Published:Updated:

ஹேப்பியாக இருக்கிறதா H கியர்?

 பஜாஜ் ப்ளாட்டினா 110 H கியர்
பிரீமியம் ஸ்டோரி
பஜாஜ் ப்ளாட்டினா 110 H கியர்

ஃபர்ஸ்ட் ரைடு - பஜாஜ் ப்ளாட்டினா 110 H கியர்

ஹேப்பியாக இருக்கிறதா H கியர்?

ஃபர்ஸ்ட் ரைடு - பஜாஜ் ப்ளாட்டினா 110 H கியர்

Published:Updated:
 பஜாஜ் ப்ளாட்டினா 110 H கியர்
பிரீமியம் ஸ்டோரி
பஜாஜ் ப்ளாட்டினா 110 H கியர்

சென்னையில் தண்ணீர்ப் பற்றாக்குறை புரட்டியெடுக்க, புனேவில் வெயிலும், மழையும் மாறி மாறிக் குதூகலப்படுத்திக் கொண்டிருந்தது. கொஞ்சம் வெயிலிலும் - கொட்டும் மழையிலும், புனே நகரச் சாலைகளில் பஜாஜின் புதிய ப்ளாட்டினாவை டெஸ்ட் செய்தேன்.

ஹேப்பியாக இருக்கிறதா H கியர்?

புதிய ப்ளாட்டினா என்றால், ப்ளாட்டினா 110 இல்லை. இது அதைவிட புதுசு... ப்ளாட்டினா 110 H கியர். கடந்த டிசம்பர் மாதம்தான், ப்ளாட்டினா 110 விற்பனைக்கு வந்தது. இந்த நிலையில், தற்போது அதே பைக்கில் 5 கியர்களைப் பொருத்தி, ப்ளாட்டினா 110 H கியர் என்று விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது பஜாஜ். கியர்பாக்ஸ் மட்டும்தான் மாறியிருக்கிறதா? புதிய ப்ளாட்டினாவில் வேறென்ன ஸ்பெஷல்?

புதுசா என்ன இருக்கு?

ப்ளாட்டினா 110-ல் இருக்கும் அதே 115.5 சிசி இன்ஜின்தான் இந்த ப்ளாட்டினாவிலும். ஆனால், இதில் 5 கியர்கள் உள்ளன. 5-வது கியரின் பெயர் H கியர். H என்றால் என்ன என்ற கேள்விக்கு, ஹைவே என்றும் சொல்லலாம், ஹேப்பி என்றும் சொல்லலாம் என விளக்கம் கொடுக்கிறார்கள் பஜாஜ் பொறியாளர்கள்.

ஹைவேஸில் டாப் ஸ்பீடு விரட்ட முயற்சிக்கும்போது, 5-வது கியருக்கு மாற்றினால் `H' என்று கியர் இண்டிகேட்டர் டிஸ்ப்ளேவில் தெரிகிறது. H கியர் என்றால் 5-வது கியர், புதிய கியர் மெக்கானிசம் மற்றும் செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் இது மூன்றும் சேர்ந்த சிஸ்டமாம். வழக்கமாக பஜாஜ் பைக்குகளில் வரும் ஹீல் & டோ (Heel-and-Toe) மொக்கானிசத்துக்குப் பதிலாக, சிம்பிளான கொக்கி போன்ற ஒரு மெக்கானிசத்தைப் பொருத்தியுள்ளார்கள். செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டரும் புதிது.

ஹேப்பியாக இருக்கிறதா H கியர்?

இதில் நீங்கள் தற்போது எந்த கியரில் இருக்கிறீர்கள், கியர் ஏற்ற வேண்டுமா, குறைக்க வேண்டுமா என்பதைக் காட்டும் கியர் இண்டிகேட்டர் இருப்பதெல்லாம் பஜாஜ் கம்யூட்டர் பைக் விரும்பிகளுக்கு வரப்பிரசாதம். இந்த கியர் இண்டிகேட்டர், வேகம் மற்றும் இன்ஜின் RPM வைத்து கியர் மாற்றச்சொல்லும்.

முன்பக்க டிஸ்க் பிரேக் 220மி.மீ-யில் இருந்து 240 மி.மீ-யாக வளர்ந்துள்ளது. Anti Skid Braking சிஸ்டம் என்ற பெயரில், முன்பக்க ஹைட்ராலிக் மற்றும் பின்பக்க மெக்கானிக்கல் பிரேக்குகளை ஒயர் மூலம் இணைத்து CBS ஆக மாற்றியுள்ளார்கள். இந்த அமைப்பிற்கு பஜாஜ் பேட்டன்ட் வாங்கும் முயற்சியில் உள்ளதாம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

டிசைன்

ப்ளாட்டினா 100 பைக்குக்கும் - ப்ளாட்டினா 110 H கியர் பைக்குக்கும், டிசைனில் பெரிய மாற்றங்கள் இல்லை. இதுவரை ப்ளாட்டினாவின் லோகோ ஸ்டிக்கராக மட்டுமே இருந்த நிலையில், இம்முறை பல்ஸர் போல 3D Emblem பொருத்தப்பட்டுள்ளது. சீட்டில் குவில்ட் பேட்டன் டிசைன் புதிது. மற்றபடி அதே ஹெட்லைட் மற்றும் DRL டிசைன்தான். புதிய CT 110 மற்றும் ப்ளாட்டினா 110 ஆகிய இரண்டு பைக்குகளும் கிட்டத்தட்ட ஒரே தோற்றத்தில் இருக்கும் நிலையில், ப்ளாட்டினாவின் டிசைனை பஜாஜ் கொஞ்சம் மாற்றியாக வேண்டும்.

ஹேப்பியாக இருக்கிறதா H கியர்?

சௌகரியம்

கம்யூட்டர் பைக்குகள் என்றால் மைலேஜ் என்பது மாறிவிட்டது. பள்ளம் மேடுகளில் அலுங்காமல் குலுங்காமல் சொகுசாகச் செல்வதற்கும் கம்யூட்டர் பைக்குகளை வாங்குவது அதிகரித்துவிட்டது. சொகுசான பைக் என்றால் கம்ஃபோடெக் ஞாபகம் வரும். கம்ஃபோடெக் என்றால் அதன் செக்மென்ட்டிலேயே அதிக டிராவல் கொண்ட சஸ்பென்ஷன், நீளமான சீட், பின்பக்க ஃபுட் பெக்ஸ்க்கு பதிலாக ஃபுட் போர்டு இதெல்லாம்தான். புதிய ப்ளாட்டினாவில் கூடுதலாக நைட்ராக்ஸ் Spring on Spring (SnS) சஸ்பென்ஷன் வந்துள்ளது. ஒரு நைட்ராக்ஸ் கேனிஸ்டர்... அதற்குமேல் ஒரு பெரிய ஸ்பிரிங்... அதைத் தாங்கும் ஒரு சிறிய ஸ்பிரிங் என மொத்தம் மூன்று லேயர் சஸ்பென்ஷன், ரைடருக்கான சொகுசைக் கூட்டுகின்றன.

ஹேப்பியாக இருக்கிறதா H கியர்?

இன்ஜின்

அடுத்த ஆண்டு BS-6 விதிமுறைகள் அமலுக்கு வரும் நிலையில், தற்போது பயன்பாட்டில் இருக்கும் ப்ளாட்டினாவின் BS-4 இன்ஜினை மேம்படுத்தியுள்ளது பஜாஜ். 115.5 சிசி இன்ஜின், 8.6bhp பவர் மற்றும் 0.98kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது. இது பழைய 102சிசி இன்ஜினை விட 0.7bhp பவர் மற்றும் 0.15kgm டார்க் அதிகம். தற்போது 100-110சிசி செக்மென்ட்டிலேயே, அதிக டார்க் கொண்ட இன்ஜின் இதுதான். அதுமட்டுமில்லை, இப்போதைக்கு ப்ளாட்டினா வரிசையில் 5 கியருடன் வரும் இன்ஜினும் இது மட்டுமே!

4 மற்றும் 5-வது கியர்களுக்குள் பெரிய வித்தியாசம் கிடையாது. H கியர் என்பது ஓவர்டிரைவ்தான். இரண்டு கியர்களிலுமே 94 கி.மீ வேகம் வரை செல்ல முடிந்தது. ஆனால் H கியரில் பைக்கை ஓட்டும்போது, இன்ஜினில் அதிர்வுகள் குறைந்து அழுத்தம் இல்லாமல், ஃப்ரீயாகச் செல்வது போன்ற உணர்வு கிடைத்தது. கியர் ஷிஃப்ட்டிங்கும் செம ஸ்மூத். ப்ளாட்டினாவின் 100சிசி இன்ஜினை விட, தற்போது இருக்கும் இன்ஜினின் பவர் டெலிவரி சீராக இருக்கிறது. பஜாஜின் புதிய NVH லேபில் இந்த ப்ளாட்டினாவை டெஸ்ட் செய்திருப்பதை உணர முடிகிறது. இன்ஜின் அந்தளவுக்கு செம ஸ்மூத். 80 கி.மீ வேகத்தைக் கடக்கும்போதுதான் வைப்ரேஷன் எட்டிப் பார்க்கிறது.

ஓட்டுதல்

ப்ளாட்டினாவின் ஓட்டுதல் தரத்தில் நிறைய முன்னேற்றங்கள் உள்ளன. பஜாஜின் கம்யூட்டர் வரிசையிலேயே மிகவும் சொகுசான பைக் இதுதான். சஸ்பென்ஷனுக்குத்தான் பூங்கொத்துகள். சாஃப்ட் செட்டப் என்பதால், சாலையில் தெரியும் மேடு பள்ளங்கள், கைகளையும் முதுகையும் பதம் பார்க்கவில்லை. ஆனால் வேகமாக ஸ்பீடு பிரேக்கர்களில் ஏறும்போது, பைக் முன்பை விட வலுவாகவே தூக்கிப்போட்டது. ஸ்விங் ஆர்முக்கும் கொஞ்சம் பாராட்டுகள் கொடுக்க வேண்டும். H கியர் மாடலின் ஸ்விங்ஆர்மை, முன்பை விட வலுவாக்கியுள்ளார்கள். இதனால் பின்பக்கத்தில் எடை கூடி, அதிக வேகங்களில் பைக் அலைபாய்வது குறைந்துள்ளது.

ஹேப்பியாக இருக்கிறதா H கியர்?

பிரேக் ஷார்ப்பாக இல்லையென்றாலும், முன்பை விட அவை துரிதமாகச் செயல்படுகின்றன. ரைடிங்கில் முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது, கியர் பொசிஷன் இண்டிகேட்டரின் பங்கு. கியர் பொசிஷன் இண்டிகேட்டரைப் பார்த்து ஓட்டும்போது, பைக் ஸ்மூத்தாக இருந்தது. ஆனால் ஒரு கியரை மாற்றிய சில நொடிகளிலேயே, அடுத்த கியரை மாற்றச் சொல்கிறது. அதிலும் 4-ம் கியருக்கு மாற்றிய மறு நொடியே, 5-ம் கியருக்கு மாறச்சொல்வது மைலேஜை அதிகரிக்கும் செட்-அப்.

பஜாஜ் பைக்குகளிலேயே ப்ளாட்டினா தான் அதிரடி மைலேஜுக்குப் பெயர் பெற்ற பைக். 5-வது கியரின் உதவியால், மைலேஜ் லிட்டருக்கு 4 கி.மீ வரை உயர்ந்துள்ளது என்கிறது பஜாஜ். அராய் டெஸ்ட்டில் 84 கி.மீ எனச் சொன்னாலும், தினமும் சாலையில் பயன்படுத்தும்போது 70 முதல் 73 கி.மீ மைலேஜ் உறுதி என்றும் அடித்துச் சொல்கிறது பஜாஜ். போட்டியாளர்களை ஒப்பிடும்போது, இது சிறந்த மைலேஜ்தான்.

ஹேப்பியாக இருக்கிறதா H கியர்?

விலை

ப்ளாட்டினா 110 H கியர், டிரம்/டிஸ்க் என இரண்டு வேரியன்ட்டில் கிடைக்கிறது. இவை முறையே ரூ.66,967 மற்றும் ரூ.69,152 எனும் சென்னை ஆன்ரோடு விலைகளில் கிடைக்கின்றன. இது மார்க்கெட்டில் இருக்கும் ப்ளாட்டினா 110 பைக்கைவிட இது ரூ.3000 - ரூ.5000 வரை விலை அதிகம்; போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில், டிவிஎஸ் ரேடியான் மற்றும் ஸ்டார் சிட்டியை விட விலை அதிகமாகவும், ஹீரோ ஸ்ப்ளெண்டர் ப்ரோ, பேஸன் Xpro மற்றும் ஹோண்டா ட்ரீம் யுகா மற்றும் லிவோவை விட விலை குறைவாகவும் உள்ளது, பஜாஜின் H கியர் ப்ளாட்டினா.

வாங்கலாமா?

வைப்ரேஷன் இல்லாத ரைடிங், அதிக டார்க், சொகுசான டிரைவிங், 5-வது கியர் எல்லாம் சேர்த்துப் பார்த்தால், இந்த அப்கிரேடுக்கு ஒருவர் கொடுக்கும் இந்த விலை நியாயமானதே! அதேசமயம் ப்ளாட்டினாவில் நெருடல்கள் இல்லாமலும் இல்லை. H கியர் மாடல், பழைய ப்ளாட்டினா 100 பைக்கை விட 7 கிலோ எடை கூடி, 118.5 கிலோ என்றளவில் இருக்கிறது.

டார்க்கில் செக்மென்ட்டிலேயே சிறந்த பைக்காக இருந்தாலும், சரிசமமான எடை கொண்ட பேஸன் Xpro மற்றும் டிவிஎஸ் விக்டர் பைக்குகளைவிட பவர் குறைவு. சியட் டியூப்லெஸ் டயர்களின் ரோடு கிரிப், ஈரமான சாலைகளில் போதுமான அளவு நம்பிக்கை கொடுக்கவில்லை.

ஹேப்பியாக இருக்கிறதா H கியர்?

விலையைக் கணக்கில் கொண்டு இந்த நெருடல்களை ஓரம் வைத்துவிட்டுப் பார்க்கும்போது, தற்போது விற்பனையில் இருக்கும் சில 100 சிசி பைக்குகளைவிட மைலேஜ், சொகுசு மற்றும் சிறப்பான ரைடிங் அனுபவம் கொடுக்கிறது ப்ளாட்டினா 110 H கியர். சிட்டியில் ஓட்டுவதற்கு ப்ளாட்டினாவின் H நிச்சயம் ஹேப்பிதான்.