Published:Updated:

புது ஹிமாலயன்... அட்வென்ச்சர் அதிகமாகி இருக்கு!

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்
பிரீமியம் ஸ்டோரி
ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்

ஃபர்ஸ்ட் ரைடு ரிப்போர்ட்: 2021 ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்

புது ஹிமாலயன்... அட்வென்ச்சர் அதிகமாகி இருக்கு!

ஃபர்ஸ்ட் ரைடு ரிப்போர்ட்: 2021 ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்

Published:Updated:
ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்
பிரீமியம் ஸ்டோரி
ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்
மீட்டியார் 350.... கடந்த ஆண்டிலேயே அறிமுகமாகியிருந்தாலும், க்ளாஸிக் 350-க்கு அடுத்தபடியாக இன்றளவில் ராயல் என்ஃபீல்டின் பெயரை, மக்களிடம் கொண்டுச்சொல்லும் பைக் அதுதான்! தற்போது 2021 தொடங்கி 3 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், மேம்படுத்தப்பட்ட ஹிமாலயன் ADV-யை அந்த நிறுவனம் களமிறக்கியுள்ளது. கேடிஎம் 250 அட்வென்ச்சர், ஹீரோ எக்ஸ்பல்ஸ், பிஎம்டபிள்யூ G310GS என அட்வென்ச்சர் பைக் செக்மென்ட்டில் பலத்த போட்டி உண்டாகியிருக்கிறது. எனவே கூடுதல் சொகுசு மற்றும் பிராக்டிக்காலிட்டியை மனதில் வைத்து, பைக்கில் சில மாற்றங்களை ராயல் என்ஃபீல்டு செய்திருப்பதாகத் தகவல் வந்திருக்கிறது. அவை எதிர்பார்த்த பலனைத் தருகிறதா?

டிசைன் மற்றும் சிறப்பம்சங்கள்

ஹிமாலயனின் வடிவமைப்பில் எந்த மாறுதலும் இல்லாவிட்டாலும், சிற்சில அம்சங்கள் புதிதாக இடம்பெற்றுள்ளன. மீட்டியார் 350-ல் நாம் பார்த்த Tripper நேவிகேஷன் சிஸ்டம், அதற்கான சிறந்த உதாரணம். இந்தச் சிறிய வட்டமான கலர் டிஸ்பிளே, ரைடர் செல்ல வேண்டிய திசையைக் கச்சிதமாகக் காட்டுகிறது. ராயல் என்ஃபீல்டின் மொபைல் ஆப் மற்றும் புளூடுத் உதவியுடன், இந்த வசதியைப் பயன்படுத்தலாம். ஆனால் இதில் ஃபோன் Notifications தெரியாது என்பது நல்ல விஷயம். இதனால் ரைடரின் கவனம் சாலையிலேயே இருக்கும்; பைக்கில் ஏற்கெனவே இருந்த பெரிய இன்ஸ்ட்ரூமென்ட் பேனலில் Tripper நேவிகேஷன் இணைக்கப்பட்டுள்ளதால், எதிர்பார்த்தபடியே விண்ட் ஸ்க்ரீனும் மாறியிருக்கிறது. இது முன்பைவிடப் பெரிதாகவும் அகலமாகவும் உள்ளது செம. எதிர்க்காற்று முகத்தில் அறைவதைத் தடுக்கும் இது, Tinted ஃபினிஷில் வருவதும் நன்மையே! ஆனால் LED/ப்ரொஜெக்டர் ஹெட்லைட் இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

புது ஹிமாலயன்... அட்வென்ச்சர் அதிகமாகி இருக்கு!

அடுத்தபடியாக, 15 லிட்டர் பெட்ரோல் டேங்க்கைச் சுற்றியிருந்த மெட்டல் ஃப்ரேமின் அளவு குறைந்திருக்கிறது. எனவே இது ரைடர்களின் கால்களை இடிக்கிறது என்ற பிரச்னை இனி இல்லை. 800மிமீ உயரத்தில் இருக்கும் ஸ்ப்ளிட் சீட்களின் குஷனிங், நீண்ட தூரப் பயணங்களுக்கு ஏற்றபடி மேம்பட்டுள்ளது. மற்றபடி பில்லியன் சீட்டின் பின்னே இருந்த Metal Rack அளவில் சிறிதாகியிருந்தாலும், அதன் மேலே ஒரு மெட்டல் ப்ளேட் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் 7 கிலோ வரையிலான எடையை அது தாங்கும். ஹிமாலயனின் ஃபிட் அண்டு ஃபினிஷ், க்ளாஸிக் 350 பைக்கைவிட நன்றாகவே உள்ளது. என்றாலும், ஃப்ரேமில் செய்யப்பட்டுள்ள வெல்டிங்கின் ஃபினிஷ், இன்னும் கொஞ்சம் பெட்டராக இருந்திருக்கலாம். எக்ஸாஸ்ட் மேலே இருக்கும் ப்ளேட், மேட் கறுப்பு நிறத்தில் இருப்பது நைஸ். Pine Green, Granite Black, Mirage Silver எனும் 3 புதிய நிறங்களில் கிடைக்கும் இந்த ADV பைக், ராயல் என்ஃபீல்டின் ‘Make It Yours’ திட்டத்தின் கீழ் வருகிறது.

அதே இன்ஸ்ட்ரூமென்ட் பேனல்தான். மீட்டியாரில் இருந்த ட்ரிப்பர் நேவிகேஷன் சிஸ்டம் இருக்கிறது.
அதே இன்ஸ்ட்ரூமென்ட் பேனல்தான். மீட்டியாரில் இருந்த ட்ரிப்பர் நேவிகேஷன் சிஸ்டம் இருக்கிறது.
Metal Rack அளவு சிறுசு ஆகியிருந்தாலும், முன்பைவிட 7 கிலோ எடையைத் தாங்கும்
Metal Rack அளவு சிறுசு ஆகியிருந்தாலும், முன்பைவிட 7 கிலோ எடையைத் தாங்கும்

இன்ஜின் பெர்ஃபாமன்ஸ்

ஹிமாலயனின் தோற்றத்தைப் போலவே, பைக்கின் இன்ஜினிலும் எந்த மாறுதலும் இல்லை. இதிலிருக்கும் 411சிசி ஆயில் கூல்டு இன்ஜின், 24bhp@6,500rpm பவர் - 3.2kgm@4,500rpm டார்க்கைத் தருகிறது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸுடன், இந்த 2 வால்வ் - Long Stroke இன்ஜின் இணைக்கப்பட்டுள்ளது. 80-100கிமீ வேகத்தில் க்ரூஸ் செய்யும்போது, பைக் ரிலாக்ஸ்டான அனுபவத்தைத் தருகிறது. இன்ஜினும் ஸ்மூத்தாக இயங்குவதால், ஆக்ஸிலரேட்டரில் பலத்தைக் காட்டும்போது, 120கிமீ வேகம் வரை ஓரளவுக்கு ஈஸியாவே ஹிமாலயன் எட்டிவிடும். அதன் பின்னே, இந்த Fi-SOHC இன்ஜினின் பவர் குறைபாடு வெளிச்சத்துக்கு வந்துவிடுகிறது. தவிர 7,500 ஆர்பிஎம் ரெட்லைனை எட்டும்போது, பைக்கில் அதிர்வுகளை உணர முடிகிறது. குறைவான வேகம் - அதிக கியரில் நகரச்சாலைகளில் பயணிக்கலாம் என்றாலும், 2,000 ஆர்பிஎம் வரை இன்ஜின் சுணக்கத்துடனேயே இருக்கிறது. மேலும் அவ்வப்போது தெரியும் இன்ஜின் சூடு, இது ஒரு பெரிய சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் என்பதை நினைவுபடுத்துகிறது. அலாய் லீவர்கள் இருந்தாலும், ஸ்லிப்பர் க்ளட்ச் எங்கே?

ஃபிட் அண்ட் ஃபினிஷ், க்ளாஸிக்கைவிட தரம். 15 லிட்டர் டேங்க்கைச் சுற்றியுள்ள மெட்டல் ஃப்ரேமின் அளவு குறைந்துள்ளதால், கால் இடிக்காது.
ஃபிட் அண்ட் ஃபினிஷ், க்ளாஸிக்கைவிட தரம். 15 லிட்டர் டேங்க்கைச் சுற்றியுள்ள மெட்டல் ஃப்ரேமின் அளவு குறைந்துள்ளதால், கால் இடிக்காது.
800 மிமீ சீட் உயர ஸ்ப்ளிட் சீட், நல்ல குஷனிங்.
800 மிமீ சீட் உயர ஸ்ப்ளிட் சீட், நல்ல குஷனிங்.

ஓட்டுதல் அனுபவம்

சேஸி மற்றும் சஸ்பென்ஷனில் எந்த வித்தியாசமும் இல்லை என்பதால், கொஞ்சம் இறுக்கமான, அதேசமயத்தில் மென்மையான ஓட்டுதல் அப்படியே கிடைக்கிறது. சீரான சாலைகளில் க்ரூஸ் செய்வதுடன் ஒப்பிடும்போது, கொஞ்சம் கரடுமுரடான சாலைகளில் வேகமாகச் செல்லும்போது பைக்கின் நிலைத்தன்மை கொஞ்சம் குறைவுதான் (உபயம்: Ceat டூயல் Purpose டயர்கள்). இதன் BS-4 மாடலைவிட பிரேக்கிங் ரெஸ்பான்ஸ் இங்கே நன்றாக இருந்தாலும், ஃபீட்பேக்கில் இன்னும் முன்னேற்றம் தேவைப்படுகிறது (முன்: 300மிமீ டிஸ்க், பின்: 240மிமீ டிஸ்க்). இங்கே டூயல் சேனல் ஏபிஎஸ் இருந்தாலும், தேவைப்படும்போது பின்பக்கச் சக்கரத்தில் ஏபிஎஸ்ஸை ஆஃப் செய்துகொள்ளமுடியும்.

புது ஹிமாலயன்... அட்வென்ச்சர் அதிகமாகி இருக்கு!

பெரிய 21 இன்ச் வீல் (90/90 சைஸ் டயர்) மற்றும் நீளமான 1,465மிமீ வீல்பேஸ் இருந்தாலும், ஹிமாலயனைக் கையாள்வது கடினமாக இல்லை. Long Travel சஸ்பென்ஷன் மற்றும் 220மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் சேரும்போது, ஆஃப் ரோடில் அசைக்க முடியாத தயாரிப்பாக இது திகழ்கிறது. ஆனால் பைக்கின் 199 கிலோ எடையை (போட்டியாளர்களைவிட அதிகம்தான்) வைத்துப் பார்க்கும்போது, க்ளாஸிக் 500/கான்டினென்ட்டல் ஜிடி 535 பைக்குகளுக்கு இணையான செயல்திறனை இந்த பைக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும்? பின்பக்க 120/90-17” டயர், இன்னும் கூடப் பெரிதாக இருந்திருக்கலாம்.

முதல் தீர்ப்பு

2.01 லட்ச ரூபாய் என்று சென்னை எக்ஸ்-ஷோரூம் விலையில் வந்திருக்கும் 2021 ஹிமாலயன், முன்பிருந்த மாடலைவிடச் சுமார் 10,000 ரூபாய் அதிக விலையில் அறிமுகம் ஆகியுள்ளது. பைக்கில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களுடன் ஒப்பிடும்போது விலை உயர்வு அதிகம்தான். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, மேலும் சில வசதிகளை இந்த ADV-ல் ராயல் என்ஃபீல்டு சேர்த்திருக்கலாம். இன்னும் சொல்லப்போனால், ஒரு ஹிமாலயன் வாங்கும் காசில், கிட்டத்தட்ட இரு எக்ஸ்பல்ஸ் பைக்குகளையே வாங்கிவிடலாம்; ஆனால் போட்டியாளர்களைவிட இந்த பைக்கின் விலை குறைவு என்பதுடன், ஆஃப் ரோடில் இதன் அளவுக்கு அவை அசத்தவில்லை. எனவே அதுவரை ஹிமாலயன் காட்டில் அடைமழைதான்!