Published:Updated:

பெனெல்லி எது ஓகே? எது ஓகே இல்லை!

பெனெல்லி இம்பீரியல்
பிரீமியம் ஸ்டோரி
News
பெனெல்லி இம்பீரியல்

ஃபர்ஸ்ட் ரைடு ரிப்போர்ட்: பெனெல்லி இம்பீரியல் 400 BS-6

ம்பீரியல் 400... பெனெல்லியின் இந்த ரெட்ரோ பைக், அந்தப் பிரிவில் தனிக்காட்டு ராஜாவாகக் கோலோச்சிக் கொண்டிருந்த ராயல் என்ஃபீல்டு க்ளாஸிக் 350 பைக்கை அசைத்துப் பார்த்தது நினைவிருக்கலாம். மேலும் கடந்தாண்டு நடந்த ஒப்பீட்டில், இது தனது போட்டியாளர்கள் அனைத்தையும் வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தது. தற்போது இந்த செக்மென்ட்டில் புதிய போட்டியாளர்கள் வந்திருக்கும் நேரத்தில், இம்பீரியல் 400 பைக்கை BS-6 விதிகளுக்கு மேம்படுத்திக் களமிறக்கியுள்ளது பெனெல்லி. என்னென்ன மாறுதல்கள் இதில் இருக்கின்றன?

பெனெல்லி எது ஓகே? எது ஓகே இல்லை!

இன்ஜின் பெர்ஃபாமன்ஸ் மற்றும் மைலேஜ்

இம்பீரியல் 400 BS-6 பைக்கில் இருப்பது, 374சிசி - சிங்கிள் சிலிண்டர் இன்ஜின். இந்த Long Stroke - SOHC இன்ஜினை BS-6 விதிகளுக்கு அப்டேட் செய்வதற்காக, எக்ஸாஸ்ட்டில் Secondary Catayser & புதிய ஏர் ஃபில்டர் பொருத்தப்பட்டுள்ளது. இது BS-4 மாடல் போலவே 21bhp@6000rpm பவர் & 2.9kgm@3,500rpm டார்க்கையும் தருகிறது. என்றாலும், அந்தச் செயல்திறன் வெளியாகும் ஆர்பிஎம்மில் மாறுதல் தெரிகிறது. எனவே முன்பைவிடக் குறைவான ஆர்பிஎம்மில் அதிக டார்க் கிடைப்பதால், த்ராட்டில் ரெஸ்பான்ஸ் உடனடியாக உள்ளது. அதனை உறுதிப்படுத்தும் வகையில், கியர்களுக்கு இடையேயான வேகத்தில் இது BS-4 மாடலைவிட வேகமாக இருக்கிறது. தவிர BS-6 மாடலின் ஆக்ஸிலரேஷனில் எந்தச் சரிவும் இல்லாதது ப்ளஸ்.

பெனெல்லி எது ஓகே? எது ஓகே இல்லை!

அதற்கேற்ப 0-60 கிமீ வேகத்தை, முன்புபோலவே 4.99 விநாடிகளில் இந்த பெனெல்லி பைக் தொட்டுவிடுகிறது. இதுவே 0-100கிமீ வேகத்தை எட்டுவதற்கு, 14.43 விநாடிகள் தேவைப்படுகிறது மொத்தமாகப் பார்த்தால், க்ளாஸிக் 350-யை விட இந்த பைக்கின் ஆரம்ப கட்ட பெர்ஃபாமன்ஸ் சிறப்பாக உள்ளது. இதனுடன் ரசிக்கும்படியான எக்ஸாஸ்ட் சத்தம் அப்படியே தொடர்வதும் செம. 5 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ள இந்த ஏர் கூல்டு - 4 வால்வ் இன்ஜின், முன்பைவிட ரிலாக்ஸ்டாக இயங்குவதால், BS-4 மாடலைவிட BS-6 வெர்ஷன் அதிக மைலேஜைத் தருகிறது. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு நகரத்தில் 31.65கிமீயும், நெடுஞ்சாலைகளில் 37.25கிமீயும் செல்கிறது இம்பீரியல் 400. 12 லிட்டர் பெட்ரோல் டேங்க், இன்னும் கொஞ்சம் பெரிதாக இருந்திருக்கலாம்.

பெனெல்லி எது ஓகே? எது ஓகே இல்லை!

ஓட்டுதல் அனுபவம்

இம்பீரியல் 400-ன் டிசைன் மற்றும் வசதிகளில் எந்த மாற்றமும் இல்லை. 1950-களில் விற்பனையான பெனெல்லி - MotoBi பைக்குகளைப் பின்பற்றி, இது வடிவமைக்கப்பட்டது தெரிந்ததே. எனவே இந்த பெனெல்லி பைக்கின் ஓட்டுதலில் எந்த மாறுதலும் இல்லை. கரடுமுரடான சாலைகளில் செல்ல நேரிடும்போது, பைக்கின் பின்பக்கம் கொஞ்சம் நிலையாக இல்லாததுபோலத் தோன்றுகிறது (Series Spring அல்லது அதிக சஸ்பென்ஷன் டிராவல், இதற்கான தீர்வாக இருக்கலாம்). ஆனால் 165மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் & டிஸ்க் பிரேக்ஸின் செயல்பாடு, போதுமான அளவில் இருக்கிறது. நீளமான 1,440மிமீ வீல்பேஸ் உடன், ஓரளவுக்கு அகலமான டயர்கள் சேரும்போது, பைக்கின் நிலைத்தன்மை எதிர்பார்த்தபடியே சிறப்பாக உள்ளது. 780மிமீதான் சீட் உயரம் என்பதால், பலருக்கு இந்த பைக்கை ஓட்டுவதில் பிரச்னை இருக்காது. ஆனால் 205 கிலோ எடை என்பது, ராயல் என்ஃபீல்டின் இன்டர்செப்டர் 650 பைக்கைவிட அதிகம்! இதனால் போட்டி பைக்குகளுடன் ஒப்பிடும்போது பெரிய இன்ஜினைக் கொண்டிருந்தாலும், குறைவான பவர் டு வெயிட் ரேஷியோவை, இந்த பெனெல்லி பைக் தன்வசப்படுத்தி உள்ளது (102.43bhp/Tonne). எனவே பார்க் செய்யும்போது & யூ-டர்ன் போடும்போது, இம்பீரியலின் எடை சிலருக்கு நெருடலைத் தரலாம் (பின்பக்க கிராப் ரெயில் ஓகே).

பெனெல்லி எது ஓகே? எது ஓகே இல்லை!

சிறப்பம்சங்கள்

இம்பீரியல் 400 பைக்கின் டிசைன் அதேதான் என்பதால், குறைந்தது கலர்களின் எண்ணிக்கையையாவது கூட்டியிருக்கலாமே பெனெல்லி? இது ரெட்ரோ பைக் என்பதால், வட்டமான விளக்குகள் அனைத்துமே ஹாலோஜன் பல்ப் உடன் இருப்பது ஓகேதான்.Teardrop வடிவ பெட்ரோல் டேங்க் - Peashooter எக்ஸாஸ்ட் பைப் - ஸ்போக் வீல்களுக்கும் இது பொருந்தும். என்றாலும், அலாய் வீல்கள் & விண்ட் ஸ்க்ரீன் ஆப்ஷனலாகக் கிடைத்தால் நன்றாக இருந்திருக்கும். க்ளாஸிக் 350 போலவே, ரைடரின் சீட்டுக்கு அடியே Spring Mechanism & டேங்க் பேடு இங்கும் உண்டு. மற்றபடி போட்டியாளர்களிடம் இல்லாத டேக்கோமீட்டர், இதில் இருப்பது ப்ளஸ். மேலும் Hazard & கியர் இண்டிகேட்டர்கள், கேஸ் ஷாக் அப்சார்பர், டூயல் சேனல் ஏபிஎஸ், அட்ஜஸ்டபிள் பிரேக் லீவர், அலாய் லீவர்கள் எனப் போதுமான வசதிகள் இருக்கின்றன. ஆனால் போட்டி பைக்குகளில் காணப்படும் நேவிகேஷன் வசதி, USB பாயின்ட், பேக் ரெஸ்ட், LED DRL, டூயல் ஹார்ன் இங்கே மிஸ்ஸிங்.

பெனெல்லி எது ஓகே? எது ஓகே இல்லை!

முதல் தீர்ப்பு

கடந்த ஏப்ரல் 2020 முதலாக அமலுக்கு வந்த BS-6 விதிகள் காரணமாக, இந்திய ஆட்டோமொபைல் துறை கடுமையான விலை உயர்வைச் சந்தித்துள்ளது. அதற்கேற்ப BS-4 மாடலைவிட, BS-6 இம்பீரியல் 400-ன் விலை 20,000 ரூபாய் அதிகரித்துள்ளது! பைக்கின் சிறப்பம்சங்கள் & தோற்றத்தில் எந்த மாறுதலும் செய்யப்படாத நிலையில், இது பெரிய மைனஸாகத் தெரிகிறது (1.99 - 2.11 லட்ச ரூபாய், எக்ஸ்ஷோரூம் விலைகள்). மற்றபடி போட்டி பைக்குகளைவிடத் தனித்துத் தெரியும் திறனைக் கொண்டுள்ள இந்த பெனெல்லி பைக், நகரம் - நெடுஞ்சாலை என இரண்டுக்குமான தயாரிப்பாகத் இருக்கிறது.