கார்ஸ்
ஆசிரியர் பக்கம்
பைக்ஸ்
Published:Updated:

ஆஃப்ரோடு, சாப்ட்ரோடு... பக்கா பேக்கேஜ்... ஹீரோ எக்ஸ்பல்ஸ்!

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200
பிரீமியம் ஸ்டோரி
News
ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200

ஃபர்ஸ்ட் ரைடு ரிப்போர்ட்: ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200

க்ஸ்பல்ஸ் 200... இம்பல்ஸ் பைக்கின் லேட்டஸ்ட் வெர்ஷனாக வெளியான இந்த அட்வென்ச்சர் பைக், Indian Motorcycle of the year 2020 விருதினை தன்வசப்படுத்தி இருந்தது. ஆனால் இம்பல்ஸ் போலவே, எக்ஸ்பல்ஸுக்கும் அதன் பவர் குறைவான இன்ஜின்தான் பெரிய மைனஸாக இருந்தது. BS-4 மாடலைவிட 6,000 ரூபாய் அதிக விலையில் வந்திருக்கும் புதிய எக்ஸ்பல்ஸ் (1.12 லட்ச ரூபாய், சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை), ஓட்டுவதற்கு எப்படி இருக்கிறது?

டிசைன் மற்றும் ஓட்டுதல் அனுபவம்

எக்ஸ்பல்ஸின் BS-4 மாடலுடன் ஒப்பிட்டால், BS-6 வெர்ஷனின் எடை 3 கிலோ அதிகமாக உள்ளது (157 கிலோ). மேலும் BS-6 வெர்ஷனில் முன்பைவிட பெரிய எக்ஸாஸ்ட் பைப் இடம்பெற்றிருப்பதால், அதன் பொசிஷனிங்கில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் பைக்கின் கிரவுண்ட் கிளியரன்ஸில் எந்த மாறுதலும் இல்லாதது நல்ல விஷயம் (220மிமீ). தற்போது ஒரே வேரியன்ட்டில், புதிதாக ஆயில் கூலருடன் இந்த ADV பைக் (கார்புரேட்டர் கிடையாது) வந்திருக்கிறது. மற்றபடி பைக்கின் தோற்றம் மற்றும் வசதிகளில் எந்த வித்தியாசமும் செய்யப்படவில்லை. BS-6 வாய்ப்பைப் பயன்படுத்தி, சில வசதிகளை எக்ஸ்பல்ஸில் ஹீரோ சேர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். Hazard இண்டிகேட்டர்கள் அதற்கான சிறந்த உதாரணம். LCD மீட்டரில் Turn By Turn நேவிகேஷன் வசதி இருப்பதால், மொபைலுக்கான USB/Dock பாயின்ட் வழங்கப்பட்டிருக்கலாம்.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200
ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200

மேலும் ஹிமாலயன் போல Switchable டூயல் சேனல் ABSகூட இருந்தால் நல்லதுதான். LED ஹெட்லைட் மற்றும் டெயில் லைட்டுக்கு மேட்சிங்காக, LED இண்டிகேட்டர்கள் இங்கே இருந்திருக்கலாம். ஆனால் பைக்கின் விலையுடன் ஒப்பிட்டால், இது பெரிய குறையாகத் தெரியவில்லை. 190மிமீ டிராவலுடன் கூடிய 37மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க், 10 Step அட்ஜஸ்டபிள் மோனோஷாக், பெட்டல் டிஸ்க் பிரேக்ஸ், 21-18 இன்ச் Dual Purpose சியட் டயர்கள், டியூப்லர் டைமண்ட் ஃப்ரேம், 13 லிட்டர் பெட்ரோல் டேங்க் என எக்ஸ்பல்ஸின் மெக்கானிக்கல் அம்சங்கள் அப்படியே தொடர்வதால், பைக்கின் ஓட்டுதல் அனுபவத்தில் எந்தப் புதுமையும் இல்லை. 823மிமீ சீட் உயரம் மற்றும் 1,410மிமீ வீல்பேஸ், இந்த ADV-க்கு உகந்தபடி அமைந்துள்ளன. 60கிமீ வேகத்தில் செல்லும்போது பிரேக் பிடித்தால், 19.67 மீட்டரில் பைக் நின்றுவிடுகிறது.

இன்ஜின் பெர்ஃபாமன்ஸ், மைலேஜ்

எக்ஸ்பல்ஸின் BS-6 வெர்ஷனிலும், அதே 199.6சிசி Short Stroke இன்ஜின் - 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணிதான் இடம் பெற்றுள்ளது. இந்த 2 வால்வ் - சிங்கிள் சிலிண்டர் இன்ஜினில், 14 சென்ஸார்களை உள்ளடக்கிய Xsens ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் சிஸ்டம் மற்றும் ஆயில் கூலர் இணைக்கப்பட்டுள்ளது. முன்புபோலவே செல்ஃப் ஸ்டார்ட் உடன் கிக் லீவரும் தொடர்கிறது. இது வெளிப்படுத்தும் 17.8bhp@8,500rpm பவர் & 1.65kgm@6,500rpm டார்க் ஆகியவை, BS-4 மாடலைவிட முறையே 0.6bhp பவர் & 0.6kgm டார்க் குறைவு. புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள Catalytic Converter, இந்தச் செயல்திறன் இழப்புக்கான பிரதான காரணி. இதனுடன் பைக்கின் கூடுதல் எடையும் சேர்வதால், எதிர்பார்த்தபடியே பைக்கின் பெர்ஃபாமன்ஸில் சரிவு ஏற்பட்டுள்ளது.

ஆஃப்ரோடு, சாப்ட்ரோடு... பக்கா பேக்கேஜ்... ஹீரோ எக்ஸ்பல்ஸ்!

0 - 60 கிமீ வேகத்தை 0.1 விநாடியும், 0 - 100கிமீ வேகத்தை 1.49 விநாடி அதிகமாகவும் எடுத்துக் கொண்டது எக்ஸ்பல்ஸ். ஆனால் ஆன் ரோடு பெர்ஃபாமன்ஸில், இது குறைபாடாகத் தெரியாதபடி இன்ஜின் செயல்படுகிறது. சீரான பவர் டெலிவரிக்குப் பெயர்பெற்ற Fi சிஸ்டம் மற்றும் இன்ஜின் ஆயிலின் தட்பவெப்பநிலையைக் கட்டுப்படுத்தும் ஆயில் கூலர் ஆகியவை ஒன்றிணைந்து, எக்ஸ்பல்ஸின் அதிவேக செயல்பாட்டினை முன்னேற்றியுள்ளன. அதன்படி 100கிமீ வேகத்தில் தொடர்ச்சியாக பைக்கை ஓட்டும்போது, முன்பைவிட இன்ஜின் ரிலாக்ஸ்டாகவே இயங்குகிறது. தவிர இன்ஜின் ரிஃபைன்மென்ட்டும் முன்பைவிட நன்றாகவே உள்ளது. நகரத்தில் 40.62கிமீயும், நெடுஞ்சாலைகளில் 47.19கிமீயும் மைலேஜ் தந்தது எக்ஸ்பல்ஸ். ஒரு 200சிசி பைக்குக்கு, இது நிச்சயம் நல்ல மைலேஜ்தான். எனவே ஃபுல் டேங்க்கில் 500-600 கிமீ தூரம் செல்ல முடியும் என்பது மிகப்பெரிய ப்ளஸ்.

முதல் தீர்ப்பு

பைக்கின் பொசிஷனிங்கை நியாயப்படுத்தும் டிசைன், சிறப்பான சேஸி, சொகுசான சஸ்பென்ஷன், முதன்முறையாக ADV பைக் ஓட்டுபவர்களுக்கு ஏற்றபடியான செட்-அப், ஆஃப் ரோடிங் திறன் எனப் பக்காவான பேக்கேஜாக ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 தொடர்கிறது.

ஆஃப்ரோடு, சாப்ட்ரோடு... பக்கா பேக்கேஜ்... ஹீரோ எக்ஸ்பல்ஸ்!

இந்த பைக்கின் குறைவான எடை, இதன் எளிதான கையாளுமைக்குத் துணை நிற்கிறது. இருக்கின்ற பவரை ரைடர் கச்சிதமாகப் பயன்படுத்தும்படி, இன்ஜினின் ட்யூனிங் அமைந்துள்ளது.

மற்றபடி நெரிசல்மிக்க நகரச்சாலை, விசாலமான நெடுஞ்சாலை, சவாலான ஆஃப் ரோடிங் பகுதி என எல்லா வகையான நிலப்பரப்பிலும் சிக்கலின்றி இயங்கக்கூடிய ஒரு தயாரிப்பை, அனைவருக்கும் கட்டுபடியாகக் கூடிய விலையில் ஹீரோ நிறுவனம் களமிறக்கியுள்ளது.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, அட்வென்ச்சர் பிரியர்களைத் தாண்டி, வித்தியாசமான தோற்றத்தில் ஒரு பைக் வேண்டும் என்பவர்களையும் எக்ஸ்பல்ஸ் 200 கவர்ந்திழுக்கும் எனத் தோன்றுகிறது.