டிவிஎஸ் ஸ்கூட்டிக்கு வயது 26 ஆகப் போகிறது. இந்தியாவின் சிறிய Fi இன்ஜின் (87.8 cc), குறைவான எடை (93 கிலோ), சிறிய பெட்ரோல் டேங்க் (4.2 லிட்டர்), சரியான சீட் உயரம் (760மிமீ), செக்மென்ட்டிலேயே குறைவான கி.கிளியரன்ஸ் (135மிமீ), கையைக் கடிக்காத விலை (65,000 ரூபாய் ஆன்ரோடு)... என பல ப்ளஸ் உண்டு; மைனஸ்ஸும் உண்டு - டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் ப்ளஸ்ஸில்.

தமிழ்நாட்டில் பிறந்து, நேஷனல் பிராண்டாக வளர்ந்து நாடு முழுதும் கோலோச்சிக் கொண்டிருக்கும் பிராண்டுகளை வரிசைப்படுத்தினால், அதில் டிவிஎஸ்தான் முதலில் நினைவுக்கு வரும். அதிலும் ஸ்கூட்டியை மறக்கவே முடியாது. ஸ்கூட்டர் என்றாலே ஸ்கூட்டி என்றுதான் ஆகிப் போனது. இப்போதுகூட, `ஒரு நல்ல ஸ்கூட்டி வாங்கணும்... எது வாங்கலாம்’ என்று பலர் சொல்வதைக் கேட்டிருக்கலாம். அவர்கள் சொல்வது டிவிஎஸ் ஸ்கூட்டியை இல்லை; ஸ்கூட்டரை! இது ஸ்கூட்டருக்குக் கிடைத்த பெருமை. முன்பு `நம்ம ஊர் ஸ்கூட்டி’ என்று அடையாளயப்படுத்திக் கொண்ட டிவிஎஸ் ஸ்கூட்டியை, இப்போது தமிழ் எழுத்துகளில் ‘முதல் காதல்’ என்றொரு வேரியன்ட்டில் அறிமுகம் செய்திருக்கிறது. அது மட்டுமல்ல, `ஸ்கூட்டி பெப் ப்ளஸ்', என்ற இலட்சனையும் (லோகோவும்) தமிழிலேயே இதில் இடம் பெற்றிருக்கிறது. தமிழ் ஸ்டிக்கரில் ஒரு வாகனத்தைப் பார்ப்பதே பரவசமாக இருந்தது.

பார்த்த அனைவரும் ‘என்னங்க... இந்த ஸ்டிக்கர் நீங்களாவே ஒட்டினீங்களா.. எவ்வளவு ஆச்சு’ என்று விசாரிக்க ஆரம்பித்து விட்டார்கள். தமிழ்நாட்டின் மீதும், தமிழ் வாடிக்கையாளர்களின் மீதும் கொண்டுள்ள பற்றால், ‘முதல் காதல்’ எடிஷனை வெளியிட்டதாகச் சொல்கிறது டிவிஎஸ்.

தமிழன் என்று சொல்லடா; தலை நிமிர்ந்து ஸ்கூட்டி ஓட்டடா!