Published:Updated:

சின்ன டியூக்கில் என்ன இருக்கு?

கேடிஎம் RC 125
பிரீமியம் ஸ்டோரி
கேடிஎம் RC 125

ஃபர்ஸ்ட் ரைடு: கேடிஎம் RC 125

சின்ன டியூக்கில் என்ன இருக்கு?

ஃபர்ஸ்ட் ரைடு: கேடிஎம் RC 125

Published:Updated:
கேடிஎம் RC 125
பிரீமியம் ஸ்டோரி
கேடிஎம் RC 125

டியூக் 200… வேகத்துக்கும் கையாளுமைக்கும் பெயர்பெற்ற இந்த பைக்கை ஓட்டிப் பார்த்தால் இதன் அனுபவம் தெரியும். அதைத் தொடர்ந்து ஃபேரிங்குடன் வந்த RC 200-லும் அதே த்ரில்லிங். சாலைகளைத் தாண்டி ரேஸ் டிராக்குக்கும் இதைக் கொண்டு சென்று, அந்தச் சில்லிடும் அனுபவத்தைப் பெற்றவர்கள் அதிகம். தற்போது அதே பாணியைத் தனது சிறிய பைக்குகளிலும் பின்பற்றியிருக்கிறது கேடிஎம். அதன்படி டியூக் 125-யைத் தொடர்ந்து, RC 125 பைக் வெளிவந்திருக்கிறது.

சின்ன டியூக்கில் என்ன இருக்கு?

டிசைன்

பர்ஃபாமன்ஸைத் தாண்டி, பளிச் பளிச் கலர்களுக்கும் கேடிஎம் பைக்குகள் பெயர் பெற்றிருக்கின்றன. இந்தியாவில் இரு கலர்களில் (ஆரஞ்ச், வெள்ளை) களமிறங்கியிருக்கிறது RC 125. ஆனால் சர்வதேச மாடலுடன் ஒப்பிடும்போது, பக்கவாட்டில் இருக்கும் எக்ஸாஸ்ட் பைப்புக்குப் பதிலாக, Underbelly எக்ஸாஸ்ட் இடம் பெற்றிருக்கிறது. மேலும் இந்திய மாடலின் சீட் உயரமான 835மிமீ, சர்வதேச மாடலைவிட 15மிமீ அதிகம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இன்ஜின் பர்ஃபாமன்ஸ்!

14.5bhp பவர் மற்றும் 1.25kgm டார்க்கை வெளிப்படுத்தும் 124.7சிசி இன்ஜின், முன்னே சொன்ன இரு பைக்குகளுக்குமே பொதுவானதுதான். அதிக ஆர்பிஎம்மில்தான் இவை கிடைக்கும் என்பதால், ஆக்ஸிலரேட்டரில் பலத்தைக் காட்டும் போதுதான் பைக் முன்னோக்கிச் செல்கிறது. ஆனால் கூடுதல் திறன்மிக்க கேடிஎம்களுடன் ஒப்பிட்டால், RC 125 பைக்கின் த்ராட்டில் ரெஸ்பான்ஸ் டல் ரகமே!

சின்ன டியூக்கில் என்ன இருக்கு?

இரட்டை புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ் உடனான ஃபுல் ஃபேரிங் மற்றும் கூடுதல் பாகங்கள் காரணமாக, டியூக் 125-யைவிட RC 125 பைக்கின் எடை 12 கிலோ அதிகரித்து விட்டது. ஆனால் இரு பைக்குகளையும் மாற்றி மாற்றி ஓட்டும்போதுதான், பர்ஃபாமன்ஸில் என்ன வித்தியாசம் இருக்கிறது என்பது தெரியும்.

ஓட்டுதல் அனுபவம்

RC 200 பைக்கின் அதே சேஸியையே RC 125 கொண்டிருப்பதால், திருப்பங்களில் இந்த பைக்கைச் செலுத்துவது நல்ல ஃபீலிங். ரேஸ் டிராக்கில் புதிதாக பைக் ஓட்டுபவர்களுக்கு ஏற்ற சாய்ஸாக இருந்தாலும், RC 200-ன் பர்ஃபாமன்ஸ் அதிகம் எனத் தோன்றுபவர்களுக்கு, RC 125 சிறந்த மாற்றாக இருக்கும். இந்த இரு பைக்குகளின் எடையும் ஏறக்குறைய ஒன்றுதான், பிரேக்குகளும் அதேதான்; ஆனால் ஒரே வித்தியாசம் - குறைவான வேகத்துக்குச் சிறப்பான பிரேக்கிங் திறன் ரைடருக்குக் கிடைக்கிறது.

முதல் தீர்ப்பு

USD ஃபோர்க், ட்ரெல்லிஸ் ஃப்ரேம், டிஜிட்டல் மீட்டர், ரேடியல் டியூப்லெஸ் டயர்கள், லிக்விட் கூல்டு Fi இன்ஜின் என மாடர்ன் அம்சங்கள் பைக்கில் இருப்பதால், எதிர்பார்த்தபடியே இதன் விலை அதிகம். அதாவது பவர் அதிகமான யமஹா YZF-R15 V3.0 பைக்கைவிடச் சுமார் 10 ஆயிரம் ரூபாய் அதிகம்!

சின்ன டியூக்கில் என்ன இருக்கு?

இது டியூக் 125 போல அறிமுக விலைதான் எனவும், பின்னாளில் விலை கணிசமாக அதிகரிக்கலாம் எனவும் முன்பே கேடிஎம் அறிவித்துவிட்டது. சைஸில் சிறிய கேடிஎம்கள், கொடுக்கும் காசுக்கான மதிப்பில் பின்தங்கினாலும், Beginner ஸ்போர்ட்ஸ் பைக்குகள் என்ற ரீதியில் டிஸ்டிங்ஷன் வாங்குகின்றன.