ஆக்டிவா.... மாதத்துக்குச் சுமார் 2-2.5 லட்சம் எண்ணிக்கையில் விற்பனையாகும் இந்த ஸ்கூட்டரின் BS-6 வெர்ஷனைக் களமிறக்கிவிட்டது ஹோண்டா. நெரிசல்மிக்க மும்பைச் சாலைகளில், ஆக்டிவாவில் ஒரு ரைடு அடித்தோம்.

டிசைன் மற்றும் சிறப்பம்சங்கள்

அசப்பில் 5G போலவே இதுவும் இருந்தாலும், சிற்சில டிசைன் மாற்றங்கள் தெரிகின்றன. டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் முன்பக்க 12 இன்ச் வீல் அதற்கான உதாரணம் (உபயம்: ஆக்டிவா 125). டீலக்ஸ் மாடலின் LED ஹெட்லைட்டில் Position லைட் காணாமல் போய்விட்டாலும், அதனைச் சரிகட்டும் விதமாக, முகப்பில் உள்ள க்ரோம் வேலைப்பாட்டில் பொலிவு கூடியிருக்கிறது (ஸ்டாண்டர்டு மாடலில் ஹாலோஜன் ஹெட்லைட்தான்). ரியர் வியூ மிரர்களில் டியோவின் தாக்கம்.

அனலாக் ஸ்பீடோமீட்டரில் இன்ஜின் வார்னிங் இண்டிகேட்டர் புதிதாக இருந்தாலும், முன்பிருந்த எக்கோ மற்றும் சர்வீஸ் இண்டிகேட்டர் (டிஜிட்டல் ஸ்க்ரீன்) மிஸ்ஸிங்.

பாஸ் லைட் ஸ்விட்ச், Bar End Weight சேர்க்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஹோண்டாவின் பல பைக்குகளிலேயே இன்ஜின் கில் ஸ்விட்ச் இல்லாத நிலையில், ஆக்டிவா 6G-ல் அது இருப்பது வாவ்! இதிலேயே இன்ஜினை ஸ்டார்ட் செய்யவும் முடியும். கீ ஸ்லாட் வாயிலாக, தற்போது சீட் உடன் பெட்ரோல் டேங்க்கையும் திறக்கலாம். ஆனால் டியோ BS-6 போலவே, சோக் லீவர் இருந்த இடத்தில் ஸ்டோரேஜ் ஸ்பேஸ் கொடுத்திருக்கலாம்.

பெட்ரோல் டேங்க் மூடி, சீட்டுக்கு அடியிலிருந்து வெளியே வந்துவிட்டாலும், ஸ்டோரேஜ் ஸ்பேஸ் அதே அளவில்தான் இருக்கிறது (18 லிட்டர்). இதில் ISI ஹெல்மெட் வைக்கமுடிகிறது. ஆனால் இதற்கு பூட் லைட், மொபைல் சார்ஜிங் பாயின்ட் (ஆக்ஸசரியும் இல்லை) கொடுக்கப்படாதது நெருடல். H வடிவ டெயில் லைட், முன்பைவிட அளவில் பெரிதாகியிருக்கிறது. மெட்டல் பாடி கொண்ட ஆக்டிவா 6G-ன் ஃபிட் - ஃபினிஷ், கட்டுமானத் தரத்தில் பெரிதாக எந்தக் குறைபாடும் இல்லை. 6 கலர் ஆப்ஷன்கள் இருந்தாலும், முன்பிருந்த சில்வர் மற்றும் பிரவுன் நிறங்கள் இங்கே கொடுக்கப்படவில்லை.

இன்ஜின் பர்ஃபாமன்ஸ்

ஆக்டிவா BS-6 ஸ்கூட்டரில் இருக்கும் முற்றிலும் புதிய 109.51சிசி இன்ஜின்...எதிர்பார்த்தபடியே ஃப்யூல் இன்ஜெக்ஷன். வழக்கமான HET தவிர eSP, சைலன்ட் ஸ்டார்ட் போன்ற தொழில்நுட்பங்களும் உண்டு. இது முன்பைவிடக் குறைவான பவர் (7.8bhp@8,000rpm) மற்றும் டார்க்கையே (0.88kgm@5,250rpm) வெளிப்படுத்தினாலும், 5G-விட 10% அதிக மைலேஜைத் தரும் என்கிறது ஹோண்டா. எனவே ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு, 45-50 கி.மீ வரை மைலேஜை எதிர்பார்க்கலாம். இன்ஜின் ஸ்டார்ட் ஆவது தொடங்கி, அது டாப் ஸ்பீடில் இயங்குவது வரை செம ஸ்மூத்தாக இருக்கிறது.

ஏறக்குறைய அதிர்வுகளே இல்லாத இந்த இன்ஜினின் சீரான ஆக்ஸிலரேஷனுக்கு, Fi-தான் காரணம். ஆக்டிவா 6G-யை விரட்டி ஓட்டும்போது, ஸ்பீடோமீட்டரில் அதிகபட்சமாக 90 கி.மீ வரை பார்க்க முடிந்தது.

ஓட்டுதல் அனுபவம்

ஆக்டிவாவில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட அம்சமான டெலிஸ்கோபிக் ஃபோர்க், 6G-யின் ரைடிங்கை கணிசமாக முன்னேற்றியிருக்கிறது. முன்பக்கத்தில் பெரிய 12 இன்ச் வீல், கிரவுண்ட் கிளியரன்ஸ் 18மிமீ உயர்ந்திருப்பது ப்ளஸ் (171 மிமீ). தவிர ஸ்கூட்டரின் நீளம் 72 மிமீயும் (1,833 மிமீ), வீல்பேஸ் 22 மிமீயும் (1,260 மிமீ) அதிகரித்திருப்பதால், இந்த ஆக்டிவா நிலைத்தன்மையில் முன்பைவிட சூப்பர். ஆனால் யூ-டர்ன் போடும்போது, ஹேண்டில்பார் கால்களில் தட்டுப்படுவது மைனஸ்.

ஃப்ளோர்போர்டின் நீளமும் 23 மிமீ கூடியிருக்கிறது. எனவே பொருள்களை வைக்கவோ அல்லது கால்களை வசதியாக நீட்டவோ அதிக இடம் உள்ளது. 692மிமீ நீளத்தில் உள்ள சீட்டில், இருவர் வசதியாக உட்காரலாம். பின்பக்க ஷாக் அப்சார்பரை 3 Way அட்ஜஸ்ட் செய்ய முடியும் என்றாலும், அதை எத்தனை பேர் பயன்படுத்துவார்கள் எனத் தெரியவில்லை. புதிய அண்டர்போன் சேஸியில் முன்பைவிட 2 கிலோ எடை குறைந்துள்ளதால், கையாளுமையில் கொஞ்சம் துடிப்புத்தன்மையை உணரமுடிகிறது. மற்றபடி 10 இன்ச் பின்பக்க வீல், CBS உடனான 130மிமீ டிரம் பிரேக்ஸ், 3Ah MF பேட்டரி ஆகியவை அப்படியே தொடர்கின்றன.

முதல் தீர்ப்பு

முன்பைவிட 7,613 - 7,978 ரூபாய் அதிக விலையில் வந்திருக்கிறது 6G. டிவிஎஸ் ஜூபிட்டரை மனதில் கொண்டு, அதிக வசதிகளைத் தன்வசப்படுத்தியுள்ளது ஆக்டிவா 6G.

சில நெருடல்கள் - சைடு ஸ்டாண்டு இன்ஜின் கட் ஆஃப் ஸ்விட்ச் இல்லை; குறைந்தது சைடு ஸ்டாண்ட் வார்னிங் ஆவது வழங்கியிருக்கலாம். அலாய் வீல்கள் - முன்பக்க டிஸ்க் பிரேக் - ஸ்டார்ட்/ஸ்டாப் சிஸ்டம் ஆகியவையும் மிஸ்ஸிங். ஆனால் இவை பெரிய குறைகளாகத் தெரியவில்லை. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, இருபாலருக்கும் அனைத்து வயதினருக்கும் ஆக்டிவா 6G பிடிக்கும்.