Published:Updated:

ஏத்தர் எலெக்ட்ரிக்... ப்ளஸ்ஸும் இருக்கு... மைனஸும் இருக்கு...

ஏத்தர் 450X
பிரீமியம் ஸ்டோரி
ஏத்தர் 450X

ப்ர்ஸ்ட் ரைடு ரிப்போர்ட்: ஏத்தர் 450X

ஏத்தர் எலெக்ட்ரிக்... ப்ளஸ்ஸும் இருக்கு... மைனஸும் இருக்கு...

ப்ர்ஸ்ட் ரைடு ரிப்போர்ட்: ஏத்தர் 450X

Published:Updated:
ஏத்தர் 450X
பிரீமியம் ஸ்டோரி
ஏத்தர் 450X

த்தர் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான 450, நம் நாட்டில் கிடைக்கக் கூடிய சிறந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் ஒன்று. தற்போது இதன் மேம்படுத்தப்பட்ட மாடலாக வந்திருக்கும் 450X, பர்ஃபாமன்ஸ் - பேட்டரி - வசதிகள் ஆகியவற்றில் என்ன முன்னேற்றத்தைப் பெற்றிருக்கிறது? பெயரில் இருக்கும் X-க்கு ஏற்றபடி இருக்கிறதா இந்த ஏத்தர் EV?

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

டிசைன் மற்றும் வசதிகள்

இதற்கும், முந்தைய 450-க்கும் பெரிதாகத் தோற்றத்தில் எந்த மாறுதலும் தெரியவில்லை. ஏனெனில் - ஷார்ப்பான ஆப்ரான், நீட்டான LED ஹெட்லைட், வெளியே தெரியும் சப்-ஃப்ரேம் என எதிர்காலத்துக்கான டிசைன் 450X-ல் தொடர்கிறது. ஆனால் வழக்கமான 450 உடன் ஒப்பிட்டால், 450X-ல் கூடுதலாக X பேட்ஜிங் மற்றும் மூன்று புதிய கலர் ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது (வெள்ளை, பச்சை, மேட் கிரே).

ஏத்தர் 450X
ஏத்தர் 450X

மற்றபடி பாகங்களின் தரம், ஃபிட் அண்டு ஃபினிஷ் ஆகியவை அட்டகாசம். புதிதாக வழங்கப்பட்டிருக்கும் 7 இன்ச் டச் ஸ்க்ரீனில், எதிர்பார்த்தபடியே அதிக வசதிகள். ஆண்ட்ராய்டை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் இது, புளூடுத் - 4G - வைஃபை கனெக்ட்டிவிட்டி உடன் வருகிறது. எனவே ஏத்தர் அப்ளிகேஷனைப் பயன்படுத்தும்போது, மொபைல் Pairing - கால் அலெர்ட்ஸ் - மியூசிக் போன்ற அம்சங்கள் கிடைக்கின்றன. டச் ஸ்க்ரீனின் ரெஸ்பான்ஸ் முன்பைவிடச் சிறப்பாக இருக்கிறது. சைடு ஸ்டாண்ட் சென்சார் புதுசு என்பதுடன். 450X-ன் Gradeability 20 டிகிரியாக அதிகரித்திருக்கிறது (450: 18 டிகிரி). மற்றபடி அதே வடிவமைப்பு என்றாலும், 11 கிலோ எடை குறைந்திருக்கிறது ஏத்தர் 450X.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பர்ஃபாமன்ஸ் எப்படி?

லித்தியம் ஐயன் பேட்டரி, பேட்டரி மேனேஜ்மென்ட் சிஸ்டம், எலெக்ட்ரிக் மோட்டார் ஆகியவை மேம்படுத்தப்பட்டுள்ளதால், பர்ஃபாமன்ஸில் கணிசமான மாற்றத்தை உணர முடிகிறது. 450-ல் பேட்டரியின் திறன் 2.71kWh. 450X-ல் 2.9kWh ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் வெளிப்பாடாக, ரேஞ்ச் 75 கி.மீ-யில் இருந்து 85 கி.மீ (எக்கோ மோடில் ஓட்டும்போது) ஆக உயர்ந்திருக்கிறது. இதுவே ரைடு மோடில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இயக்கினால், ஃபுல் சார்ஜில் 70 கி.மீ வரை செல்லலாம் (450: 65 கி.மீ). மேலும் எலெக்ட்ரிக் மோட்டாரின் உச்சபட்ச பவர் 6kW ஆகவும் (450 - 5.4kW), உச்சபட்ச டார்க் 2.6kgm (450 - 2.05kgm) ஆகவும் கூடியுள்ளது. 450 போலவே, 450X மாடலிலும் மூன்று ரைடிங் மோடுகள் (எக்கோ, ரைடு, ஸ்போர்ட்) உள்ளன. அவற்றின் பெயருக்கேற்ப, அவை இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆக்ஸிலரேஷன் மற்றும் பர்ஃபாமன்ஸில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன.

 நீட்டான LED ஹெட்லைட் டிசைன், 
செம ஷார்ப் லுக்.
நீட்டான LED ஹெட்லைட் டிசைன், செம ஷார்ப் லுக்.

இதில் புதிதாக இணைந்திருக்கும் Warp மோடு, வேற லெவலில் இருக்கிறது! இந்த மோடில் 450X-யை ஓட்டும்போது, ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்த அளவுக்கு பவர்ஃபுல் ஆக்ஸிலரேஷனைக் கொண்டிருக்குமா என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. காரணம் இது 0 - 40கிமீ வேகத்தை 3.3 விநாடிகளிலும் (முன்பு 3.9 விநாடிகள்), 0 - 60 கி.மீ வேகத்தை 6.5 விநாடிகளிலும் எட்டிப்பிடிக்கிறது 450X. இப்படி 125சிசி ஸ்கூட்டர்களைவிட வேகமாக இருக்கும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப் ஸ்பீடு 80 கி.மீதான்.

 வழக்கமான சார்ஜரில் 5.45 மணி நேரம். 
ஃபாஸ்ட் சார்ஜிங் ஆப்ஷனும் உண்டு.
வழக்கமான சார்ஜரில் 5.45 மணி நேரம். ஃபாஸ்ட் சார்ஜிங் ஆப்ஷனும் உண்டு.

சப்ஸ்கிரிப்ஷன் ப்ளானா... அப்படினா?

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் மைனஸ் பாயின்ட் என்ன? 450X-ன் எக்ஸ்-ஷோரூம் விலையான 99,000 ரூபாயுடன், ஏத்தர் வழங்கக்கூடிய மாதாந்திரத் திட்டத்தில் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும். 1,999 ரூபாய் மதிப்புள்ள Pro ப்ளானின்படி, பர்ஃபாமன்ஸ் (6kW பவர், 2.2kgm டார்க்) - கிடைக்கக்கூடிய பேட்டரி திறன் (2.4kWh) மற்றும் ரேஞ்ச் (85கிமீ) என எல்லாமே அதிகபட்ச செட்டிங்கில் இருக்கின்றன. இதனுடன் இலவசமாக ஏத்தர் Grid-ன் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் (1.5km/Min - 3.35 மணி நேரத்தில் 80% சார்ஜ்) கிடைக்கிறது. இதுவே விலை குறைவான (1,699 ரூபாய்) Plus ப்ளானை செலக்ட் செய்தால், இதில் பவர் (5.4kW) - டார்க் (2.2kgm) - கிடைக்கக்கூடிய பேட்டரி திறன் (2.4kWh) - ரேஞ்ச் (75 கி.மீ) ஆகக் குறைந்துவிடுகிறது; ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், மொபைல்களில் இருக்கக்கூடிய டேட்டா பிளான்களை நினைவுபடுத்தும் விதமாகவே ஏத்தரின் சப்ஸ்க்ரிப்ஷன் திட்டம் அமைந்திருக்கிறது. ஒருவேளை இந்த மாதாந்திர ப்ளான் வேண்டாம் என்றால், ஒரேடியாக 1.49 லட்ச ரூபாய் (Plus ப்ளான்) அல்லது 1.59 லட்ச ரூபாய் (Pro ப்ளான்) செலுத்த வேண்டும். ஆனால் இதில் OTA அப்டேட் தரக்கூடிய ஏத்தர் கனெக்ட் திட்டத்திற்கான தொகை சேராது என்பதுடன், ஏத்தர் Grid ஃபாஸ்ட் சார்ஜரையும் இலவசமாகப் பயன்படுத்த முடியாது.

 கார்கள்போல 7 இன்ச் டச் ஸ்க்ரீன்... புளூடூத், ஆண்ட்ராய்டு, 4G கனெக்ட்டிவிட்டியோடு...
கார்கள்போல 7 இன்ச் டச் ஸ்க்ரீன்... புளூடூத், ஆண்ட்ராய்டு, 4G கனெக்ட்டிவிட்டியோடு...

ஓட்டுதல் அனுபவம்

450-ல் இருக்கக்கூடிய அதே ஸ்டீல் - அலுமினியம் ஹைபிரிட் சேஸி, 12 இன்ச் வீல்கள், சஸ்பென்ஷன் செட்-அப், டிஸ்க் பிரேக்ஸ் என அதே மெக்கானிக்கல் பாகங்கள்தான் 450X எலெக்ட்ரிக் ஸ்கூட்டரிலும் இடம்பிடித்துள்ளன. ஆனால் டெலிஸ்கோபிக் ஃபோர்க், முன்பைவிட இறுக்கமான செட்டிங்குக்கு மாறியுள்ளது. இதனால் கையாளுமை ஸ்போர்ட்டியாக இருந்தாலும், கரடுமுரடான சாலைகளில் செல்லும்போது அந்த அதிர்வுகள் ரைடருக்குக் கடத்தப்படுவது நெருடல். பின்பக்க மோனோஷாக் அதே செட்டிங்கில் இருப்பதால், குறைவான வேகத்தில் சீரற்ற சாலைகளில் செல்லும்போது ஸ்கூட்டர் கொஞ்சம் குதிப்பதுபோல இருப்பது தொடர்கிறது. 450X-ல் உள்ள எலெக்ட்ரிக் மோட்டாரின் சத்தம், சிலருக்கு வித்தியாசமாகத் தெரியலாம். வழக்கமான சார்ஜரைப் பயன்படுத்தும்போது, பேட்டரியை ஃபுல் சார்ஜ் ஏற்ற 5 மணி நேரம் 45 நிமிடங்கள் ஆகிறது.

ஏத்தர் 450X
ஏத்தர் 450X

முதல் தீர்ப்பு

பெட்ரோலில் இயங்கும் ஸ்கூட்டர்களுக்குப் போட்டியாக, சுற்றுச்சூழல் மாசைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஏத்தர், பஜாஜ், டிவிஎஸ் ஆகியோர் எலெக்ட்ரிக் பாதையில் தடம் பதித்திருப்பது வரவேற்கத்தக்கது. ஸ்டைலான டிசைன், ஒட்டுமொத்தத் தரம், மாடர்ன் தொழில்நுட்பம் ஆகியவற்றைக் கொண்டுள்ள ஏத்தர் 450X, அனைவராலும் விரும்பத்தக்க தயாரிப்பாக இருக்கும் வகையில் இதன் பர்ஃபாமன்ஸ் அமைந்திருக்கிறது. ஆனால் என்னதான் நியாயம் கற்பித்தாலும், அதன் விலை மற்றும் ரேஞ்ச் யோசிக்க வைக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism