Published:Updated:

பல்ஸர் NS160-க்கு மாற்றா இந்த பல்ஸர் N160?

பல்ஸர் N160
பிரீமியம் ஸ்டோரி
பல்ஸர் N160

ஃபர்ஸ்ட் ரைடு: பல்ஸர் N160 பூபாலன், துளசிதரன் படங்கள்: ரமேஷ் கண்ணன்

பல்ஸர் NS160-க்கு மாற்றா இந்த பல்ஸர் N160?

ஃபர்ஸ்ட் ரைடு: பல்ஸர் N160 பூபாலன், துளசிதரன் படங்கள்: ரமேஷ் கண்ணன்

Published:Updated:
பல்ஸர் N160
பிரீமியம் ஸ்டோரி
பல்ஸர் N160

பல்ஸரின் மூன்றாவது ஜெனரேஷன் பைக் இது... பல்ஸர் தனது மூன்றவாது ஜெனரேஷன் பைக்குகளான N250, F250-பைக்குகளை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. அந்த பைக்குகளின் மினி வெர்ஷன்தான் இந்தப் புதிய பல்ஸர் N160. இது 100சிசி - 150சிசி வரை உள்ள கம்யூட்டர் பைக்குகளைவிடக் கொஞ்சம் அதிக அம்சங்களைக் கொண்ட 150சிசி- 250சிசி வரை உள்ள Naked செக்மென்ட் பைக். இந்த செக்மென்ட்டில் பஜாஜ் ஏற்கெனவே 250சிசி பைக்கை வைத்துள்ளது. அப்படியெனில் இந்த பல்ஸர் N160 எதற்கு எனத் தோன்றலாம். பொதுவாக பைக்கின் இன்ஜின் சிசி குறையக் குறைய அதன் மைலேஜ் அதிகரிக்கும். அந்த வகையில் 160சிசி-யில் வெளியாகியுள்ள இந்த பல்ஸர் N160 மைலேஜுக்கான ஒரு பைக்.

பல்ஸர் NS160-க்கு மாற்றா இந்த பல்ஸர் N160?

டிசைன்:

பல்ஸர் N250-யில் உள்ள அதே டிசைன்தான் இந்தப் புதிய பல்ஸர் N160-யிலும் உள்ளது. எந்தவித மாற்றமும் இல்லை. ஆனால் கலர், எக்ஸாஸ்ட்டில் மட்டும் சில மாற்றங்கள்... பல்ஸரின் அடையாளமாக இருக்கும் அதன் கறுப்புக் கலர் இதில் மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. அப்புறம் இதன் எக்ஸாஸ்ட். N250க்கும் N160க்கும் இடையே இருக்கும் பெரிய வேறுபாடு இதுதான். N250-யில் எக்ஸாஸ்ட் பக்கவாட்டில் நீண்டிருக்கும். ஆனால், இதில் NS 200-ல் உள்ளதுபோல இன்ஜினுக்கு அருகில் கீழ்ப்பக்கம் சிறிதாக `Under Belly' எக்ஸாஸ்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம், எக்ஸாஸ்ட் பக்கவாட்டில் இருப்பதைவிட மையத்தில் அமைத்திருந்தால், பைக்கின் கிராவிட்டியைச் சரியாகக் கையாள உதவும் என்பதுதான். மற்றபடி இதன் ஸ்டிக்கரை மட்டும் எடுத்துவிட்டால், N250-க்கும் இந்த N160-க்கும் வித்தியாசம் ஏதும் தெரியாது.

வீல்:

இதன் வீல்பேஸ் 358mm, N250யை விடக் கொஞ்சம் அதிகம். அது மட்டுமில்லாமல், ரொம்ப நாட்களாக எதிர்பார்த்த Dual channel ABS இதில் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆம், இதன் இரண்டு வீல்களிலும் Dual channel ABS வசதி உள்ளது. ஆனால் பிளாக் எடிசனில் மட்டும் (இப்போதைக்கு...). விரைவில் எல்லா கலரிலும் வரும் என்று கூறப்படுகிறது. இந்த Single channel ABS-க்கும் Dual channel ABS-க்கும் மெக்கானிக்கலாகவே நிறைய வேறுபாடுகள் உண்டு. சிங்கிள் சேனல் ஏபிஎஸ்-ல் முன்பக்க வீலின் டெலிஸ்கோப்பிக் அளவு 31mm, டிஸ்க் 280mm. அதே டூயல் சேனல் ஏபிஎஸ்-ல் டெலிஸ்கோப்பிக் அளவு 37mm, டிஸ்க் 300mm. பின்பக்க வீலில் N250க்கும், N160க்கும் ஒரே அளவுதான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 டிஜி-அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் டயல்களில் எல்லா விஷயங்களும் உண்டு.
டிஜி-அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் டயல்களில் எல்லா விஷயங்களும் உண்டு.

இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர்:

பல்ஸர் N250யில் பார்த்த அதே இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர்தான். பாதி அனலாக், பாதி டிஜிட்டல். கியர் இண்டிகேட்டர், கடிகாரம், பெட்ரோல் இண்டிகேட்டர், USB சார்ஜர் என ரைடு போவதற்குத் தேவையான அடிப்படையான விஷியங்கள் எல்லாம் இதில் உள்ளன.

சீட் உயரம் 795 மிமீ. எடை: டூயல் சேனல் ஏபிஎஸ் -ல் 154 கிலோ, சிங்கிள் சேனல் ஏபிஎஸ்-ல் 152 கிலோ. பெட்ரோல் டேங்க் 14 லிட்டர் கொள்ளளவு இருக்கிறது.

 ரைடிங் பொசிஷன் பக்கா.
ரைடிங் பொசிஷன் பக்கா.

இன்ஜின்:

இன்ஜினைப் பொறுத்தவரை இது ஒரு 164.8சிசி பவரும், 5 ஸ்பீடு கியர்பாக்ஸும் கொண்ட இன்ஜின். `பஜாஜின் பழைய இன்ஜின்களில் இருக்கும் அம்சம்கள் எதுவும் இதில் இல்லை. கியர்ஷிஃப்ட் ஸ்மூத்தாக இருக்கும். 2-வது கியரிலிருத்து 5 வது வரை இதன் பவர் லீனியராக இருக்கும், வைப்ரேஷன் இருக்காது' என்று கூறுகிறது பஜாஜ். மேலும் இது 160 சிசி செக்மென்ட் என்பதால், இதில் நான்கு வால்வு வருமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இதில் 2 வால்வு ட்வின் ஸ்பார்க் ஆயில் கூல்டு இன்ஜின்தான்.

 ஃபிட் அண்ட் ஃபினிஷ் அருமை.
ஃபிட் அண்ட் ஃபினிஷ் அருமை.

ரைடிங் பொசிஷன் மற்றும் பெர்ஃபாமன்ஸ்:

ஸ்போர்ட்டியான ரைடிங் பொசிஷன்தான் இதில் இருக்கிறது. லேசாகக் குனிந்து ஓட்டுவதுபோல இருக்கும். ரேஸ் ட்ராக்குகளில் ஓட்டினால், ஒரு ரேஸர் ஃபீல் தானாக வரும் என்று நினைக்கிறேன். ட்யூப்ளர் பிரேம் என்பதால், நேராகச் செல்லும்போது ஸ்டேபிளாக கிண்ணென்று இருக்கிறது. சிங்கிள் பார் ஹேண்டில் பார் சிட்டியில் கையாளுவதற்கு ஏதுவாக உள்ளது. பஜாஜ் முன்பே கூறியதுபோல் இது ஒரு ஸ்மூத்தான இன்ஜின்தான். ஆனால் 100 கிமீயைத் தாண்டும்போது லேசான அதிர்வுகள் தெரிகின்றன. மற்றபடி 2-வது கியரிலிருத்து 5-வது வரை ஒரே மாதிரியான நல்ல பவர். பிரேக்கிங்கைப் பொறுத்தவரை டூயல் சேனல் ஏபிஎஸ் நன்றாகவே வேலை செய்கிறது.

 795மிமீ உயர சீட், 14 லிட்டர் டேங்க்... நல்ல கிரிப் கிடைக்கிறது.
795மிமீ உயர சீட், 14 லிட்டர் டேங்க்... நல்ல கிரிப் கிடைக்கிறது.

இப்போது எதற்கு இந்தப் புதிய பல்ஸர் N160?:

பஜாஜிடம், ``160சிசி செக்மென்ட்டில் ஏற்கெனவே NS160 இருக்கும்போது, இப்போது எதற்கு இந்த பல்ஸர் N160?’’ என்று கேட்டபோது... ``NS160-ன் தயாரிப்பு கூடிய விரைவில் நிறுத்தப்படவுள்ளது. பஜாஜை இந்திய மார்க்கெட் பைக்காக மட்டும் பார்க்கிறீர்கள். ஆனால், பஜாஜ் சுமார் 68 நாடுகளுக்கு பைக்குகளை ஏற்றுமதி செய்து அனுப்புகிறது. குறிப்பிட்ட மாடல் இந்தியாவில் நிறுத்தப்படுகிறது; வேறு நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது என்றில்லை. எங்கு எது தேவைப்படுகிறதோ அதற்கு ஏற்றாற்போல தயார் செய்து அனுப்புகிறோம்; அவ்வளவுதான்!" என்றது பஜாஜ்.

நிறை, குறைகள்:

இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் பாதி அனலாக், பாதி டிஜிட்டல் என்றில்லாமல் முழுவதும் டிஜிட்டலாக இருந்திருக்கலாம். Connected Apps கொடுத்திருக்கலாம். பஜாஜ் பைக்கில் இருக்கும் சிறப்பு அதன் ஃபிட் அண்ட் ஃபினிஷ்தான். அது இந்த பல்ஸர் N160-யிலும் சிறப்பாகவும் தரமாகவும் உள்ளது.

பல்ஸர் NS160-க்கு மாற்றா இந்த பல்ஸர் N160?

விலை:

பல்ஸர் N160 சிங்கிள் சேனல் ஏபிஎஸ் ரூ.1.22 லட்சம்; டூயல் சேனல் ஏபிஎஸ் ரூ. 1.27 லட்சம். இது பல்ஸர் N250-யைவிட 20,000 ரூபாய் குறைவு. ஆனால் இரண்டிலும் பெரிய வேறுபாடுகள் இல்லை. N250-யை விட மைலேஜ் கொஞ்சம் அதிகம். இதன் மைலேஜ் 48.5kmpl என்று பஜாஜ் கூறுகிறது.