Faux Air Vent இருப்பது ஸ்போர்ட்டி டச். ஆனால் CB190R பைக்கின் ஸ்டைலான Underbelly எக்ஸாஸ்ட் - ரேடியல் டயர்கள் - டூயல் டோன்/Repsol கலர்கள் - தங்க நிற இன்ஜின் கேஸிங் ஆகியவற்றுடன் ஒப்பிட்டால், ஹார்னெட்டின் எக்ஸாஸ்ட் பைப் - டியூப்லெஸ் டயர்கள் - சிங்கிள் டோன் மேட் கலர்கள் - கறுப்பு நிற இன்ஜின் கேஸிங் ஆகியவை வழக்கமான டிசைனிலேயே உள்ளன.

 LCD நெகட்டிவ் டிஸ்ப்ளேவின் பிரைட்னெஸ்ஸை அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம். கியர் இண்டிகேட்டர், Voltmeter தகவல்கள் உண்டு.  தங்க நிற USD ஃபோர்க், வித்தியாசமாக இருக்கிறது.  17.2bhp இன்ஜின் ஓகேதான். ஆனால், 4வால்வ்-லிக்விட் கூல்டு இல்லை. 
 Nissin கேலிப்பர் பிரேக்ஸ். சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்தான். டூயல் சேனல் இல்லை.
LCD நெகட்டிவ் டிஸ்ப்ளேவின் பிரைட்னெஸ்ஸை அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம். கியர் இண்டிகேட்டர், Voltmeter தகவல்கள் உண்டு. தங்க நிற USD ஃபோர்க், வித்தியாசமாக இருக்கிறது. 17.2bhp இன்ஜின் ஓகேதான். ஆனால், 4வால்வ்-லிக்விட் கூல்டு இல்லை. Nissin கேலிப்பர் பிரேக்ஸ். சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்தான். டூயல் சேனல் இல்லை.

மற்றபடி ஹீரோவின் எக்ஸ்ட்ரீம் 160R பைக்கைத் தொடர்ந்து, முழுக்க LED லைட்டிங்கில் வந்திருக்கும் நேக்கட் ஸ்ட்ரீட் பைக் இதுதான்! தவிர கேடிஎம் டியூக்கைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், முன்பக்க USD ஃபோர்க்குடன் கிடைக்கும் ஒரே பைக் ஹார்னெட் 2.0தான். பைக்கின் நெகட்டிவ் LCD டிஸ்ப்ளே CB190R பைக்கை நினைவுபடுத்தினாலும், வழக்கமான தகவல்களுடன் கூடுதலாக Voltmeter & கியர் இண்டிகேட்டர் ஆகியவை இருப்பது செம. மேலும் இதன் Brightness அளவுகளை 5 லெவல்களில் அட்ஜஸ்ட் செய்ய முடியும். ஆனால் ஹோண்டாவின் கம்யூட்டர் வாகனங்களில் காணப்படும் சைலன்ட் ஸ்டார்ட்/இன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் சிஸ்டம் ஆகியவை இங்கே மிஸ்ஸிங். அதற்குப் பதிலாக இன்ஜின் கில் ஸ்விட்ச்சும் Hazard இண்டிகேட்டர்களும் வழங்கப்பட்டுள்ளன. சூப்பர் பைக்குகளைப் போலவே, பைக்கின் சாவி துவாரம் பெட்ரோல் டேங்க்கில் கொடுக்கப்பட்டிருப்பது நைஸ். பில்லியன் ஃபுட்ரெஸ்ட் பகுதி, அலாய் ஃபினிஷில் இல்லாதது மைனஸ். மற்றபடி ஹார்னெட் 2.0 பைக்கின் கட்டுமானத்தரம் மற்றும் பிட் அண்டு ஃபினிஷ், பார்க்க நன்றாகவே இருக்கிறது.

ஹார்னெட்... அங்கிள்ஸ் பைக் இல்லை!

இன்ஜின் பெர்ஃபாமன்ஸ், மெக்கானிக்கல் பாகங்கள்

CB190R பைக்கில் இருக்கும் அதே 184.4சிசி, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் - 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணியே, ஹார்னெட் 2.0 பைக்கிலும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த Long Stroke இன்ஜினின் கம்ப்ரஷன் ரேஷியோ, இரு மாடலிலும் 9.5:1 என்றளவிலேயே இருக்கிறது. என்றாலும், அதைவிட அதிக பவர் மற்றும் டார்க் கிடைக்கும்படி இதை டியூன் செய்திருக்கிறது ஹோண்டா. அதன்படி CB190R 15.8bhp பவர் மற்றும் 1.53kgm டார்க்கைத் தந்தால், ஹார்னெட் 2.0 17.2bhp@8,500rpm பவர் மற்றும் 1.61kgm@6,000rpm டார்க்கை வெளிப்படுத்துகிறது. இது 150-180சிசி பைக்குகளைவிட அதிகம் என்றாலும் (ஹார்னெட் 160R விடவும்தான்), 200சிசி பைக்குகளைவிடக் குறைவுதான்! மற்றபடி இந்த 2 வால்வ் - ஏர் கூல்டு இன்ஜின், இந்த நிறுவனத்தின் HET மற்றும் PGM-Fi தொழில்நுட்பத்துடன் கிடைக்கிறது. பைக்கின் விலையுடன் ஒப்பிடும்போது, போட்டி பைக்குகளில் இருக்கும் 4 வால்வ் அமைப்பு & ஆயில்/லிக்விட் கூலிங் ஆகிய அம்சங்கள் இல்லாதது நெருடல். ஆனால் இன்ஜினின் ஸ்மூத்னெஸ், அதைச் சரிக்கட்டக்கூடும். இங்கே கிக்கர் லீவர் கிடையாது என்பதால், செல்ஃப் ஸ்டார்ட் மட்டும்தான் (5.0 Ah பேட்டரி). CB190R பைக்கில் இருக்கும் அதே டைமண்ட் ஃபிரேம், பெட்டல் டிஸ்க் பிரேக்ஸ், டயர் சைஸ், சஸ்பென்ஷன் (USD ஃபோர்க் - மோனோஷாக்) ஆகியவை, அப்படியே ஹார்னெட் 2.0 பைக்கில் இடம்பெற்றுள்ளன.

ஹார்னெட்... அங்கிள்ஸ் பைக் இல்லை!

இதனால் இந்த இரு பைக்குகளின் அளவுகளில் அதிக ஒற்றுமையைப் பார்க்க முடிகிறது (ஹார்னெட் 160R உடனும்தான்). FZ-S V3.0 மற்றும் எக்ஸ்ட்ரீம் 160R ஆகிய பைக்குகளுக்கு அடுத்தபடியாக, 160-200சிசி செக்மென்ட்டில் எடை குறைவான பைக் இதுதான் (142 கிலோ - ஹார்னெட் 160R பைக்கின் அதே எடைதான்). இன்ஜினின் செயல்திறன் அதிரடியாக இல்லாவிட்டாலும், குறைவான எடையால் 121.12bhp Per Tonne எனும் சிறப்பான பவர் டு வெயிட் ரேஷியோவைப் பெற்றிருக்கிறது ஹார்னெட் 2.0. ரியர் வியூ மிரர்கள், இதர ஹோண்டா தயாரிப்புகளில் நாம் பார்த்ததுதான். எனவே இதன் பயன்பாட்டில் எந்த மாறுதலும் இல்லை. பெட்ரோல் டேங்க், டூயல் டோன் ஃபினிஷில் இருப்பது நச். 167மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ், பைக்கின் அடிப்பகுதி தரையைத் தட்டாமல் இருப்பதில் கைகொடுக்கும் எனச் சொல்லலாம். Maxxis நிறுவனத்தின் புதிய Extramaxx 17 இன்ச் ட்யூப்லெஸ் டயர்கள், ஹார்னெட் 2.0 பைக்கில் அறிமுகமாகி இருக்கிறது (இவை ரேடியல் கிடையாது). முன்னால் 110/70 & பின்னால் 140/70 சைஸ் டயர்கள் உள்ளன. பிரேக்குகளைப் பொறுத்தவரை, சிங்கிள் சேனல் ஏபிஎஸ்தான்! எதிர்பார்த்தபடியே Nissin கேலிப்பர்கள் இருப்பதுடன், முன்னே 276மிமீ & பின்னே 220மிமீ பெட்டல் டிஸ்க் பிரேக் இருக்கிறது. இந்த பைக்கின் விலைக்கு, டூயல் சேனல் ஏபிஎஸ் கொடுத்திருக்கலாம்.

ஹார்னெட்... அங்கிள்ஸ் பைக் இல்லை!

முதல் தீர்ப்பு

Pearl Igneous Black, Matte Sangria Red Metallic, Matte Axis Grey Metallic, Matte Marvel Blue Metallic எனும் 4 கலர்களில் கிடைக்கும் ஹார்னெட் 2.0 பைக்கின் சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை 1.30,182 ரூபாய். எனவே 3+3 வருட வாரன்ட்டியில் கிடைக்கும் இந்த மாடலின் சென்னை ஆன்-ரோடு விலை, 1.50 லட்ச ரூபாயைத் தாண்டுவதற்கான சாத்தியம் அதிகம். இளைஞர்களைக் கவரும்படியான தோற்றத்தில் இருப்பதே, இதன் ப்ளஸ் பாயின்ட்களில் ஒன்று. அதுவும் அந்த நீல நிற மாடல், இதர தங்க நிற USD ஃபோர்க் உடன் சேரும்போது, பைக் பார்க்க அப்படியே சுஸூகியின் GSX-S750-யை நினைவுபடுத்திவிடுகிறது. 160-200சிசி பைக் செக்மென்ட்டில் ஒருவர் எதிர்பார்க்கும் அம்சங்கள், ஹார்னெட் 2.0-வில் இருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் 200சிசி பைக்குகளின் விலையில் கிடைக்கக்கூடிய இந்த பைக்கின் செயல்திறன், அதற்கு இணையாக இருக்காது எனலாம் (ஆரம்ப கட்ட - மித வேக பெர்ஃபாமன்ஸ் நன்றாக இருக்கலாம்). என்றாலும், போட்டி பைக்குகளைவிடக் குறைவான எடை, அந்தக் குறைபாட்டினைச் சரிசெய்யலாம். போட்டி பைக்குகளைவிட அகலமான டயர்கள் மற்றும் ப்ரீமியமான USD ஃபோர்க் இருப்பதால், இதன் கையாளுமை நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். டூயல் சேனல் ஏபிஎஸ் இருந்திருந்தால், இது ஒரு முழுமையான பைக்காக இருந்திருக்கக்கூடும். மற்றபடி ஹோண்டா இந்தியாவில் விற்பனை செய்யும் எந்த பைக்கிலும் இல்லாத டயர்கள் - சஸ்பென்ஷன் - இன்ஜின் இதில் இருப்பதால், ஹார்னெட் 2.0 பைக்கை ஓட்டிப் பார்க்க நாங்கள் ஆவலாகவே இருக்கிறோம்.