ஸ்கூட்டர்களிலும் Fi கொண்டு வருவது இப்போது ஃபேஸன்ஆகிவிட்டது. சுஸூகி, ஹோண்டா வரிசையில் யமஹாவும் தனதுஃ பஸினோவையும் ரேவையும் Fi (BS-6) ஆக்கிவிட்டது.

125 சிசி செக்மென்ட்டில் செம ஸ்டைலாக வர இருக்கிறது யமஹா ரே ZR 125 Fi. ஃப்ரேம், இன்ஜின் மற்றும் சில ஸ்டைலிஷ் விஷயங்கள் எல்லாமே புதுசு! சும்மாவே ரேவை இளசுகளுக்குப் பிடிக்கும். கறுப்பு மஞ்சள் காம்பினேஷனில் இப்போது ரேவை நண்டு சிண்டுகளுக்குக்கூடப் பிடிக்கும். ஸ்கூட்டரின் ஆப்ரான், மேட் மற்றும் கிளாஸ் என இரண்டு ஃபினிஷ்களில் இருக்கிறது. புள்ளிங்கோக்களுக்கு இருக்கும் ஸ்பைக் ஹேர்ஸ்டைல் மாதிரி, ஹேண்ட்பாரில் விண்ட்ஸ்க்ரீன் வேறு துருத்திக் கொண்டிருப்பது... அழகு! வழக்கம்போல் ஹேண்டில்பாருக்குக் கீழே ஹெட்லைட்டைப் பொருத்தியிருக்கிறார்கள். LED இல்லை.

இந்த டிசைனும் பிடிக்கவில்லையென்றால், Street Rally என்றொரு வேரியண்ட்டும் ரேவில் உண்டு. ஹேண்ட்கார்டு, பிளாக் பேட்டர்ன் டயர்கள் என்று இந்த ரே இன்னும் ஸ்டைலிஷ். இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், முழுவதும் டிஜிட்டல் மயம். (பேஸ் மாடலான ZR–ல் அனலாக் மற்றும் டிரம் பிரேக்ஸ்தான்) என்டார்க் போல், புளூடூத் கொடுத்திருந்தால் இன்னும் சில ஆயிரம் லைக்ஸ் கொடுத்திருக்கலாம். நாம் ரெக்கமண்ட் செய்வது டிஸ்க் பிரேக் மாடலைத்தான்.

புது பிளாட்ஃபார்ம் என்பதால், பழைய ரேவைவிட பெரிய ஸ்கூட்டராகி இருக்கிறது புது ரே. அதனால், சீட் இடவசதி அகலமாகி, அதிகமாகி இருக்கிறது. ஃப்ளோர் போர்டு ஸ்பேஸ்கூட, செம! உயர்ந்த மனிதர்கள், காலை நன்றாக வைத்துக்கொண்டு ஓட்டலாம். அதனால், ரைடிங் பொசிஷன் செம ரிலாக்ஸ்டு.

ஃபஸினோவில் இருக்கும் அதே 125 சிசி ஃப்யூல் இன்ஜெக்ஷன் இன்ஜின்தான் ரேவிலும். 125 சிசி ரைடர்கள் உச் கொட்டும் விஷயம் இதில்தான். ஆம், பவரும் டார்க்கும் குறைவு. பவர் 8.2 bhp@6,500rpm. டார்க் 9.7kgm@5,000rpm. முக்கியமாக என்டார்க்கை ஒப்பிட்டால், ரே ஸாரி! இங்கே புத்திசாலித்தனமாக யமஹா ஒரு விஷயம் செய்திருக்கிறது. ஸ்கூட்டரின் எடை குறைவு. 99 கிலோதான். இது நடப்பில் ஓடும் 110 சிசி ஸ்கூட்டரைவிட 4 கிலோ எடை கம்மி. இந்த எடைக்கு இந்த பவர் ஓகேதான். இதனால், ஒல்லி பெல்லி பெண்கள்கூட ரேவை ஈஸியாக ஹேண்ட்லிங் செய்யலாம்.

எடை குறைவு என்பதால், 60 கி.மீ வேகத்தைச் சட்டென எட்டிவிடுகிறது ரே. புள்ளிங்கோ பார்ட்டிகள், ரேவின் டாப் ஸ்பீடுக்கு இன்னும் கொஞ்சம் காத்திருக்க வேண்டும். நிச்சயம், பழசைவிட ஸ்மூத்னெஸ் கண்ணுக்கு அப்படியே கண்ணாடி மாதிரி தெரிகிறது. டெலிஸ்கோப்பிக் ஃபோர்க் என்பதால், ஓட்டுதல் தரம் அருமை. குறைந்த வேகங்களில் கொஞ்சம் இறுக்கம். டிஸ்க் என்பதால், இன்னும் கொஞ்சம் நம்பிக்கை கிடைக்கிறது.

வசதிகளில்தான் யமஹா கொஞ்சம் கஞ்சத்தனம் காட்டும். ரேவிலும் சில குறைகள். புளூடூத் கனெக்ட்டிவிட்டி, LED ஹெட்லைட், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், எக்ஸ்டெர்னல் ஃப்யூல் ஃபில்லிங், பூட்டுக்கு லைட் போன்ற விஷயங்களைச் சொல்லலாம். விலையை இன்னும் அறிவிக்கவில்லை யமஹா. எப்படியும் பழைய ரேவைவிட சில ஆயிரங்கள் அதிகமாகவே இருக்கலாம்.