டிவிஎஸ் நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் மாடலான அப்பாச்சி RR310 விற்பனைக்கு வந்தபோது, பெரிய உற்சாகம் இருந்தது. ஜப்பான், ஐரோப்பிய நிறுவனங்களுக்கு நிகரான தரம், பார்த்த உடனேயே ஈர்க்கும் ஸ்டைல், அதிரடி பர்ஃபாமன்ஸ், ரேஸ் டிராக்கில் ஓட்டுவதற்கான ரைடிங் டைனமிக்ஸ் என அசத்தலாக இருந்த இந்த பைக், தொடர்ந்து வந்த ஆட்டோமொபைல் மந்தநிலைக் காலத்தில் பெரிய வரவேற்பைப் பெறவில்லை.

இதற்கு அப்பாச்சியில் இருந்த சில குறைகளும் காரணம். இந்தச் சின்னச் சின்னக் குறைகளை எல்லாம் களைந்து, BS-6 விதிகளுக்கு ஏற்ப மாறியுள்ளது RR310.

மாற்றங்கள்...

முதல் மாற்றம் புதிய நிறம். பழைய மேட் கறுப்பு நிறம், DC காமிக்ஸ் ரசிகர்களுக்கு வேண்டுமானால் பிடித்திருக்கலாம். ஆனால், பெரும்பான்மை விற்பனையைப் பெற்றது சிவப்பு நிறம்தான். `லவ் யூ 3,000’ என எக்கச்சக்க புக்கிங். அதனால் இப்போது பழைய கறுப்பு நிறத்தை நிறுத்திவிட்டு, பளபளப்பான கறுப்பு மற்றும் மேட் கிரே நிறத்துக்கு பைக்கை மாற்றியுள்ளார்கள்.

இந்த டைட்டானியம் பிளாக் நிறத்தின் ஸ்டிக்கரிங், பைக்கின் லுக்கையே தூக்கிவிடுகிறது. புது கறுப்பு - செம சிறப்பு. ரேஸிங் புளூ நிறத்தில், ஒரு கேப்டன் அமெரிக்கா எடிஷனை எதிர்பார்த்துக் காத்திருக்கும் அப்பாச்சி ஃபேன்ஸ்களுக்கு ஒரு ஷவுட்அவுட்.

பழைய பைக்கில் விண்ட் ஸ்கிரீன், பேனல்களுக்கு உள்ளே பொருத்தப் பட்டிருக்கும். இதைக் கழட்டுவது சிரமம். இந்த புதிய மாடலில் இதைச் சுலபமாகக் கழற்றி மாட்ட 4 போல்ட்டுகள் கொடுத்துள்ளார்கள். கழற்றித் துடைப்பதும், தேவையென்றால் பெரிய விண்ட் ஸ்கிரீன் பொருத்திக் கொள்வதும் இப்போது சுலபம். பெரிய மாற்றம், 5 இன்ச் TFT இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர்.

இதற்கு டிவிஎஸ் வைத்திருக்கும் பெயர் ரேஸ் கம்ப்யூட்டர். பழைய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரே போதுமான தகவல்களைத் தரும். புதியது போதும் போதும் என்கிற அளவுக்குத் தகவல்களைக் கொட்டுகிறது. புளூடூத் கனெக்டிவிட்டியும் உண்டு. மொபைல்போலவே இருக்கும் இந்த ரேஸ் கம்ப்யூட்டர் உடன் மொபைலை இணைத்தால், பைக் பற்றிய மொத்த விஷயங்களையும் மொபைலிலேயே பார்த்து விடலாம்.

அடுத்த சர்வீஸ் எப்போது என்பதோடு, கடைசி சர்வீஸ் எப்போது செய்யப்பட்டது என்ற தேதியையும் காட்டுகிறது இந்த க்ளஸ்டர். மூன்று ட்ரிப் மீட்டர் இருப்பது மட்டுமில்லை, கடைசி 5 ட்ரிப்களின் ரைடிங் டேட்டாவையும் மொபைல் ஃபோனிலேயே எடுத்துவிடலாம்.

மைலேஜ், டாப் ஸ்பீடு, ஆவரேஜ் ஸ்பீடு, லேப் டைமிங்... இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். அவ்வளவு டேட்டா. மொபைல் ஃபோன்போல இருந்தாலும், இது ஏத்தர் ஸ்கூட்டரில் இருக்கும் டிவைஸ் போல மேப்பைக் காட்டாது. என்டார்க், அப்பாச்சி RTR160 போல ரைடிங் டைரக்ஷன் மட்டுமே காண்பிக்கும்.

டே, நைட் என இரண்டு டிஸ்ப்ளே மோடு உண்டு. டிஸ்பிளேவின் பிரைட்னஸைக்கூட அட்ஜஸ்ட் செய்துகொள்ளலாம். உச்சி வெயில் வெளிச்சத்தில் மட்டுமில்லை, எந்தக் கோணத்தில் இருந்து பார்த்தாலும், இந்த டிஸ்ப்ளே தெளிவாகத் தெரிகிறது.

ரைடிங் மோடுகள் இருப்பதால், ஹேண்டில்பாரில் கன்ட்ரோல் கியூப் எனும் 4 ஸ்விட்ச்களைக் கொடுத்துள்ளார்கள். கேடிஎம் டியூக் 390 மாடலில் இருக்கும் அதே செட்டப். ஹசார்டு லைட்டுக்குத் தனி பட்டன். ஸ்டார்ட்டர் மற்றும் கில் ஸ்விட்ச் ஒரே பட்டனில். ஹை-பீம், லோ-பீம், பாஸ் லைட் ஒரே இடத்தில். வெளியே தெரியாத ஒரு மாற்றம் ரைடு-பை-ஒயர். இந்தத் தொழில்நுட்பம் அப்பாச்சியின் ரைடிங்கில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மிச்சிலின் பைலட் ஸ்ட்ரீட் டயர்களுக்குப் பதிலாக, மிச்சிலின் ரோடு 5 டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் ரோடு 5 டயர்களுடன் வரும் முதல் பைக் இதுதான்.

ரைடிங்...

ரைடு-பை-ஒயர், FI... இந்த இரண்டு தொழில்நுட்பமும் RR310-ன் இன்ஜினுக்குப் புது உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது. இன்ஜினைத் துல்லியமாக்க மட்டுமில்லை, விருப்பம்போல ட்யூன் செய்யும் சுதந்திரத்தையும் இவை தருவதால், RR310-ல் ரைடிங் மோடு கொடுத்துள்ளது டிவிஎஸ்.

பிக்-அப் முன்பை விட சுறுசுறுப்பாக இருக்கிறது. த்ராட்டில் ரெஸ்பான்ஸ் முன்னேறியிருப்பதே இதற்குக் காரணம். மொத்தம் 4 ரைடிங் மோடுகள். அர்பன், ரெயின், ஸ்போர்ட், டிராக். கடைசி இரண்டு ரைடிங் மோடுகள் 1,000 கி.மீ ஓட்டிய பிறகுதான் திறக்கும். அர்பன் மற்றும் ரெயின் மோடில் 26bhp பவர் மற்றும் 2.5kgm டார்க் கிடைக்கிறது. ஸ்போர்ட் மற்றும் டிராக் மோடில் 34bhp பவர் மற்றும் 2.73kgm டார்க் கிடைக்கிறது. கடைசி இரண்டு மோடுகளில் த்ராட்டில் ரெஸ்பான்ஸ் மற்றும் பவர், முதல் இரண்டை விட அதிகம்.

பிரேக் போடும்போது ஏபிஎஸ் குறுக்கிடுவது ஒவ்வொரு ரைடிங் மோடுக்கும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கிறது. அர்பன் மற்றும் ஸ்போர்ட் மோடுகளிலும் ஏபிஎஸ் ஒன்றுபோலச் செயல்படுகிறது. ரெயின் மோடில் ஏபிஎஸ், பிரேக்கின் முழு கட்டுப்பாட்டையும் எடுத்துக்கொள்கிறது. டிராக் மோடில், ஏபிஎஸ் குறுக்கிடுவது மிகமிகக் குறைவு. 2 ஸ்பீடு, 3 ஏபிஎஸ்... இந்த 5 விதமான டியூனிங்கும் சேர்ந்ததுதான் 4 ரைடிங் மோடுகள்.

பழைய BS-4 மாடலில் 3000 முதல் 6000 rpm-ல் கொஞ்சம் அதிர்வுகள் தெரியும். 9000rpm தாண்டிவிட்டால் ஹேண்டில்பார் நன்றாகவே அதிரும். இப்போது இந்த வைப்ரேஷன் இல்லை. சின்னச் சின்ன அதிர்வுகளை உணர முடிந்தாலும், ரைடிங்கைக் கடுமையாக்கும் அளவுக்கு எதுவும் இல்லை. ஆக்ஸிலரேஷன், டீசெலரேஷன் நுங்கு விழுங்குவதுபோல செம ஸ்மூத்!

நகரச் சாலைகளுக்கும், டிராஃபிக் ரைடிங்குக்கும் பைக்கை இன்னும் சிறப்பாக்க, Glide Through Traffic (GTT+) வசதியைச் சேர்த்திருக்கிறார்கள். இது ஆக்ஸிலரேட்டரை முறுக்காமலேயே பைக்கை ஒரு குறிப்பிட்ட வேகத்தில் இயக்க வைக்கிறது. முதல் கியரில் 10 கிலோ மீட்டர், இரண்டாவது கியரில் 15 கிமீ என 6-வது கியரில் 40 கி.மீ வேகம் வரை ஆக்ஸிலரேட்டரைப் பயன்படுத்தாமலேயே செல்லலாம். க்ளட்சைப் பிடித்தால் இது ஆஃப் ஆகிவிடும், க்ளட்சை விட்டு ஆக்ஸிலரேட்டர் கொடுத்தால் இந்த வசதி செயல்படத் தொடங்கிவிடும். அர்பன் மற்றும் ரெயின் மோடில் மட்டுமே இப்படி கோஸ்ட் செய்ய முடியும். ஸ்போர்ட் மற்றும் டிராக் மோடிலும் இந்த வசதி இருக்கிறது. ஆனால், இதில் ஆரம்பகட்ட RPM-களில் டார்க் குறைவு என்பதால் இரண்டு கியர்தாண்டி கோஸ்ட் செய்ய முடியாது.மிச்சிலின் ரோடு 5 டயர் கிரிப் முன்பு இருந்த ஸ்ட்ரீட் பைலட்டைவிட அருமை. கார்னரிங் செய்யும்போது டயரை நன்றாகவே உணரமுடிகிறது. இது அதிக வேகங்களில் நம்பிக்கையைக் கொடுக்கிறது. ரேஸ் ட்ராக்கில் வெயில் பிளந்து கட்டியதால், ஈரமான சாலைகளில் ஓட்டிப் பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், இந்த டயரில் நீரை வாரி இறைக்க ஆழமான க்ரூவ் கொடுக்கப்பட்டிருப்பதால் வெட் ரைடிங் கண்டிஷனிலும் கிரிப் சிறப்பாக இருக்கும் என்கிறது டிவிஎஸ். இந்த டயர்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுவதில்லை. தாய்லாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.

முன்பைவிட சுறுசுறுப்பான ரைடிங் கிடைத்தாலும் 0-60, 0-100 கி.மீ நம்பர்களில் மாற்றம் இல்லை. இதற்குக் காரணம், பைக்கின் எடை 5 கிலோ அதிகரித்திருப்பது.

விலை?

BS-6 RR310 மாடல் 2.40 லட்சம் ரூபாய் எனும் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. சென்னையில் இதன் ஆன்ரோடு விலை ரூ.2.75 லட்சம். இது பழைய மாடலின் விலையை விட12,000 ரூபாய் அதிகம். இதோடு ஐந்து ஆண்டு அன்லிமிட்டட் கிலோ மீட்டர் வாரன்ட்டியும், ஒரு வருட இலவச ரோடு சைடு அசிஸ்டென்ஸும் சேர்த்தே வருகிறது.