Published:Updated:

எப்படி இருக்கிறது இந்தியாவின் முதல் BS-6 ஸ்கூட்டர்?

ஹோண்டா ஆக்டிவா 125 BS-6
பிரீமியம் ஸ்டோரி
ஹோண்டா ஆக்டிவா 125 BS-6

ஃபர்ஸ்ட் ரைடு: ஹோண்டா ஆக்டிவா 125 BS-6

எப்படி இருக்கிறது இந்தியாவின் முதல் BS-6 ஸ்கூட்டர்?

ஃபர்ஸ்ட் ரைடு: ஹோண்டா ஆக்டிவா 125 BS-6

Published:Updated:
ஹோண்டா ஆக்டிவா 125 BS-6
பிரீமியம் ஸ்டோரி
ஹோண்டா ஆக்டிவா 125 BS-6

ஸ்கூட்டர் விற்பனையில் மட்டுமில்லை, தொழில்நுட்பத்திலும் நாங்கள்தான் முன்னோடி என்பதைக் காட்டும்விதமாக இந்தியாவின் முதல் BS-6 ஸ்கூட்டரை விற்பனைக்குக் கொண்டுவந்துவிட்டது ஹோண்டா. ஆக்டிவா 125 என்ற பெயரில் வந்திருக்கும் இது பழைய ஆக்டிவா 125 இல்லை. அடிப்படையில் இருந்து பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

எப்படி இருக்கிறது இந்தியாவின் முதல் BS-6 ஸ்கூட்டர்?

விலையும் எக்குத்தப்பாக உயர்ந்துள்ளது. நீங்கள் கொடுக்கப்போகும் இந்த எக்ஸ்ட்ரா விலைக்கு என்னென்ன மாற்றங்கள் இருக்கின்றன?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இன்ஜின் கொள்ளளவு மாறவில்லை; அதே 124 சிசி என்றாலும், அடிப்படையில் இருந்தே இந்த இன்ஜினில் பல மாற்றங்கள் உள்ளன. பழைய 52.4X57.9மிமீ போர்-ஸ்ட்ரோக் ரேஷியோவில் இருந்து இந்த இன்ஜின் 50X63.1மிமீ ரேஷியோவுக்கு மாறியுள்ளது. இதனால், பவர் மற்றும் டார்க் குறைந்துவிட்டது.

முன்பு இருந்த 8.63bhp பவருக்குப் பதிலாக இப்போது 8.29bhp பவர் மட்டுமே கிடைக்கிறது. 1.05kgm டார்க்குக்குப் பதிலாக 1.03kgm டார்க் கிடைக்கிறது.

எப்படி இருக்கிறது இந்தியாவின் முதல் BS-6 ஸ்கூட்டர்?
எப்படி இருக்கிறது இந்தியாவின் முதல் BS-6 ஸ்கூட்டர்?

இதுவரை ஆக்டிவா, 125சிசி செக்மென்ட்டின் வேகமான ஸ்கூட்டராக இருந்ததா? இல்லை. இப்போதும் அதே நிலைதான். இதில் எடையும் வேறு 3 கிலோ கூடிவிட்டது.

BS-6, Fi மட்டுமில்லை - ரிஃபைன்மென்ட், சவுண்டும் இந்த ஆக்டிவாவின் முன்னேற்றங்கள். ஹோண்டாவில் புதிதாக சைலென்ட் ஸ்டார்ட் சிஸ்டம் சேர்க்கப்பட்டுள்ளது. பழைய ஸ்டார்ட்டர் மோட்டாருக்குப் பதில் இதில் AC ஜெனரேட்டர் வரும். இதனால், ஒவ்வொரு முறை இன்ஜினை ஸ்டார்ட் செய்யும்போதும் ‘சக் சக் சக்...’ என கியர்கள் சத்தம் போடாது.

ஓட்டுதல் தன்மையில் பெரிய மாற்றம் இருப்பதாகத் தெரியவில்லை. அமைதியான, வைப்ரேஷன் இல்லாத ஓட்டுதல் என்பது ஏற்கெனவே ஆக்டிவா ரசிகர்கள் பழக்கப்பட்ட விஷயம். ஃப்யூல் கேப் வெளியே இருப்பது, பெட்ரோல் போடும் வேலையைச் சுலபமாக்குகிறது. பர்ஃபாமன்ஸ், சிட்டி ரைடிங்கில் போதுமானதாக இருக்கலாம். ஆனால், நெடுஞ்சாலையில் போதவில்லை. இன்ஜின் 70 கி.மீ வேகத்தைத் தாண்டிவிட்டால், அதிக அழுத்தத்தில் ஓடுவதை உணர முடிகிறது. இந்த ஆக்டிவாவில் அதிகபட்சம் 90 கி.மீ வேகம் வரை செல்லலாம்.

V-box டெஸ்ட்டில் 0-60 கி.மீ வேகம் செல்ல 11.2 நொடிகள் எடுத்துக் கொள்கிறது ஆக்டிவா. இந்த செக்மென்ட்டின் வேகமான ஸ்கூட்டர் டிவிஎஸ் என்டார்க்கைவிட இது 3 விநாடி அதிகம். சேஸி மாறவில்லை என்பதால் கையாளுமையில் பெரிய மாற்றம் இல்லை. ஒல்லியான டயர்களுடன் 12 இன்ச் வீல் முன் பக்கமும், 10 இன்ச் பின்பக்கமும் இருப்பது சிட்டியில் கையாளுமையைச் சுறுசுறுப்பாக்கினாலும், அதிக வேகத்தில் செல்ல நம்பிக்கை தருவதாக இல்லை.

 செமி-டிஜிட்டல் கன்சோலில் மைலேஜ் மற்றும் டிஸ்ட்டன்ஸ் to எம்ப்ட்டி வசதிகள் உண்டு.,  இனி பெட்ரோல் போட சீட்டைத் திறக்கத் தேவையில்லை. ,  க்ளோவ்பாக்ஸ் வசதியாக இருந்தாலும், இதன் மூடி ரொம்பவே மெல்லிசாக இருக்கிறது.
செமி-டிஜிட்டல் கன்சோலில் மைலேஜ் மற்றும் டிஸ்ட்டன்ஸ் to எம்ப்ட்டி வசதிகள் உண்டு., இனி பெட்ரோல் போட சீட்டைத் திறக்கத் தேவையில்லை. , க்ளோவ்பாக்ஸ் வசதியாக இருந்தாலும், இதன் மூடி ரொம்பவே மெல்லிசாக இருக்கிறது.

புது மாடலில் ப்ரீமியம் எக்ஸ்பீரியன்ஸ் தரும்விதமாக சில விஷயங்கள் இணைந்துள்ளன. பெட்ரோல் போட சீட்டைத் திறக்க வேண்டிய அவசியமில்லை. ஃபியூல் கேப் வெளியே வந்துவிட்டது. சைலன்ட் ஸ்டார்ட் சிஸ்டத்தை எல்லா வேரியன்ட்டிலும் ஸ்டாண்டர்டாகத் தருகிறார்கள்.

விலை அதிகமான டீலக்ஸ் வேரியன்ட்டில், ஐடிலிங்-ஸ்டார்ட்-ஸ்டாப் வசதி கூடுதலாக வருகிறது. இரண்டு டாப் வேரியன்ட்டுகளிலும் சைடு ஸ்டாண்ட் இன்ஜின் கட் வசதி, புது டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், LED ஹெட்லைட் போன்ற வசதிகள் வருகின்றன. இந்த இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், ஸ்கூட்டர் எவ்வளவு மைலேஜ் தருகிறது - இருக்கும் பெட்ரோலுக்கு எவ்வளவு தூரம் போகலாம் போன்ற தேவையான தகவல்களைக் காட்டுகின்றன.

 க்ளோவ்பாக்ஸ் வசதியாக இருந்தாலும், இதன் மூடி ரொம்பவே மெல்லிசாக இருக்கிறது.
க்ளோவ்பாக்ஸ் வசதியாக இருந்தாலும், இதன் மூடி ரொம்பவே மெல்லிசாக இருக்கிறது.

புதிதாக டிசைன் செய்யப்பட்ட ஹெட்லைட் ஏரியா, முகப்பு மற்றும் பக்கவாட்டுப் பகுதிகளில் க்ரோம் வேலைப்பாடுகள், முன்பக்கம் சிறிய க்ளோவ் பாக்ஸ் போன்றவை டிசைனில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்.

டிரம் பிரேக் மற்றும் ஸ்டீல் வீல்கள் கொண்ட ஆரம்ப வேரியன்ட் ரூ.83,748, அலாய் வீல் ரூ.87,677 மற்றும் டிஸ்க் பிரேக் வேரியன்ட் ரூ.91,442 என்ற ஆன்ரோடு விலைகளில் கிடைக்கின்றன. பழைய ஆக்டிவா 125 ஒப்பிடும்போது, கிட்டத்தட்ட 7,400 முதல் 10,301 ரூபாய் வரை விலை அதிகம். புது ஆக்டிவாவின் வெற்றி என்பது தற்போது போட்டியாளர்கள் வைக்கப் போகும் விலையைப் பொருத்தே இருக்கிறது.