Published:Updated:

சொய்ங்... எலெக்ட்ரிக் ட்ரெயின் ஏத்தர்!

ஏத்தர் 450X
பிரீமியம் ஸ்டோரி
News
ஏத்தர் 450X

ஃபர்ஸ்ட் ரைடு: ஏத்தர் 450X

எலெக்ட்ரிக் வாகனங்கள் என்றால், நம்பர் ப்ளேட்டிலோ, லோகோவிலோதான் பச்சை நிறத்தைப் புகுத்தியிருப்பார்கள். ஆனால், ஏத்தர் 450X ஸ்கூட்டர் மொத்தமாகவே பச்சைப் பசேலென புதுமையான கலரில் இருக்கிறது. இதற்குப் பெயர் Mint. இந்த ஆண்டின் சிறந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான மோட்டார் விகடன் விருது வாங்கியிருக்கும் ஏத்தர் 450X–ன் ரைடு ரிப்போர்ட்டுக்கு ஏகப்பட்ட வாசகர்கள் ரிக்வொஸ்ட் வைத்திருந்தார்கள். ‘கிளம்பலாம் வாங்க’ என சத்தம் போடாமல் கிளம்பினோம்.

டிசைன்

பார்ப்பதற்கு 450 போலவேதான் இருக்கிறது 450X. ஆனால், எதிர்காலத்தைப் பிரதிபலிப்பதைப் போல இருக்கிறது. செம ஷார்ப்பான மெல்லிய ஏப்ரான், அதிலேயே செதுக்கியதுபோல் இருக்கும் LED ஹெட்லைட், வழக்கமான ஸ்கூட்டர்களில் ஹெட்லைட் இருக்கும் இடத்தில் LED DRL, பின் பக்கம் டிஸ்க் பிரேக் கொண்ட 12 இன்ச் வீல்கள், அட – ரியர்வியூ மிரர்கள்கூட அழகான டிசைன்.

விலை: ரூ.1.40 –1.66 லட்சம் (ஆன்ரோடு, சென்னை)
விலை: ரூ.1.40 –1.66 லட்சம் (ஆன்ரோடு, சென்னை)

ஏப்ரானுக்குக் கீழே ஒரு பிளாஸ்டிக் பேனல் கொடுத்திருந்தார்கள். ‘எதுக்குடா இது தேவையில்லாம’ என்று நினைத்தால், ஏதாவது சேதாரத்தில் இதை மட்டும் ஈஸியாக மாற்றிக் கொள்ளலாமாம். ஆனால், இது ஸ்கூட்டரின் ஏரோ டைனமிக்குக்கும் உதவுகிறது என்பது ஓட்டும்போது தான் தெரிந்தது. 450–க்கும் 450X–க்கும் பேட்ஜ் மட்டும்தான் வித்தியாசம்.

ப்ளாஸ்டிக் என்பதால், தரத்தில் சந்தேகப்பட வேண்டியதில்லை ஏத்தரில். ஃபிட் அண்ட் ஃபினிஷில் இருந்து பில்டு குவாலிட்டி வரை எல்லாமே பக்காவாக இருக்கிறது ஏத்தர் 450X. பில்லியனர் கால் வைப்பதற்காக இருக்கும் ஃபுட் ரெஸ்ட்கூட அவ்வளவு தரம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
1. டச் ஸ்க்ரீன் ரெஸ்பான்ஸ் அருமை. க்ளோவ்ஸ் மாட்டிக்கொண்டு ஆப்பரேட் செய்தால்கூட வேலை செய்கிறது.  2. ஸ்விட்ச்களின் தரம் அருமை.   3. ஏப்ரானிலேயே செதுக்கி வைக்கப்பட்ட LED ஹெட்லைட், செம ஸ்டைல்.  4. சார்ஜிங் பாயின்ட்... 5.30 மணி நேரத்தில் 100% சார்ஜ் ஏறுகிறது.
1. டச் ஸ்க்ரீன் ரெஸ்பான்ஸ் அருமை. க்ளோவ்ஸ் மாட்டிக்கொண்டு ஆப்பரேட் செய்தால்கூட வேலை செய்கிறது. 2. ஸ்விட்ச்களின் தரம் அருமை. 3. ஏப்ரானிலேயே செதுக்கி வைக்கப்பட்ட LED ஹெட்லைட், செம ஸ்டைல். 4. சார்ஜிங் பாயின்ட்... 5.30 மணி நேரத்தில் 100% சார்ஜ் ஏறுகிறது.

டச் ஸ்க்ரீன்

ஸ்கூட்டரில் உட்கார்ந்ததும் முதலில் கண்ணில் படுவது அந்தப் பெரிய டச் ஸ்க்ரீன்தான். இதில் புளூடூத் – வைஃபை கனெக்ட்டிவிட்டி உண்டு. உங்கள் போனில் லிங்க் செய்து கொண்டால், இன்கமிங் கால் அலெர்ட் – அல்லது ஏத்தர் ஆப் மூலம் உங்கள் மொபைலில் பாட்டுக் கேட்டுக் கொள்ளலாம். ஸ்கூட்டர் ஓட்டிக் கொண்டிருக்கும்போதே டச் ஸ்க்ரீனில் சிங்கிள் டச் மூலம் பதிலளித்துக் கொள்ளலாம். இது பாதுகாப்பு இல்லை என்று கருதினால், (நிச்சயம் இது பாதுகாப்பு இல்லைதான்) Toggle Switch மூலமும் இதை ஆப்பரேட் செய்து கொள்ளலாம்.

450–யை விட டச் ஸ்க்ரீனில் ரெஸ்பான்ஸ், இன்னும் மேம்பட்டிருக்கிறது 450X–ல். அதாவது, கைகளில் க்ளோவ்ஸ் மாட்டிக் கொண்டு ஆப்பரேட் செய்தாலும் டச் வேலை செய்கிறது. இதில் டார்க் மோடு ஆப்ஷனும் உண்டு. இது வெயில் காலத்தில் பளிச்செனத் தெரிவதற்காக! இந்த டச் ஸ்க்ரீனில் நேவிகேஷன் ஆப்ஷனும் உண்டு. ஜிபிஎஸ்–க்குத் தனியாக போனை எடுக்க வேண்டியதில்லை. இதெல்லாம் உங்கள் மொபைலில் இன்டர்நெட் கனெக்ட்டிவிட்டி 4G வேகத்தில் வேகமாக இருந்தால் மட்டும்தான் சாத்தியம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

என்ன புதுசு?

ஒரு வாகனத்தின் எடைதான் கையாளுமைக்கும் பெர்ஃபாமென்ஸுக்கும் மைலேஜுக்கும் (அதாவது, ரேஞ்சுக்கும்) முக்கியமான காரணி என்பதால், இது 2019–ல் வந்த ஏத்தர் 450–யைவிட 4 கிலோ எடை குறைவாக இருக்கிறது. முன் பக்கம் எடை குறைவான இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் இன்ஸ்டால் செய்தது, ஆன்போர்டு சார்ஜரை நீக்கியது, சாதாரண ட்யூபுலர் ஹேண்ட்பார் என அதற்கும் இதற்கும் நிறைய நல்ல வித்தியாசங்களைப் பார்க்க முடிகிறது. அதனால், ஹேண்ட்லிங் இப்போது மேலும் பக்காவாக இருக்கிறது. இதன் எடை 108 கிலோதான்.

சொய்ங்... எலெக்ட்ரிக் ட்ரெயின் ஏத்தர்!

பெர்ஃபாமன்ஸ், ரேஞ்ச்

450X–ல் இருப்பது புது லித்தியம்–அயன் பேட்டரி. பவர் நன்றாகக் கிடைக்க வேண்டும் என்பதற்காக, மோட்டாரையும் நன்றாக ட்யூன் செய்திருக்கிறார்கள். புது பேட்டரி பெரிதாகி இருக்கிறது. இதன் பேட்டரி திறனையும் கூட்டியிருக்கிறார்கள். பழைய 450–ல் இருந்தது 2.71kWh சக்தி இருந்தது. 450X–ல் 2.9kWh ஆக உயர்ந்திருக்கிறது இதன் பவர். இதனால் ரேஞ்சும் கணிசமாக உயர்ந்திருக்கிறது. அதாவது, எக்கோ மோடில் 85 கிமீ வரை கிடைக்கிறது 450X–ல். இதுவே 450 ஸ்டார்ண்டில் 75 கிமீ தந்தது. (எக்கோ மோடில்) சாதாரண வீட்டு சார்ஜரில் 5.45 மணி நேரம் சார்ஜ் ஏற்றினால், 100% சார்ஜ் ஏறுகிறது 450X.

சொய்ங்... எலெக்ட்ரிக் ட்ரெயின் ஏத்தர்!

ஏத்தர் 450X–ன் மோட்டார் பவர் 6kW. பழைய 450–ல் இருந்தது 5.4kWதான். மிக முக்கியமாக, 20.5Nm-ல் இருந்து 26Nm ஆக உயர்ந்திருப்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம். முன்பைவிட இனிஷியல் பிக்–அப் செமையாக இருந்தது.

ஸ்கூட்டரை பிரேக் பிடித்து ஆன் செய்தால், சத்தமே கேட்கவில்லை. இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டரில் Motor On எனும் பச்சை நிற வார்னிங்கை வைத்துத்தான் ஸ்கூட்டர் ஆன் ஆகியிருப்பதைத் தெரிந்து கொள்ள முடியும். ஆக்ஸிலரேஷன் கொடுக்கக் கொடுக்க, ‘சொய்ங்ங்ங்’ என ஒரு சத்தம். இது டிரைவ் பெல்ட்டிலிருந்து வரும் சத்தம். இது நிறைய பேருக்குப் பிடிக்குமா தெரியவில்லை. ஏதோ எலெக்ட்ரிக் ட்ரெயின் ஓட்டுவதுபோல் இருந்தது. எல்லோரும் திரும்பிப் பார்த்தார்கள். கெத்தாகத்தான் இருந்தது.

வழக்கம்போல Eco, Ride, Sport என 3 மோடுகள் கொடுத்திருந்தார்கள். ஸ்கூட்டர் ஓட்டிக் கொண்டே டாகிள் செய்து மாற்றிக் கொள்ளலாம். இதில் ரேஞ்சும் கணிசமாக மாறுகிறது. உதாரணத்துக்கு 33% பேட்டரியில் 22 கிமீ காட்டினால், ரைடு மோடில் 18 கிமீ ஆகவும், ஸ்போர்ட் மோடில் 15 ஆகவும் குறைகிறது. டிராஃபிக்கில் ஒழுங்குமரியாதையாக ஓட்ட எக்கோ மோடுதான் சரி. 45–க்கு மேல் போக முடியவில்லை. சிட்டிக்குள் புகுந்து புறப்பட்டு வர ரைடு மோடு. அவசர பார்ட்டிகளுக்கு ஸ்போர்டு மோடு. Sport மோடு நிஜமாகவே வேற லெவல்! சட் சட் எனச் சீறுகிறது! ஸ்போர்ட் மோடின் டாப் ஸ்பீடு 80 கிமீ.

ஏத்தரின் பெர்ஃபாமன்ஸ், கிட்டத்தட்ட 125சிசி ஸ்கூட்டர்களுக்கு இணையாக இருக்கிறது. 0–40 கிமீ–யை வெறும் 3.3 விநாடிகளுக்குள் கடந்தது ஏத்தர். 0–60 கிமீ–க்கு 6.5 விநாடிகள். வாவ்! இது, 125 சிசி ஸ்கூட்டர்களைவிட 1 விநாடி வேகம். நல்லவேளை – இதில் 100 கிமீ போக முடியாது. இல்லையென்றால், கார்களுக்கு இணையாக 10 விநாடிகளுக்குள் 100 கிமீ–யை எட்டிவிடும் போல! ஸ்போர்ட் மோடில் விரட்டிப் பார்த்தேன். 80 வரை பறந்தது. நிஜமாக, வேறு எந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரிலும் இதுபோன்று என்ஜாய் செய்து ஓட்டியதே இல்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஹேண்ட்லிங்

ஏத்தர் 450X–ல் இன்னொரு இம்ப்ரஸ்ஸிவ்வான விஷயம் – இதன் பிரேக்கிங். கேடிஎம், பல்ஸர் பைக்குகளுக்கு இணையான பிரேக்கிங் ஃபீட்பேக் கிடைக்கிறது. சடர்ன் பிரேக் அடித்தாலும், குலுங்கி எடுக்கவில்லை. இருந்தாலும், ஏத்தரில் ஏபிஎஸ்-க்கு ரெக்கமண்ட் செய்கிறோம். இதன் சஸ்பென்ஷன் செட்–அப்பையும் செமையாக டிசைன் செய்திருக்கிறார்கள். கொஞ்சம் இறுக்கமான செட்–அப்பாக இருந்தாலும், வேகமாகப் போய் பள்ளங்களில் இறக்கினால், சில ஸ்கூட்டர்களில் அதை உணர முடியும். ஏத்தர் 450X – உடலில் அதிர்வுகளை அவ்வளவாகக் கடத்தவில்லை. இதன் கி.கிளியரன்ஸ் 160 மிமீ என்பது இது மாதிரி ஸ்கூட்டர்களுக்கு வாவ் ரகம்தான்!

சொய்ங்... எலெக்ட்ரிக் ட்ரெயின் ஏத்தர்!

பின் பக்கம் அதே மோனோ ஷாக் சஸ்பென்ஷன் செட்–அப்தான். இதுதான் ஹைஸ்பீடிலும் ஸ்டெபிலிடிக்குத் துணை புரிகிறது. ஸ்டீல் அலுமினியம் ஹைபிரிட் சேஸி, 12 இன்ச் வீல்கள் – அப்படியே 450–ல் இருப்பதுதான் என்றாலும், 450X ஓட்டுவதற்கு இன்னும் ஃபன்னாக இருக்கிறது. வளைத்து ஓட்ட, அடடா! டயர்களில் கிரிப், பிரமாதம். எக்ஸ்ட்ரா ஹேண்ட்லிங் பார்ட்டிகளுக்காக, (மு:100/80–12, பி:110/80–12) என டிவிஎஸ் டயர்களையும் ஆப்ஷனாகத் தருகிறது ஏத்தர். என்ன, சரிவுகளில் இறங்காமல் இருக்க பிரேக் லாக் க்ளாம்ப் கொடுத்திருக்கலாம்.

ஏத்தர் 450X வாங்கலாமா?

450X–ல் Plus, Pro என இரண்டு மாடல்கள் உண்டு. இதன் ஆன்ரோடு விலைகள் முறையே 1.40 – 1.66 லட்சம். எம்மாடியோவ்! சாலையில் போகிறவர்கள் ‘எவ்வளவு ரேட்’ எனக் கேட்டு, பதிலைச் சொன்னதும் இப்படித்தான் வாயைப் பிளந்தார்கள். ஏத்தரில் சப்ஸ்க்ரிப்ஷன் ப்ளான் பற்றித் தெரிந்திருக்கும். இந்த 450X Plus–யை சப்ஸ்க்ரிப்ஷன் திட்டம் இல்லாமலே வாங்கலாம்.

இன்ஜின் பிரச்னை, ஆயில் மாற்றம், பீரியாடிக்கல் சர்வீஸ் என எதுவுமே இல்லை என பல ப்ளஸ்கள் இருந்தாலும், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களைப் பற்றிய ஒரு அண்டர் ஸ்டேட்மென்ட் எப்போதுமே இருந்து கொண்டேதான் இருக்கிறது. ஏத்தருக்கும் அப்படித்தான். அதை உறுதிப்படுத்துவது போல் இதன் விலையும் வாய் பிளக்கத்தான் வைக்கிறது. அதற்கு ஏற்றபடி இதன் தனித்துவமான டிசைன், 125 சிசி ஸ்கூட்டர்களுக்கு இணையான பெர்ஃபாமன்ஸ், செம பிரேக்கிங், ஃபன் டு டிரைவிங், டச் ஸ்க்ரீன் வசதிகள், கையைக் கடிக்காத பராமரிப்பு, அற்புதமான ரேஞ்ச் என மெனக்கெடவே செய்திருக்கிறது ஏத்தர். பெட்ரோல் ஸ்கூட்டர் ஓட்டுபவர்கள், ‘இந்த விலைக்கு நான் ஒரு புல்லட்டையே வாங்கிடுவேனே’ என்று நினைத்துவிட்டால்... என்ன செய்ய?